பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 05, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 05-02-2009

சில மாதம் ரெஸ்டுக்கு பிறகு மீண்டும் பாடிகாட் கடிதம்....

அன்புள்ள இட்லிவடை,

இலங்கையைக் காப்பது இருக்கட்டும், தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்றப் போறேன் என்பதுதான் என் கவலை. நீ என்னடாவென்றால் நாட்டிலே எதுவுமே நடக்காததுமாதிரி பத்துவருடங்களுக்கு முன்னால் சுற்றுமெயிலில் வந்த சச்சினி டெண்டுல்கரின் புகைப்படத்தை எல்லாம் பதிவாகப் போட்டுக் கொண்டிருக்கிறாய். வாசகர்கள் என்ன நம் சிஐடியா கண்டுபிடிக்க கஷ்டப்பட?

நம் சிஐடியில இருப்பவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். ராமலிங்க ராஜூவிடம் 1000 சூட் இருக்கிறது, 321 ஷூ இருக்கிறது, 310 பெல்ட் இருக்கிறது, எண்ணூத்தி சொச்சம் ஜட்டி இருக்கிறது என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறர்கள். 5000 கோடி பணத்தை என்ன செய்தார் என்றுதான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

இந்தச் செய்தியைப் பார்த்தாயா? அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்ஷைத் தொடர்ந்து தற்போது சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசியிருக்கிறார்கள். புஷ் மீது வீசி எறியப்பட்ட ஷூவிற்கு இப்பொழுது ஏக டிமாண்டாம். அதை விரும்பி வாங்குபவர் அமெரிக்காகாரர்கள் என்பது கொசுறுச் செய்தி. பேசாமல் ராஜூ இவரிடம் இருக்கும் ஷூக்களை பத்திரிக்கைகாரர்களுக்கு விற்றுவிடலாம்; என்ன நான் சொல்வது?

பத்திரிக்கைகாரர்கள் பற்றி ஏதாவது சொல்ல நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது. இப்படித்தான் பர்க்கா தத் பற்றி எழுதப் போய்... சரி எனக்கு எதற்கு வீண் வம்பு? விருப்பம் இருந்தால் இங்க போய் பார்த்துக்கொள். ஆனாl இதைப் பற்றி இன்னும் எந்தத் தமிழ் வலைப்பதிவிலும் வரவில்லை. அதே போல் மீடியாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய... இதைத் தைரியமாக பத்திரிகையில் எழுதும் துணிச்சல் நம் ஞாநிக்கு மட்டும்தான் இருக்கிறது. எழுதுவாரா?

சரி கொஞ்சம் ஜிலு ஜிலு மேட்டருக்குப் போவோம். கன்னம் பழுத்துடும் என்று திட்டிதானே கேள்விப்பட்டிருக்கிறாய். நிஜமாகவே ஆப்பிள் மாதிரி கன்னத்தைப் பழுக்க வைக்கிறார்கள். எல்லோருக்கும் (குறிப்பாக பெண்களுக்கு) ஆப்பிள் கன்னம் இருப்பதில்லை என்ன செய்வது? கவலையே வேண்டாம் இப்பபொழுதுதான் எல்லாவற்றிருக்கும் `டூப்ளிகேட்' கிடைக்கிறதே. வத்தல் கன்னத்தை ஆப்பிள் கன்னமாக்க அரைமணி நேரம் போதும் என்கிறார்கள் வெளிநாட்டு அழகுச் சிகிச்சை நிபுணர்கள். `உடனடி பாஸ்போர்ட் படம்' போல `மலார் ஆக்மென்டேஷன்' என்ற சிகிச்சை மூலம் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி விடுகிறார்கள். ஒரு `பில்லர் இன்ஜக்ஷன்', பெண்களின் கன்னத்தை `கும்'மென்று மாற்றிவிடுகிறது- முப்பதே நிமிடங்களில்! ஏஞ்சலினா ஜோலி போன்ற ஆலிவுட் தேவதைகள் எல்லாம் இப்படி செயற்கைப் பொலிவு பெற்றவர்கள்தானாம்! ஜொள்ளு விடும் போது அசலா நகலா என்று பார்த்து விடு.

