பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 20, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 20-02-2009

முனிக்கு இட்லிவடை கடிதம்

ஹலோ முனி,

எப்படி இருக்க ? ஏன் அடிக்கடி லெட்டர் போடுவதில்லை ? நீ என்ன பெரிய கடவுளா ? இப்ப தமிழ் வலைப்பதிவில் 'நான் கடவுள்' பைத்தியம் அதிகமாக இருக்கு தெரியுமா ?

"நான் கடவுள் கிடையாது. ரசிகர்கள் எனது காலில் விழுவது எனக்கு பிடிக்காது" இதை நான் சொல்லவில்லை சொன்னவர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சொல்லியிருக்கார். அப்பா "நான் கடவுள்" பற்றி ஒரு வரி எழுதிவிட்டேன்.

கடவுளே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது போலிருக்கு. நேற்று வக்கீல்களும், போலீஸும் அடித்துக்கொண்டதை பார்த்தால் பிஹார், ஜார்கண்ட் எல்லாம் தேவலை என்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு தெலுங்கு படம் பார்த்த எஃபெக்ட். பவர் கட் பிரச்சனையை பின்னுக்கு தள்ளியது இலங்கை பிரச்சனை, இப்ப இலங்கை பிரச்சனை பின்னுக்கு தள்ளியது இந்த அடிதடி பிரச்சனை. எனக்கு என்னவோ இது ஏதோ Planned மாதிரி தான் தெரிகிறது.


கலைஞர் ரொம்ப வருத்தப்பட்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் "நான் மருத்துவமனையில் இருந்தாலும், தாங்கள் என்னை பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன்" என்று சொல்லியுள்ளார். இப்ப இருக்கும் நிலமைக்கு இந்த தேர்தலில் வீட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் இலவசமா கொடுக்கணும் என்று நினைக்கிறேன்.

வரவர எலஷன் செய்திகள் கூட மக்கள் இலவசமா இட்லிவடைக்கு தருவதை கவனிச்சையா ? அதை கவனிக்கலைனா பரவாயில்லை ஆனால் இந்த செய்தியை கொஞ்சம் கவனி - கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திமுக திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. உலக வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடக்க காரணம், இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி இப்போது திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், அவரைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை. அப்ப இது வரை இந்த வழக்கில் அரசு செலவு செய்த பணம் எந்த கணக்கில் போகும் ? காந்தி கணக்கு என்று சொல்லாதே அப்பறம் எனக்கு கோவம் வரும்

காந்தி என்றவுடன் நினைவுக்கு வருது அறுதப் பழசான செய்திகளுக்கு 'என்னது காந்தியைச் சுட்டுட்டாய்ங்களா?!" என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால் உண்மையில் 1948ல் காந்தியைச் சுட்டதை 1980ல் மாலன் எழுதியதை 1988ல் வந்த முதல்பதிப்பை அல்லது கிழக்கு வெளியிட்ட நான்காம் பதிப்பிலிருந்து எடுத்து 2009ல் விரிவாக விவாதித்திருக்கிறார் வலைப்பதிவில் சந்திரமௌலி. படித்துப் பார்க்கவும். வரலாறு புரட்டப் புரட்ட சுவாரசியமாகவே இருக்கிறது. வரலாறு சம்பந்தமா எழுதும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா எழுதனும் இல்லை, டேன்ஜர் தான். இன்றைய செய்தி நாளைய வரலாறு மாதிரி ஜோக் இல்லை.

இன்னொரு காந்தி மேட்டர் இருக்கு. இது காந்தி கண்ணதாசனுக்கு கலைஞர் கடிதம் எழுதியிருக்கிறார்

"காந்தியின் பெயரையும் வைத்துக் கொண்டு என்னுடைய அருமை நண் பன் கண்ணதாசன் பெயரை யும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை" என்று சொல்லிவிட்டு
"எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்த போது, அந்தச் சங்கத்திற்கு நீ தலைவராக இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் பேரிலே தான் செய்தேன்." என்று கடித்த்தின் கடைசியில் சொல்லியுள்ளார். கலைஞர் ஏதோ சொல்ல வருகிறார் என்ன என்று தான் புரியவில்லை. எல்லாம் மர்மயோகி படம் மாதிரி மர்மமா இருக்கு.

