பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 19, 2009

இலங்கை கிமு - கிபி

சந்திரமௌளீஸ்வரன் கிறிஸ்துவுக்கு முன் முதல் இன்று வரை இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார்...

கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்

கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்

1658- டச்சு ஆதிக்கம் இலங்கையில் தொடக்கம். கண்டி நீங்கலாக எங்கும் அவர்கள் ஆதிக்கம் பரவியது.

1796 – பிரிட்டிஷாரின் பார்வை இலங்கை மேல். அவர்கள் இலங்கையினை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள்

1815- கண்டி பிரிட்டிஷார் வசமாகியது. இலங்கைக்கு டீ, காபி, தேங்காய்த் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்த தென் இந்தியாவிலிருந்து தமிழர்களை கொண்டு செல்லுதல் தொடங்கியது.

1833- இலங்கை மொத்த்த் தீவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில்

1931- சிங்களரின் இடைக்கால காபினட்.

1948- பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை

1949- இந்தியாவிலிருந்து தோட்ட்த் தொழிலாளர்களாகப் போன தமிழர்கள் பலருக்கு குடியுரிமை பறிக்கப்பட்ட்து.

1956-இலங்கை ஒரு சிங்கள தேசம் என்று ஓர் அலை பரவியது. பாரதியார் கூட சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம் என ரொம்ப நாளைக்கு முன்பே சிங்களத் தீவு என்ற பிரயோகத்தினைக் கையாண்டார் என்பதனைக் கவனிக்க. சாலமன் பண்டாரநாயகே ஆதிக்கம். சிங்களம் ஆட்சி மொழியாக அறிவிப்பு. தமிழர்கள் இதனை எதிர்த்தனர். சுமார் 100 தமிழர்கள் அப்போது நடந்த வன்முறையில் உயிரிழந்தனர். இலங்கையில் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டு உயிரிழப்பது அன்று தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது

1958- தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் 200 தமிழர்கள் பலி

1959- சாலமன் பண்டார நாயகே கொலை. அவரின் விதவை சிரிமாவோ பண்டாரநாயகே ஆட்சிப் பொறுப்பு ஏற்பு

1965- சிரிமாவோ தோல்வி . எதிர்கட்சியான ஒருங்கிணைந்த தேசியக் கட்சி ஆட்சி. தமிழர்கள் இழந்த்தைப் பெற சில முயற்சிகள்

1970- சிரிமாவோ மீண்டும் ஆட்சியில். தமிழர்களுக்கு எதிரான போக்கு மீண்டும்

1971- இலங்கையில் மார்க்சீய புரட்சி உதயம். மாணவர் புரட்சி உதயம்

1972- சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம். புத்த மதம் மிகுந்த செல்வாக்கு பெற தொடங்குகிறது, இதனால் தமிழர்கள் அதிருப்தி

1976- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உதயம்

1977 தேர்தலில் Tamil United Liberation Front (TULF) கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் எல்லா இடங்களிலும் வெற்றி- தமிழர்களுக்கு எதிரான வன்முறை பலர் பலி

1981- புகழ்வாய்ந்த யாழ்பாணம் நூலகம் எரிப்பு. பதட்டம் அதிகமாகிறது

1983- எல்டிடிஈ தாக்குதல் 13 சிங்களர் பலி. இதுவே விடுதலைப் புலிகள் தங்களின் முதல் போர் எனக் கூறுவர்

1985- விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் நடந்த முதல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிகிறது

1987- விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை அரசு முயற்சி. யாழ்ப்பாணத்தில் புலிகள். தமிழர் பகுதிகளுக்கு தனி கௌன்சில்கள் அமைக்க இலங்கை அரசு தீர்மானம். இந்திய அமைதிப் படையினை வரவழைக்க இலங்கை அரசு ஒப்பந்தம்

1988- ஜேவிபி என்ற இயக்கமும் இன்னும் சிலரும் இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை எதிர்த்தனர்

1990- இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து விலகியது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கு இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர்

1991- இராஜீவ் காந்தி படுகொலை. விடுதலைப் புலிகளே காரணம் என முதல் கட்ட விசாரணையிலேயே தெளிவு

1993- பிரேமதாசா கொலை

1994- குமாரதுங்க பதவியேற்பு. அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கம்

1995- இலங்கை அரசின் கடற்படை கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர். மீண்டும் போர் தொடக்கம்

1995-2001 வரை இரண்டு தரப்புக்கும் ஆயுதப் போர். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்கள் விடுதலைப் புலிகளின் கேந்திரங்கள் ஆயின

2002 பிப்ரவரியில் நார்வே தூதுக் குழுவின் ஒத்துழைப்பில் இரண்டு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தம். தனி ஈழக் கோரிக்கையை புலிகள் கைவிட்டனர். யாழ்ப்பாணம் சாலை திறக்கப்பட்ட்து. விடுதலைப் புலிகள் மீதான தடையும் கைவிடப்பட்ட்து

2003- விடுதலை புலிகள் போர் நிறுத்த்த்தைக் கைவிட்டனர்

2003 மே பெரும் வெள்ளம்

2004- கருணா விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து விலகி தனி அமைப்பு தோற்றுவிப்பு. தலைமறைவு

2004 ஜூலை புலிகள் கொழும்பு நகரை தற்கொலைப் படை கொண்டு தாக்குதல்

2004- டிசம்பர்- சுனாமி- இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் சேதம்

2002005 ஆக்ஸ்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கொலை- நாடெங்கும் பரபரப்பு

2005 நவம்பர் – பிரதமரகாக இருந்த மஹிந்த ராஜ பக்‌ஷே அதிபர் தேர்தலில் வெற்றி

2006 ல் புலிகள் தொடர் தாக்குதல். மே மாதம் கடற்படைக் கப்பலைத் தாக்கினர்.

