பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 26, 2009

குடியரசு தின போட்டி - முடிவுகள்

இரண்டு நாட்களுக்கு முன் குடியரசு தின போட்டி அறிவித்திருந்தோம்.

நாங்கள் எதிர்பாத்த படியே நிறைய பேர் கலந்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் குடியரசு தினத்தில் பத்து பேர் காந்தி பற்றி இணையத்தில் தேடினார்கள் என்ற திருப்தியுடன் முடிவுகள்...

மகாத்மா காந்திக்கு ‘கதர்’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்கள் ‘அலி சகோதரர்கள்’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ‘முகமது அலி, சவுக்கத் அலி’ என்ற பெயர் கொண்ட அவர்கள், கையால் நூற்று நூலில் செய்த துண்டை காந்தியடிகளுக்கு போர்த்தினார்கள்.

“இதை ‘கதர்’ ஆக ஏற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள். ‘கதர்’ என்பது அரபுச்சொல். இதற்கு ‘கவுரவம்’ என்று பொருள். அது முதல் ‘கதர்’ என்ற சொல் வழங்கலாயிற்று.


பரிசு பெற்றவர்: விக்கி ( தங்கள் முகவரியை idlyvadai2007@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள் )
பரிசு : எட்டு முழம் கதர் வேட்டி உங்கள் வீடு தேடி வரும் ;-)


போட்டி தொடரும்...

6 Comments:

மதுரைநண்பன் said...

mee the first


visit
தல வரலாறு - மதுரை அழகர் மலை - பகுதி 1

http://madurainanpan.blogspot.com/

venkatramanan said...

இட்லி!
இந்தத் தொடுப்பைப் பார்த்தீர்களா?:

//கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.//

venkatramanan said...

இட்லி!
அந்த தொடுப்பை எதற்கு கொடுத்தேனென்றால் அதில் அலி சகோதரர்களின் தாயார்தான் அதைக் கொடுத்தார் என்றிருந்தது. பிறகு பார்த்தால், வெங்கடேஷும் இதையேத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு சுவாரசியம், இதை வெள்ளியன்று மாலை (ஆறு மணிக்கே) பார்த்து விட்டேன் - 'சரி யாராவது நிச்சயம் இதற்கு முன்பு பதிலளித்திருப்பார்கள்' என்று விட்டுட்டேன்! பார்த்தா வெங்கி 24ந் தேதிதான் பதில் கொடுத்திருக்கார்! சே! மிஸ் பண்ணிட்டேன்!

IdlyVadai said...

வெங்கட்ரமணன் பரிசு முக்கியம் இல்லை அதை பார்த்தது தான் முக்கியம் :-)

Bala said...

கதர் என்று தமிழில் தான் கூறுகிறோம். பொதுவாக இந்தியில் ‘காதி’ என்றுதானே அழைக்கப்படுகிறது. கதர் வரலாறு காதிக்கு பொருந்துமா?

Cinema Virumbi said...

பாலா,

நாம் கதர் என்கிறோம். வட இந்தியாவில் 'Khaddhar' என்ற பிரயோகமும் அவ்வப்போது காணக் கிடைக்கிறது.

நன்றி!

சினிமா விரும்பி