இன்னொரு நிஜ ஜிலுஜிலு மேட்டர். ஜப்பானில் உள்ள ஒரு ஹோட்டலில் எல்லாமே ஐஸ். சொன்னால் நம்பமாட்டாய். ஐஸ் ரூம், ஐஸ் படுக்கை அறை, ஐஸ் பாத்ரூம், குடிக்கும் பார், டம்பளர், பிளேட் முதற்கொண்டு எல்லாம் ஐஸ். இரண்டு நைட்டுக்கு ரூ35,000. அடுத்த முறை ஜப்பான் போகும் போது போய்ப் பார். பனிப்பிரதேசக்காரர்களான `எஸ்கிமோ'க்கள் எப்படித்தான் பனிவீடுகளில் வாழ்நாளைக் கழிக்கிறார்களோ என்று வியப்பவர்களுக்கு அதே அனுபவம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் பைசா செலவில்லாமல் கலைஞருக்கு அந்த அனுபவம். என்ன புரியவில்லையா? வாலி கலைஞரைப் புகழ்ந்ததில் கலைஞருக்கு ஐஸ் ஹோட்டலில் இருக்கும் ஃபீலிங் வந்திருக்காதா?

இதனாலெல்லாம் உடல்நிலை சரியில்லாமல் கலைஞரால் அவசரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போனாலும், அண்ணா நினைவு நாள் அன்றைக்கு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் வந்து மரியாதை செய்திருக்கிறார். எனக்கு கலைஞர் 1994 ஆண்டு கலைஞர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. “அண்ணா அறிவுரைகளை இன்றுவரை திமுக வேதவாக்கியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.” ஆக திமுக வேதங்களையும் அதன் வாக்கியங்களைப் பின்பற்றுவதையும் நம்புகிறது. அண்ணா ‘நாமம்’ வாழ்க!.

உனக்கு விஷயம் தெரியுமா, வாழ்க என்று கத்திக்கொண்டிருந்த கழகக் கண்மணிகள் எல்லாம் இப்போது, அடுத்தவன் ஒழிக என்று கத்துவது பொறுக்கமுடியாமல் 'நமக்கு நாமே' திட்டத்தில் கலைஞரைத் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவர் எதிரில் படுத்துகிற, சாமானை உடைக்கிற குழந்தையை சகிக்கவும் முடியாமல், மற்றவர் சொல்லிக் காண்பிப்பதை பொறுக்கவும் முடியாமல் தன் குழந்தையை தானே முன்வந்து "ஹி.. ஹீ.. ரொம்பப் பொல்லாது, அப்பா மாதிரி" என்று உள்ளே கடுப்பாகி, வெளியே வழிந்துகொட்டும் அம்மா மாதிரி சகிக்கமுடியாமல் இருக்கிறது இந்தப் பதிவுகள் எல்லாம். சிரித்துச்சிரித்து விலா தசை பிடித்துக்கொண்டு விட்டது.

கலைஞரும் சிரித்துவிட்டாரோ என்னவோ. தசைப்பிடிப்பு காரணமாக ஒன்றும் செய்யமுடியவில்லை. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அப்புறம் கஷ்டப்பட்டு குடும்பம் ஒற்றுமையாகி கண்கள் பனித்து இதயம் இனித்து என்ன பயன்? இன்று சன் டிவியில் கலைஞர் இலங்கைத் தமிழருக்காக செயல்படுத்தியவை என்று 46 உதவிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சன் டிவி. ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு மாமனிதன்(பாதகன்) இறந்ததும் தனக்கும் சொர்க்கம் வேண்டும் என்று மல்லுக்கு நின்றானாம். செய்த நல்லவைகளை வரிசைப்படுத்தச் சொன்னதும், "ஒரு பிச்சைக்காரனுக்கு 10 பைசா போட்டேன், ஒரு காய்கறிப் பெண்ணுக்கு தவறுதலால 20 பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னானாம். எமன் 30 பைசாவை அவன் கையில் கொடுத்து நல்லபடியாக நரகத்துக்கு அனுப்பிவைத்தானாம். இந்தக் கதை ஏன் இப்போது நினைவுக்கு வருகிறது என்றுதான் தெரியவில்லை. இந்த அழகில் பூணூல் போடாதவர்களுக்கு மட்டும்தான் கலைஞர் ஒழிக என்று சொல்லும் யோக்கியதை இருக்கிறதாம். கிருஷ்ணா, கிருஷ்ணா... நகைச்சுவைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போச்சு.

