ஜல்லிக்கட்டு பற்றி ஞாநி எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் ( விகடனிலிருந்து குமுதத்துக்கு அனுப்பிய அவரது கட்டுரை), திமுக எம்.எல்.ஏ மூர்த்தியின் கருத்துக்கள், செய்திகள், படங்கள் கூடிய தொகுப்பு....
சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னதால் ஜல்லிக்கட்டு தடை நீங்கியது - கருணாநிதி தகவல்
....இங்கே விருது பெற்ற குன்றக்குடி ஆதீனத்தின் மூத்தவரும், நானும் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆன்மிகத்துக்கும், அறிவு இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உறவாக அதனை கருதுகிறேன். இந்த இரு இயக்கங்களும் இணைந்து நாட்டு மக்களை வாழ்விக்க அந்தச் சந்திப்பு உதவியாய் இருந்தது. தற்போது விருது பெற்றுள்ள பொன்னம்பல அடிகளார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, இரு நாட்களாக என்னை படாத பாடு படுத்திவிட்டார். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'ஏறு தழுவுதல்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு இருந்ததை ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். இது போன்ற விவரங்களை எடுத்து சொல்லி தடையை நீக்கப் பெற்றோம். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவைகளை சொன்னால் நல்லவை நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ( 2008, ஜனவரி அன்று விருது வழங்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி )
ஞாநி கட்டுரையிலிருந்துஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு என்று தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் பலவும் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு சில தென் மாவட்டங்களின் ஓட்டு வங்கிக்காக குரு பூஜைக்கு எல்லாக் கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு போவது
போன்ற அதே அணுகுமுறைதான் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் பிரதிபலிக்கிறது.
அரசியல்வாதிகளின் உரத்த கூச்சலின் நிர்ப்பந்தத்துக்கு பயந்து உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த நியாயமான தடையைத் தளர்த்தினால்கூட அது வருத்தத்துக்குரியதுதான். நான்சென்ஸுக்கு எதிராக பெரியார் வலியுறுத்திய காமன்சென்ஸ் எனப்படும் பகுத்தறிவின்படிப் பார்த்தால் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டே அல்ல. அதில் வீரமும் இல்லை. விளையாட்டும் இல்லை. விளையாட்டு என்பது உடலையும் உள்ளத்தையும் உரமூட்டி வலுப்படுத்துவதாகும். சடுகுடு முதல் டென்னிஸ் வரை விளையாட்டுகளின் வடிவமைப்பு இத்தகையதுதான்.
ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டே அல்ல. விபரீதம். முரட்டுத்தனமான ஒரு மாட்டையும் சில மனிதர்களையும் வெறியைத் தூண்டிவிட்டு மோதவிடுவது விளையாட்டின் எந்த இலக்கணத்தின் கீழும் வராது.
முதல்வர் பிறந்த நாள் ஜல்லிக்கட்டு-ஒருவர் பலி, 165 பேர் காயம்திருச்சியில் முதல்வர் கருணாநிதியின் 85 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார், 165 பேர் படு காயம் அடைந்தனர்.
( ஜூன் 2008 செய்தி )
மத உணர்வுகளை இழுப்பதா - உச்ச நீதிமன்றம் கண்டனம்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது, 11ம் தேதி வழங்கிய தீர்ப்பை மாற்றி ஜல்லிக்கட்டுக்கு விதிக்க தடையை நீக்க தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில் (சேது சமுத்திரத் திட்டம்) தமிழக அரசின் நிலை என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
பொன்னம்பல அடிகளார் சித்திரை மாதம் தான் தமிழ் வருடப்பிறப்பு என்று சொன்னால் கலைஞ்ர் என்ன சொல்வார் ? ஜல்லிக்கட்டு வழக்கில் மத உணர்வு ஜல்லியடித்தவர்கள் ஏன் சித்திரை வருடப்பிறகுக்கு அந்த ஜல்லியை அடிக்கவில்லை ?