2006 ஜெனிவாவில் நடை பெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி

2007 பல தமிழர்கள் கொழும்பு நகரை விட்டு வெளியேற்றியது அரசு. நீதி ம்னறத் தலையீட்டால் நிலை மாற்றம்

2008 மார்ச். சர்வதேச அமைப்புகளை வந்து பார்வையிட இலங்கை அரசு வேண்டுகோள். அதனை ஏற்று குழு வருகை. குழு உறுப்பினார் நெகில் ராட்லி தன்னால் வேலை செய்ய இயலவில்லை. அரசின் குறுக்கீடு உள்ளது எனக் கூறி வெளியேற்றம்

2008 ஜூலையிலிருந்து இன்று வரை இலங்கை அரசு தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது

37 Comments:

Anonymous said...

நீங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்தோர் என உங்கள்
பதிவை தொடங்கி உள்ளீர்கள்.

இலங்கையி்ன் ஆதிக்குடியினர் உள்ளார்கள்(திராவிடர்).
இவர்கள் புலம்பெயர்ந்தோர் அல்ல.

கி.மு காலங்களில் வர்த்தக ரீதியான தொடர்புகள் இருந்த போதும் புலம்பெயர்வு பெரிதாக‌
இடம்பெறவில்லை. கி.மு 400(?) அளவில் தான் இந்தியாவில் இருந்து ஆரியரான விஜயன் அவனது
நண்பர்களுடன் (700 பேர்) குற்றம் செய்ததற்காக அவனது தந்தையால் நாடுகடத்தப்பட்டு இலங்கை
வந்தான். அதன் பின் தான் பெரிய அளவில் குடியேற்றம் இடம்பெற்றது.குடியேற்றம் வட பகுதிகளில்
இடம்பெறவில்லை.

இந்தியாவில் வாழும் பலரும், இந்தியாவில் இருந்து பிழைப்பதற்காக சென்றவர்களே
இலங்கையில் வசிக்கும் தமிழர் என நினைக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து குடியேறியவர்களே இலங்கையில் வாழ்பவர்கள் என்ற கருத்தை
நீங்கள் கொண்டிருந்தால்(?) அது தவறு.

Mathi said...

1983- எல்டிடிஈ தாக்குதல் 13 சிங்களர் பலி. இதுவே விடுதலைப் புலிகள் தங்களின் முதல் போர் எனக் கூறுவர்

You forgot to mention the communal violence against the tamils all over the country immediately after the funeral of those 13 Sinhalese (They were not Sinhalese. They were soldiers mind you.) which went for a week, where thousand of tamils were killed, lacks homeless and many more. Which is called BLACK JULY.

HOW COME WHO EVER SENT YOU KNOWS EVERYTHING ELSE AND NOT THIS?

FYI,

I HAVE BEEN READING YOUR BLOG SINCE YOU STARTED THOUGH DON'T COMMENT, EXCEPT FOR YOUR FIVE YEAR COMPLETION.

ரிஷபன்Meena said...

இலங்கை வானொலியின் ரசிகனாக இருந்த காரனத்தால் சிலோன் செல்லாமலேயே பல ஊர்கள் எனக்குப் பரிச்சயம். இயற்க்கை வளமிகுந்த அந்த பச்சைத் தீவை அமைதித் தாய் சீக்கிரம் அரவனைக்கட்டும். எந்த வகைப் போரானாலும் வலி என்னவோ சாதாரன மக்களுக்கு மட்டும் தான்.

Anonymous said...

it is like commenting on Indian history without mentioning the first war of independence, Jallian wallagh bagh massacre and the partition massacres. If there was one pivotal moment in the srilankan issue, it was the anti-Tamil pogrom in 1983.

Anonymous said...

1976- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உதயம்
இந்த உதயம் தான் இலங்கை தமிழரின் அழிவுக்கும் அவர்கள் வாழ்வு சீரழிந்தமைக்கும் காரணம்.

Anonymous said...

77 தேர்தலில் தமிழீழத் தனியரசே எமது கோரிக்கை வென்றதைப் பற்றி மூச்சும் காட்டவில்லை.

83 இனவழிப்பைப் பற்றி சிறுகுறிப்புக் கூட எழுதப்படவில்லை.

2003 இல் புலிகள் போர் நிறுத்தத்தைக் கைவிட்டனர் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கருத்து என்ன?
சிறிலங்கா அரசாங்கமல்லவா கைவிட்டது? புலிகள் இன்றுவரை தாம் ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக அறிவிக்கவில்லையே?

நல்லா வரலாறு எழுதிறாங்கப்பா.

Anonymous said...

There are reports that Pottu Amman and 3 senior LTTE 'colonels' have surrendered can IV confirm this?

Anonymous said...

Though we hear a lot about Tamil discrimination, it would help non eelam tamils to learn it from the eelam tamils.
How we are treated as second class citiznes? education/jobs and other things...etc

- TN Tamilan

Anonymous said...

அஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க!!!

யாரையா அந்த வரலாற்று ஆசிரியர்.....

நல்ல சொல்லுறாங்கையா வரலாறு!!!

சிங்களவன் சொல்லுறதை விட இது நல்ல கற்பனை!!!

வாழ உங்கள் கற்பனை வளம்!!!

தமிழ் சினிமாவில் கதாசிரியர் ஆக முயற்சிக்கலாம்!!!

Anonymous said...

வாழ உங்கள் கற்பனை வளம்!!!
தமிழ் சினிமாவில் கதாசிரியர் ஆக முயற்சிக்கலாம்!!!

அப்படியானால் பிரபாகரன் அகிம்சை வழியில் போராடி பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்று எழுதினால் தான் நம்புவீர்களா?

Unknown said...

வந்திருக்கும் புலி ஆதரவு கோஷங்கள் எல்லாமே அநாமதேயங்களாக ( அனானி) ஒலிப்பதிலிருந்தே தெரியவில்லையா அந்தக் குரலுக்குரியவர்களிடம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நேர்மை இல்லை என்பதும் அவர்கள் கருத்தில் உண்மை இல்லை என்பதும்.

வெறும் உணர்ச்சி குவியலாக இருப்பதினால் தான் இந்த பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதென்பதும் அவர்களுக்குப் புரியவில்லை

ஆயுதம் தாங்கிய வழி தவிர அவர்கள் ஒரு ஜனநாயக வழியினை இதுவரை யோசிக்கவில்லை. இனிமேலும் யோசிப்பார்கள் என யோசிக்க இடமும் தரவில்லை

ஜூலை 2008 தொடங்கி இன்று வரை நடக்கும் போரின் காரணமாக இதுவரை எத்தனை அகதிகள் இந்தியக் கரை தேடி வந்தனர். அகதிகள் எண்ணிக்கை இல்லவே இல்லை எனக் கூறும் அளவுக்கு குறைவு. இதற்கு என்ன காரணம்

துக்ளியூண்டு யோசித்தாலே புரிந்து விடும்

கொழுவி said...