நகைச்சுவை என்றவுடன் நினைவுக்கு வருகிறது, நகைச்சுவை எழுத்தாளர் கடுகு எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். விவேக், ஜெயகாந்தன் போல கணிதத்தில் சி.எஸ்.சேஷாத்ரி என்பவர் இந்த முறை பத்ம விருது வாங்கியிருக்கிறாராம்.. கணித மேதை ராமானுஜத்துக்குப் பிறகு ராயல் சொசைட்டியில் இவர் பெயர் தான் இருக்கிறது தெரியுமா என்று கேட்டிருந்தார். இட்லிவடையில் இவரைப் பற்றி தத்துபித்தென்று நீயாக எதுவும் எழுதித் தொலைக்காதே, கணிதத் துறையில் இருக்கும் ரோசாவசந்த் எழுதினால் நன்றாக இருக்கும். '.... தன் சக உயிரினங்களாக கொள்ள வேண்டிய இந்த பாழும் தமிழ் அடையாளத்தை கரைக்க முடியாத கழிவிரக்கம் தமிழனாய்ப் பிறந்ததற்கான தன்னிரக்கத்தில்' இருக்கும் ரோசா இதற்காவது கொஞ்சம் மகிழ்ந்து எழுதி அனுப்பினால் இட்லிவடையில் போடு. ட்விட்டர் தாண்ட மாட்டேனென்கிறாரே ரோசா.

முத்துக்குமார் சம்பவத்துக்குப் பிறகு வரும் செய்திகளைப் பார்த்தாயா?

மூன்று பேர் செல்ஃபோன் கோபுரத்தில் ஏறி குதிக்க முயற்சி செய்திருக்கிறார்கள், நாலு ஐந்து பேர் தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ், அதிமுக பேனர்களைக் கிழித்திருக்கிறார்கள், பஸ்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள், சோடா பாட்டில் வீசியிருக்கிறார்கள்.

பல ஊர்களிலும் கல்லூரி மாணவர்கள் பாடங்களைப் புறக்கணித்து, பரிட்சைக்கு முன்பு தெருவுக்கு வந்துள்ளனர். இப்படி வந்தவர்கள் எல்லோரும் (அப்பாவி) சட்டக் கல்லூரி மாணவர்கள். இவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை எதுவும் அரசியல் தலைமையின்கீழ் நேர்த்தியாக நடைமுறைத்தப்பட்ட போராட்டங்கள் கிடையாது; இதை நீ தயவுசெய்து நம்பவும் ஏன் என்றால் இதை சொன்னவர் பத்ரி சேஷாத்ரி. இதற்காகவே இந்த (பத்ரி) சேஷாத்திரிக்கும் நிச்சயம் 'பத்ம' விருது கொடுக்கவேண்டும்..

முத்துகுமார் சம்பவத்திற்குக் கொடுக்கப்பட்ட அரசியல் முக்கியத்துவம் அரசியல் ரீதியாக சாதகமான எதையும் செய்யாவிட்டாலும் எல்லோரும் பயந்தமாதிரியே இதுமாதிரியான பக்கவிளைவுகளை ஆரம்பித்துவிட்டது. முன்பு விடுதலப் புலிகள், “நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள். எங்களுக்குள் நடக்கிற மோதலில் தலையிட அன்னியர்களான இந்தியர்களுக்கு உரிமை இல்லை” என்று சொன்ன போது ஒன்றும் பேசாத தொப்புள் கொடி சகோதரர்கள், தற்போது வீர வணக்கம் போடுவதன் மர்மத்திற்குச் சற்றும் குறையாதது பிரதமர் மருத்துவமனையில் இருக்கும் இந்தச் சமயத்தில் பிரணாப் முகர்ஜியின் அவசர இலங்கைப் பயணம் எதற்காக என்ற மர்மமும்.

தற்போது யார் வேண்டுமானாலும் தைரியமாக தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரலாம். பிரபாகரனுக்கு வாழ்க கோஷம் போடலாம். சோனியாவை கேட்டுக்கொண்டு வழக்கம் போல் கோஷ்டியாக வேடிக்கை பார்க்க காங்கிரஸ் கட்சிகாரர்கள் ரெடியாக இருக்கிறர்கள். ஜெ ஆட்சியில் இருந்தால் இந்த மாதிரி நடைபெறுமா என்பது கேள்விக்குறி. விடுதலைப்புலிகள் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் ஜெயிலில் போடப்படுவார்கள். இவ்வளவு பேசும் வைகோ, திருமா போன்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கே போயிருந்தார்கள்?


விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தேர்வுபெற்ற அறுவர், அடுத்த அறுவரில் இருந்து நடுவராக இருந்து தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் ராகினிஸ்ரீயும் அருமையாகப் பாட, தேர்வுபெற்று விடுவாரோ, ச.ந. கண்ணன் மனம் புண்படக் கூடாதே என்ற நினைவே ஓடிக்கொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறாய். பாழும் தமிழன் இப்படி தொலைக்காட்சியில் வெத்துவேட்டுக்களுக்காக கவலைப்படுவதால் தான் அதுல் ஹால்டர்கள் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்.

 மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் ஹால்டர் வயது 75 மத்திய அரசின் ’சவுர்ய சக்ரா’ விருது பெற்றவர் என்பதை நம்புவதற்கு தயக்கமாக இருக்கிறது. உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடம்பு. ஆற்றில் மீன் பிடித்து விற்றால்தான் வீட்டில் உலை வைக்க முடியும் என்கிற நிலைமை. "இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965ல் நடந்த போரின் போது மேற்கு வங்கத்தின் இச்சாமதி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிப் போன ஆயுத கப்பலையும், ராணுவ வீரர்களையும் உயிரை பணயம் வைத்து மீட்டேன். அரசங்கமும் எனக்கு விருது கொடுத்து மாதந்தோரும் ரூ15 ஓய்வூதியம் தந்தார்கள். இன்று ரூ100 என்ற நிலையில் இருக்கிறது." என்ன கொடுமை இது?

போகட்டும் கொஞ்சம் லைட்டர் விஷயங்களைப் பார்க்கலாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டெல்லா என்ற 13 வயது மாணவிக்கு செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது தான் பிடித்தமான விஷயம். முதலில் பெற்றோர் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் போன மாசம் 440 பக்க பில் (புத்தகம்?) வந்ததும் மயக்கம் போடாத குறை. ஸ்டெல்லா நம்ம ஊர் பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எப்படி மிஸ்டுகால் கொடுப்பது என்பதை.

நம் ஊர் ஆண்/பெண்களுக்கு ஒரு முக்கிய சேதி. வருகிற காதலர்தினத்தைக் 'கொண்டாட'ப் போகிறவர்களுக்கு ராம்சேனா கூட்டத்தினர் கையில் மஞ்சள் கயிறுடன் வந்து கட்டாயத் தாலிகட்ட வைத்து ரிஜிஸ்டர் செய்துதரப் போகிறார்களாம். ஆண்கள், சேனா இல்லாத பக்கம் பார்த்து பார்ட்டியைத் தள்ளிக்கொண்டு போய் கொண்டாடவும். மிஸ்டுகால் பெண்கள், வரதட்சிணை சீர் செனத்தி செலவில்லாமல் தப்பிக்க, சேனை இருக்கும் பக்கமாக சாமர்த்தியமாக ஒதுக்கிக் கொண்டுபோய் கொண்டாடவும். வாழ்க மணமக்கள் (ஆகப் போகிறவர்கள்!).

எது எப்படியோ இட்லிவடை! இப்போது மின்வெட்டு, பணவீக்கம், விலைவாசி, சேது சமுத்திரம், ஸ்பெக்டரம் போன்ற பிரச்சனைகளே தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சீரும் சிறப்புமாக இருக்கிறது. சுபம்.

அன்புடன்
பாடிகார்ட் முனி.

22 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

அப்பாடா.. லாங் லீவ் கழிச்சு வந்தாலும் வெரைட்டியாதான் வந்திருக்காரு முனி!

iamnotagenious said...

"கிருஷ்ணா, கிருஷ்ணா... நகைச்சுவைக்கு ஒரு எல்லையே இல்லாமல் போச்சு. "

இவிங்க அலும்பு தாங்க முடியலப்பா. ...............

Anonymous said...

//இப்படித்தான் பர்க்கா தத் பற்றி எழுதப் போய்... //http://209.85.129.132/search?q=cache:swkK7xp9rLQJ:reader.feedshow.com/show_items-feed=82acf344ae184d2fd2a94dd3b34582b1+http://ckunte.com/


கீழே scroll செய்தால் பர்க்கா தத் பற்றிய Shoddy Journalism என்ற ஒரிஜினல் பதிவை படிக்கலாம்.

Anonymous said...

yea... i like this short and sweet letter from muneeshwaran.

அரவிந்தன் said...