ஞாநி கட்டுரையிலிருந்து.. வீரம் இதில் எங்கே இருக்கிறது ? ஆறறிவுள்ள மனிதனின் வெற்றி என்பது தன்னைவிட அறிவு குறைந்த விலங்குகளைப் பழக்கிக்கட்டுப்படுத்தி தனக்குப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது. தன்னைவிட உடல் வலிமையுடைய மாடுகளை ஏரில் பூட்டவும், வண்டி இழுக்கவும், யானைகளை மரம் சுமக்க-வும் பழக்கப்-
படுத்திய விவேகம்தான் மனிதனின் சிறப்பே ஒழிய, அவற்றுடன் மோதி இருவருக்கும் சேதங்களை ஏற்படுத்திக் கொள்வதில் வீரமும் இல்லை. விவேகமும் இல்லை.
எது மிருகவதை ? காட்டுல வளர வேண்டிய விலங்கு யானை. அது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் நடக்கணும்னு சொல்வாங்க. அதைப் பிடிச்சு ஊர் முழுக்கப் பல இடங்கள்ல கட்டிப் போட்டிருக்கோம். அப்படிக் கட்டிப்போட்டதுனால கால்ல புண்ணு வந்து சில யானைகள் இறக்குது. இதுதான் மிருகவதை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கம் இருக்கும். நீங்க சைவம்னா, நான் அசைவம். இதுல எப்படிச் சரி, தப்பு சொல்லுவீங்க? இந்த விவகாரத்தைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தோம்னா, ஜல்லிக்கட்டை எதிர்க்கிறவங்க அம்புட்டு பேரும் மேல உள்ள ஆளுகளா இருக்காங்க. ஆதரிக்கிறவங்க சாதாரண ஆளுகளா இருக்காங்க. அவ்வளவுதான் விஷயம்!''
( மூர்த்தி (தி.மு.கழக எம்.எல்.ஏ., சோழவந்தான், விகடன் ஜனவரி 2009 )
கழுதை ரேஸ் - செய்திமதுரை வண்டியூர் பகுதியில் மாட்டுப் பொங்கலையொட்டி கழுதை ரேஸ் நடந்தது. 20க்கும் மேற்பட்ட கழுதைகள் இதில் கலந்து கொண்டன. அண்ணா நகர் மெயின் ரோட்டில் நடந்த இந்த ரேஸில் கலந்து கொண்ட கழுதைகளின் முதுகில் பொதி ஏற்றப்பட்டது.
பின்னர் அனைத்து கழுதைகளும் விரட்டி விடப்பட்டன. கழுதைகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கூடவே ஓடினர். முதலில் வந்த கழுதைக்கு பலவிதமான பரிசுகள் தரப்பட்டன.
( ஜவனரி 2008 செய்தி )
தமிழனுக்கு உண்மையிலேயே வீரம் என்றால் புலியையோ, சிங்கத்தையோ தழுவிப்பார்க்கட்டும்.
ஞாநி கட்டுரையிலிருந்து..ஜல்லிக்கட்டுகளில் மதுவும் சாதி வெறியும் மேலோங்கி இருப்பதுதான் நடைமுறை யதார்த்தம். உள்ளூர் வட்டார ஜாதி ஆதிக்கங்களும் ஜாதிப் பகைகளும் குடும்ப விரோதங்களும் ஜல்லிக்கட்டு விழா நேரங்களில் அடி இழையாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கிராமத்தினருடையே மோதல்ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கிராமத்தினருடையே மோதல் ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர்.