மேம்போக்கான வரலாறு -

2003 இல் புலிகள் போர் நிறுத்தத்தை கைவிட வில்லை. அதுவரையான பேச்சுக்களில் சிறிலங்கா அளித்திருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றாத நிலையில் (சிரான் உதவிகள் - உயர்பாதுகாப்பு வலயங்களை மக்கள் வாழிடங்களாக அனுமதித்தல்) அவற்றை உடனடியாக நிறைவேற்றும்படியும் அதுவரை பேச்சு மேசையில் கலந்து கொள்ளுவதில்லையென்றும் முடிவெடுத்தனரே தவிர - போர் நிறுத்தத்தை முறிக்கவில்லை. போர்நிறுத்தம் என்னும் கடதாசி ஒப்பந்தம் 2008 இல் சிறிலங்கா தானா விலகி கொள்ளுவதாக அறிவிக்கும் வரை இருந்தது.
---------------------------------
ஆயுதம் தாங்கிய வழி தவிர அவர்கள் ஒரு ஜனநாயக வழியினை இதுவரை யோசிக்கவில்லை.//
எப்போதிருந்து எதுவரை? சுதந்திரத்தின் பின் தொடக்கம் - 78 வரை அவர்கள் எதையோசித்தார்கள்?
----------------------------------

ஜூலை 2008 தொடங்கி இன்று வரை நடக்கும் போரின் காரணமாக இதுவரை எத்தனை அகதிகள் இந்தியக் கரை தேடி வந்தனர். அகதிகள் எண்ணிக்கை இல்லவே இல்லை எனக் கூறும் அளவுக்கு குறைவு.//

இதற்கு யோசிக்கவெல்லாம் தேவையில்லை.
இலங்கையின் மன்னார் கரையே இந்தியாவோடு முகம் நோக்கியிருக்கிறது. தற்போது முழுமையான மன்னார் கரை சிறிலங்கா படைகளால் அபகரிக்கப்பட்டு மக்கள் அற்ற பிரதேசமாயிருக்கிறது. இந்திய இலங்கை வரைபடத்தை உங்கள் அறிவுக்கு சிபாரிசு செய்கிறேன்.
-------------------------------------
அநாமதேயங்களாக ( அனானி) ஒலிப்பதிலிருந்தே தெரியவில்லையா அந்தக் குரலுக்குரியவர்களிடம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நேர்மை இல்லை என்பதும் அவர்கள் கருத்தில் உண்மை இல்லை என்பதும்.//

இது இந்த பதிவுக்கும் பொருந்துகிறதல்லவா... ?
------------------------------------
மற்றும்படி நீங்கள் கண்டமேனிக்கு வரலாறு எழுதுவது குறித்து கவலையில்லை. ஏனெனில் அவற்றை தோலுரித்து காட்டுவதற்கான சகல அறிவுகளையும் உங்களை விட நாம் பெற்றுள்ளோம்.

Unknown said...

அன்பார்ந்த கொழுவி

சரியா படிக்கமாட்டீங்களோ

எனது கட்டுரை அனாமதேயமாக வரவில்லை

இட்லி வடையார் எனது பெயரை குறிப்பிட்டுள்ளார் அதில் எனது வலைமனை லிங் செய்துள்ளார்

எனது வலையில் எனது தொலைபேசி எண் உள்ளது

எல்லாரையும் விட அறிவுள்ளவர்களாக தன்னை நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் இது தான் சிக்கல்

நான் அனாமதேயமாக எழுதவில்லை என்ற உண்மையை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்

நேருவின் GLIMPSES OF WORLD HISTORY லிருந்து சில வரிகளை எடுத்துக்காட்டினால் பொருத்தமாக இருக்கும்

Nehru narrating Indira a story he read from the travels of Hiuen Tsang

It was about a man from South India who came to Kraunasuvarna, it was a city somewhere near modern Bhagalpur in Bihar.

This man wore round his waist copper plates and on his head he carried a lighted torch. Staff in hand, with proud bearing a lofty steps, he wandered about in this strange attire and anyone asked him the reason for his curious get-up he told that his wisdom was sop great that he was afraid his belly would burst if he did not wear copper plates round it; and because he was moved with pity for the ignorant people round about him who lived in darkness he carried the light on his Head.

Well, I am quite sure that there is no danger to my ever bursting with too much wisdom and there is no need for me to wear copper-plates or armour, and any even I hope that my wisdom such of it as I posses, does not live in my belly. Where ever it may reside, there is plenty of room still for more of it and there is no chance of there being no room left. If I am so limited in wisdom how can pose as wise man and distribute good advice to others? And so I have always though that best way to find out what is right and what is not right, what should be done and what should not be done is not by giving sermon but by talking and discussing and out of discussion sometimes a little but of the truth comes out. I have like my talks with you and we have discussed beyond our world lie other wonderful and mysterious worlds so none of us need ever be bored or imagine like the very foolish conceited person whose story HiuenTsang has told us, that we have learned everything worth and learning become very wise, for the very wise, if any such are there, must sometimes feel rather sad that there is nothing more to learn. They must miss the joy of discovery and of learning new things- the great adventure that all of us who care to may have. I must not therefore sermonize

கொழுவி said...

உங்கள் சிபாரிசை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் உங்களது வரலாற்றின் காலப் பிரிப்புகளில் கொட்டிக் கிடக்கின்ற தவறுகள் அல்லது வேணுமென்ற திணிப்புக்களை களைவதற்கு நான் சொன்ன சிபாரிசுகளையும் மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் -
இலங்கையின் - ஈழத்தின் - அரசியலின் - போராட்டத்தின் - வரலாற்றினை அக்குவேறு ஆணிவேறு ஆக நாம் ஈழத்திற்கு வெளியே நின்ற வரலாற்று ஆசிரியர்களை விட -

ஈழத்திற்கு உள்ளேயே நின்ற மாணவர்களாக

அதிகமாகவும் சரியாகவும் தெரிந்தும் அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறோம்.