//நகைச்சுவை என்றவுடன் நினைவுக்கு வருகிறது, நகைச்சுவை எழுத்தாளர் கடுகு எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். விவேக், ஜெயகாந்தன் போல கணிதத்தில் சி.எஸ்.சேஷாத்ரி என்பவர் இந்த முறை பத்ம விருது வாங்கியிருக்கிறாராம்.. கணித மேதை ராமானுஜத்துக்குப் பிறகு ராயல் சொசைட்டியில் இவர் பெயர் தான் இருக்கிறது தெரியுமா என்று கேட்டிருந்தார். //

இதென்ன கொடுமை.கடுகு, தனக்குத்தான் மின்னஞ்சல் அனுப்பியதாக ஞாநி குமுதத்தில் எழுதியிருக்கிறார்.

ஆனா இட்லி வ்டை சி.ஸ் சேஷாத்ரி குறித்து கடுகு தனக்கு அனுப்பியதாக சொல்கிறார்.

அப்ப இட்லிவடைதான் ஞாநி யா...என்ன கொடுமை சரவணன் இது.?

Anonymous said...

// இப்போது மின்வெட்டு, பணவீக்கம், விலைவாசி, சேது சமுத்திரம், ஸ்பெக்டரம் போன்ற பிரச்சனைகளே தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சீரும் சிறப்புமாக இருக்கிறது. சுபம். //

இதுதான் இட்லி வடை..டச்.. அப்படி போடு.

Anonymous said...

//மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் ஹால்டர் வயது 75 மத்திய அரசின் ’சவுர்ய சக்ரா’ விருது பெற்றவர் என்பதை நம்புவதற்கு தயக்கமாக இருக்கிறது. உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடம்பு. ஆற்றில் மீன் பிடித்து விற்றால்தான் வீட்டில் உலை வைக்க முடியும் என்கிற நிலைமை. "இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965ல் நடந்த போரின் போது மேற்கு வங்கத்தின் இச்சாமதி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிப் போன ஆயுத கப்பலையும், ராணுவ வீரர்களையும் உயிரை பணயம் வைத்து மீட்டேன். அரசங்கமும் எனக்கு விருது கொடுத்து மாதந்தோரும் ரூ15 ஓய்வூதியம் தந்தார்கள். இன்று ரூ100 என்ற நிலையில் இருக்கிறது." என்ன கொடுமை இது?//

நம்ம நாட்டுக்காரன் பிரச்சனையேவே இந்த டில்லி பரதேசிகள் கண்டுகொள்வதில்லை. இதில ஈழப்பிரச்சனைய கண்டுகொள்வதில்லை என ஒரு கும்பல் கும்முறாங்க...

அரவிந்தன் said...

ஞாநி தனக்குதான் கடுகு மின்னஞ்சல் அனுப்பியதாக குமுதத்தில் எழுதியிருக்கிறார்ஆனா இட்லிவடை தன்க்கும் கடுகு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறார்.

அப்ப ஞாநி தான் இட்லி வ்டையா...

என்ன கொடும சரவணன்

மடல்காரன்_MadalKaran said...

முனியின் வருகைக்கும் மடலுக்கும் நன்றி.
அன்புடன், கி.பாலு

டன்மானடமிழன் said...

////பூணூல் போடாதவர்களுக்கு மட்டும்தான் கலைஞர் ஒழிக என்று சொல்லும் யோக்கியதை இருக்கிறதாம்////

சாணி அடிக்கிறதுனு
முடிவுசெய்திட்டோம்
அதான்
அவா தொட்ட
அவா கை அசிங்கமாயிடும்னு
நல்லதுக்கு சொன்னா

இது விளம்பர யுகம்
'கலைஞர் ஓழிக'ங்கர
விளம்பரத்தை
'அரைவேக்காடு' தனமா
புரிஞ்சிக்கிட்டு 'ஸ்மைல்' பண்ணா
நல்லாவா இருக்கு....

சும்மா
டைம் பாஸ்க்கு எழுதாதே பாடிகாட்
அப்புறம் கலைஞருக்குநடந்த மாதிரிதான்
'உன்னை நீயே திட்டிக்கனும்'

இப்படி நம்பளை நாமே திட்டிக்கிறதுக்கு
எங்க ஊருலா என்னவோ
சொல்லுவாங்களே சொல்லுவாங்களே
சொல்லு......

vadlyidai said...

dey maanga madaiyaa idly vadai... vaiko amma aatchila pota-la 1 1/2 varusam ulla iruntharae... theriyaatha unakku. potaangggggg

Anonymous said...

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும்
இட்லிவாடை டன்மானடமிழன் யாரு????

திவா said...