( ஜனவரி 2009 செய்தி )
ஜல்லிக்கட்டில் எங்கே வன்முறை ? ஜல்லிக்கட்டே வேண்டாம்னு சொல்றது, கலாசாரத்தையே காலால உதைக்குற மாதிரி. ஸ்பெயின் நாட்டுல எருது பிடிக்கிற நிகழ்ச்சியில் மாட்டை ஈட்டியால குத்திக் கொல்றாங்க. அதுதான் வன்முறை. நம்ம பழக்கம், கொண்டாட்டம்... திருவிழா. போன வருஷம் ஜல்லிக்கட்டுல பிடிபட்ட ஒரு மாடு, அதுக்குப் பிறகு சாப்பிடாம கொள்ளாம பட்டினி கெடந்தே செத்துப்போச்சு. அதைப் பார்த்துட்டு, அந்த மாட்டை வளர்த்தவரும் செத்துப்போனாரு. அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு மக்களோட மனசுல பதிஞ்சிருக்கு. ஒரு மாட்டு மேல ஏகப்பட்ட ஆளுங்க ஏறிக் குதிக்கிறதா பொதுவா புகார் சொல்லுவாங்க. வாடிவாசல்ல இருந்து மாடு வெளியில வரும்போது மட்டும்தான் நிறைய பேர் முண்டிக்கிட்டு அணையப் பாப்பாங்க. ரெண்டு அடி வெளில வந்துருச்சுன்னா ஒருத்தர், ரெண்டு பேர்தான் திமிலைப் பிடிச்சுக்கிட்டு ஓடுவாங்க. ஏன்னா, மாட்டை ஒருத்தர் அடக்கினாதான் பரிசு. ரெண்டு பேர் அடக்கினாக்கூட பரிசு கிடையாது.
( மூர்த்தி (தி.மு.கழக எம்.எல்.ஏ., சோழவந்தான், விகடன் ஜனவரி 2009 )
ஞாநி கட்டுரையிலிருந்து....ஜல்லிக்கட்டுக்குச் சார்பான குரல்களில் திரும்பத் திரும்ப இரு வாதங்கள்தான் ஒலிக்கின்றன. ஸ்பெயின் தேசத்து ‘புல் ஃபைட்’டுடன் ஒப்பிட்டால், ஜல்லிக்கட்டில் மிருக வதை என்பதே இல்லை என்கிறார்கள். அங்கே மிருகத்துடன் மோதும் மனிதன் வேல் கொண்டு அதைக் குத்திக்கொல்வதுதான் ‘விளையாட்டின்’ வடிவமாகும். இங்கு
மனிதர்கள் கையில் ஆயுதங்கள் இல்லை. மிருகம் வதைப்படுவது இல்லை. அதுதான் மனிதர்களைக் காயப்படுத்தும் கூரான கொம்புகளுடன் இருக்கிறது என்றெல்லாம் வாதிடப்படுகிறது. விலங்கினால் மனிதன் பாதிக்கப்பட்டாலும் தவறுதான்;
மனிதனால் விலங்கு பாதிக்கப்பட்டாலும் தவறுதான். அர்த்தமற்ற முரட்டுத்தனம் எங்கே இருந்தாலும் அது விமர்சிக்கப்படவேண்டியதுதான். ஸ்பெயினின் தவறு அலங்கா
நல்லூரை நியாயப்படுத்திவிடாது. கடவுள் நம்பிக்கையைக் கடுமையாக எதிர்த்த பெரியாரிடம் ஒரு முறை கேட்டார்கள்:
‘வெளி நாட்டில்கூட சாமி கும்பிடுகிறார்களே?’
பெரியார் சொன்னார்: ‘முட்டாள்தனம் உனக்கென்ன ஏகபோகச் சொத்தா?
உலகத்தில் எல்லா ஊரிலும் முட்டாள்கள் இருப்பார்கள்.’
பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது.இந்த வருஷம் அலங்காநல்லூர்ல 600 மாடுகளும், பாலமேட்டுல 450 மாடுகளும் ஜல்லிக்கட்டுல மல்லுக்கட்டுச்சு. ஒவ்வொரு வருஷமும் எண்ணிக்கை கூடிக்கிட்டேதான் போகுது. விலங்குகள் சித்ரவதைன்னு நினைச்சிருந்தா, ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்கின மாட்டை அணையவிடுவாகளா? 'இந்த 21-ம் நூற்றாண்டுலயும் இப்படிச் செய்யலாமா?'ன்னு கேக்குறவங்க, கோயிலுக்குப் போறதையும், மொட்டை அடிக்கிறதையும், நல்ல நேரம் பார்க்குறதையும் விட்டுடலையே! அது போலத்தான் இதுவும். 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது.
