பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 20, 2009

ஓபாமா பைத்தியம் பிடித்து அலையும் மீடியா

நேற்று இரவு ஆரம்பித்துவிட்டார்கள் 'கவுண்ட் டவுன்' செய்ய. இன்னும் 10 மணி 30 நிமிட நேரம் தான் இருக்கு ஓபாமா பதவி ஏற்க என்று. இந்திய மீடியாவா அல்லது அமெரிக்க மீடியாவா என்று சந்தேகமே வந்துவிட்டது.

ஜார்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகை சமையல்காரரே தொடர்ந்து அப்பொறுப்பி்ல் நீடிக்கலாம் என அதிபர் பதவியேற்கவுள்ள பாரக் ஓபாமா ஒப்புதல் அளித்துள்ளார்; பதவியேற்பு விழாவுக்கான டிக்கெட்கள் 60 விநாடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டது போன்ற முக்கியமான செய்திகளை மீடியா சொல்லத்தொடங்கிவிட்டது.

நாளை கலைஞர் ”வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல்” என்று கவிதை எழுதிவிடுவார். ராமதாஸ், விஜயகாந்த் ஏன் சரத்குமார் கூட வாழ்த்து அறிக்கை விடுவார்கள். ஓபாமாவா படிப்பார் என்று நினைக்கிறீர்கள் ? தலையெழுத்து நாம் தான் அதை படிக்கணும்.

ஓபாமா வந்தால் இந்தியாவிற்கு என்ன நன்மை ? ஒன்றும் இல்லை. கருப்போ வெளுப்போ எந்த அமெரிக்கா அதிபர் வந்தாலும் இந்தியாவிடம் தனது ‘பிக் பாஸ்’ மேதாவி தனத்தை காமித்துக்கொண்டே தான் இருப்பார்கள்.

மன்மோகன் சிங் ஓபாமா போன் வருமா என்று காத்துக்கொண்டிருப்பார். அப்படியே போன் வந்தாலும் ராங் நம்பர் என்று சொல்லிவிட்டு சோனியாவிடம் தான் பேசுவார். இந்தியா பாக்கிஸ்தான் உறவுகள் மேன்பட வேண்டும் என்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பார்கள்.

நான்கு வருடம் கழித்து ஓபாமா தாஜ்மஹாலை பார்க்க வருவார். போட்டோ எடுத்துக்கொள்வார் தீவிரவாதம் பெரிய சவால் என்று எதாவது பேத்தலாக பேசிவிட்டு போவார். கம்யூனிஸ்ட் கருப்பு கொடி காமிப்பார்கள்.

மீடியா இந்தியா வந்த ஓபாமா பேல் பூரி சாப்பிட்டார் என்று கதை எழுதி கவர் ஸ்டோரி போடுவார்கள்.

நமது வலை மக்கள் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. ”நான் ஓபாமாவை ஆதரிக்கிறேன்”; “ஓபாமா சுத்த வேஸ்ட்” என்று சைடு பாரில் போட்டு தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு நாள் லீவு கிடைத்தால் போதும், ஓபாமா இதை செய்வார், அதை செய்வார் என்று ஏதாவது எழுதி பிதற்றுகிறார்கள். எனக்கு இன்று ஓபாமா பர்த் சர்டிபிகேட் கூட மெயிலில் அனுப்பிவிட்டார்கள். ( பார்க்க படம் )

இட்லிவடையில் ”ஏன் ஓபாமா பற்றி எழுதவில்லை?” என்று சாட்டில் 15 நிமிஷம் முன்பு கேட்ட ஆசாமிக்கு இந்த பதிவு சமர்பணம்.

32 Comments:

arivoli said...

opama meniavukku marunthaga umma pathivu.Vazhthukkal idly vadaiyare...
Arivoli.k

Anonymous said...

matra media kalai, pola ungalukkum obama paithiyam pidithu vittathu?

anyway its nice

Anonymous said...

மிக சரியாக கூறியுள்ளீர்கள்.

KaveriGanesh said...

போய் புள்ள ,குட்டிகள படிக்க வையுங்கப்பா

யாத்ரீகன் said...

>>> சைட் பாரில் போட்டு தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள் <<

:-))))))))))

கிருஷ்ணமூர்த்தி said...

எது எப்படியோ, ஒன்று நிச்சயம்-ஜனநாயக கட்சி [ஒபாமா கட்சி] பதவியைப் பிடிக்கும் போதெல்லாம், இந்தியாவுடனான உறவு அவ்வளவு சொல்லிக் கொள்கிறார்போல இருந்ததில்லை. அதுவும், எஸ் மேடம் என்று எதற்கெடுத்தாலும் சோனியா கண் ஜாடையையே எதிர்பார்த்து வேறொன்றும் செய்ய முடியாத காங்கிரஸ் கட்சி ஆட்சி ஆட்சி இருக்கும் பொது நிலைமை இன்னும் பல மடங்கு மோசம்!
/அதனால, அண்ணன் ஒபாமா வாழ்க தங்கத் தலைவன் ஒபாமா வாழ்கன்னு கோஷம் போட்டுட்டு ஓடிப் போயிடுங்க!

