பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 26, 2009

கலைஞருக்கு வாலி - வாலிக்கு ?

பாவம் வாலி கலைஞரை எவ்வளவு நாள் தான் புகழ்ந்துக்கொண்டே இருப்பார். என்றாவது ஒரு நாள் அவரை யாராவது புகழ்ந்து பாடியிருப்பார்களா ?
வாலிக்கு ஈடாக கவிதை படைக்க வேண்டும என்றதும் பினாத்துவதுதான் நினைவுக்கு வந்தது. அதனால் பினாத்தலைப் பிடித்தேன் அவரின் கவிதை கிழே...


வாலி கவிதை பச்சை
பினாத்தலார் கவிதை சிகப்பு

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

சந்தத் தமிழே வணக்கம், ஆங்கிலம் கலந்து நொந்த தமிழே வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்
கூட்டிச் சொன்னால்தான் என் பை கனக்கும்.

எவரேனும் என்னுவரோ தலைவன் வேறாக, தமிழ் வேறாக. தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை, கண்டதும் தூக்குவேன் என் இருகை.

எவரேனும் எண்ணுவரோ ஜால்ரா வேறாக, வாலி வேறாக. காக்கய் பிடித்தே வாழுகிறார் க்விஞர் ஜோராக.. எங்களுக்கு பேஜாராக!
கவிஞர் பெருமானே உம் இருகை, கூப்பியதும் தொடங்கும் பண வருகை.

உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

உயரிய தலைவர்களை வணக்கம் போட்டால்தான் உன் பைக்கும் செல்வம் கிடைக்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.
உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.

என் பாட்டு உன்பாட்டின் உல்டா.
உன்பாட்டு இல்லையெனில் என் பாட்டு வாங்கும் பெரும் கல்தா.

அருமை தலைவா,
ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
தேர்தலுக்கு தேர்தல் 5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.

அருமை கவிஞா,

2007ல் எமனிடம் நீ போர் போட்டாய்.. 60 களிலேயே எம் என் னோடு எம்ஜியாரின் போருக்கு ஆணை போட்டாய்.

தேர்தலுக்கு முன்னிருந்தே ஒலிக்குது உன் சத்தம்.. கவியரசு ஆனபின்னும் நிற்கவில்லை என் கழுத்து ரத்தம்.தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம் செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும் புறம் தள்ளிய கோபாலபுரத்து சாமி.
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை கொண்டாடுகிறது இந்த பூமி.

கவிதை வரலாற்றில் அன்று ஒரு கண்ணதாசன்,
இன்று ஒரு கலைஞர்தாசன்..

நீயோ எல்லாரையும் புறம் தள்ளிய தாசானுதாசன்..
பிழைக்க விரும்புவோர்க்கு நீ ஒரு ஆசானுக்கு ஆசன்.அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.
குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை. இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.


அய்யா..

50 ஆண்டாய் உன் சேவை பெறுகிறது திரைத்துறை..
பே நாவில் விஷம் சுமந்து நீ நற்றமிழ் கொன்ற துறை.

ஆற்றை அறுத்த ஊராம் நீ பிறந்த திருவரங்கம்
கவிதையை அறுத்து அரங்கம் படைத்தாய் - அறுத்தறுத்தே ஏறுவாய் ஆயிரம் அரங்கம்.


சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.

சமைந்ததைக் கேட்டு சாகாவரம் பெற்றாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு உப்புமா..
சமைந்ததைக் கேட்டும் சமையாமல் இருக்கிறாய்.. அந்த வகையில் உன் உப்புமாவில் உப்பிருக்குமா?


உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.
நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.

உன்னை மீறி வைரம் போனால் என்ன, முத்து போனால் என்ன?
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சொறி.

உன்னிடம் உள்ளது ஜால்ரா வலிமை.
அந்த வலிமைக்கு இல்லையே ஒரு உவமை.

நீயே உனக்கு ஒப்பு,
உன்னைக் குறை சொன்னால் அது தப்பு..
உன் தமிழை மிஞ்சுமா நமீதா தரும் மப்பு?
நானும்தான் காக்கை பிடிக்க முனைந்தேன், வேகவில்லையே பப்பு!

நீ எங்கள் கிழக்கு, உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன் சிரசு.
அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும், முதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.
தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர், தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர் எவர்.

நீ எங்கள் பாட்டு, உனக்கு யார் வைப்பார் வேட்டு..
உன் ஜால்ரா தாட்(thought) டு போடும் நோட்டு!

நம் மொழி செம்மொழி, அதில் இருந்தது நயம், பயம்.. நீ தந்தாய் ஜயம் - விஜயம் - கிருஷ்ண விஜயம்!

தமிழின் கவியழகை சேட்டுக்கடையில் வள்ளலே நீதான் அடகு வைத்தாய்..
இன்ச் இன்ச் ஆக ஆணியை வைத்தாய்.

அதுதானய்ய உன் பவர். அதனால்தான் அழைக்கிறார் உன்னை அவர்..
உன் குடும்பம் முன்னேற அவர்தானே தரவேண்டும் கவர்?
அத்தகு கவர் கொடுப்பது வேறு எவர்?அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

ஆல்வா எடிசன் கண்டிபிடித்த பவரால் வீட்டு விளக்கு எரியும், ரோட்டு விளக்கு எரியும்..
உயரிய கவிஞா உன்னிடம் உள்ள பவரால்தான் ஜிங்சக் ஒலி சொறியும், தமிழ்க்கவிதை வயிறு எரியும்,


குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு, அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா, உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.