மர்மயோகி படம் ட்ராப் தெரியுமா ?. அட ராமா என்று தலையில் அடித்துக்கொள்ளாதே 'அட இராமு' என்று அடித்துக்கொள். உன் மாதிரி ரசிகர்களுக்காக 'தலைவன் இருக்கிறான்','A Wednesday' படத்தின் ரிமேக்கில் நடிக்கிறார். 4 தீவிரவாதிகளை மீட்க குண்டுவைக்கும் நஸ்ருதீன் ஷா நடித்த பாத்திரத்தில் கமல். இணைந்து மலையாள நட்சத்திரம் மோகன்லால். தொழில்நுட்பங்களுக்கும் மேக்கப்புக்கும் மேலை நாட்டவர்களை நாடிய கமலுக்கு இதில் இயக்குநரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இசை அவர் மகள், தன்னை ஒரு நவீன கவிஞர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் இதற்கு பாடல் கூட எழுதியிருக்கிறார் என்று காற்றில் வந்த செய்தி. சினிமாவில் சிக்கிகொள்பவர்கள் புதைமணலில் சிக்கிக்கொண்டவர்கள் மாதிரி மீளவே முடியாது. அதுவும் கமல் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.

அப்படி சிக்கிக் கொண்டவர்கள் மீட்க நினைத்து கைநீட்டுபவர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட புதைகுழியில் சிக்கிகொண்டிருக்கிறது திமுக. எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிர சுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது. எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன் என்று நேற்று ஜெயலலிதா திருமண விழாவில் பேசியிருக்கிறார். ஒரு பேச்சுக்கு காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால், ஜெயலலிதாவை நம்பி அவரது கூட்டணிக்கு வந்த இடதுசாரிகள் நிலமை என்ன ஆகும் ? தீக்குளிக்க வேண்டியது தான்.

தீக்குளிப்பு கலாசாரம் இன்னும் எத்தனை பேரை பலிவாங்கும் என்று தெரியவில்லை. கடலூரில் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர், இலங்கைத் தமிழர்களுக்காக வருந்தி, ஜான்சி என்ற மனைவியையும், சந்தோஷ் என்ற ஒன்றரை வயது மகனையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். காப்பாற்ற முடியாமல் 30 வயதிலேயே இறந்துபோனார். அவரைப் பார்க்கவந்த வைகோ கண்ணிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, 'ப்ரணாப் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது' என்று அறிக்கையிட்டார். தீக்குளிக்க காரணம் வைகோ, ராமதாஸ், திருமா தான். இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

நேற்று சட்ட சபையில் சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு ஆற்காடு வீராசாமி "இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமானை போலீசார் தேடி வருகிறார்கள்" என்ற பதிலை கேட்டு மயக்கமே வந்துவிட்டது.

சீமானுக்கெல்லாம் 5 தனி போலீஸ்படை ரொம்ப ரொம்ப ஓவர்தான். நம்பணம் எப்படி எல்லாம் விரயமாகிறது. சீமான் எப்படியும் கோக்குமாக்காகத்தான் பேசப்போகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். பேசும்போதே ஒரேயொரு கான்ஸ்டபிளை பக்கத்தில் தயாராக நிறுத்தி பேசிமுடித்ததுமே கோழி அமுக்குவதுபோல் அமுக்கியிருக்கலாம்.

