பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 23, 2009

அவியல்.இன்போ

ஒர் அறிமுகம்...

அறிவியல் என்றால் பலர் தலைதெரிக்க ஓடும் இந்த காலத்தில். தமிழில் அறிவியல் பற்றி எழுத தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள். நல்ல முயற்சி வாழ்த்துகள்!

சில வருடங்களுக்கு முன், நான் முதுகலை மாணவியாக இருந்தபோது சில நண்பர்களுடன் ஒரு தாய்லாந்து உணவகம் சென்றிருந்தேன். உண்ணத் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்குள் முதுகு தண்டுக்குள் பூரான் ஊறும் அவஸ்தை. எனக்கு மட்டும்தான் ஏதோ அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். ஆனால், என் அருகில் உட்கார்ந்திருந்த தோழியின் முகம் சென்ற விகாரம், இல்லை என்றது.


மேலும் பூரான் ஊறும் கதை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே போங்க

சமையலில் எண்ணெய் அதிகம் பயன்படுத்துகிறோம். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து, நான்கு நான்காகத் துண்டு போட்டு, உலோக வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, மஞ்சள் பொடி, காரப்பொடி போட்டு, வாசனையாக வதக்கி, இறக்கி முடித்ததும், சாப்பிடுபவருக்குச் சுகமாக இருக்கும். அந்த வாணலியைத் தேய்ப்பவருக்கு?


எப்படி பாத்திரம் தேய்ப்பது என்று தெரிந்துக்கொள்ள இங்கே செல்லவும்


அறிவியல் ஒரு சமுத்திரம். அறிவியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஓரளவிற்கு புரிந்தவற்றை உங்களுடன் தமிழில் பகிர்ந்துகொள்ளும் முயற்சி இது என்று சொல்லுகிறார்கள்.

இதில் (தற்போது) எழுதுபவர்கள் - வெங்கடரமணன், அருண் நரசிம்மன், பத்ரி, அருள்செல்வன். இட்லிவடை அறிவியல் பற்றி எழுதினால் போடுவார்களா என்று தெரியலை.

மாட்டுப்பொங்கலன்று சோ - ஜெ. சந்திப்பு போன்ற செய்திகளுக்கு இட்லிவடை இருக்கவே இருக்கு, இது மாதிரி அறிவியல் சம்பந்தமான விஷயத்துக்கு தான் தளங்கள் கம்மி. அடிக்கடி போய் பாருங்கபிகு: டைட்டிலில் ‘றி’யை விட்டுவிட்டீர்களே என்று இந்தியன் படத்தில் கவுண்டமணி போல் பின்னூட்டம் இட வேண்டாம். அறிவியல் என்று தலைப்பு வைக்க தான் ஆசை ஆனால் இட்லிவடை போல் ஏதாவது சாப்பாட்டு டைட்டில் வைத்தால் தான் கூட்டம் வருகிறது என்ன செய்ய :-)


2 Comments:

Anonymous said...

Good post!!!

Atlast, Idlyvadai is coming back to original form..

டன்மானடமிழன் said...

இந்திய ஓபாமா நெற்றியில் logoவை பார்த்தால்
maths symbol போல் இருக்கிறது

இந்திய ஓபாமா நெற்றியில்
இன்னொரு ஓயிட் லைன் போட்டால்தான்
பட்டை நாமம் கிடைக்கும்