பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 16, 2009

ஊழல்கள் பலவிதம்

நேற்று பத்ரியுடன் சாட் செய்துக்கொண்டிருந்த போது ஊழல் பற்றி சில கருத்துக்களை சொன்னார். சாட் முடிவில் இதையே ஒரு பதிவாக எழுதி அனுப்புங்கள் என்ற சொன்ன பத்தாவது நிமிஷம் அனுப்பினார். அவருக்கு என் நன்றி.

கட்டுரை கீழே...

ஊழல்கள் பலவிதம் - பத்ரி.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள்: இவை அனைத்தும் பெரும்பாலும் 1960-களின் கடைசியில் தொடங்கின. தமிழகத்தைப் பொருத்தமட்டில் நிச்சயமாக தி.மு.க.வின் கைங்கரியமாக இதனைப் பார்க்கலாம். அதன்பின், இன்று, ஊழல் செய்யாத கட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். கம்யூனிஸ்டுகள் நீங்கலாக என்று தோன்றுகிறது. அடிப்படை நோக்கம், கட்சிக்குப் பணம் தேவை, தேர்தலுக்குப் பணம் தேவை என்பதிலிருந்து ஆரம்பித்து, சொந்த வாழ்க்கை நடத்தவே பணம் தேவை என்ற அளவுக்குப் போய்விட்டது. கட்சியில் முக்கியஸ்தர்கள் ஆகும் பலரும் வெகு சில நாள்களுக்குள்ளாகவே கார், தோட்ட பங்களா, ஆங்காங்கே நிலபுலம், நாலைந்து கம்பெனிகள், கடைகள், கையிலும் கழுத்திலும் தங்க ஆபரணங்கள் என்று ‘செட்டில்’ ஆவது எப்படி? ஊழல், ஊழல், ஊழல் மட்டுமே.

எந்தெந்த வகையில் எல்லாம் இந்த ஊழல் நடக்கிறது, திருடப்படுவது எத்தனை கோடிகள் என்பது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான மெடீரியல்.

இதற்கு, அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அதற்கு அடியில் இருப்பவர்கள் என்று பெரும் கூட்டம் துணைபோகிறது. கூடவே அவர்களுக்கு ‘புல்லுக்கு ஆங்கே பொசியுமாம்’ என்பதுபோல பொசியப்படுகிறது.

தொழில்துறை ஊழல்: அரசியல் ஊழலைச் செய்வது படிக்காத மேதைகள் என்றால், தொழில்துறை ஊழல், மெத்தப் படித்த மேதாவிகள் செய்வது. சமீபத்திய உதாரணம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். அரசியல்வாதிகள் ஊழல், அப்பட்டமானது. “அட போய்யா, அப்படித்தான். இல்லாட்டி என் <கட்சி, சாதி, இனம்> எப்படி முன்னுக்கு வரது?” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் செய்தாலும், தான் செய்வது சரியல்ல என்ற எண்ணமும், மரியோ புஸோவின் மைக்கேல் கார்லியோன் போல, திருடிய பணத்தை ‘லெஜிட்’ செய்ய முற்படுவதும் அரசியல்வாதிகளிடம் உண்டு.

ஆனால் தொழில்துறை ஊழல், அப்படியல்ல. முதலில் ஊழல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே பிரெயின்வாஷ் செய்துகொள்கிறார்கள். தாங்கள் செய்வது ஒன்றும் தவறல்ல; ஒட்டுமொத்தமாகச் சரியே என்று தங்களைத் தாங்களே மந்திரித்துக்கொண்டு, முற்றிலும் அதில் மூழ்கியபின், தெளிவான, அழகான முறையை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதில் மேடாஃப் செய்த பான்ஸி வகை திருட்டும் அடக்கம்; சஞ்சய் அகர்வால், ராமலிங்க ராஜு வகை கிரியேட்டிவ் அக்கவுண்டிங்கும் அடக்கம்; ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பாரீக் வகை பங்க்குச்சந்தை தில்லுமுல்லும் அடக்கம்.