-------------------------------

உங்கள் வரலாற்று திணிப்பில் நான் குறிப்பிட்ட தவறுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டீர்களா..?

இரா பிரஜீவ் said...

சந்திரமௌளீஸ்வரன் அவர்களுக்கு,

எழுத்தின் போராட்ட வரலாற்றினை முழுமையாக தெரிந்த பின்பு அது சம்பந்தமாக கதைக்க வேண்டும்!

ஈழத்தின்போரட்டம் அற வழியில் தான் ஆரம்பமானது!!!

ஈழத்தின் காந்தி என அழைக்கப்பட்ட தந்தை செல்வா மேற்கொண்ட சத்தியாக்கிரகமும் ஒப்பந்தங்களும் என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ளவும்

அதைவிட ஈழத்தின் பெருமைகளை அதன் மானத்தை சூறையாடிய இந்திய அமைதிப்படையை(?) எதிர்த்து உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலீபன் கதையையும் தெரிந்து கொள்ளுங்கள்

உலகத்திற்கு அறப்போராட்டம் சொன்ன இந்தியாவிற்கே அது சம்பந்தமாக போதனை செய்தவர்கள் நாங்கள்.

இந்தியா சொன்ன போதனை மனிதம் உள்ள ஆங்கிலேயருக்கு எதிராக

ஈழத்திலே நாங்கள் போராடுவது சிங்கத்திற்கு பிறந்த புத்திரர்களோடும் அவர்களுக்கு வால் பிடிக்கும் ஆள்களுக்கும் என ஒரு பெரிய கூட்டதிற்று எதிராக...

காந்தி சொன்ன அறவழி மனிதம் உள்ள ஆங்கிலேயருக்கு புரிந்தது, தந்தை செல்வாவும், தியாகி திலிபனும் சொன்ன அறவழி மிருகத்திற்கு பிறந்தவர்களுக்கும் அதற்கு திணை போவர்களுக்கு புரிவவில்லை.. (மிருகத்திற்கு பற்றி எப்படி தெரியும்)

முள்ளை முள்ளால் தான் எடுக்கணும் எண்டு சொன்னது தமிழ் தான்!!!

மிருகத்திற்கு அதன் பாசையில் பேசினால் தான் புரியும்!!!

இதில் நீங்கள் என்ன பக்கம் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!!!

Unknown said...

அன்பின் கொழுவி

I must not therefore sermonize

என்று நேருவின் மொழியிலிருந்து மேற்கோள்காட்டி எனது பதிலுரையை முடித்திருக்கேன்

நேரு ஹுவான் சுவாங் சொன்ன கதையை சுருக்கமாகச் சொன்னதையும் அப்படியே தந்திருக்கேன்

நான் ஏற்கனவே நிரப்பப்பட்ட ஊற்றும் பழக்கமில்லாதவன்

பிறரைவிட அதிக அறிவு இருக்கிறது என நிரம்பிய கோப்பையாய் மார்தட்டுவோரிடம் எனக்கு பேசி பழக்கமில்லை

Unknown said...

//மிருகத்திற்கு அதன் பாசையில் பேசினால் தான் புரியும்!!!

இதில் நீங்கள் என்ன பக்கம் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!!!//

எனக்கு மனுஷ பாஷை மட்டுமே தெரியும் நான் மனிதன் என்பதால்

Unknown said...

அன்பின் கொழுவி

I must not therefore sermonize

என்று நேருவின் மொழியிலிருந்து மேற்கோள்காட்டி எனது பதிலுரையை முடித்திருக்கேன்

நேரு ஹுவான் சுவாங் சொன்ன கதையை சுருக்கமாகச் சொன்னதையும் அப்படியே தந்திருக்கேன்

நான் ஏற்கனவே நிரப்பப்பட்ட கோப்பையில் எதுவும் ஊற்றும் பழக்கமில்லாதவன்

பிறரைவிட அதிக அறிவு இருக்கிறது என நிரம்பிய கோப்பையாய் மார்தட்டுவோரிடம் எனக்கு பேசி பழக்கமில்லை

இரா பிரஜீவ் said...

சந்திரமௌளீஸ்வரன் அவர்களுக்கு,

ஒ அப்டியா? தியாகி திலிபனும், அன்னை பூபதியும் சத்தியாகிரகம், உங்க்கள் காந்தியின் அகிம்சை வழியை விட மேலானது.. காரணம் வெள்ளைக்காரன் எந்த காரணத்தை காட்டியும் காந்தி மயங்கும் நிலைக்கு ௯ட விட்டதில்லை.
எங்களில் இருவர் உயிரையே விட்டனர்... அதுவும் காந்தியின் தேசத்துக்கு எதிராக. உலகத்திற்கு அறவழி பேராட்டம் போதித்த காந்திதேசம் காந்தி இறந்தவுடன் எல்லாத்தையும் மறந்து விட்டது...

சொல்கிறிர்கள் நிங்களும் மனிதன் எண்டு....

சத்தியாக்கிரகம் இருந்த காந்தியை மயங்க விடாத ஆங்கிலேயன் மனிதனா?

இல்லை

சத்தியாகிரகம் இருந்த எங்கள் உறவுகள் சாவதை வேடிக்கை பார்த்ததும் இல்லாமல் அதை நியாயப்படும் அல்லது அதை மறுத்து பேசும் நிங்கள் மனிதனா?

தங்களுக்கும் மனித பாசை புரியுமாமில்ல...

//நான் ஏற்கனவே நிரப்பப்பட்ட கோப்பையில் எதுவும் ஊற்றும் பழக்கமில்லாதவன்//

இப்போதுதான் தெரிகிறது உங்களின் கோப்பையின் அளவு....

கொழுவி said...

பிறரைவிட அதிக அறிவு இருக்கிறது என நிரம்பிய கோப்பையாய் மார்தட்டுவோரிடம் எனக்கு பேசி பழக்கமில்லை//

பழக்கமில்லையென்பதற்காக உங்களது திரிபுப் பு னைவுகளை விட்டது விட்டபடியாக கடந்து விட முடியாதல்லவா ?