Silky woven said...

ஒரு டி.வி. சானல் mr.presidentன்னு விளிக்கிது. இன்னொன்னு "can he change the world"ன்னு கேள்வி கேக்குது. எப்படி இருந்தாலும் என் வீட்டு கக்கூஸ் நாறத்தான் போகுது.

ராஜ. சுப்ரமணியன் said...

சரியா எழுதினீங்க. அவங்களுக்கு சொரணை எங்க வரப்போகிறது? ஒபாமா பைத்தியம் நெறய்யவே ஓவர்தான். அந்த ஆண்டவன்தான் நம்மைக் காப்பாத்தணும் !!

நவீன பாரதி said...

இப்பவே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி? இன்னும் ஒபாமா வளர்க்கற நாய் பிறந்தநாள் விழா நேரடி ஒளிபரப்பு இருக்கு!! இலவசமா தொலைக்காட்சி கெடச்சிருக்கு, பொறுமையா பாருங்கப்பு!

கிரி said...

:-))))

Anonymous said...

There are two sides to the same coin. You should have lived under British regime to understand how Freedom feels like. Last 4 years - America & American people had a rough tide. They are pinning their hopes on the new President.

India gained Nuclear Power because of Bush's persistence.

Obama has a flair for our Father of our Nation (half of us won't even know who he is).

All the benefits the IT & IT related employment from US companies are due to the fact - US Presidents are in favor of that (look at German laws you will understand the difference).

Contrasting to which what did our CM do in the case of Srilankan tamils. To secure his family - seats in Parliament he let India to supply Arms and (in fact) Army to kill our own brothers, sisters and innocent children.

How about we see our back before judging others... oh! we won't we are true Dravidians. We just see other side when it comes something that would damage our reputation.

Itsdifferent said...

Thats a pathetic post.
Listen to people who had been inspired by him. I think as someone said earlier, you should live in those conditions to see, what a refreshing change this is going to be.
If not anything else, he is 47, an unknown commodity, just a few years back. That should be an inspiration for out people, who are used to 80+ PMs and Prezs. Can we elect such a person, who did not have any political, family to support him to this big job.
See how the nations are reacting. Israel made sure, that they withdrew from Gaza, just on time before the inauguration. Such is the confidence his presidency beams across the countries.
So, lets hope for the better. Forget negativity, always look for the future.

Anonymous said...

IV

you are better off doing copy paste rather than writing posts like this.

Vishayam therinja pesanum, illati..

Copy Paste seiyavum.

Anonymous said...

eppadiyo... arivujeevi-thanamaka naanum vithi vilakku alla endru kaanpithu vitteergal

Ree_mathi said...

HEHEHE ... good one ... I also wrote a "history" is being made post ... But ullukulla ... i was kinda ticked off ... Like with the whole America is the WHOLE WORLD Attitude ...
atleast for me (i live in canada) i can kinda say it matters quite a bit with obama in office ... he could potentially be good or lethal to my heavyily america- dependent nation !!!

Anonymous said...

superuppu...............

பழையசோறு said...

ஜோக்ஸ் ஜோதிகா ஜோக்கு சூப்பர். எங்கே இருந்துயா புடிக்கிறிஙக !

R.Gopi said...

நாளை கலைஞர் ”வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல்” என்று கவிதை எழுதிவிடுவார். ராமதாஸ், விஜயகாந்த் ஏன் சரத்குமார் கூட வாழ்த்து அறிக்கை விடுவார்கள். ஓபாமாவா படிப்பார் என்று நினைக்கிறீர்கள் ? தலையெழுத்து நாம் தான் அதை படிக்கணும்.
-----------------------------------
கப்பிதனத்த விட்டுட்டு, புள்ளகுட்டிங்கள படிக்க வையுங்க.

venkatramanan said...

Is Idlyvadai AD ENABLED now? (I could see Freelotto link being opened, when "Read More" is clicked & a single left click in the site opens a popup?)

Regards
Venkatramanan

சந்திரமௌளீஸ்வரன் said...

உங்களை பதவியேற்பு விழாவுக்கு அழைக்கலியா அதான் இத்தனை கோபமா

சங்கு மாமா said...

ஒபாமா பதவி ஏற்றத்துக்கு பெரிசு பீசொட பிரியாணி போட்டாங்களாம் ..... இ.வ போயி சாப்பிடலையா ? (திருமங்கலம் ஸ்டைல் ல..)