மத ஊழல்: சாமியார்கள் தங்களுடைய சொந்த பிராண்ட் திருட்டில் கைதேர்ந்துள்ளனர். இது மேலே சொன்ன இரண்டிலிருந்தும் வேறுபடுகிறது. முதலிரண்டில் பொதுமக்களால் இது தவறு, தடுத்து நிறுத்தவேண்டியது என்ற எண்ணம் மேலோங்குகிறது. ஆனால் மத ஊழலில் மேலோட்டமாகப் பார்த்தால் இந்த எண்ணமே தோன்றாது. “அவர்கிட்ட அருள் கொட்டிக் கிடக்கு; அதனால பணமும் குவியுது” என்றுதான் மக்கள் சொல்வார்கள். “அதுவும், சாமியார்க்கு எதுக்கு பணம்? அவர் ஒரு பைசா தொடறதில்ல. எல்லாத்தையும் அப்படியே மக்களுக்கே நல்லது செய்யக் கொடுத்துடராறு” என்று வெறு சான்றிதழ் தருகிறார்கள். ஆனால் சாமியார்கள் நில பேரத்திலிருந்து, கட்டப் பஞ்சாயத்திலிருந்து, ஹவாலா, கொலை என்று நீக்கமற நிறைந்துள்ளனர்.

பல நேரங்களில் அரசியல்வாதிகளே வெட்கிப்போகும்படி சாமியார்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.

இந்த மூவருமே ‘ரூம் போட்டு யோசித்தே’ திருவிளையாடல் செய்கிறார்கள் என்றாலும், இதில் அதிகமாக மூளையையும், குறைவாக உடல் வலுவையும் உபயோகிக்கும் தொழில்துறை ஊழலுக்கு ‘பிராமண ஊழல்’ என்று பெயரிடுகிறேன். அரசியல்வாதிகள் ஊழலுக்கு பெரும்பாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் அதற்கு ‘சத்திரிய ஊழல்’ என்று பெயர் வைக்கலாம். சாமியார்கள் திறமையான ‘தொழில் முனைவோராக’ தமது ஊழலை நிறுவியிருப்பதால் அது ‘வைசிய ஊழல்’ ஆகிறது.

நாம் அனைவரும் சில்லறையாகச் செய்யும் ஊழல், தெருவோரத்தில் டிராஃபிக் கான்ஸ்டபிள் வாங்கும் 50 ரூபாய், இன்கம் டாக்ஸில் ஏமாற்றுவது, பிளாக்கில் பணம் கொடுத்து ஸ்டாம்ப் டியூட்டியைக் குறைப்பது முதற்கொண்டு, வரிசையில் நிற்காமல் அடுத்தவனுக்கு வேட்டுவைப்பது போன்றவற்றை, வேறு வழியின்றி ‘சூத்திர ஊழல்’ என்று பெயரிடுகிறேன்.

(கொஞ்சம் செயற்கையாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். கஷ்டம்தான்; ஆனால் வேறு வழியின்றி, இந்து தத்துவ மரபுக்குள் வரவேண்டியுள்ளதே!)

வாழ்க வளமுடன்!

- பத்ரி
(இட்லிவடை கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டது)

30 Comments:

நாகு (Nagu) said...

நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு முழுநேர தொழில் அரசியல்தான் - அப்படி வேறு தொழில் இருந்தாலும், அரசியலில் குதிக்கும்போது அது முழுநேரத் தொழிலாகிவிடுகிறது. இது ஒரு காரணமாக இருக்கலாம் நம் ஊர் ஊழலுக்கு.

Hari said...

எரிச்சலை உண்டாக்கும் கட்டுரை(?!!). ஊழலின் இந்த ஜாதி பாகுபாட்டிலும் இடஒதுக்கீடு குறித்து பத்ரி பேசமாட்டார் என்று நம்புகிறேன்

Anonymous said...