அதை விட அறிவு என்ற பொதுப்படையற்று ஈழம் தொடர்பில் அதிகம் என்பது உண்மைதான். அதே ஈழம் தொடர்பில் உங்களுக்கு கொஞ்சம் குறைச்சல் - அல்லது மேம்போக்கு பார்வையென்பதுவும் உண்மைதான்.

அதற்கு ஆதாரமாக உங்களது வரலாற்றினையே எடுத்து நோக்கலாம்.

---------------

வழமைபோலவே எல்லா இடங்களிலும் சொல்வது போலவே இந்த வரலாற்றுத் திரிப்பை திருப்பலை சந்திரமௌளீஸ்வரன் உணர்ந்து கொள்ள வேண்டுமென்ற தேவையெதும் எனக்கு கிடையாது.

ஆனால் அவரைப் போலவே மேம்போக்கான வாசிப்பாளர்கள் எவரும் இதனை படித்து விட்டு ஓ.. இதுதான் இலங்கை வரலாறா.. சூப்பர் என்று விட்டு போகக் கூடாதல்லவா.. அதற்காகதான்-

Anonymous said...

//இரா பிரஜீவ்-ஈழத்திலே நாங்கள் போராடுவது சிங்கத்திற்கு பிறந்த புத்திரர்களோடும் அவர்களுக்கு வால் பிடிக்கும் ஆள்களுக்கும் என ஒரு பெரிய கூட்டதிற்று எதிராக...
மிருகத்திற்கு அதன் பாசையில் பேசினால் தான் புரியும்!!!//
ஆகா எப்படிபட்ட சிந்தனை!!! என்ன மாதிரியான அறிவு இது?

இரா பிரஜீவ் said...

//வந்திருக்கும் புலி ஆதரவு கோஷங்கள் எல்லாமே அநாமதேயங்களாக ( அனானி) ஒலிப்பதிலிருந்தே தெரியவில்லையா அந்தக் குரலுக்குரியவர்களிடம் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் நேர்மை இல்லை என்பதும் அவர்கள் கருத்தில் உண்மை இல்லை என்பதும்.//

உங்கள் கருத்தில் ஒரு அர்த்தம் இருப்பதாக தெரிய வில்லை சந்திரமௌளீஸ்வரன். காரணம் அனானியாக வந்து கருத்து சொன்னால் அந்த கருத்து உண்மை இல்லை என்று சொல்லுவது அபத்தம்.
காரணம்

இட்லி வடை என்ற இந்த பதிவாளரின் உண்மை முகம் யாருக்கும் தெரியாது, அதனால் தான் சில தகவல்களை சுதந்திரமாக தர முடிகிறது. ப்லோக் செய்த பெரும் புரட்சியே அதுதான். தனது கருத்துக்கு இடம் தேவையே தவிர தனது முகத்துக்கு இல்லை என்பது blog இன் தாரக மந்திரம்.

உலகம் முழுக்க இந்த கருத்து தான் நிலவுகிறது.

//வெறும் உணர்ச்சி குவியலாக இருப்பதினால் தான் இந்த பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதென்பதும் அவர்களுக்குப் புரியவில்லை//

உணர்ச்சி குவியலால் தான் காந்தியால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெறமுடிந்தது. வெள்ளையனை துரத்திவிட்டோம் என்று சொன்னாலும் இந்தியாவே அவனால் தான் உருவானது. இன்று இந்தியா என சொல்ல படுகின்ற தேசம் வெள்ளையன் வந்தபின்தான் உருவானது. அதற்க்கு முன்பு பல அரசர்களாலும் பேரரசர்களாலும் ஆளப்பட்ட பலதேசங்களை ஒன்டாங்கி வெள்ளையன் நிர்வகிக்க இலகுவாக ஒரே தேசம் ஆக்கினான். இலங்கையிலும் இதே நிலைமைதான். அதன்பின் வெள்ளையன் சொன்ன இந்தியா என்ற பசப்பு வார்த்தையை உணர்ச்சி வார்த்தையாக்கி இந்திய சுதந்திர போராட்டம் நடந்தது. பாரத மாதாவே வெள்ளையன் படைப்பு அதை இந்தியன் என்ற உணர்ச்சியால் இன்றுவரை காப்பத்துவதால் தான் இவ்வளவு பிரச்சினையும். உங்களுக்கு இது புரிந்தால் இந்தியா என்ற ஒரு தேசம் உலக வரைபடத்தில் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது என்று ஒத்து கொள்கிறிர்களா?

Unknown said...

Hi IdlyVadai and Chandramouli

Srilanka separate from South TamilNadu by some sunami like disaster in ancient days.
North and East side peoples are ancient Tamil Peoples.(EELAM)
This can be proved from geological architecture.

Vijayan came to Srilanka somewhere South in BC400 and he has joined with tribal peoples.Then new race has begun..This is Formaer of Sinhala...

British peoples bring the tamil peoples for Tea Estate Works. They are lived mid of South and North. (Stateless Peoples---Malayaga makkal) These peoples shaped and formed mdern srilanka by their blood and sweat. According to Laalbagathur PandaraNayage agreement one lakh poples of stateless come back to INDIA again

This is the history of Srilanka.


Chandramouli........

Did you read MAGAVAMSAM...This book is like bhagavataigeethai for Sinhalees.. Even this book telling the truth about Vijayan and former of sinhala...

We have proof for Naaga Vamsam(Anchinet race in tamil...Naagapatanam ..Naagur...NaagarKovil)..these peoples are former of EELAM(srilanka in your term)...

My Email ID Navina14@hotmail.com
Name Vinayak...
I am not anonymous... I am researching world history and origion for past 18 years...
Please discuss with me if you need more...