Anonymous said...

add to Gopi's list.
Vaico is writing a book abt Obama.
Muka will also be saying "Paapanai thorkaditha america makkaluku nandri".
"Dharmam jeyichuthu"
"Obamavudan sernthu nallatchi koduka naadaumandra therthalil D.M.K ku pottu kudunga"

Honey Bee said...

Whatever has been said in your post is gonan happen... One should understand that he is just a few hours old in the seat of MR.President. Give him his time. Let's know what he is upto.. Is he gonna live to his words are will he be just another politician.

To know what it is to be a black and to raise to that stature from nowhere... you should read American History.. ( how many of us know even our own Indian History?)

One an be a critic.. only if you give someone the space to perform... bullying a person even before he could utter a word is utter nonsense...

Here is a man who had created Hopes and Dreams not only to his fellow men but has been able to reach out to the rest of the nations citizen....

The media, the rest cries in awe or in hatred only because we need an one man army to lead us.. to give us hope and dreams... to pursue what our heart says...

sriram said...

Economy மோசமா இருக்கு ,மோசமா இருக்குன்னு இவர கொண்டு வந்தா , அண்ணாத்தே ஸ்டார்டிங்லியே 150 மில்லியன் டாலர்க்கு ஆப்பு வெச்சுட்டாரு , in the name of swearing in ceremony. இதே ரேஞ்ச்ல போனா புரட்சித்தலைவி ஆட்சி மாதிரி தான் ஆக போறது.

கொடும்பாவி-Kodumpavi said...

ஒரு பெண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14
அதே பொண்ணு அல்லா கொடுத்தா அது பிப்ரவரி 14

உங்களுக்கு ஒபாமா மானியா கண்ண கட்டிடுச்சா? அல்வா அல்லா ஆனது எப்படி?

ரிஷபன் said...

நிதானமே இல்லாமல் ஒருவரை புகழ்வதும்/இகழ்வதும் மீடியாவுக்கு கைவந்த கலை. நாலு வருஷம் கழித்து தாஜ் மஹாலுக்கு வருவதைப் பற்றி சொல்றீங்க சரி, கூடவே "ஷூ " பெறுவாரான்னு சொல்லலையே !.

வலைமக்கள் மீடியாவுக்கு ஒரு படி மேல, ஜல்லிக்கட்டு காளை போன்றவர்கள்.

ரிஷபன் said...

நிதானமே இல்லாமல் ஒருவரை புகழ்வதும்/இகழ்வதும் மீடியாவுக்கு கைவந்த கலை. நாலு வருஷம் கழித்து தாஜ் மஹாலுக்கு வருவதைப் பற்றி சொல்றீங்க சரி, கூடவே "ஷூ " பெறுவாரான்னு சொல்லலையே !.

வலைமக்கள் மீடியாவுக்கு ஒரு படி மேல, ஜல்லிக்கட்டு காளை போன்றவர்கள்.

வடிவேல் said...

ஆறிய(ஆரிய) இட்லி வடையே! கருப்பு என்றாலே உனக்கு இளக்காரம்தானா?

பாண்டு said...

///Economy மோசமா இருக்கு ,மோசமா இருக்குன்னு இவர கொண்டு வந்தா , அண்ணாத்தே ஸ்டார்டிங்லியே 150 மில்லியன் டாலர்க்கு ஆப்பு வெச்சுட்டாரு , in the name of swearing in ceremony. இதே ரேஞ்ச்ல போனா புரட்சித்தலைவி ஆட்சி மாதிரி தான் ஆக போறது///

ஸ்ரீராம் சரியா சொன்னீங்க! ஆனாலும் சோ கோவிச்சுப்பார். இருந்தாலும் இனிமே அம்மாவை பத்தி எலெக்சன் முடியிறவரைக்கும் இப்படி ஞாபக படுத்தாதீங்க!

மடல்காரன்_MadalKaran said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DN020090121120131&Title=Editorial+Articles&lTitle=%A3%5Cl%D7d+Lh%D3%FBWLs&Topic=0&ndate=1/22/2009&dName=No+Title&Dist=

இந்த தினமணி கட்டுரையை காப்பி பேஸ்ட் பண்ணுவீர்களா? அர்த்தமுள்ள வார்த்தைகள்.
அன்புடன், கி.பாலு

Kots said...

opama patri media vil pottal ungalukku ean vayitru erichal? media la podurathukku veru ethuvum periya visayam illai athanala potrupanga. Netru kooda sanjay dutt interview 1 hour pottanga ndtv la. athu kooda waste taan. vera enna seiyya ellam parthu tholaiya vendi irukku?

Anonymous said...

விஜயகாந்த் பைத்தியம் பிடித்து இட்லிவடை அலைந்ததே(ன்).
ஒபாமாவின் பதவி ஏற்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.அது மீடியாவுக்குத் தெரியும்.