I dont think placing kanchi seer's photograph is appropriate. It is as though idly-vadai has decided he is already guilty. With the government charge sheeting 50 persons for the murder and submitting 5,000 documents, as time goes by it seems like a foisted case (imagine 50 people knowing about an impending murder)... Removing his picture would be appropriate. But, of course, tamil ratham of idli-vadai will not bow down :)

Anonymous said...

Rajaji once remarked that all the politicians who do not have a profession or trade for their livelihood can be booked under the charge of vagrancy. How appropriate it seems now.

ஷாஜி said...

நல்லா கீது பத்ரி சார்..

Anonymous said...

1. Tamil cinema will always show only "Hindu" god men whenever they want to show god men in poor light, you seem to have taken a leaf from this book.

2. Are we to assume that Mr. Badri gave you photo's to publish along with his article. If not, can you explain, if you care to, on what basis you published His photograph ?
Pls. take some time to read the Supreme Court judgement on His bail application. I quote one para. from it verbatim below.

Given this, may I request you to wait till the court comes up with a verdict on this case ?

quote:

7. Shri F.S. Nariman, learned senior counsel for the petitioner, has submitted that the specific case of the prosecution at the time of the hearing of the first bail application before the High Court was that a huge sum of money amounting to Rs.50 lakhs was withdrawn from an account of the Mutt maintained in ICICI Bank, Kanchipuram for being paid to the hirelings. The same stand was taken by the prosecution when the second bail application was heard by the High Court. In the two orders passed by the High Court by which the bail petitions were rejected, the plea of the State that the money was withdrawn from the account of the Mutt in ICICI Bank, Kanchipuram for payment to the hirelings is clearly mentioned. When the special leave petition was heard for admission on 17.12.2004, a detailed order was passed by this Court, wherein the State was directed to give particulars of the bank account wherefrom money is alleged to have been withdrawn by the petitioner for payment to the assailants and also to produce the copy of the account and the passbook, if any, seized by the investigating agency. However, in the statement in reply which has been filed in this Court by the State on 6.1.2005, a different stand is taken that an agreement had been entered into for sale of 50 acres of land belonging to Kanchi Janakalyan Trust to Bhargava Federation Pvt. Ltd. for Rs.5 crores, wherein an advance of Rs.50 lakhs in cash was received on 30.4.2004 and an endorsement regarding receipt of the said amount was made on the reverse side of the first page of the agreement. It was this money which was retained in cash by the petitioner all along from which payment was made to the hirelings after the conspiracy was hatched soon after the receipt of the alleged letter dated 30.8.2004 sent by the deceased which was described as "last warning". No documents of the account in ICICI bank have been produced in support of the plea which was twice taken by the prosecution before the High Court while opposing the prayer for bail made by the petitioner.

IdlyVadai said...

//Are we to assume that Mr. Badri gave you photo's to publish along with his article. //

பதிவு மட்டும் தான் பத்ரி. படங்கள் இட்லிவடை.

நாரத முனி said...

அடடே இதுல கூட வர்ணச்ரம தர்மமா!!!

Junkie said...

//கம்யூனிஸ்டுகள் நீங்கலாக என்று தோன்றுகிறது//

Shows his understanding of oozhal. Could be named as Pethal.

Blogs which are based on not even factual details is Panchama Oozal.

Anonymous said...

Idly Vadai: keep the 'nakkul' and 'hatred' away and take a honest look at Kanchi Seer's case. You should feel guilty of publishing his photograph here, if you call yourself an unbiased commentator. If you dont call yourself, they you can publish photographs of Sri Sri Ravishankar, Dayananda Saraswati, Kripunanda variar and all of us call just laugh. If you have intellectual integrity, put pedophiles such as popes, pastors and mullahs that continously rape the women and use money allocated for service to their personal needs. Come on, show us some integrity.

