பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 15, 2009

தேர்தல் 2009 - மயிலாடுதுறை துபாய் ஆனதா ?

'மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்று சொல்லியே தொடர்ந்து எம்.பி. ஆகி வருகிறார் காங்கிரஸின் மணி சங்கர் ஐயர். முதன் முதலில் 89-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மயிலாடுதுறைத் தொகுதியின் அப்போதைய எம்.பி. ஈ.எஸ்.எம். பக்கீர் முஹம்மது இறந்த பிறகு மயிலாடுதுறைக்கு விஜயம் செய்தார் மணிசங்கர் ஐயர்.

ஏதோ மக்கள் இயக்கம் என்ற பெயரில், ராஜீவ் காந்தியின் உற்ற நண்பர் என்ற மேல் இடத்து சிபாரிசினால் மயிலாடுதுறையில் ஒரு பெரிய ஊர்வலத்தை விட்ட போது அவருக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. 'நம்மூரு இடைத் தேர்தலில் இவருதாம்ப்பா நிக்கப் போறாரு' என்று செய்தி வெளியானது. 'அப்படியா?' என்று கேட்ட போது 'அப்படியெல்லாம் இல்லை, கட்சி விரும்பினால் ஓ.கே' என்ற வழக்கமான புதுமுக அரசியல்வாதி டயலாக் விட்டார் அவர்! அப்புறம் இடைத் தேர்தல் நடத்தாமல் அடுத்த பொதுத் தேர்தலில் நிற்க அவருக்கு மயிலாடுதுறையில் சீட் கிடைத்தது. இடைப்பட்ட ஆறேழு மாத காலத்தில் பலமுறை மயிலாடுதுறைக்கு விஜயம் செய்தார். ஓரளவிற்கு தமிழை 'பேஷ' கற்றுக் கொண்டார். 91-ம் வருட பொதுத் தேர்தலில் மயிலாடுதுறையில் தனது நண்பருக்காக பிரசாரம் செய்ய முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி வரச் சம்மதித்தார். ராஜன் தோட்டத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. மே மாதம் 22-ம் நாள் காலையில் பொதுக்கூட்டம். ஒட்டுமொத்த மாயுரமே ராஜீவ்காந்திக்காக ஆவலாக காத்திருந்தது. அதற்கு முதல் நாள் இரவு தான் ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம்.


இரவு முழுவதும் நகர் முழுவது பவர்-கட். (ஆற்காட்டார் அப்போது மின்வெட்டுத்துறை அமைச்சரில்லை!) சுமார் பத்தரை மணியளவில் ரோட்டில் கடும் கூச்சல். கொஞ்ச நேரம் கழித்து தான் அந்த 'துன்பியல் சம்பவம்' தெரிய வந்தது. ஒருவேளை அங்கே தப்பியிருந்தால், மறுநாள் மயிலாடுதுறையின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் என்று மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.


அப்புறம் மணிசங்கர் எம்.பி.யானது, ஜெ. ஆட்சியில் நாகப்பட்டின மாவட்டத் துவக்க விழாவின் போது கூட்ட மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே அவரை இறக்கி விட்டு நடந்து வரவழைத்தது, வேறொரு முறை கும்பகோணம் அருகில் அவரை ஓட ஓட விரட்டியது என்றெல்லாம் அரசியல் பரபரப்புகள் அதிகம். 'ஒருவேளை ராஜீவ்காந்தி இருந்திருந்தால் நம்மாளு பெரிய அமைச்சரா ஆகியிருப்பாருப்பா' என்று ஒவ்வொரு தடவையும் மக்கள் சமாளிபிகேஷனுக்காக இந்த முறை மத்திய பஞ்சாயத்து அமைச்சர். ஆனால் அமைச்சராகி தொகுதிக்கு என்னத்த கிழித்தார் என்று தான் தெரியவில்லை.
இறால் பண்ணை பரபரப்பு, அது இதுவென்று அடிக்கடி தொகுதியில் அவர் பெயர் அடிபடுகிறது. நடுவில் ஒருமுறை காங்கிரஸில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக நின்று ஓரளவு நியாயமான ஓட்டு வாங்கி தோற்றும் போயிருக்கிறார். பாராளுமன்ற தொகுதி சீரமைப்பின் போது மயிலாடுதுறை தொகுதியே காலி என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதிப் பட்டியலில் மீண்டு(ம்) வந்ததில் அன்னாரது கைங்கரியம் அதிகம் என்பதால் மண்ணின் மைந்தர்களுக்கு அவர் மீது ஒரு ஸாப்ட் கார்னர் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்' என்று ஜனாதிபதியிடமிருந்து விருது வாங்கியிருக்கிறார் என்பது உச்சகட்ட தமாஷ். அவர் குறித்து தொகுதி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற விரிவான அலசல் அடுத்த கட்டுரையில்...