Unknown said...

http://www.spur.asn.au/ltteatro.htm

Glen Jenvey a specialist on international terrorism

இந்த சுட்டியில் இன்னும் எத்தனை நாள்

என்று கேட்கிறாரே

http://www.asiantribune.com/index.php?q=node/4518

இந்திய உச்ச் நீதி மன்றத் தீர்ப்புகளின்

சுட்டிகள்

இதோ உச்சநீதி மன்றத் தீர்ப்புகள்

http://www.cbi.gov.in/judgements/thomas.pdf

http://www.cbi.gov.in/judgements/quadari.pdf

http://www.cbi.gov.in/judgements/wadwa.pdf

நான் குறிப்பிடுவனவெல்லாம் அதிகார பூர்வமான இணைய தளங்கள்

பத்திரிக்கை துணுக்கு, பேட்டி யார் நிர்வாகம் செய்கின்றனர் என்றே தெரியாத
இணைய தளங்கள் இல்லை

இது போதுமா இன்னும் அதிலுள்ள சட்ட விளக்கங்களை அலசி ஆராயலமா

அமெரிக்க நாட்டில் Foreign Terrorist Organisation என்ற பட்டியலில் இடம்
பெற்றுள்ளது

http://www.state.gov/s/ct/rls/fs/37191.htm

இது அமெரிக்க அரசு துறையின் இணைய தளம்

அமெரிக்காவின் FBI தளத்தில் the Tamil Tigers are among the most
dangerous and deadly extremists in the world என்று காணப்படுகிறது

மேலும்

Why should you care? Certainly because of the suffering and bloodshed
that the Tamil Tigers have caused. And because its ruthless tactics
have inspired terrorist networks worldwide, including al Qaeda in
Iraq. But also because the group has placed operatives right here in
our own backyard, discreetly raising money to fund its bloody
terrorist campaign overseas, including purchases of weapons and
explosives.

என்று காணப்படுகிறது

சுட்டி: http://www.fbi.gov/page2/jan08/tamil_tigers011008.html

இங்கிலாந்து விபுகளை தீவிரவாத அமைப்பு என நாமகரணம் செய்துள்ளார்கள்

சுட்டி இதோ:

http://www.homeoffice.gov.uk/security/terrorism-and-the-law/terrorism...

கனடா அரசும் அப்படியே

http://www.publicsafety.gc.ca/prg/ns/le/cle-en.asp

ஆஸ்திரேலிய அரசு

http://www.dfat.gov.au/icat/persons_entities/2_proscribed_entities_10dec2001.html


இதெல்லாம் தமிழரின் பெருமைகள்

Anonymous said...

Hi IdlyVadai and Chandramouli

Srilanka separate from South TamilNadu by some sunami like disaster in ancient days.
North and East side peoples are ancient Tamil Peoples.(EELAM)
This can be proved from geological architecture.

Vijayan came to Srilanka somewhere South in BC400 and he has joined with tribal peoples.Then new race has begun..This is Formaer of Sinhala...

British peoples bring the tamil peoples for Tea Estate Works. They are lived mid of South and North. (Stateless Peoples---Malayaga makkal) These peoples shaped and formed mdern srilanka by their blood and sweat. According to Laalbagathur PandaraNayage agreement one lakh poples of stateless come back to INDIA again

This is the history of Srilanka.


Chandramouli........

Did you read MAGAVAMSAM...This book is like bhagavataigeethai for Sinhalees.. Even this book telling the truth about Vijayan and former of sinhala...

We have proof for Naaga Vamsam(Anchinet race in tamil...Naagapatanam ..Naagur...NaagarKovil)..these peoples are former of EELAM(srilanka in your term)...

My Email ID Navina14@hotmail.com
Name Vinayak...
I am not anonymous... I am researching world history and origion for past 18 years...
Please discuss with me if you need more...

Anonymous said...

Hi IdlyVadai and Chandramouli

Srilanka separate from South TamilNadu by some sunami like disaster in ancient days.
North and East side peoples are ancient Tamil Peoples.(EELAM)
This can be proved from geological architecture.

Vijayan came to Srilanka somewhere South in BC400 and he has joined with tribal peoples.Then new race has begun..This is Formaer of Sinhala...

British peoples bring the tamil peoples for Tea Estate Works. They are lived mid of South and North. (Stateless Peoples---Malayaga makkal) These peoples shaped and formed mdern srilanka by their blood and sweat. According to Laalbagathur PandaraNayage agreement one lakh poples of stateless come back to INDIA again

This is the history of Srilanka.


Chandramouli........

Did you read MAGAVAMSAM...This book is like bhagavataigeethai for Sinhalees.. Even this book telling the truth about Vijayan and former of sinhala...

We have proof for Naaga Vamsam(Anchinet race in tamil...Naagapatanam ..Naagur...NaagarKovil)..these peoples are former of EELAM(srilanka in your term)...

My Email ID Navina14@hotmail.com
Name Vinayak...
I am not anonymous... I am researching world history and origion for past 18 years...
Please discuss with me if you need more...

Anonymous said...

Hi IdlyVadai and Chandramouli

Srilanka separate from South TamilNadu by some sunami like disaster in ancient days.
North and East side peoples are ancient Tamil Peoples.(EELAM)
This can be proved from geological architecture.

Vijayan came to Srilanka somewhere South in BC400 and he has joined with tribal peoples.Then new race has begun..This is Formaer of Sinhala...

British peoples bring the tamil peoples for Tea Estate Works. They are lived mid of South and North. (Stateless Peoples---Malayaga makkal) These peoples shaped and formed mdern srilanka by their blood and sweat. According to Laalbagathur PandaraNayage agreement one lakh poples of stateless come back to INDIA again

This is the history of Srilanka.


Chandramouli........

Did you read MAGAVAMSAM...This book is like bhagavataigeethai for Sinhalees.. Even this book telling the truth about Vijayan and former of sinhala...

We have proof for Naaga Vamsam(Anchinet race in tamil...Naagapatanam ..Naagur...NaagarKovil)..these peoples are former of EELAM(srilanka in your term)...


I am not anonymous... Name Vinayak...I am researching world history and origion for past 18 years...
Please discuss with me if you need more...

Raj said...

"கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்

கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்"

வரலாறுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும், கிறித்துவுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளுக்கு எதாவது ஆதாரம் கொடுங்கள். எங்கிருந்து இந்த கதை வந்தது ? இலங்கை வரலாறுன்னு சொல்லுறத விட , சந்திரமௌளிச்வரனின் இலங்கை வரலாறு பற்றிய கருத்துன்னு சொல்லலாம்.

அனானிமஸ் என்பது பொய் கருத்து என்றால் , அப்புறம் எதுக்கு அந்த ஏற்பாடு ? இட்லிவடை கிட்ட சொல்லி எடுத்துரலாம் ?