Itsdifferent said...

I am prepapring a single page declaration to call for a Bribe free April 2009. Will send out soon. The idea is to request each and every one to refuse to give or accept bribe in that whole month. I hope this will be a small step towards achieving a "corruption free" society soon.

Cinema Virumbi said...

இட்லிவடை / பத்ரி அவர்களே,

ஊழலை வர்ணாச்ரம முறைப்படி பாகுபாடு செய்ய முயன்றிருப்பது ரொம்ப contrived ஆக இருக்கிறது, குறிப்பாக, மத ஊழலை வைசிய ஊழல் என்பது. அப்படிப் பார்த்தால், எல்லா ஊழலுமே ஒரு நேர்மையற்ற வியாபாரம்தான்!

சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளிலேயே மத்தியில் ஊழல் லேசாகப் புகைய ஆரம்பித்து விட்டது. ஜீப் ஊழல், ஹரிதாஸ் முந்த்ரா, தர்ம தேஜா என்றெல்லாம் சொல்வார்களே, கேள்விப்பட்டதில்லையா ? மாநில அளவில் கொஞ்சம் லேட் ஆக ஆரம்பித்தது , அவ்வளவுதான்!

மற்ற பலரும் ஏற்கனவே சொன்னது போல் ஜெயேந்திரர் படத்தைப் போடுவதைத் தவிர்த்திருக்கலாம்; இப்போது கூட வாசகர் கருத்தை மதித்து நீங்கள் எடுத்து விடலாம்.

நன்றி!

சினிமா விரும்பி

Anonymous said...

ithulayum jathiya....thalai ezhuthu..

நவீன பாரதி said...

Off topic:
Don't miss Cho's speech on Annual Day to be telecast in Jaya TV: Saturday, 17th Jan at 11AM

Anonymous said...

சில பதிவுகளுக்கு முன்னால் , கேள்வி பதிலில் இ.வ. இஸ்லாமியரை தவறாக குறிப்பிட்டது, உடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதை டெலிட் செய்தது. பாராட்டத்தக்கது. ஆனால் இன்று பலர் எதிர்ப்பு தெரிவித்தும் கூட பெரியவர் படம் இன்னும் இருக்கிறது. இ.வடைக்கு முற்போக்குவாதி நடுநிலையாளர் என்ற பட்டங்கள் ஏதும் தேவைப்படுகிறதா ! ஊழல் பற்றிய பதிவில் அவர் படத்திற்கு என்ன வேலை. கற்பழிப்பு வழக்கில் கைதான பாதிரியார்கள், கன்னியாஸ்திரியை கொலை செய்த கேரளா பாதிரியார்கள் படம் எதையும் வெளிட இ.வ.க்கு தைரியம் இல்லையா ? இந்த மாதிரி பிழைப்பதற்கு....................................................................வேற தப்பா எதுவும் சொல்ல வரலை, விடுதலை மாதிரி கட்டுரை எழுதலாம் என்று சொல்லவந்தேன்!
விதியை நொந்தவன்

Anonymous said...

Bathri in karuthukal nandraka than irrukirathu, anal athai jathi in peyaral pirivu paduthi solvathu enaku sariyaga padavillai.

intha oozhalai niruthave mudiyatha? atharku enna than vazhi?
ennai porutha varai namathu arasial amaipu sattathil niraya ootaigal irrukirathu. avaikgal arasial vathikal matrum athikarikalin kaikalil irrupathal inum antha oottaikal adaika padavillai. makkalai muttal kalaga vaithukolvathil arasaial vathikalukum athikarikalukum ithu oru vasathiyaga irrukirathu...

thani manitha vazhkaiyil ozhukam illathavarkalal pothu vazhvil matum epadi ozhukathudan nadanthukolla mudiyum. ithu ellorukum porunthum

Sethu Raman said...