( மூர்த்தி (தி.மு.கழக எம்.எல்.ஏ., சோழவந்தான், விகடன் ஜனவரி 2009 )
மூர்த்தி அவர்களுக்கு ஒரு கேள்வி: உங்கள் தலைவர் தமிழ்ப்புத்தாண்டை அவர் விருப்பத்துக்கு மாற்றினாரே. அப்போது எங்கெ போனது இந்த பகுத்தறிவு ?
ஞாநி கட்டுரையிலிருந்து....இரண்டாவது வாதம் இது நம் தமிழ் மரபு என்பது. பாரம்பரியக் கலை. மரபுக் கலை. சாராயமும் மிளகாய்ப் பொடியும் சாதித்திமிரும் குடும்பத் திமிரும் கலந்து வெறியூட்டப்பட்ட மாடுகளும் மனிதர்களும் ரத்தக் களரியில் விழுவதுதான் பாரம்பரியம்
என்றால் அந்த பாரம்பரியம் நமக்குத் தேவையற்றது. சாதி ஏற்றத்தாழ்வுகளும் நம் மரபுதான்; பெண்ணடிமைத்தனமும் நம் மரபுதான்; உடன்கட்டை ஏறுவது முதல் மத விரோதிகளைக் கழுவில் ஏற்றுவது வரை எல்லாமே நம் மரபுகள்தான். நாகரிக
வளர்ச்சி அடையும் ஒரு சமூகம், எல்லா மரபுகளையும் கண்மூடித்தனமாக அப்படியே வைத்துக்கொள்ளாது. உதிர்க்க வேண்டியதை உதிர்க்கும். சேர்க்கவேண்டியதைச் சேர்க்கும்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பதே தமிழ் இலக்கணம். அதாவது பழையவற்றில் கழிக்கப்படவேண்டியவை கழிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். பழையன என்பதற்காக எல்லாவற்றையும் காலம் காலமாகச்
சுமந்து நசுங்க முடியாது. படிப்பறிவற்ற பாமரர்களாக இருக்கும் மக்கள் ஜல்லிக்கட்டு
போன்றவற்றுக்காக உணர்ச்சிவசப்படுவதைக்கூடப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், அவர்களுக்கு வழிகாட்டி அடுத்த கட்டத்துக்கு விரல் பிடித்து இட்டுச் செல்லும் கடமை உடைய அரசியல் தலைவர்கள் எல்லாம், கேவலம் ஓட்டுக்காகத் தாங்-
களும் உணர்ச்சிகரமான அறிக்கைகள் வெளியிட்டு, மக்களைத் தொடர் அறியாமையில் ஆழ்த்துவதுதான் எரிச்சலூட்டுகிறது.
மாட்டுக்கு நன்றி செலுத்துவது தான் ஜல்லிக்கட்டு''கலித்தொகையிலேயே 'ஏறு தழுவுதல்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு கால்நடைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தது. மாட்டை அடக்கிப் பெண்ணை மணப்பது என்ற இனக் குழு நிலையில் இருந்த ஏறு தழுவுதல், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரங்க விளையாட்டாக, ஜல்லிக்கட்டாக உருப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும், மக்களின் உணர்வே அப்போதும் வென்றது. உண்மையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பாமர மக்கள் அளவுக்கு மாட்டின் மீதும், விலங்குகள் மீதும் அக்கறை செலுத்துபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையும் அவர்களுக்கு மாடுகளுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. மாட்டுக்கு நன்றி செலுத்தி மாட்டுப் பொங்கல் நடத்தும் எளிய மனிதர்கள், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அவற்றுடன் விளையாடி மகிழ்கின்றனர். திண்டுக்கல் உள்ளிட்ட சில இடங்களில் புனித சவேரியார் ஆலயங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. கவனித்துப் பார்த்தால், ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்கள் பெரும்பாலும் இறப்பதில்லை. பார்வையாளர்கள்தான் இறந்துபோகின்றனர். இவற்றை முறைப்படுத்தி, பார்வையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் தனித்தனியாகப் பிரித்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் எந்த உயிரிழப்பும் இல்லை!'