// இப்படி வந்தவர்கள் எல்லோரும் (அப்பாவி) சட்டக் கல்லூரி மாணவர்கள். இவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//

அப் பாவி சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்தி என்ன பேச்சு! வளந்து வக்கீலான பிறகு சைக்கிள் கடைல பூந்து சைக்கிள் எல்லாம் தூக்கி போட்டு..... இவங்களுக்குக்கூட சம்பந்தமில்லே!

அறிவிலி said...

நடுவில் கொஞ்ச நாள் ஊடல் (பிணக்கு கூட கிடையாது) இருந்த போது, சன் டிவி கொஞ்சம் பார்க்க / கேக்க சகிக்கும்படி இருந்தது. இப்போது பழைய குருடி கதவ திறடி...

Litmuszine said...

"/பத்திரிக்கைகாரர்கள் பற்றி /" சொல்லும்போது படுதா தத்தின் அட்டகாசத்தை கோடிட்டு காட்டியிருந்தீர்கள். நானும் என் பங்கிற்கு!!. "Who owns the media in India ?" என்ற தலைப்பில் என் நண்பர் அனுப்பிய மையிலின் Contents. இதில் படுதா பற்றியும் உண்டு .
____________________________________________________
Who owns the media in India ?

Let us see the ownership of different media agencies.

NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in
Spain Supports Communism. Recently it has developed a soft corner towards
Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in
Pakistan. Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General
Secretary of the Communist party of India . His wife and Brinda Karat are
sisters.

India Today which used to be the only national weekly which supported BJP
is now bought by NDTV!! Since then the tone has changed drastically and
turned into Hindu bashing.

CNN-IBN: This is 100 percent funded by Southern Baptist Church with its
branches in all over the world with HQ in US.. The Church annually
allocates $800 million for promotion of its channel. Its Indian head is Rajdeep
Sardesai and his wife Sagarika Ghosh.

Times group list:
Times Of India, Mid-Day, Nav-Bharth Times, Stardust, Femina, Vijay Times,
Vijaya Karnataka, Times Now
(24- hour news channel) and many more...
Times Group is owned by Bennet & Coleman. 'World Christian Council¢ does 80
percent of the Funding, and an Englishman and an Italian equally share
balance 20 percent. The Italian Robertio Mindo is a close relative of
Sonia Gandhi.

Star TV : It is run by an Australian, who is supported by St. Peters
Pontifical Church Melbourne.

Hindustan Times: Owned by Birla Group, but hands have changed since
Shobana Bhartiya took over. Presently it is working in Collaboration with Times
Group.

The Hindu: English daily, started over 125 years has been recently taken
over by Joshua Society, Berne , Switzerland .. N. Ram's wife is a Swiss
national.

Indian Express: Divided into two groups. The Indian Express and new Indian
Express (southern edition) ACTS Christian Ministries have major stake in
the Indian Express and latter is still with the Indian counterpart.

Eeenadu: Still to date controlled by an Indian named Ramoji Rao.
Ramoji Rao is connected with film industry and owns a huge studio in
Andhra Pradesh.

Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a
Congress Minister has purchased this Telugu daily very recently.

The Statesman: It is controlled by Communist Party of India.

Kairali TV: It is controlled by Communist party of India (Marxist)

Mathrubhoomi: Leaders of Muslim League and Communist leaders have major
investment.

Asian Age and Deccan Chronicle: Is owned by a Saudi Arabian Company with
its chief Editor M.J. Akbar.

Gujarat riots which took place in 2002 where Hindus were burnt alive,
Rajdeep Sardesai and Bharkha Dutt working for NDTV at that time got around 5 Million Dollars
from Saudi Arabia to cover only Muslim victims, which they did very faithfully... Not a single Hindu family was
interviewed or shown on TV whose near and dear ones had been burnt alive, it is reported.Tarun Tejpal of Tehelka.com regularly gets blank
cheques from Arab countries to target BJP and Hindus only, it is said.

The ownership explains the control of media in India by foreigners. The
result is obvious.

PONDER OVER THIS. NOW YOU KNOW WHY EVERY ONE IS AGAINST TRUTH, HOW VERY SAD.
____________________________________________________


____________________________________________________

ஹரன்பிரசன்னா said...

//அடுத்தவர் எதிரில் படுத்துகிற, சாமானை உடைக்கிற குழந்தையை சகிக்கவும் முடியாமல், மற்றவர் சொல்லிக் காண்பிப்பதை பொறுக்கவும் முடியாமல் தன் குழந்தையை தானே முன்வந்து "ஹி.. ஹீ.. ரொம்பப் பொல்லாது, அப்பா மாதிரி" என்று உள்ளே கடுப்பாகி, வெளியே வழிந்துகொட்டும் அம்மா மாதிரி சகிக்கமுடியாமல் இருக்கிறது இந்தப் பதிவுகள் எல்லாம். //

:))

ரிஷபன் said...