இந்தியா பற்றிய மேற்கத்திய நாடுகளின் பார்வை - பாம்புகளும் பாம்பாட்டிகளும் , சாமியார்களும் . அதைபோல நாமும் இலங்கை பற்றி எழுதுவதாக எனக்கு தோன்றுகிறது. எனக்கு இலங்கை வரலாறு பற்றி அவ்வளவாக தெரியாது, அதற்க்காகவே இந்த வலைப்பதிவை படித்தேன். செய்தி வெளியிடும்போது ஆதாரத்தையும் குறிபிடுங்கள் . நம்புவதற்கு வசதியாக இருக்கும் .
உங்களோட முயற்சிக்கு வாழ்த்துகள் ,

இட்லிவடைக்கு ,
எனக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் எழுதியவரோட சொந்த கருத்துன்னு அப்படின்னு சொல்லவே இல்ல ? ;)

IdlyVadai said...

//இட்லிவடைக்கு ,
எனக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் எழுதியவரோட சொந்த கருத்துன்னு அப்படின்னு சொல்லவே இல்ல ? ;)//


பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே இது நான் எழுதிய பதிவு இல்லை என்று.

Anonymous said...

ஜெர்மேனியர்களிடமிருந்து தங்களைக் கப்பாற்றியவர்களுள் முக்கியமான ஒரு நாடான கனடாவிலிருந்தே குபேக்கை தனி நாடாக்க வேண்டுமென்று அங்குள்ள பிரெஞ்சுக்காரர்கள் கேட்டார்கள்.ஆனால் தனி நாடு உருவாகவில்லை.இன்றுவரை குபேக் மாநிலத்தில் டாக்சி டிரைவருக்குக் கூட ஆங்லிலந் தெரியாது.
அப்படி இருக்கையில் ஆயிரம் ஆண்டுகளாக பஞ்சாயத்துகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சிங்களரும் தமிழரும் சம வலிவோடு இருந்தால் தான் சேர்ந்து இருக்க முடியும்.துரதிர்ஷ்ட்ட வசமாக ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேரும் பொழுது ஆட்சியை சிங்களத்தவர் கையில் கொடுத்துவிடுப் போனார்கள்.
இன்றுவரை சிங்களத்தான் தமிழன கும்மாங்குத்து குத்திகிட்டு இருக்கான்.
இலங்கையில் தமிழரின் அறவழிப்போராட்டம் தோல்வி அடைந்தது பற்றி இங்கே விளக்கமாகச் சொல்லி விட்டார்கள்.
அறவழிப்போராடம் தோல்வி அடைந்ததால் தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுத்மேந்தினர்.இலங்கை நாடு சிங்கள்த்தவரை பொண்டாட்டிக்கு பிறந்தவன் போலவும் , தமிழனை வப்பாட்டிக்கு பிறந்தவன் போலவும் நடத்தியது.
இங்கே சிலர் இப்பொழுதுள்ள‌ பிரச்சனைக்கு முக்கிய‌ காரணம் புலிகள் என்று கூறுகிறார்கள்.புலிகள் மற்ற தமிழ் போராளிகளைக் கொன்றதாகவும் கூறுகிறார்கள்.
புலிகள் இயக்கம் ராமகிருஷ்ணமடம் போன்றதும் இல்லை.பிரபாகரன் ஒன்றும் லிங்காயத்துக்களை உருவாக்கிய பசவண்ணா போன்ற ஆன்மீகத் தலைவரும் இல்லை.அவர்கள் தங்கள் விடுதலைக்காக , தங்கள் மக்கள் விடுதலைக்காகப் போராடும் போராளிகள்.அவளவுதான்.புலிகள் பிற தமிழ் இயக்கத் தலைவர்களிக் கொன்றார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
அதற்க்கு முக்கிய காரணம் இந்திய அரசாங்கம் தான் என்பதைப் புரிந்து கொள்ள‌ வேண்டும்.அமைதிப்படை சென்றபோது புலிகள் முத்லில் தங்கள் ஆயுதங்களிப்போட்டு அமைதி வழிக்கு திரும்ப ஆரம்பித்தனர்.ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசு புலிகளல்லாத தமிழ் போராளிகளுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வன்முறை செய்யத் தூண்டியது.அவர்கள் புலிகளைக் கொல்ல நினைத்தார்கள் புலிகளும் அவர்களைக்க் கொல்ல நினைத்தார்கள்.அதனால் மூண்ட உட்சண்டையில் சில உயிர்கள் பறிக்கப்பட்டன.( இங்கே புலிகளைச் சர்வாதிகாரிகள் என விமர்சிப்பொரை BOER WAR சம்பந்தப்பட்ட SCAPE GOATS OF THE EMPIRE என்கிற ஆங்கிலப் திரைபடத்தை காணும்படி கேட்டுக் கொள்கிறேன்.அதன் வரலாறை இங்கே விளக்கி குற இயலாது.தயவு செய்து google செய்யவும்)புலிகள் இயக்கம் ஒரே ஒருவர் கிழ் இயங்கும் சர்வாதிகார அமைப்பு என்றால் , உருவாகிய 50 ஆண்டுகளில் பெரும்பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்ளால் ஆளப்பட்ட இந்தியாவும் ஒரு சர்வாதிகார நாடு தான்.
இலங்கை தமிழனை பயமுறுத்தியெல்லாம் புலிகள் இயக்கம் இழுக்க முடியாது.வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழன் பூராம் புலிகளுக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறான்.
அடுத்த படியாக தமிழ் நாட்டில் இன்று இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி ஈழம் தீர்வாகாது என்று பிரச்சாரம் செய்பவர்களில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்கள்.எனக்கு எக்கச்சக்க பார்ப்பன நண்பர்கள் உண்டு.பூநூலை அறுத்தெரிந்த புரட்சிகரப் பார்ப்பனர்களும் அதில் அடக்கம்.ஆனால் அவர்கள் உட்பட எல்லாருமே தனி ஈழம் அமைந்தால் , என்றோ ஒரு நாள் தனி தமிழ்நாடு குறித்த போராடம் தொடங்குமென்றும் , அத்தகைய தனித் தமிழ் நாடு தங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்றும் கருதுகிறார்கள்.அதனாலேயே ஈழப்பிரச்சனையில் அவர்கள் தனி ஈழத்தை எதிர்க்கிறார்கள்.
ஒன்னாமண்ணா இருக்கிற புருஷன் பொண்டாட்டிக்குள்ளயே பிரச்சனை வந்துச்சுன்னா பிரிச்சுவிட்டுற்ராங்க...1000 வருடங்களாக ஒத்துப்போகாத இரண்டு இனக்குழுக்களைச் சேர்ந்து இருக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்?
நான் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன்.
இங்கே தலைமை சரியில்லை.தமிழ் நாட்டுத் தமிழர்களின் இரு பெருந் தலைவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.
கருணாநிதியிடம் நிதி இருக்கும் அளவிற்க்குக் கருணை இல்லை.ஜெயலலிதாவிற்கோ மத்திய அரசியலில் நாட்டம் வந்து விட்டது.என்ன நடக்க்ப் போகிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