'
( உதயச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர்)
ஞாநி கட்டுரையிலிருந்து... என்றோ ஒரு காலத்தில் முரட்டு மாட்டை அடக்கும் இளைஞனுக்கு அந்த மாட்டின் உரிமையாளர் தன் மகளை மணம் முடித்து வைக்கும் வழக்கம் இருந்தது என்று பெருமை பேசுவதும் அர்த்தமற்றது. மாட்டைப் போலவே பெண்ணும் உடமைப்
பொருளாக மட்டுமே நடத்தப்பட்ட பெண்ணடிமைக் காலத்தின் அடையாளமாகவே இந்தச் சடங்கு இருக்கிறது. ஒரு பெண்ணை மணப்பதற்காக முரட்டுக் காளையை அடக்கி வெல்ல ஒருவன் முன்வருவதை வீரம் என்று வாதத்துக்காக வைத்துக்கொண்டு
பார்த்தாலும், இன்றைய ஜல்லிக்கட்டுகள் அப்படிப்பட்டவை அல்ல. பெண்ணைப் பரிசாகத் தரும் நிலையும் இல்லை.
அப்படியே புத்தி கெட்டு எவரேனும் ஒருவர் தன் பெண்ணைப் பரிசாக அறிவித்தால், அவளுக்குப் பாஞ்சாலியின் கதிதான் ஏற்படும். தனியொருவனாக மாட்டை வெல்லும் வாய்ப்பு இன்று எவருக்கும் இல்லை. கூட்டம் கூட்டமாகச் சென்று மாட்டை அடக்கவே திணறி உடல் சேதமும் உயிர்ச் சேதமும் அடையும் நிலைதான் இருக்கிறது.
உச்சநீதிமன்றம் விதிமுறைகள்ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளது என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் கொகாடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து விதிமுறைகள் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மாடுகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.
காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
ஞாநி கட்டுரையிலிருந்து...ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்தியே தீரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் அறிக்கை வீரர்கள் திருமாவளவன், விஜய்காந்த், வைகோ, சரத்குமார், பழ.நெடுமாறன் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து அந்தப் பாதுகாப்பான
ஜல்லிக்கட்டில் நீங்கள் களம் இறங்கி ஒரே ஒரு மாட்டின் வாலையாவது பிடித்துக் காட்டி தமிழ் மக்களுக்கு வழி காட்டுங்கள். உங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நெருக்கமான நண்பர்களும் ஐ.டி, இண்டர்நெட் என்று புது யுக நவீன வாழ்க்கையில் திளைக்கும்போது, அப்பாவி ஏழைத் தமிழ் இளைஞர்கள் மட்டும் மாடுகளுடன் மோதி, கை கால் உயிர் இழந்து பரிதவிக்கட்டும் என்று அறிக்கை வீரம் காட்டுவது என்ன
அரசியல்?
இன்றைய வீரம் மாட்டுடன் மோதுவதில் இல்லை. இரட்டை டம்ளர் டீக்கடைகளுடன் மோதுவதுதான் அசல் வீரம்.
ஜனவரி 2009 செய்திகள்
தஞ்சை மாதாக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த 2 பேர் மாடுமுட்டி இறந்தனர். குடல் சரிந்த நிலையில் 2 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. 47 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுமுட்டியதில் 3 பேர் பலியாகினர். 17 பேர் படுகாயம்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 123 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் வேடிக்கை பார்க்க வந்த அரசலூரை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவர் காளை முட்டி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படமுத்தூரில் நேற்று நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகளை வேடிக்கை பார்த்த கருப்பண்ணன் என்ற விவசாயி காளை முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 65 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவில் 80 பேர் காயமடைந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மொத்தம் 265 பேர் காயமடைந்தார்கள்.
சிவகங்கை மாவட்டம் வாராப்பூர், சடையம்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் செல்வராஜ் ஒரு முரட்டு காளையை அவர் பாய்ந்து அடக்கிய போது அவரது நெஞ்சில் மாடு முட்டியது. இதில் செல்வராஜ் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.
மற்றொரு காளையை அடக்கும் போது கழுத்தில் மாட்டின் கொம்பு குத்தியதில் பாலக்குறிச்சி அருகே உள்ள குறவக்குறிச்சிபட்டியை சேர்ந்த பாலு செத்தார்.