இலங்கைத் தமிழன் என்று உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு நிஜமாகவே ஒரு பரிவு இருக்கிற மாதிரி எனக்குத் தோன்றவில்லை. இந்த சீசனுக்கு வேஷம் கட்டுபவர்கள். அவர்களுக்குத் தேவை பரபரப்பும், ”இந்திய அரசே” என்று விளித்து திட்டுவதற்க்கு ஒரு மேட்டரும்.
முனி-யின் கடிதத்தில் வருகிற நமக்கு நாமே திட்டம் நல்ல நக்கல்.

Anonymous said...

டேய் பார்ப்பன திருடன்களா!

ஒழுங்கா அடக்கி வாசிங்கடா! என்னது அம்மா ஆட்சில இருந்தா ஜெயிலுக்கு போகணுமா
உங்களை எல்லாம் தண்டிக்க ஹிட்லர் தான்டா மீண்டும் வரணும்.
தமிழின துரோகிகளா?
நல்லெண்ணமே இல்லாத நீங்க எல்லாம் மிருக குணமுடையவர்களோ?

இராஜாதிராஜன்

Anonymous said...

"நம் சிஐடியில இருப்பவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். ராமலிங்க ராஜூவிடம் 1000 சூட் இருக்கிறது, 321 ஷூ இருக்கிறது, 310 பெல்ட் இருக்கிறது, எண்ணூத்தி சொச்சம் ஜட்டி இருக்கிறது என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறர்கள். 5000 கோடி பணத்தை என்ன செய்தார் என்றுதான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை."

கோவணம் வாங்கினாரு. போவியா சும்மா. நம்ம Hindu, NDTV, CNN-IBN எல்லாமே அதப்பத்தி யோசிக்கலை. வக்கில் நோட்டீஸ் வேணுமா.

Kots said...

// அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்ஷைத் தொடர்ந்து தற்போது சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசியிருக்கிறார்கள். //

நம்ம தமிழ் நாட்டில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தா நல்லா தான் இருக்கும்

Anonymous said...

kots,

muka will use periyars story about chappal throwing.

avaruka kathai sollitharanum.

4tamilmedia Team said...

ஐயோ…! இந்தியா நாசமாப் போக....!இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை வெளியிட எமக்குத் தயக்கமாக இருந்தபோதும், எந்தவிதமாற்றமும் செய்யாமல் அப்படியே தருகின்றோம்.

இந்தக் கட்டுரை பதிவு செய்கின்ற வலியை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அதற்கும் மேலாக யார் மனதையாவது காயப்படுத்துமானால் வருந்துகின்றோம்.

- 4tamilmedia Team

“ஐயோ…! இந்தியா நாசமாப் போக..”

இந்த வாசகத்தைக் கேட்டதும் உங்களுக்குப் பதற்றம் வருகிறதா..? பெருங்குரலெடுத்து ஒப்பாரிவைத்த அந்தப் பெண் திடீரென இப்படிக் கத்தினாள். சற்றும் எதிர் பார்க்கவில்லை ஆனால் அந்த அபலைத் தாயின் கதறலால் அதிர்ந்து போனேன். ஈழத்து மக்கள் பலரின் மனதிலும், இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ்மக்கள் குறித்துச் செயற்படும் விதம் பற்றி அதிருப்தியான மனநிலை காணப்பட்டாலும் கூட, யாரும் வாய்விட்டுச் சொல்லாத வாசகங்கள் அவை. ஆனால் வன்னியிலிருந்து கதறியழுத ஒரு தாயின் வாயிலிருந்து வந்து விழுந்த வாசகங்கள் இவை.

இன்று…மாலையில் களநிலைச் செய்திகளைச் சேகரிக்கச் சென்று கொண்டிருந்த போது, ” ஐயோ…! இந்தியா நாசமாப் போக..” என்ற அந்த அபலைத் தாயின் அலறல் கேட்டது. சுற்றி நின்றவர்களிடம் விபரம் கேட்டபோது, மூன்று பிள்ளைகளையும், தன் முழங்காலுக்குக் கீழேயுள்ள காற்பகுதியையும், இழந்துவிட்டஒரு பெண்ணின் ஆவேசமான கதறல் அது எனத் தெரிய வந்தது.

