பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 27, 2009

ஸ்லம் டாக் மில்லியனர் - விமர்சனம்

ஸ்லம் டாக் மில்லியனர்.இந்தப் படம் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்கவில்லை என்றால் இந்தப் பதிவு எழுதியிருப்பேனா என்பது சந்தேகம். பிரபலம் என்றாலே பிராபலம்தான். புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகளுக்கு அடுத்து இது தான் அதிகம் பேரால் எழுதப்படும் பதிவு என்று நினைக்கிறேன். நமது போனி...

போன புதன் கிழமை அமெரிக்க கான்ஃபிரன்ஸ் கால் ஒன்றில் கடைசியாக ஸ்லம்டாக் பற்றி பேச்சு வந்தது. அமெரிக்கர் ஒருவர், “ஸ்லம்டாக் பார்த்தேன், நல்ல படம். இந்தியா பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்,” என்றார். இந்த ஒரு வரி என்னை இந்தப் படத்தை பார்க்க தூண்டியது. நானும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

கதை: மும்பைக் குப்பத்தில் வளர்ந்த ஜமால் மாலிக் என்ற சிறுவன் எப்படி கோன்பனேகா க்ரோர்பதியில் கோடி அள்ளுகிறான் என்பதுதான் கதை. நிகழ்ச்சியின் ஒவ்வொரு கேள்விக்கும் தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து மிகச் சரியான பதில் சொல்லி இறுதிச் சுற்றை அடைகிறான்.

திரைக்கதை: கே.பாலச்சந்தர் மாதிரி தற்போது நிகழும் சம்பவங்களும், சின்ன வயதில் நடந்த சம்பவங்களும் மாறிமாறிக் காண்பித்து திரைக்கதையை அழகாக அமைத்துள்ளார்கள். இந்தியவில் எடுத்த படம் என்பதாலோ என்னவோ திரைக்கதையில், பாடல், காதல், சண்டை, காமெடி, துரோகம், நட்பு, கொலை, கொள்ளை என்று வழமையான எல்லாவற்றையும் எதையும் விட்டுவிடாமல் எப்படியோ புத்திசாலித்தனமாகச் சேர்த்திருக்கிறார்கள்.

இசை: நம் டைரக்டர்கள் போல், கொடுத்த காசுக்கு எல்லா சீன்களிலும் இசை அமையுங்கள் என்று சொல்லவில்லை போலும்; தேவையான இடங்களில் மட்டும் இசை அமைத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கருக்குச் செல்லும் அளவு பெரிய இசையா என்றால்..., எனக்கு அப்படித் தோன்றவில்லை. பல பிட்டுகள் முன்பே நாம் கேட்டதுதான்.

ஒளிப்பதிவு: எப்படிச் செய்ய வேண்டும் என்று இந்தப் படத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சேரியை தத்ரூபமாக காண்பித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கிங் - ரீரெக்கார்டிங். அடுத்தது சலீம், ஜமாலாக வரும் அந்த சின்ன குழந்தைகளின் நடிப்பு.

மற்றவை: அமிதாப் பச்சனைப் பார்க்க சிறுவன் மாலிக் மலத்தில் விழுந்து எழுந்திருப்பது மிகைப்படுத்தப்பட்ட காட்சி.


குப்பத்து ஜமால், சலீம் சின்ன வயசில் இந்தி பேசும் சிறுவர்களாகவும் பெரியவர்களாக ஆன பின் படத்தில் புத்திசாலித்தனமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டு 'அல்லா, ராமர் இல்லை என்றால் என் அம்மா பிழைத்திருப்பர்’ வசனம். ஆனால் அதே புத்திசாலித்தனம் காந்தி யார் என்று தெரியாது என்று சொல்லுவதிலும் இருக்கிறது. ( 1000 ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியைக் காண்பித்து இது யார் என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்கு ஜமால் நக்கலாக, “I fagged with him" என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்).

எந்த குப்பத்து முனிசிபல் ஸ்கூலில் த்ரீ மஸ்கிடீர்ஸ்(3 musketeers) பாடமாக இருக்கிறது என்று தெரியவில்லை. தெரிந்தால் நம்ம பசங்களையும் அங்கே போய் படிக்க வைக்கலாம்.