- மயிலாடுதுறை- மாயவரத்தான்

கதாநாயகன் படத்தில் வருமே அந்த துபாயை சொல்லியிருக்க போகிறார் எதற்கும் ஒரு முறை அவரை கேட்டு பாருங்க

9 Comments:

seetha said...

doon school education did not help him ....increating a dubai i guess...

ராஜ்மோகன் said...

சோனியாவ அழைச்சிக்கிட்டு வந்து பொறையார்ல ராஜீவுக்கு சிலை வச்சதுதான் அவரோட தொகுதி சாதனை!!!!!

அப்புறம் ஈரான் கேஸ் பைப்லைன் பிரஜெக்ட்ல் அதிக அக்கறை காட்டுனார்

Vedantha Desika Dasan said...

//'மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்று சொல்லியே தொடர்ந்து எம்.பி. ஆகி வருகிறார் காங்கிரஸின் மணி சங்கர் ஐயர்//

This reminds me of one (very old) joke. Experts from Japan once visited India and met the then CM of Bihar Lallu Prasad Yadav. They told him "if you give me Bihar for 3 months,we will make them Japan" for which Yadav replied, "if you give me Japan for 3 days, i will make it Bihar". May be Mr. Iyer may make Dubai another Mayiladuthurai

நாகை சிவா said...

நாகையில் நடந்த ஒரு அரசு விழாவின் போது மேடையில் நடந்த ஒரு கசாமூசாவால் ஜெ. அருகில் சென்று ஏதோ சொல்லிவிட்டு செல்ல, ஜெ. முகம் சிவக்க மணிசங்கரை வாஞ்சூர் வரை துரத்தி சென்று ஒரு கும்பல் அடிக்க போக காரைக்கால் போலீஸாரிடம் போய் தஞ்சம் அடைந்த கதையும் பிரபலம்.

ஆனாலும் இவருகிட்ட எனக்கு பிடிச்ச ஒரே விசயம் எந்த பண்டிகை ஆனாலும் அவர் தொகுதி முழுக்க பளபளக்கும் ஒரு டிஜிட்டல் பலகையில் வந்து கைகூப்பி வாழ்த்து கூறுவார்.

R.Gopi said...

துபாய் ஆக்கறேன், துபாய் ஆக்கறேன்னு சொல்றாரே??

அப்படி என்னத்தான் இருக்கு துபாய்-ல??

யாராவது மணிஷங்கரிடம் கேட்டுசொன்னால் நல்லா இருக்கும்...........

துபாய்-லயும் கீழ மண்ணுதானாம்....... போனவங்களும், வந்தவங்களும், போயிட்டு வந்தவங்களும் சொன்னாங்க.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாதுன்னு, யாரோ சொன்ன ஞாபகம் வேற..."

கவுண்டமணி said...

இந்தியாவை
இத்தாலியா மாத்த
பார்த்தோம்

அதுக்கு அப்துல்காலம் பாய்
ஆப்புவைச்சிட்டாரு

வேனா இன்னொருவாட்டி
என்னை எம்.பி ஆக்குங்க
மயிலாடுதுறை பெயரை
துபாய்னு மாத்திகாமிக்கிறேன்

ஏய்...நெக்ஸ்ட் ...நெக்ஸ்ட்

Honey Bee said...

Before making Mayiladuthurai Dubai, tell him that this place will soon become Kosupidingumthurai!!!

VambeSivam said...

Whether he changed Mayiladuthurai constituency into Dubai or not, he definitely showed the nation about his "culture" during one of the NDTV (I think) discussions few years back, when he called the opposing party's spokesman, who was also participating in that debate, "Mayiru" in typical Kazhaga style. That way, he succeeded in converting NDTV into a Kazhaga TV.

செவ்வானம் said...

ஆமாம்,மணி சங்கர் ஐயர் எம்.பி-யா.. .?அதுவும் நான் இருக்கும் மயிலாடுதுறை தொகுதியின் எம்.பி-யா. . .?
அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாதுங்களே. . .