சீரங்கம்பட்டியைச் சேர்ந்த பெரியய்யா என்பவர், மாடு பிடிக்கும் போது நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்து பலியானார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 78 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கிராமத்தினருடையே மோதல் ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். கல்வீச்சு சம்பவத்தில் 3 போலீஸார் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இரு வீடுகள் சேதமடைந்தன.
தன்னை கைது செய்ய வந்த போலீஸாரை ஜல்லிக்கட்டு காளையை ஏவி விட்டு விரட்டியடித்தார் கேரளத்தைச் சேர்ந்த ரெளடி ஒருவர். காளை விரட்டியதால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதில் அவர்கள் லேசான காயமடைந்தனர்.
நான் என்ன சொல்ல, மாட்டுக்கு புல்லுக்கட்டு, மனிதனுக்கு ஜல்லிக்கட்டு
( நன்றி: ஞாநி கட்டுரை ஓ-பக்கங்கள், கிழக்கு )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, January 29, 2009
டைஜஸ்ட் செய்ய முடியாத (ஜல்லிக்கட்டு) டைஜஸ்ட்
Posted by IdlyVadai at 1/29/2009 03:47:00 PM
Labels: கட்டுரை, செய்தி விமர்சனம், பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










17 Comments:
புல்லுக்கட்ட தின்னும் மாட்ட தந்தானே தானா
ஜல்லிக்கட்டுல வதைக்கதீங்க தில்லாலே லேலோ
ஒன் வீரத்த நீ தெரிஞ்சுக்கணும்னா தந்தானே தானா
ஒரு புலியோட மோதிப்பாரு தில்லாலே லேலோ
---------------------------------
மேலும் படிக்க, வருகை தாருங்கள் :
www.edakumadaku.blogspot.com
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'ஏறு தழுவுதல்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு இருந்ததை ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாற்று அறிஞர்கள் சுட்டிக் காட்டினர். இது போன்ற விவரங்களை எடுத்து சொல்லி தடையை நீக்கப் பெற்றோம். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவைகளை சொன்னால் நல்லவை நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இலங்கை அப்பாவி தமிழர்களை காப்பாற்ற வக்கில்லாத கலைஞர் வார்த்தை ஜாலம் இது.
"சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவைகளை சொன்னால் நல்லவை நடக்கும்"........
"கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டியவைகளை (மக்கள்) கொடுத்தால் (நாட்டுக்கு) நல்லவை நடக்கும்."
//சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவைகளை சொன்னால் நல்லவை நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.//
Padma Shree விவேக் காமெடி சீன் ஒன்றில் வரும் ரியாக்ஷன் டயலாக் இங்கு சாலப் பொருந்தி வருகிறது ... வெட்டி மவனே.. காலங்காத்தாலேயே வெட்டி உதாரணம் சொல்லி வெறி ஏத்தாத!
தமிழீன தானைத்தலைமை வாழ்க!
ஜல்லிக்கட்டு எதிர்வாதத்திற்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு, ஞானியை கூப்பிட்டதைதான் டைஜஸ்ட் பண்ணமுடியல.
மாடுகளைத் தம் உயிரிலும் மேலாகக் கருதி வந்தவர்கள் தமிழர்கள். வந்தேறிப் பாப்பனர்களோ, தாம் அணிந்தது போக எஞ்சிய பூணூல்களைக் கயிறாகத் திரித்து மூக்கணாங் கயிறாக ஆக்கி மாடுகளை அடிமைப்படுத்தும் முறையை வெள்ளேந்தியான தமிழனின் மூளையில் திணித்து அவர்களை ஆரிய மயமாக்கினர் என்ற சாதாரண உண்மை கூட பிராமணராகிய ஞாநிக்குத் தெரியவில்லையே? வருடக்கணக்காக பெரியாரியத்துக்குத் தன் மூளையை அடகுவைத்தும் பலன் ஒன்றுமில்லையே!
