பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 27, 2009

குரங்குக் கவிதைக்குப் பரிசு

நமது மீடியாவிற்கு சினிமா, அரசியல் தவிர வேறு ஒன்றும் தெரியாது( நானும் இதில் அடக்கம்). நடிகர் விவேக், எழுத்தாளர் ஜெயகாந்தன்(சில நேரங்களில் சில மனிதர்கள், மற்றும் அவரது அரசியல் விமர்சனம் ஆகிவற்றால் பிரபலம் ஆனவர்) ஆகியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்த பத்தாவது நிமிஷம் இவர்கள் வீட்டு கதவு தட்டப்பட்டு, தூக்கத்திலிரிந்து எழுப்பி “உங்களுக்கு விருது கிடைத்திருக்கு, அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்ற பேட்டியை ஒளிபரப்பினார்கள். கே.டிவியில் சிரிப்பு வெடிகளில் வாத்துன்னு நினைத்து பின்பக்கம் சுட்டதாக வழக்கு, விவேக்: ஏண்டா வாத்துக்கும் -த்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

குரங்குக் கவிதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது...


வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா? அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களளயும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது....சுஜாதா சொல்லுவாரே...... குரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைச்க்கிற மாதிரி....எத்தனையோ வருடங்கள் முன்னால 'தொல்லியல் இமயம்' கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டு திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்...இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு!

ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது.

அவரைப் பற்றி: http://varalaaru.com/Default.asp?articleid=739
எல்லோரும் பார்க்க வேண்டிய ஆல்பம்: http://varalaaru.com/Default.asp?articleid=745

( நன்றி: இட்லிவடையில் போட சொல்லி அனுப்பிய லலிதா ராமுக்கு )

ஐராவதம் அவர்களின் Tel : 044 2253 3230.
Email ID : iravatham@vsnl.net இது. சின்னதா ஒரு வாழ்த்து சொல்லுங்க


7 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

//, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்…// )))))))

குரங்குக் கவிதை - செம கற்பனை. வாத்தியார் முதல் பரிசெல்லாம் சொன்னா மாதிரி ஞாபகம் இல்லையே.. குரங்கு டைப்ரைட்டரில் அடிப்பது கம்பராமாயண செய்யுளாக இருப்பதற்கு உள்ள வாய்ப்புதான் லாட்டரியில் பரிசு விழவும் இருக்கிறது என்று சொன்ன ஞாபகம்தான். (சீட்டு - சிறுகதை, சில வித்தியாசங்கள் தொகுப்பில்)

Anonymous said...

Why no post reg Mangalore Pub Attack Idlyvadai? Do u think that issue is not good enough to make a post?

Anonymous said...

Tamil newspaper Dinathanthi in its Erode edition on Monday carried pictures of Indian tanks being shipped from New Delhi via Erode to Thiruvananthapuram.

Unconfirmed reports had alleged that the shipment of tanks were on they way to Sri Lanka as military aid.

"On one hand India is staging the drama of Pranab Mukherjee's visit to Colombo. And it is said that he has peace on his agenda. But the Indian government is conniving and carrying on the genocide of the Tamil people in Vanni by shipping tanks. Politicians might soft-pedal, but we cannot tolerate this any longer," a student leader told reporters minutes before he was arrested by the Tamil Nadu Police.

Meanwhile, Lawyers Collective in Chennai has announced that it would stage demonstrations later on Tuesday at the Officers Training Academy, an Army base in Nandanam in Chennai to voice their protest against the alleged Indian military support to Sri Lanka.

Page 12 of Thinaththanthi newspaper, Monday, Erode edition, displays photo of

ரிஷபன் said...

மங்களூர் அட்டாக்-அதெப்படி மீடியாக்காரர்களுக்கு காமிராவுடன் அங்கே இருக்க முடிந்தது -என்று தக்‌ஷின கர்நாடக போலீஸ் அதிகாரி கேட்டிருகிறாரே? ஆமா அதெப்படி ?

Anonymous said...

It is well known that NDTV is a totally anti Hindu media. They are funded by a Spanish church and have sympathies with the Congress party and CPIM. Pronnoy Roy is also a Christian.

There are people known as Jihadi Romeos . These were well known and common in UK but are becoming common in India too. These people are also found in Kerala near to Mangalore.

These JRs target Hindu girls and after brainwashing them, get to convert and marry them.

There is talk that these girls were not just there to have a good time on their own but were being encouraged to drink in order to brainwash them and put them in the JRs control.

- A well wisher

R.Gopi said...

ஐராவதம் அவர்களின் Tel : 044 2253 3230.
Email ID : iravatham@vsnl.net இது. சின்னதா ஒரு வாழ்த்து சொல்லுங்க
----------------------------------

IV

A mail congratulating him was sent already.

ஜீவா said...

நமது மீடியாவிற்கு சினிமா, அரசியல் தவிர வேறு ஒன்றும் தெரியாது //

வெறுப்பா வருது நம்ம அரசியல் , சினிமாவ பார்த்தா.