ஜமால் பேல் பூரி என்ன விலை என்று கேட்கும் இடத்தில் தஹி பூரி காமிக்கிறார்கள். இந்த தப்பை மன்னித்துவிடலாம். ஆனால் பிள்ளை கடத்தல் ஆசாமி சூர்தாஸ் எழுதிய “Darshan Do Ghanshyam Naath” என்ற பாடலை பாடுமாறு சொல்வதை மன்னிக்க முடியாது. Darshan Do Ghanshyam Naath என்ற பாடலை 1957ல் ’கோபால் சிங் நேப்பாலி’ என்ற கவிஞர் இந்தி படத்துக்கு எழுதியது. பெண்கள் சேலைக்கு மேட்சிங்காக பிளவுஸ் போடுவதில்லையா ? அதே போல் குருட்டு பிச்சைகார சிறுவனுக்கு கண் தெரியாத சூர்தாஸ் பாடல் தேவைப்பட்டிருக்கிறது.

படம் முடிந்து வெளியே வரும் போது இந்தியா ஒரு பிச்சைக்கார, எல்லா இடங்களும் சேரியாக இருக்கும் அழுக்கு தேசம் போன்ற உணர்வு நமக்கே ஏற்படுகிறது. இதைத்தான் என்னுடன் பேசிய அமெரிக்கரும் இந்தியா பற்றி தெரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

நிச்சயம் இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும். பரிசு பெற்றவர்கள் எல்லோரும் 5 ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட, குப்பத்து ஜனங்க அதை டிவியில் பார்த்து கைகொட்டி சிரிப்பார்கள்.

”ஸ்ல்டம் டாக்” என்று சொல்லிவிட்டு நாய் படம் இல்லை என்றால் எப்படி ? அதனால் மில்லியனர் ஆன ஸ்லம் டாக் படம் சைடில் ;-)

15 Comments:

Anonymous said...

Please don't write reviews to such movies which you don't appreciate the brilliance of the director. Keep your reviews to movies like villu, kuruvi and aegan.

R.Gopi said...

”ஸ்ல்டம் டாக்” என்று சொல்லிவிட்டு நாய் படம் இல்லை என்றால் எப்படி ? அதனால் மில்லியனர் ஆன ஸ்லம் டாக் படம் சைடில் ;-)
-----------------------------------

This is IV Punch.

When compared to the full movie review, your last two lines, mentioned above is SUPERB.......

Truth said...

//படம் முடிந்து வெளியே வரும் போது இந்தியா ஒரு பிச்சைக்கார, எல்லா இடங்களும் சேரியாக இருக்கும் அழுக்கு தேசம் போன்ற உணர்வு நமக்கே ஏற்படுகிறது. இதைத்தான் என்னுடன் பேசிய அமெரிக்கரும் இந்தியா பற்றி தெரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.//

இப்படி நினைத்தால் அது அவங்களோட தப்பு. அமெரிக்கா, ஐரோப்பாவை காட்டும் இந்தியப் படங்கள் எத்தனையோ இருக்கு. எல்லாப் படங்களிலும் நாம் காட்டுவது
- செக்ஸ்
- போதை பொருள்
- கொலை வெறி
போன்றவை தான். இது தவிர எத்தனையோ நல்ல விஷயஙகள் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளது. உதுரணத்துக்கு - ஒரு நாய்க்கு கூட மனிதனைப் போல ஒரு நல்ல பாதுகாப்பு கிடைக்குது. இது எந்த ஒரு இந்தியப் படங்களிலும் காட்டினதேயில்லை. அசிங்கத்தை மட்டும் தானே நாமும் காட்றோம். ஸ்லம் டாக் மில்லேனியர் திரைப்படத்த பாத்துட்டு அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிக்கிறத விட, இத நாம பாத்துட்டு நம்ம நாட்டுக்கு என்ன பண்ணப்போறொம்ங்கறத யோசிக்கலாம். டாட்டா, அம்பானி இருக்கிற நாடு தானே இப்படியும் இருக்கு? என்ன பண்ணலாம் சொல்லுங்க?

Anonymous said...