பழனிக்கும் விஜய்க்கும் இன்று உன்னாலே பாட்டு வருகிறது.. பாசக்கிறுக்கு நேசக்கிறுக்கு என்ற பலக்கிறுக்கை வாழ்த்திச் சொல்வேன் நீ ஒடு தமிழ்க்கிறுக்கு என்று..

என் தலைவா, நீ ஒரு ஆளுகை, பிடிப்பேன் உன் காலுகை!

(நன்றி: பினாத்தல் வாலி, கவிஞர் பினாத்தலார் )


21 Comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வலைஞன் said...

மன்னிக்கவும்.என்னதான் சிறப்பாக பினாத்தினாலும் ,வாலி,கவிக்கோ அளவு பினாத்த
கலைஞராலேயே முடியாதபோது கவிஞர் பினாதனார் எம்மாத்திரம்?

R.Gopi said...

பினாத்தலார், கவிஞர் வாலிய புகழ்ந்து தான இருக்காரு

இலவசக்கொத்தனார் said...

கனகதாரா ஸ்தோத்திரம் சொன்னா காசு மழை கொட்டும் அது அந்தக் காலம்.

கவிஞர் வாலி காலை புடிச்சு ஒரு கவுஜ வாங்கிப் படிச்சாலே போதும் இது இந்தக் காலம்!!

தவநெறிச்செல்வன் said...

நல்லாயிருந்தது,

படித்துறை.கணேஷ் said...

ஐயோ....இப்படி மனம் விட்டு வாய்விட்டு சிரித்து ரொம்ப நாளாகிவிட்டது நண்பரே...ஹாட்ஸ் ஆப்.....

ரிஷபன் said...

திருமங்கலம் மில்லியனர் அளவுக்கு இதில் நக்கல் கைகூடி வரவில்லை. Better luck next time.

சென்ஷி said...

//(நன்றி: பினாத்தல் வாலி, கவிஞர் பினாத்தலார் )//

இட்லிவடை ஸ்பெஷல் :-)))

Anonymous said...

I haven't laughed this loudly by reading a post!!

Yaaru antha Pinathinaar?
Simply super!!

Boston Bala said...

classic!

ராஜ. சுப்ரமணியம் said...

பினாத்தலாரின் கவிதை அருமை. சிரித்து ரசித்தேன்.

யோசிப்பவர் said...

Really Nice

வாழவந்தான் said...

///(நன்றி: பினாத்தல் வாலி, கவிஞர் பினாத்தலார் )///
இட்லிவடை.. மேல இருக்கும் வரிக்கு மஞ்சள் பேக்ரவுண்டு போட்டிருக்கலாம்.
மஞ்சள் தலைவர் பற்றிய பதிவில் மஞ்சள் பேக்ரவுண்டே இல்லியே???

இதுல வாலியின் கவிதை வேற பச்சை பச்சையா(நான் கலரை சொன்னேன்) இருக்கு..
அந்த பச்சை வண்ணம் எதிர் கட்சியின் சதியோ??

IdlyVadai said...

வாழவந்தவன் செய்துவிட்டேன் :-)

tsr said...

வாலி!
நீர் எழுதுவதெல்லாம் வெறும் போலி!
இதை உண்மையென்று நம்பினவன் காலி!
உமக்கு திரைத்துறையில் இப்போது இல்லையா ஜோலி?
இட்லி வடையில் மாட்டிக்கிட்ட போளி!
உழைத்து சம்பாதிச்சாத்தான் கூலி
குழைந்து கும்பிட்டா பொழைப்பு நடத்தணும் மூளி?

tsr said...

வாலி!
நீர் எழுதுவதெல்லாம் வெறும் போலி!
இதை உண்மையென்று நம்பினவன் காலி!
உமக்கு திரைத்துறையில் இப்போது இல்லையா ஜோலி?
இட்லி வடையில் மாட்டிக்கிட்ட போளி!
உழைத்து சம்பாதிச்சாத்தான் கூலி
குழைந்து கும்பிட்டா பொழைப்பு நடத்தணும் மூளி?

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம்ம்??? ரொம்ப நாளாவே சந்தேகம்! பெனாத்தலார் தான் நீங்களா?? இல்லை நீங்க பெனாத்தலா???

பச்சையை விட சிவப்பே நல்லா இருக்கு ரசிக்கும்படியா! :))))))))))))))

நாரத முனி said...

எலேய் இந்த கவிஞர் பினாத்தலார் யார்னு எனக்கு தெரிஞ்சு போச்சு... அவரு தானே " கும்மியடி பையா கும்மியடி " புரட்சி கவித எழுதினவரு???

சங்கு மாமா said...

இதுக்கு பேரு தான் பல்லு படாம.....ஊ ...ம்ம்.. ...ஆங்..அவ்.. இந்த திறமை வாலியை விட்டா வேற யாருக்கு வரும் ?

Anonymous said...

இப்போ டைமண்டு பெல்லை விட பக்கெட்டுக்கு தான் அங்க மதிப்பாமே?

Vedantha Desika Dasan said...

its very nice and simply superb.
I expect more and more of this sort. Hats off.