திமுக விடுதலைப்புலிகளை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என்று அன்பழகன் கூறியிருக்கிறார். இது தான் உண்மையான நடுநிலமை. திமுகவை பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கு என்ன செய்ய. இவர்கள் விரைவில் குணமடைய நீ தான் அருள் செய்ய வேண்டும்.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பாடிகாட் கோயில் தவிர்த்து சென்னையில் 31 கோயில்களில் ஆங்காங்கே அமைச்சர்கள் தலைமையில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் அமர்க்களப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லை முதல்வர் கருணாநிதி வெகு விரைவாக உடல்நலம் பூரணமாக குணமடைய வேண்டி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் கோயிலின் பணியாளர் சங்கத்தின் சார்பாக வடபழனி முருகனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அப்படியும் ஏன் தான் ஆத்திகர்கள் இந்தப் பகுத்தறிவுக் கட்சியை வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு கன்யா ஸ்திரியோட ஆத்ம கதா அப்படினு ஒரு பொஸ்தகம் கேரளாவிலே விற்பனையிலே சக்கை போடு போடுதாமே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதைப் பற்றி ஜேஸ்மி என்ற கன்யா ஸ்திரி எழுதிய இந்த புத்தகம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய்ள்ளது எனச் சொல்கிறார்கள் பாவமன்னிப்பு கோரி வந்த பெண்களிடம் முத்தம் கேட்ட பாதிரியார் அதை தெய்வீக கிஸ் என அவர் சொல்லி வற்புறுத்திக் கேட்டது என பல சமாச்சாரங்களை (பலான எனவும் படிக்கலாம்)
அந்தப் Book லே சொல்லிருக்காங்களாம். பிரேமனந்தாக்களுக்கு மதம் கிடையாது. ஒரிசாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பின்போது கதறிய பலர் இதை பற்றி பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள் போல. நல்லது.

முத்தம் பற்றி என் நண்பர் சொன்ன ஜோக் இது.

பஸ் ஸ்டாப்பிலே ஒரு இளைஞன் அவனருகிலே அம்சமாக நமீதா கணக்காக ஒரு பெண் அவனையே பார்க்கிறாள் அவனுக்கு BP கன்னா பின்னா என்று ஏறுகிறது அல்லது தடுமாறுகிறது. அவள் அவனைப் பார்த்து சிரிக்கிறாள் இப்ப ரத்தம் சூடாகிறது.. பஸ் ஸ்டாப்பில் மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவன் பக்கதில் வந்தவுடன் இதயம் படபடக்கிறது, நாக்கு உலர்கிறது. அந்த உதடுகளை குவித்துக் கொண்டு இவனை அவள் நெருங்குகிறாள். இவனுக்கு உடம்பெல்லாம் பூச்சி பறக்கிறது இதோ உதட்டைப் பக்கத்திலே கொண்டு வந்தாள் இவன் ஒரு ஈர மயக்கத்துக்குத் தயாரான போது

“அண்ணே இங்கேயிருந்து அசோக் நகருக்கு எந்த பஸ் போகும்” என்று கேட்கிறாள்.

"டமால்!"

அந்த 'டமால்' சத்தம் தான் ஹார்ட் அட்டாக் என டாக்டர் சொல்லி அவனுக்குத் தெரியவந்தது.


கீழே உள்ள படங்கள் எல்லாம் நம்ம மக்கள் பிறந்த நாள் போஸ்டர். (நல்ல வேளை இப்ப இவர்கள் யாரும் உயிருடன் இல்லை)இதை எல்லாம் பார்த்தால் கூட உனக்கு ஹார்ட் அட்டாக் வரலாம்.

சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மெக்சிகோ நகரில் 39,897 இளஞ்ஜோடிகள் ஒன்றாக கூடி முத்தமிடுவதில் ஈடுபட்டதாம். வேற எதற்கு கின்னஸ் சாதனை தான். இதற்கு முன்னர் 35,000 பேர் முத்தமிட்டது சாதனையாக இருந்து வருகிறதாம்.

பிரிட்டனில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் ஜோடி மற்றும் தம்பதிகள் முத்தமிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் "இங்கே முத்தமிடக் கூடாது" என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ராமசேனைக்கு பயந்து இல்லை பயணிகள் மத்தியில் தம்பதிகள் மற்றும் இளம்ஜோடிகள் பிரியாவிடை பெறும்வகையில் முத்தமிட்டு கொள்வதால் சக பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு, தாமதமும் ஏற்படுவதாக புகார்கள் கூறப் பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். எனினும் முத்தப்பிரியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்காகவென்று முத்தமிடுவதற்காக தனி இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளதாம். கழிப்பறை கட்டுவதுபோல் இதையும் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இராமசேனை இல்லாத ஊரில் இதுவும் செய்யலாம், இதுக்கு மேலயும் செய்யலாம்.