படத்தில் method of presentation மிகவும் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஆனால் முதல் பாதியில்தான். பிறகு கதையின் போக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது, அதுவும் இறுதியில் வழக்கமான மசாலா படமாக முடிவது ரொம்பவும் ஏமாற்றம்.

Thangadurai said...

படத்தில் method of presentation மிகவும் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஆனால் முதல் பாதியில்தான். பிறகு கதையின் போக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது, அதுவும் இறுதியில் வழக்கமான மசாலா படமாக முடிவது ரொம்பவும் ஏமாற்றம்.

Anonymous said...

சிறுவன் மூழ்கி எழுவது பற்றி,
ஒருவேளை தெற்காசியர்கள் எல்லோரும் சினிமா நடிகனைக் காண தம் மீது எத்தகைய அழுக்குப் படிவதையும் தாங்கிக் கொள்வார்கள் என்று காட்ட வருகிறாரோ என்னவோ.

M Arunachalam said...

I felt this movie is worth seeing once as a time-pass. Though ARR doesn't deserve to win any award - leave alone Golden Globe or Oscar nomination - for the music(?).

Lagaan (which entered Oscar in the foreign film category) would have been ARR's best calling card. However, I think, Oscar Awards Committee doesn't give any award for original music in the foreign films category. So, in that respect, what was deserving but missed out by ARR in Lagaan, we should feel happy ARR is now getting in SDM.

Anonymous said...

choo choo cha chaaaaa

Rajamanohar said...

பேசுறதுக்கு எதுவும் இல்ல, realism + masala + fantasy - cross genre நல்ல படம். ஆஸ்கார் வரிக்கும் கொண்டு போன புப்ளிசிட்டி, மார்க்கெட்டிங் டீமை பாராட்டுறேன். ப்ரியா (freeya) விளம்பரம் பண்ண சன் news , டைம்ஸ் நொவ் , IBN Live (etc) கும் இந்த பாராட்டு . torture பண்ணிடாங்க !

ரஹ்மானோட இசை எப்போதும் போல நல்லா இருந்துச்சு (நம்மளுக்கு பழகி போய்டுச்சு ) இப்போதான் உலகத்துக்கு தெரியுது!

ஆனால் ச்ளும்டோக்(slumdog millionaire) பத்தி தப்பா பேசிட்டா, இந்தியாவே கொதிச்சு எழுந்திடும் போல இருக்கு. அமிதாப் ஏற்கனவே வாங்கி கட்டிக்கிட்டார். நான் இந்த வம்புக்கு போறதா இல்ல . தேசபக்தின்னு சொல்லிகிலாம்.


ஜெயமோகன் நல்லாய் எழுதி இருக்காரு , படிச்சு தெளிவா டிச்கிஸ்(discuss) பண்ணுங்க.
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=News+is+the+inspiration&artid=G0b9|n5wriw=&SectionID=f4OberbKin4=&MainSectionID=f4OberbKin4=&SEO=&SectionName=cxWvYpmNp4fBHAeKn3LcnQ==

ராஜ சுப்ரமணியம் said...

இதே படத்தை ஒரு இந்தியன் எடுத்திருந்தால், “குப்பை” என தூக்கி எறிந்திருப்போம். பிரிட்டிஷ்காரன் எடுத்ததால் இந்தப் புகழும், பெருமையும்.

Anonymous said...

why dont u appreciate good movielike this. I think your taste is limited with kuruvi, Villu, etc..

chutney said...

அய்யா இட்லி,
பயாஸ்கோப் பலராமை கொஞ்சம் கூட சினிமா பாக்க கூட்டிட்டு போங்கையா. இன்னமும் ஜெயம்கொண்டன்லியே இருக்காரு?

ஸ்ரீனி said...

Crappy and disgusting movie. Shows all the negativeness in the country trying to wash it all away just because the hero wins the contest. Everyone in the movie other than the hero and the heroine ( if you call her so ) is depicted as crook. ARR got Golden Globe probably because he didn't mess up the movie further by doing anything for the background score. Skip it or watch it online. Save your money.
-Sreeni

Anonymous said...

Jeyamohan padam pakamalaya Reel vutukiraru...

விஜயசக்கரவர்த்தி said...

indha padatha pathi pesuradhey sema dhandam..