பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 21, 2009

அவசர சிகிச்சை போட்டி - முடிவுகள்

அவசர சிகிச்சை போட்டி முடிவுகள்!

பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ( நாங்க எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் )

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். ( நடுவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி )விவரம் கீழே...முதல் பரிசு :

டாக்டர் ராமதாஸ் (மனதுக்குள்) : "ஐயோ! மெடிக்கல் காலேஜில் படிக்கும்போது இதையெல்லாம் choice ல உட்டுட்டேனே! இப்ப என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியலையே! "


( சினிமா விரும்பி : http://cinemavirumbi.tamilblogs.com/ )


இரண்டாம் பரிசு:

திருமா: இத கலைஞருக்கு வெச்சு பாத்திருக்கிங்களா ?
மருத்துவர் ஐயா : அவருக்கு இதயம் இனிச்சத நான் தான் பாத்து சொன்னேன் .

( பாஸ்கி - http://www.blogger.com/profile/13663583648956741182 )
பரிசு பெற்றவர்கள், கீழே உள்ள லிஸ்டில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்து உங்கள் முகவரியை ஈ-மெயில் மூலம் எனக்கு( idlyvadai2007@gmail.com) தெரியப் படுத்தினால் பரிசு அனுப்பப்படும்.

முதல் பரிசு-லிஸ்ட்

1. அரசூர் வம்சம் இரா.முருகன் ( கிழக்கு )
2. கொலையுதிர் காலம் - சுஜாதா ( உயிர்மை )
3. வந்தார்கள் வென்றார்கள் - மதன் ( விகடன் )

இரண்டாம் பரிசு-லிஸ்ட்

1. பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) ( எனி இந்தியன்)
2. தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் ( விகடன் )
3. ஒபாமா, பராக்! முத்துக்குமார் ( கிழக்கு )

போட்டிகள் தொடரும்...

14 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துகள்

Swami said...

You have mentioned in plural .. that means there are more members behind the mask of idly vadai or is it one person.

IdlyVadai said...

சாமிக்கே தெரியலையா ? :-)

We The People said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :)


ஒரு போட்டின்னா மினிமம் மூன்று பரிசு கொடுக்கணன்னு உங்க ஸ்கூல சொல்லித்தறலையா?? என்ன தல ரெண்டு பரிசு மட்டும் தானா??

பாட்டாளி said...

இட்லி வடை யாரே,
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இரு தலைவர்கள் பற்றி கமெண்ட் போட்டி வைத்து அருவருப்பான கமெண்ட் களை வெளியட்ட நீங்கள் .ஜெ ,சசி படங்களை போட்டு அடுத்த போட்டி வைப்பீர்களா .
படங்கள் தேவைக்கு இங்கே செல்லவும் .

http://www.arivili.com/2009/01/blog-post_19.html

என்னுடய சிபாரிசு தோழிகளின்,

1,மகாமக குளியல்,
2,திருக்கடையூர் மாலைமாற்றல் .

Baski said...

Nandri IdlyVadai

Blog Padichu ennatha kezhuchia, inni yaarum keka mudiathu :)

Cinema Virumbi said...

மனமார்ந்த நன்றி இட்லிவடை அவர்களே!

காக்க வைக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளை வெளியிட்டு விட்டீர்களே! பாராட்டுக்கள்!

நன்றி!

சினிமா விரும்பி

Nilofer Anbarasu said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
//நாங்க எதிர்பார்த்ததை//
//நடுவர்களுக்கு ஸ்பெஷல்//
சும்மா இந்த குழப்புற வேலை எல்லாம் வேணாம்...... :)
குழுவாக இருந்தால் இத்தனை நாளைக்கு எல்லாம் தாக்கு பிடிக்க முடியாது.
இட்லி வடை ஒருவரே என்பது என் எண்ணம்

பாட்டாளியின் கூட்டாளி said...

////இட்லி வடை யாரே,
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இரு தலைவர்கள் பற்றி கமெண்ட் போட்டி வைத்து அருவருப்பான கமெண்ட் களை வெளியட்ட நீங்கள் .ஜெ ,சசி படங்களை போட்டு அடுத்த போட்டி வைப்பீர்களா .
படங்கள் தேவைக்கு இங்கே செல்லவும் .

http://www.arivili.com/2009/01/blog-post_19.html

என்னுடய சிபாரிசு தோழிகளின்,

1,மகாமக குளியல்,
2,திருக்கடையூர் மாலைமாற்றல் .////

ஜெ- சசி படங்களை போட்டு கமென்ட் எழுத போட்டி வைத்தீங்கன்னா இட்லி வடை வெப் ப்ளாகில் ஆபாச குப்பைகள்தான் மிஞ்சும்.வேணாம். விட்டுடுங்க பாட்டாளி.

R.Gopi said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
----------------------------------

Anonymous said...

தோல்வி அடைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

IdlyVadai said...

சினிமா விரும்பி, பாஸ்கி உங்கள் அட்ரஸ் கிடைத்தது. புத்தகங்கள் உங்கள் முகவரி தேடி வரும்.

பாஸ்கி முடிந்தால் நேரில் வந்து தருகிறேன் :-)

Baski said...

Always Welcome.

Oru Doubt:Book mattumthane koduka poringa ? :)

Cinema Virumbi said...

இட்லிவடை அவர்களே,பரிசாக மதனின் 'வந்தார்கள்.. வென்றார்கள்!' புத்தகம் கிடைத்தது.

நன்றி!

சினிமா விரும்பி