பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 26, 2009

கலைஞர் செய்திகள் - நேற்று, இன்று

நேற்று வந்த செய்தியும், இன்று வந்த செய்தியும்.

நேற்று வந்த செய்தி
சாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய். அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா. சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய். அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா? இதை சொன்னவர் வாலி(இது கூட எங்களுக்கு தெரியாதா).

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழர் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 11 மணிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, இரண்டரை மணி நேரம் நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார்.


இன்றைய செய்தி
முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு முதுகுப் புறத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காணரமாக, அதிக அளவிற்கு வலி ஏற்பட்டதால், மருத்துவர்கள் குறைந்த ஒரு வாரத் காலவத்திற்காவது ஓய்வெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதின் பேரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நிலை குறைவு காரணமாக குடியரசு தின விழாவில் முதல்வர் கருணாநிதியால் பங்கேற்க முடியவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு குருவி படம் பார்த்த பின்பும் இதே மாதிரி தான் மருத்துவமனை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 Comments:

R.Gopi said...

முன்பு குருவி படம் பார்த்த பின்பும் இதே மாதிரி தான் மருத்துவமனை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------

Indha functionla Kavarchi Kanni Namitha dance irundhu irundhunaa, annanukku Mudhugu Vali vandhu irukkadhu endru urudhiyaaga koorugiren.

KURUVI paathaa mudhugu vali mattumaa, ella valiyum varum.

technicalsathish said...

என்ன நம்ம முதல்வர் இன்றைய நிகழ்சியில் கலந்துக்கவில்லயா... என்ன கொடுமை இட்லிவடை இது....

டன்மானடமிழன் said...

///ஜெகத்ரட்சகன் பேச்சு :
தை மகளைத் தலை நிமிரவைத்த
தமிழ் தாயின்
தலைமகன்
தலைவர் கருணாநிதி.
அவருக்குப் பாரட்டு விழாக்கள்
எடுப்பதை எனக்குக் கிடைத்த பேறாகவே கருதுகிறேன்
நன்றி:ஆனந்தவிகடன் ////

எனக்கு என்னனா
இதுமாதிரி இன்னும்
4 பாரட்டு விழா நடத்தினார்
அவ்வளவுதான்
சம்போ சிவ சம்பபோ சங்கராதான்

எப்ப்ப்பப்பப்பபபபபபபபபபப
திராவிட தமிழர்களே
ஜெகத்ரட்சகனிடமிருந்து
உங்கள் தலைவரை காப்பாற்றுங்கப்பா

ஜெகத்ரட்சகன் = வஞ்சபுகழ்ச்சி

நல்லவேளை
வில்லு படம் பார்க்கல
பார்த்திருங்தா
தமிழ்நாடு சின்னாபின்னம் ஆகியிருக்கும் ;))))

Hariharan # 03985177737685368452 said...

எட்டு கழக போர்வாட்கள் மத்திய அமைச்சர்கள் இருந்தாலும் டெக்னிக்காக இப்படி இந்தியக் குடியரசு தினத்தன்று டேக்கா காட்டி இந்திய அரசை எதிர்த்து இருக்கிறார் தமிழின் தமிழ் கருணாநிதி!

தமிழீனத்தலைவர் ஈழத்தமிழர்களுக்காகச் செய்யும் தியாகத்தை புரிந்து கொள்ளவில்லையா??

2009 ஏப்ரல் /மே மாதத்தில் பாரளுமன்றத் தேர்தல்! மார்ச் முப்பதாம் தேதிக்கு கழக அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் பாட்டி(ல்) வசம் ஒப்படைக்கப்படும்! மருத்துவர் அய்யாவிடமும் பேசியாச்சு!

இனி ஈழத்தமிழர் சுதந்திரப்பள்ளு எழுதிப்பாட வேண்டியது மட்டுமே பாக்கி!

ஈழத்தவர் சுதந்திரப்பள்ளு பாடும் போது தென்மாவட்டத்தில் கள்ளு இறக்க அனுமதி தரப்படும்!

பள்ளுக்கும் கள்ளுக்கும் என்ன சம்பந்தம்? கருணாநிதிக்கும் தமிழர் நலனுக்கும் என்ன சம்பந்தமோ அதுதான்!

எதுகை மோனையா பேசுனா எப்பவுமே நமீதா & கோ வை நினைச்சுக்கிட்டே இருக்கும் தமிழன் தமிழ் இன உணர்வு பெற்றுவிடுவார் என்பது பகுத்தறிவு!