பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 23, 2009

குடியரசு தின போட்டி !ரொம்ப சிம்பிளான போட்டி:

மகாத்மா காந்திக்கு ‘கதர்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்(கள்) யார் ?
’கதர்’ என்றால் என்ன ?


இந்த போட்டிக்கும் நிச்சயம் பரிசு உண்டு ( இந்த முறை புத்தகம் இல்லை, கவலைப்படாதீர்கள் )

விதிமுறைகள்:

1. விடைகளை பின்னூட்டதில் சொல்லவும்.
2. போட்டி ஜனவரி 25, இந்திய நேரம் மாலை ஐந்து மணி வரை
3. பின்னூட்டங்கள் உடனே பிரசுரிக்க இயலாது. 26 அன்று எல்லா பின்னூட்டங்களும் பிரசுரிக்கப்படும்.
4. ஒருவர் இரண்டு(அல்லது அதற்கு மேல்) பின்னூட்டம் போடலாம். அவர் போட்ட கடைசி பின்னூட்டம் தான் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும். ( முதல் பின்னூட்டம் சரியாக இருந்தாலும் அது எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது )
5. முதலில் யார் சரியான விடை சொல்லுகிறார்களோ அவர்கள் வெற்றி வெற்றிப்பெற்றர்களாக அறிவிக்கப்படுவர்.
6. வழக்கம் போல் போட்டி முடிந்த பின்பு தான் பரிசு அறிவிக்கப்படும்.
7. விதிமுறைகளில் மாற்றம் ஏற்படலாம். அதனால் அடிக்கடி இங்கே வந்து பாருங்க :-)

இதுவரை வந்த பின்னூட்டங்கள்: 10

14 Comments:

Anonymous said...

சோனியா காந்தி தெரியும். ராகுல் காந்தி தெரியும். இந்திரா காந்தி தெரியும். யார் இது புதுசா ஒரு பெரிசு?

உதார் தெரியும். கதரா? இது மாதிரி கஷ்டமான போட்டி வைக்காதீங்கோ, தலைவரே!

Thiyagarajan said...

1. Kadar (khadi)means hand spun cotton
Gangabhen Majumdar, Maganlal Gandhi

Thiyagarajan

Anonymous said...

1. Kadar (khadi)means hand spun cotton
Gangabhen Majumdar, Maganlal Gandhi

Thiyagarajan

Anonymous said...

கதர் என்றால், கையால் நெய்யப்பட்ட பஞ்சு துணி.

மகன்லால் காந்தி என்பவர் பலன்பூர் என்ற இடத்தில் இருந்து கொண்டு வந்து காந்திக்கு சபர்மதி ஆஷ்ரமத்தில் அறிமுகப்படுத்தினார்!

http://www.kamat.com/database/books/gandhiautobio/birth_of_khadi.htm

விஜயஷங்கர், பெங்களூர்
http://twitter.com/vjshankar

Anonymous said...

எங்க காதில் பூ சுற்ற வேண்டாம்.
பென் கிங்க்ஸ்லி படைத்தைப் போட்டு, மஹாத்மா காந்தின்னு சொன்னா நம்பறதுக்கு நாங்க என்ன வாத்து மடையர்களா என்ன?

Sethu Raman said...

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி
கத்தியவாடில் இருந்த விவசாயிகளின் நிலைமை
தெரிந்துகொள்ள சில குடிசைகளுக்கு விஜயம்
செய்தார் - ஒரு மூதாட்டியிடம், உங்களுக்கு ஏதாவது
தேவைப்படுகிறதா என்று வினவிய போது, வீட்டின்
ஒரு மூலையிலிருந்த தன்னுடைய சர்க்காவை (ராட்டை)
காட்டி 'இது இருக்கும் வரையில் எனக்குoன்றுமே
தேவையில்லை' என்றாள் அவள். கதரைப் பற்றி
அப்போதுதான் தெரிய வந்தது காந்திக்கு!
கதர் என்றால் பருத்தியில் இருந்து கையாலேயே
நூற்கப்பட்டது என்று பொருள்
மில்களில் தயாரிக்கப்பட்ட துணிகளைப் புறக்கணிக்க
காந்தி போராட்டம் ஆரம்பித்தபோது கதரே எல்லோரும்
உடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் காந்தி.

சென்னை பித்தன் said...

கதர் என்பதற்குப் பருத்தித் துணி-குறிப்பாகக் கையினால் நெய்யப்பட்டது என்று பொருள்.
இதைக் காந்திக்கு அறிமுகப் படுத்தியவர்,ஆசார்ய வினோபா பாவே.

முகமது பாருக் said...

தமிழகத்தில் என்று நினைக்கிறேன், சரியாக தெரியவில்லை அதே நேரம் உபரித் தகவல் அவர் கோமணம் (அதாவது மேலாடையை துறந்தது) கட்ட ஆரம்பித்தது சோழவந்தான் (மதுரை மாவட்டம்) என்ற இடத்தில் என்று சமீபத்தில் படித்தேன். ஏனெனில் அங்கே வயலில் வேலை செய்தவர்களை பார்த்து மகாத்மா உடையை தீர்மானித்தாரம்..

சரியா இருந்தால் புத்தகமே கொடுங்கள்.. சுதந்திர தினம், குடியரசு தினம் தொலைக்காட்சிகள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்களோ அதுபோல நீங்களுமா?

ஆனால் இந்த பதிவுக்கு கண்டிப்பாக பாராட்ட படவேண்டும்.தோழமையுடன்

முகமது பாருக்

venki said...

அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.

'கதர்' என்றால் அரபு மொழியில் 'கண்ணியம்' என்றும் பொருள்.

venkatesh T,
tvz.venkatesh@gmail.com

Bala said...

Sir,
kadhar = handspun cotton
its not tamil word.
other i dont know the answer.

since ur price are good articles, first i look to participate in this event.
being frank, i dont know the answer, so i tried to improve my knowledge on this. and found lot of good articles about gandhi.
I got SATHYASODHANI PDF file and more good articles abt gandhiji , and im thankful for u.

Thai manne vanakkam...
Engal bharadha desam endru thol kottuvom.

Balamurugan.M
ramana

IdlyVadai said...

போட்டி 26, மாலை ஐந்து மணி வரை.

Sethu Raman said...

ஐம்பது அறுபது பின்னூட்டம்
வரும் என்று எதிர்பார்த்தீர்கள்
போல இருக்கு - பத்துக்கு மேல்
வரவில்லை - அதனால் தான்
நாளை வரை நீட்டியிருக்கிறீரா?

IdlyVadai said...

சேது ராமன்,

10 பின்னூட்டங்கள் வந்ததே அதிசயம். ஏன் என்றால் காந்தி படம் போட்டல் நிச்சயம் கூட்டம் வராது என்று தெரியும் :-)

நமிதாவும், அரசியல்வாதிகள் பதிவை படிப்பவர்கள் தான் அதிகம்.

பழைய ஆர்.கே.லக்‌ஷ்மன் காந்தியை பற்றிய கார்டூன் தான் நினைவுக்கு வருகிறது.

கதர் பற்றி மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவின் நோக்கம்.

சந்திரமௌளீஸ்வரன் said...

கதர்: இது ஹிந்தி வார்த்தை

இந்தியாவில் விளைந்த பஞ்சினைக் கொண்டு நெய்யப்பட்ட துணி என்றர்த்தம் தரும்

இந்த வார்த்தையினை மகன்லால் காந்தி மோகன்தாஸ் காந்தியாருக்கு (மஹாத்மா)க்கு சொல்லிக் கொடுத்தார்