//போன வருஷம் ஜல்லிக்கட்டுல பிடிபட்ட ஒரு மாடு, அதுக்குப் பிறகு சாப்பிடாம கொள்ளாம பட்டினி கெடந்தே செத்துப்போச்சு. //
இவ்வளோ அறிவான மாடா? நம்ம விட மாட்டுக்கு சுடு சொரனை அதிகமா இருக்கும் போலிருக்குதே!!!!
நல்ல திரிக்கறாங்கப்பா சரடு!
Even if they ban "JalliKattu" we have law college. Police will give full protection to viewers after all they can only show their guts to innocent public.
LAW College Students Jallikattu Tickets for Sale. Show Time: Daily Noon
இதுல எங்கடா ஜாதி, பார்பானர், என்ற ஒன்னும் பின்னூட்டத்தில் வரலை என்று காத்து இருந்ததற்கு 'ரங்கதுரை' பின்னூட்டம் முடிவு கட்டி விட்டது. வாழ்க ஜாதி..! வாழ்க ஜாதி வெறி..! இதுக்கு பெயர்தான் பகுத்தறிவோ..?
படிக்காத பாமர இளைநர்கள் தான் இப்படின்னா, படித்தவர்களும் கூட ஜல்லிக்கட்டு தான் வீரம் என்கிறார்கள். அதுவும் 'ரொம்ப' படித்தவர்கள் இதுல ஜாதிய வேற இழுக்குறாங்க.
ஞானி என்ன சொன்னாலும் அவர் 'பார்ப்பன்' ன்னு சொல்லி, அவர் சொன்னத எல்லாம் பொய் ங்கறாங்க.....கலைஞர் என்ன சொன்னாலும் சரி. கேள்வியே இல்லை. இவங்களுக்கு என்ன சொன்னாங்க அப்டிங்கறது முக்கியமில்லை, யார் சொன்னாங்க! அது தான் முக்கியம்.
//ஜல்லிக்கட்டு எதிர்வாதத்திற்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு, ஞானியை கூப்பிட்டதைதான் டைஜஸ்ட் பண்ணமுடியல.//
ஒரு டைஜீன் சப்பிகிட்டே பதிவ இன்னோரு தடவை படிச்சுபாருங்க!!!
Jnani has written something that is logical and sensible. The question is why is that followers of Periyar are still supporting Jallikattu in the name of tradition and culture.IAS officers will have to toe the govt's line and hence will give some silly excuses.But how about the so called intellectuals and writers like jeyamohan, charu nivedita,
s.ramakrishnan.do you have anything
to say on this.
ஞானி சொன்னதில் தப்பு ஒன்னும் இல்லை - ஆனால் அவர் கலைஞரையும் அவரது அரசையும் சாடியது தான் ரங்கதுரையின் பகுத்தறிவுக்கு ஆகவில்லை - எல்லா பகுத்தறிவாளர்களைப் போல உடனே “பார்ப்பானை” இழுத்து விட்டார் - அதுல என்னமோ அப்படி ஒரு சந்தோஷம்! அய்யா ரங்கதுரை, மாட்டுக் கொம்புல அடிபட்டு சாகாதீங்க அப்படின்னு தான் ஞானி சொல்றார், இல்லை அப்படி தான் சாவேன் அதான் பகுத்தறிவு அப்படின்னு நீங்க சொன்னா, நான் ஒன்னும் சொல்றதுக்கில்லை.
//விகடனிலிருந்து குமுதத்துக்கு அனுப்பிய அவரது கட்டுரை//
என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த கட்டுரை தான் ஞானியை விகடனிலிருந்து பிரித்ததா?
90 % muttalgal irukara edathula 10% thirutha nenaikarathu thappu...Vittudunga saagattum avanugala thirutha mudiyathu! ella saagattum.
asdas
அற்புதமான கட்டுரை, ஆனால் பலன் எதுவும் இருக்கும் என்று நம்ப முடியாது. இன்னும் பல வருடங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்கத்தான் செய்யும், அதில் சில பல மனிதர்கள் இறக்கத்தான் செய்வார்கள்.
விவேக் ஸ்டைல்-ல சொன்னா "உங்களையெல்லாம் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா."
Post a Comment