பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 24, 2009

இறுதியாக இரண்டு செய்தி

"அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது- இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிகிறேன். - நேற்று கலைஞர் சட்டசபையில்

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் மீது இறுதி தாக்குதல் - இலங்கை ராணுவம் அறிவிப்பு - செய்தி

9 Comments:

Nilofer Anbarasu said...

இறுதியாக என்னதான் சொல்லவறீங்க

R.Gopi said...

"அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது- இந்திய பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்பதை டெல்லியிலே உள்ளவர்களுடைய செவிகளிலே விழ ஓங்கி ஒலித்து இந்த தீர்மானத்தை இந்த மாபெரும் அவையிலே முன்மொழிகிறேன். - நேற்று கலைஞர் சட்டசபையில்
--------------------------------

இது சூப்பர் வசனம். எந்த படத்துக்காக அண்ணன் எழுதினது???

முகமது பாருக் said...

இந்தியா பேரரசு செய்த துரோகம் வரலாறுகளில் நிலைக்கப் போகிறது. நம்மால் ஏதும் செய்ய முடியாமல் நாங்கள் ஊனமாக இருப்பது பெருத்த அவமானம்.

இந்தியாவின் மிக முக்கிய பதவிகளில் உள்ள தமிழகத் தலைவர்கள் உலகத்தின் தன் சொந்த மக்களுக்கு செய்த மிக கொடிய துரோகம் இது. இதில் பா. சிதம்பரம் என்ற கோமான் தன் தொகுதியை எப்படி வைத்துள்ளார் என்பதை நேரில் பார்த்ததினால் சொல்கிறேன் இந்தியாவிற்கு இது மிகப் பெரிய சாபக்கேடு.

* தன் சொந்த மீனவர்களை காப்பாற்றமுடியவில்லை.
* தனக்குதானே பட்டம், விழா மற்றும் சினிமா கூத்தாடிகளின் நிகழ்ச்சிகளில் பொழுதை போக்கும் முதல்வர்.
* தன் கட்சியின் வரலாறு தெரியாத எதிர்க்கட்சி தலைவி (தலைவலி), இவருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை விட தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
* அய்யா நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன் மற்றும் திருமா முட்டி மோதி பார்த்தும் முடியவில்லை.

ஆரம்பத்தில் விடுதலை புலிகளை (முக்கிய ராஜீவ் விசயத்தில்) வெறுத்த எங்களுக்கு மீண்டும் மீண்டும் இலங்கையின் வரலாறுகளை படிக்கும்போது அவர்கள் இல்லாமல் இலங்கை பிரச்சினை முடிய வாய்ப்பே இல்லை. இலங்கை ராணுவத்திற்கும், புலிகளுக்கும் பயந்து மக்கள் வெளியேறினார்கள் என்பதும் உண்மை.அதே நேரத்தில் உலகத்தில் தன் உரிமைக்காக போராட (சுய மரியாதையை) ஒவ்வொரு இனத்திற்கும் உண்டு இந்த வகையில் புலிகளும் போராளிகளே..

இந்தியா உட்பட உலகநாடுகளை வைத்து சிங்கள இராணுவம் ஒருபுறம் தன் மண்ணிற்காக தன்னையே வைத்து போரிடும் புலிகள் மறுபுறம்..

காலத்தின் காட்சிகள் மாறும் நாள் விரைவில் வரும்.

மீண்டும் எழும் எம்மினம்.

இயலாமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

T.V.Radhakrishnan said...

pl.visit

http://tvrk.blogspot.com/2009/01/blog-post_1970.html

Anonymous said...

தமிழினம் முழுதும் அழுதாலும் நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று இருக்கும் மத்திய அரசு.
அழுவது போல நடிக்கும் தமிழக அரசு அதன் முதல்வர் பிற தலைவர்கள்
என்ன செய்ய எல்லாம் தமிழனின் தலைஎழுத்து ;-(

Rajamanohar said...

சத்தியமிலாத கிறுக்கு தனமான தீர்வுகள் , ஆனால் சட்ட மன்றத்தில் நடக்கும் நாடகத்தை விட எவ்வளவோ மேல்
1. திருமங்கலம் தொகுதி சிறீலங்காவில் இருந்திருக்கலாம்
2. அனைத்து ஈழ தமிழ்ர்களும் வேறு மதத்திற்கு மாறலாம், இந்தியாவை சேர்ந்த பி.ஜெ.பி உடனடியாக பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும். மாறிய மதத்திற்கு சார்பாக அமெரிக்கா அல்லது அரபு நாடுகள் குரல் கொடுக்கும். தமிழினம் உதவாத போது , அட்லீஸ்ட் மதம் மாற்றம் உதவும் !
- இல்லையேல் , சன் டிவி மற்றும் கலைஞர் டிவி ஒலிபரப்பு சிறீலங்காவில் தடை செய்யப்பட்டது என்ற தமிழின தலைவருக்கு செய்தி சொல்லுங்கள் , உடனடியாக தீர்வு காணப்படும் .

இன்னும் எதாவது கிறுக்குத்தனமான எண்ணங்கள் ?

Anonymous said...

Tamil eelam is another district of Tamil nadu.
It has another 20 MP seats and there's a chance that most will vote for DMK.
Tamil inathin saabam.. naama aal.

Anonymous said...

இந்த கூத்து எப்போது ஓயுமோ தெரியவில்லை.

அரசியல் நடத்துவதர்க்காக விடுதலை புலிகள் இலங்கையிலும், அதே பாழாய் போன அரசியலை நடத்துவதர்காக தமிழகத்திலும் இந்த மாதிரி பேசி பேசியே 70000 மேலான இலங்கை தமிழர்களை காவு கொடுத்து விட்டார்கள்.

அதிலும் கலைஞர் பண்ணுவது மிகப் பெரிய காமெடி - இப்படி வேண்டுகொள் விட்டே அவருக்கும் வயசாகி விட்டது, அவரது ஆட்சிக்கும் வயசாகி விட்டது!

Ganesh said...

கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு?
கொஞ்சம்நீ எண்ணடா தோழா! - இந்த
அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்
அல்லல்கள் தீருமா தோழா!
வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்
வஞ்சகம் கொஞ்சமோ தோழா! - நாளும்
தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை
சொரணையே இல்லையே தோழா!
தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா
தேர்தலில் கூட்டணி தோழா! - விலை
பேசியே பெற்ற அன்னையை விற்றும்
பிழைப்பது பிழைப்போ தோழா!
அம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே!
அழுகுரல் தொடருதே தோழா! - சே... சே...
பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா?
பச்சை நரித்தனம் தோழா!
ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்
இங்கென்ன நிலையடா தோழா! - நாளும்
வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி
வேட்டைக்குத் தீர்வென்ன தோழா!
துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்
சொந்தக்கை வேண்டுமென் தோழா! - முற்றி
வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்
விடியலைக் காட்டுமென் தோழா!