எண்ணிப் பார்க்கின்றேன். உண்மையில் ஈழத்துமக்களின் மனங்களில் இந்தியா குறித்த நேசம் இப்படியாகவா இருந்தது ?.

இந்தியா எமது அன்னைபூமி என்பார் சிலர். ஆன்மீக பூமி என்பார் சிலர். அந்த மண்ணில் ஒரு தரம் கால் பதித்தால் எந்த மனிதனது கவலைகளும் பறந்து போய்விடும் என்று ஒரு காலத்தில் பலர் சொல்லி மகிழ்வதைக் கேட்டிருக்கின்றேன். ஈழவிடுதலைப் போராட்டம் முகிழ்ந்த போதுகளில் கூட, இலங்கைஅரசு சொல்வதையோ, ஏன் விடுதலை இயக்கங்கள் சொல்வதையோ எம் மக்கள் அதிகம் நம்பியதில்லை. இந்தியா என்ற தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை, மாநிலச் செய்திகள் கேட்கும் அவர்களின் ஆவலில் தெரியும்.

இந்தியாவின் வெற்றிகள், வேதனைகள் அத்தனையையும், இந்தியமக்கள் எவ்விதம் அனுபவித்தார்களோ.. அப்படியே அனுபவித்தவர்கள். ஈழமக்கள். முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி மறைந்தபோது, இந்தியாவிலும் தமிழகத்திலும் எத்துனைபேர் அழுதார்களோ தெரியாது. ஆனால் ஈழத்தில் அத்தனைபேரும் அழுதார்கள். எத்தனையோ தாய்மார், அன்னையின் அந்திமக் கிரிகைககள் முடியும் மட்டும் உண்ணாதிருந்தார்கள். அத்தனை பாசமிக்க மக்களின் மத்தியிலிருந்ததான் இன்று இப்படியொரு கதறல்.

இந்திய உறவுகளே!

இந்தக் கதறலின் வலி உங்களுக்குப் புரியவில்லையா. புரிந்தும் வாழாதிருக்கின்றீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் எப்படியெல்லாம் சொல்ல வேண்டுமோ.. அப்படியெல்லாம் சொல்லியாயிற்று. இந்திய மத்திய அரசு என்ன செய்கின்றது என்பது, தமிழகத்தின் கடைநிலை மாந்தனுக்கும் புரிகிறது, எறிகணைகளின் வீச்சுக்களில் எரிந்து கொண்டிருக்கும் ஈழத்து மக்களுக்கும் புரிகிறது. ஆனாலும், தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தலைவர்களுக்கு மட்டும் புரியாமல் போய்விடுகிறது.

படித்த மேதாவிகள், பல்லிளித்துச் சொல்கிறார்கள் இந்தியா எப்போதும் நல்லதே செய்யுமென்று. உங்கள் கறுப்புக் கண்ணாடிகள் கண்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தோம், ஆனால் மனதுக்கும் கூட என்பதை உணர்ந்துகொள்ளாதிருந்து விட்டோம். இந்திய மத்திய அரசின் செய்கை என்னவென்று உங்கள் எல்லோர்க்கும் புரிகிறது. ஆனால், உங்கள் பிராந்திய வல்லரசெனும் பெருங்கனவில், ஈழத்தமிழினத்தை அழிக்கும் முயற்சிகளை ஆராதிக்கின்றீர்கள். ஒன்று மட்டும் சொல்ல ஆசை. நீதிக்குப் பிழையான இந்த நெறிமுறையால், நீங்கள் நினைப்பதற்கு மாறாக நடந்துவிடக் கூடும். ஏனென்றால், அரசியலில் நீங்கள் கூட்டு வைத்திருக்கும் கொடுங் சிங்கங்கள் என்பதற்குமப்பால், ‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும்’ என ஏதோஓரு நம்பிக்கை மொழி எங்கள் மொழியில் உண்டாமே. அது சத்தியமான வார்த்தையெனில், உங்கள் ‘அக்னி’களுக்கும், ‘பிருது’விகளுக்கும், அப்பால் ஏதோ ஒன்று உங்களை இல்லாது செய்யும் என்ற நம்பிக்கையில் கத்தியிருக்கின்றாள் அந்த அபலை. இன்னும் சொல்வதானால் ஏதுமற்றவள் அழுது குழறி, ஐயோ எனச் சொல்லி இட்டிருப்பது சபதம் அல்ல சாபம்.

- காந்தி

நன்றி : 4tamilmedia Team