Anonymous said...

கார்த்திகேய‌ன் தவமியற்றி, இலங்கையை இரண்டாக பிரித்து
Pol Potபிரபாகரனிடம் ஒப்படைத்து இலங்கை தமிழருக்கு ஒரு முடிவுகட்ட தான் விரும்புகிறீர்கள்.

Anonymous said...

ayyaa Anony,

சிங்களவர் கீழேயே இருந்து மிச்ச சொச்ச தமிழரும் மண்ணுக்கு இரையகட்டும் என்று நீங்கள் தான் விரும்புகிறீர்கள்.
இன்றைய பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் புலிகள்.ஒரு வேளை புலிகள் ஒடுக்கப்பட்டாலும் ,இன்னுமொரு ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியின் மூலமே தமிழருக்கு முழு நிம்மதி கிட்டும்.
மதத்தின் கரணங்காட்டி கிழக்கு மேலும் மேற்கு பாகிஸ்தானை தனியாகக் கொடுத்தோம்.பின்னர் ஒரே மதத்தவரான அவர்களுக்கிடையில் மொழிச்சண்டை வந்தது.உருது பேச முடியாது என்று சொன்ன வங்காளிகளை வன்கொடுமை செய்தது மேற்கு பாகிஸ்தான்.அதிலே நமது அரசு தலையிட்டு கிழக்கு பாகிஸ்தானை தனிநாடாக்கிக் கொடுத்தது.நமது ராணுவ வீரர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் இறந்தனர்.14500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.இன்று அதே வங்காளதேசம் மீண்டும் பாகிஸ்தானோடு சேர்ந்து கும்மாளம் போடுகிறார்கள்.
தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஏன் அரசு மகிழ்ச்சி கொள்கிறது?ஏன் கண்மூடித்தனமாக எதிராளியை ஆதரிக்கிறது?
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இந்தாயாவின் முழுமையான தூண்டுதல் மேலும் ஆதரவின் கிழ் நடந்து வருகிறது.

Sriraman said...

Karthikeyan

I am a pakka brahmin born and brought up in Tamil Nadu and having worked in Colombo for close to 4 years. I am an ardent supporter of LTTE and in my opinion, they are the only solution to the long standing issue in Srilanka.

However, your comments are casteist and smacks of inferiority complex vis a vis brahmins. Brahmins have no say in tamil nadu politics, leave alone srilankan. If you view every issue with a jaundiced eye of anti brahmin sentiment, I can't see you looking very far.

Anonymous said...

SriRaman,
I didn't say every single Brahmin is against Tamil elam.And I have met Brahmin Gurukkal who were born and raised in Srilanka,and ofcourse they stand for Elam.But I would reiterate a majority of Tamil(Nadu) Brahmins are opposing such a view.Despite of the fact that Pro-Brahmin BJP and Brahmin controlled media like vikatan are showing an open support to elam struggle வெகுஜனப் பார்ப்பனர்கள் ஈழத்துக்கு எதிரான கருத்துடையோராகத்தான் உள்ளனர்.
I have no intention to insult Brahmins.Iam just opposing their anti-elam stand.
Pls think twice b4 uttering words like "Inferiority Complex".It is deeply insulting buddy.With such an attitude I can't see YOU looking very far.
//Brahmins have no say in tamil nadu politics, leave alone srilankan. //
I agree ,but the few people who have a say ,ARE AGAINST Elam.
Don't stamp one as anti-Brahmin , just because he chooses to use the word Paappaan.If you can read history , u will come to know Paappaan is not a derogatory term at all.

Sriraman said...

Karthikeyan

I did not mean to use 'inferiority complex' in a derogatory way. No offence meant.

Not only paapan, but even a few other unconstitutional words have been used freely in tamil history - Paapan in the current sense is used only by anti brahmin people.

Coming back to your point on brahmins who have a say being anti eelam, there are two things

1. Not all non brahmins are pro eelam ( including the secular congress)

2. Any Brahmin with an anti eelam opinion does not represent the views of the community.

The bane of tamilians has always been that they split themselves on caste lines - result is for all of us to see.

You have started of on the same note for the Eelam too.

Anonymous said...

Who is சந்திரமௌளீஸ்வரன் ???

Anonymous said...

யாருப்பா இங்க வரலற்று மேதை ?? நல்லா கத அளக்காயா... முதல்ல இந்திய வரலாற படி. அப்ரம் இலங்கய பாருபா..

இலங்கையின் வரலாறு விஜயன் வருகைக்கு பின்னரே புத்தகமாக எழுதினாங்க. அதுலயே "குவேனி" என்ற அரக்க குலப் பெண் பற்றி சொல்லப்படுது. விஜயன் வருவதற்கு முதல்ல இருந்தே இலங்கையில் நுற்றுக்கணக்கான சிவன் கோயில்கள் இருந்திருக்கு அதுக்கு அதரமும் இருக்குபா..... அது தெரியுமா உனக்கு...

போயா போ.... போய் வேர வேலை இருந்தா பாரு. இந்த இலங்க அழிரக்கு நாள் நேருங்கிடுக்கு அது தெரியுமா உனக்கு ??? உலகப்படத்துல இருந்து அழியப்போகுதாம்.... அத ஏன் போடல உன்ட வலையில.