உனக்கு பிங்க் ஜட்டி பார்சல் ஏதாவது வந்ததா ? வந்தால் பதில் போடவும்
இப்படிக்கு அன்புடன்
இட்லிவடை


13 Comments:

Anonymous said...

இந்த முறை முனி தரிசனம் விஸ்வரூப தரிசனம்

Anonymous said...

Could u plz tel me tel me da address to send pink panty?

chutneysambhar said...

//கீழே உள்ள படங்கள் எல்லாம் நம்ம மக்கள் பிறந்த நாள் போஸ்டர். (நல்ல வேளை இப்ப இவர்கள் யாரும் உயிருடன் இல்லை)//


என்ன கொடுமை இட்லி வடை சார் இது !!!!!

மடல்காரன்_MadalKaran said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அனுப்பிச்சிருக்கீங்க..
இட்லி வடை பஞ்ச் கடிதம்.

Krish said...

///// எனக்கு என்னவோ இது ஏதோ Planned மாதிரி தான் தெரிகிறது.//////

இருக்கலாம். யாருக்கு தெரியும். ஆனால். வழக்குகள் போல ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு கமிட்டி அமைப்பார்கள். அதுக்கப்புறம் அவ்ளோதான்.....

///// ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன்///////

என்ன ஆனாலும் பதவியை மட்டும் விட மாட்டார்!

////"இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமானை போலீசார் தேடி வருகிறார்கள்" என்ற பதிலை கேட்டு மயக்கமே வந்துவிட்டது./////

சீமான் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்கிறார். ஆனால் போலீஸ் 'வலை' போட்டு தேடிக்கொண்டிருக்கிறது!! நெல்லையில் சீமான் பேசிக் கொண்டிருந்த பொது அவரின் பூட்டிய சென்னை வளசரவாக்கம் வீட்டை பார்த்து விட்டு, கைது செய்ய வந்த புதுச்சேரி போலீஸ் அவர் இல்லை என்று சென்று விட்டர்கலமே!!!!!

கிரி said...

//அந்த 'டமால்' சத்தம் தான் ஹார்ட் அட்டாக் என டாக்டர் சொல்லி அவனுக்குத் தெரியவந்தது.//

இட்லி வடைக்கு இப்படி நேர்ந்தது உண்டா! (இல்லாமல் இருக்குமா :-))) )

கடிதம் நல்லா இருக்கு :-)

Anonymous said...

சீமானுக்கு எல்லாம் போலிஸ் தனிப்படை தேவையில்லை.. ஒரு பொறையில "பூஜா"ன்னு பேர எழுதி எலிபொறியில வச்சாபோதும்..

Nilofer Anbarasu said...

Hope, this is the video first on net.....

Anonymous said...

If the pink panties are used ones they will fetch good price in Japan.But in India?

R.Gopi said...

கொடுமையிலும் கொடுமை ..........

எங்கெங்கு காணினும் கொடுமையடா !!!!!!

chitharanjan said...

wonderful letter, very interesting and just.

Anonymous said...

Pagutharivu enbathil arivu endra oru sol ullathu. Expecting that from these folks is a bit toomuch

By the way on behalf of all world seeman rasigar mandram I strongly condemn your comments about seeman....

Bodygaurd muni really had a rib tickle..

தவநெறிச்செல்வன் said...

அட்டகாசம் போங்க கலக்கு கலக்குன்னு கலக்கிட்டீங்க, கலைஞரின் எதிரிகள் இந்த ஒரு பதிவை முறையாக தேர்தலில் பயன்படுத்தினாலே போதும் எளிதாக வெற்றி பெறலாம் என்று தோன்றுகிறது.