பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 26, 2009

வாழ்த்துகள் ஜெயகாந்தன், விவேக்

மத்திய அரசின் `பத்ம' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சினிமாவுக்கு போன சித்தாளு என்று இவர் எழுதிய புத்தகம் பெருதும் சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சைகளைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாதவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் தோற்றத்தைப் போலவே அவரது படைப்புகளும் (முன்பு) கம்பீரமானவை.

நகைச்சுவையில் சமூக சிந்தனைகளையும் கலந்து கொடுத்ததால் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ. வேட்டியை ,கோடு போட்ட அண்டர்வேர் தெரிய, எப்படி கட்ட வேண்டும் என்று இவர் செய்த காமெடி பிரபலம்.

( நாகேஷுக்கு இந்த விருது இன்னும் கிடைக்கவில்லை . அரசியலில் யாரையும் அவருக்கு தெரியாது போல. பாலசந்தர் ஒரு விழாவில் (2006) அடுத்த வருடமாவது இவருக்கு பத்மஸ்ரீ கிடைக்க வேண்டும் என்று சொன்னார். )

இவர்களுக்கு இட்லிவடையின் வாழ்த்துகள்!

8 Comments:

Anonymous said...

// (முன்பு) கம்பீரமானவை//

"முன்பு" டிபிகல் இ.வ பஞ்ச் !!

விவேக், வைரமுத்து இருவரும் "மணவாடுகள்", பின்னவர் தமிழக சி.எம்முக்கு நெருக்கமானவர். "கூட்டிக் கழிச்சிப் பாருங்க" கணக்கு சரியா வரும்.

நாகேஷ் போன்ற "லெஜெண்ட்களை" தொடர்ந்து புறக்கணிப்பது வருத்தமான விஷயம்.

தமிழக முதல்வர், ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அப்டேட் கொடுங்க இ.வ !!

இன்றைய டீக்கடை பெஞ்ச் படிக்கலையா? மருத்துவர் ஐயா, "அன்புச் சகோதரி"யைச் சந்திக்கச் செல்வதாக செய்தி.

அலர்டா இருங்க... தொடர்ந்து "அரசியல் அதிரடிகள்" அரங்கேற இருக்கின்றன.

பார்லிமண்ட் தேர்தல் முடியும் வரை "உங்க காட்ல மழைதான்" & "அடிச்சுத் தூள் கிளப்புங்க"

Anonymous said...

vivek does not deserve it.

IdlyVadai said...

காமெடி நடிகர்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று மேடைகளில் வருத்தப்பட்டுள்ளேன். இப்போது, எனக்கே அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் முக்கிய காரணம். தமிழக அரசு மூலம்தான், எனது கலைப்பணி குறித்த விவரம் விருது குழுவுக்கு தெரிந்துள்ளது.

காமெடி மூலம் நல்ல கருத்துகளை சினிமாவில் கூறினேன். அதனால்தான் மத்திய அரசு இந்த விருதை வழங்கி உள்ளது. இனி தொடர்ந்து நல்ல கருத்துகளை கூறவேண்டும் என்ற தெம்பு எனக்குள் வந்துள்ளது. எனது பெற்றோர் அங்கயபாண்டியன், மணியம்மாள், குருநாதர் பாலசந்தர், முதல்வர் கருணாநிதி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி- விவேக்

Anonymous said...

Vivek just doesn't deserve. All that he can do is making fun with hindu religion and it's traditions. He doesn't have the guts to do the same for others.

Ellam kala kodumai..he thinks he is spreading good ideals and we don't know all..tamilanukku ellam venum

R.Gopi said...

Nadigar Thilagathukkey SIRANDHA NADIGAR nu angeegarichu Dhesiya Virudhu kudukkadhavanga ivanga.

Idhula ennaththa solli, ennaththa aagaa pogudhu.

Anonymous said...

padma viruhtae Joke thaan( not a good one).
So it's apt for Vivek.

Mu.Ka kanake vera. Vivek=Thevar vote.
Well yaaruku koduthu irunthalum athu thaanal thaanu oru kavi eluthuvaar.


Mu.Ka is a legend, Podhutkulu Feb 15th koodi innoru Ceylon resolution edupangalam.
Stalinku oru phone, alagiriku oru phone pottu, professora notes eduka vittu velaya mudikarathuku Feb 15 ethuku...
Probably waiting for LTTE and Tamils to be finished, so it's easy to take a decision..

Anonymous said...

ஐயா, "ஐராவதம் மஹாதேவன்" விருது வாங்கியிருக்கிறார்.

அவரை எல்லாம் வாழ்த்தமாட்டீங்களா????

Anonymous said...

A True WORDS FROM "CHARU".

http://charuonline.com/Jan09/KelviPathil002.html

I totally ACCEPT HIS VIEWS.இருபது அவ்ருடம் முன்பு ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தது முதல்தான் தமிழில் நாம் இன்று காணும் இலக்கிய விழிப்புணர்ச்சி உருவாயிற்று. தினமணி நவீன இலக்கியத்தை பரவலாக அறியச்செய்தது. புதுமைப்பித்தன் மௌனி போன்றவையெல்லாம் சிறுவட்டத்துக்குள் உலாவும் பெயர்களாக இருந்த நிலைமையை மாற்றியது. தூய தமிழ்ச்சொற்களை செய்தித்துறையில் அறிமுகம் செய்தது. அச்சொற்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.

ஆனால் ஐராவதம் மகாதேவனின் சாதனைகள் தொல்தமிழ்ப் பண்பாடு குறித்த அவரது ஆய்வுகளில்தான் இருக்கின்றன. நாணயங்கள் கல்வெட்டுகள் பானை எழுத்துக்கள் வழியாக அவர் உருவாக்கியளித்த சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்தின் சித்திரம் உத்வகமளிப்பது. கல்வியும் எழுத்தும் அன்றாடவாழ்க்கையாக ஆகிவிட்டிருந்த அச்சமூகத்தின் நீட்சியாக சங்க இலக்கியங்களை வாசிப்பது ஒரு பெரிய வாசலை திறப்பது போன்றது.

ஆனால் வழக்கமான ஆய்வென்ற பேரில் நம் தமிழியர்கள் செய்யும் அபத்தமான ஊகங்களும் கற்பனைப்பாய்ச்சல்களும் அல்ல ஐராவதம் மகாதேவனுடைய ஆய்வுகள். சர்வதேச அளவில் எந்த ஆய்வாளர் அரங்கிலும் செல்லுபடியாகக் கூடியவை அவை. அவ்வகையில் நம் காலக்ட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் அவர்

ஜெகெயையும் ஐராவதம் மகாதேவனையும் வாழ்த்தி வணங்குகிறேன்.

http://jeyamohan.in/?p=1354

Jeyamohan's TRIBUTE to "MAHADEVAN SIR is GREAT one !!!
"