ஒரு வலைத்தளத்தின் பாபுலாரிட்டி
பின்னூட்டங்களின் அடிப்படையில்
தான்! இட்லிவடை தளம் அண்மையில்
தனது பிராபல்ய்த்தை இழந்து விட்டது
என்பது பின்னூட்டங்களின் நலிவிலேயே
நன்றாகத் தெரிந்தது! இந்த மாதிரி ஜாதி
அடிப்படையில் சர்கஸ் வேலை செய்தால்
மறுபடி பிரபலமடையலாம் என்பது
இட்லிவடையின் ஆசை!!

IdlyVadai said...

மக்களே படத்தை எடுத்துவிட்டேன். ஆனால் என் கருத்து இது தான்.

சன்யாசம் வாங்குவது என்பது எல்லா ஆசைகளிலிருந்து விடுபடுவது என்று பொருள். தன்னிடம் கோவணம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லவே சாமியார்கள் தண்டம் வைத்து அதில் ஒரு துணியை வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் அந்த குச்சியில் துணி உலர்த்தி அடுத்த வேளைக்கு கட்டிக்கொள்ள வேண்டும் இது தான் சன்யாச தர்மம். ஆனால் இன்று மடத்தில் இருக்கும் சொத்துக்கள் எவ்வளவு ? பணம் என்று வந்துவிட்டாலே நிர்வாகம் என்று வரும். மடத்தை நிர்வாகம் செய்வது யார் ? பின்பு எங்கே சன்யாசம் ?

பணம், பெண், பதவி - இதன் மேல் ஆசை வந்தால் நிச்சயம் அங்கே சின்னதாக ஒரு கொலை நடக்கும் என்பது உலக நியதி.

நன்றி,
இட்லிவடை

Anonymous said...

ஊழல்,லஞ்சம் பிற நாடுகளில் இருக்கிறதே.அதற்கெல்லாம் எந்த மத தர்ம பெயர்களை வைப்பீர்கள்.சரக்கில்லாத கட்டுரை.

R.Gopi said...

Nam Annan Manjal Kavignarin VIGYANA POORVA OOZHAL patri eadhavadhu thagaval irundhaal theriyapaduthavum.

Anonymous said...

Pappan solren. Jeyandrar padam ange erunddhu 100% sari...Yaar senjalum thappu thappu than..Papanum kevalama eruppan...Dalitum kevalama eruppan... Pappan thalaivargalum kavalama eruppargal..Dalit thalaivargalum kavalama eruppargal...

Panam and power endha jadi karan(manidhan) kitta sendalum avan porukki ya agidaran sila exceptions kandippa undu ella jathileyum...

Ellarum porukkinga than ellarum porambokkunga than...Above all Jeyandrar thanai oru Saint nnu sollikittu senja kariyam pacha porukki thanam...If law is in my hands then i would have ordered to shoot him in the streets without any dress and put his body in a street side dustbin...

வண்ணத்துபூச்சியார் said...

பத்ரி ஒரு "இளைய சுஜாதா"..

வாழ்த்துக்கள்

Anonymous said...

//Pappan thalaivargalum kavalama eruppargal..Dalit thalaivargalum kavalama eruppargal...//

While you can address freely Pappan fair quote would be use native word for Dalit. Good that law is not in the hands of lunatics like you.

Anonymous said...

சுஜாதவை இந்த அளவுக்கு வேறு யாரும் கேலி செய்ததில்லை. பூச்சியார் புத்தகம் ஏதும் எழுதுகிற ஐடியாவில இருக்கீகளா ?-
சிவசங்கர சுப்பு.

Anonymous said...

//தன்னிடம் கோவணம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்லவே சாமியார்கள் தண்டம்//

This is like Badri's understanding of oozhal for communists, Idlyvadai's understanding of Sanyasam.

Appo, Pen samiyani's will display what?

Fact of the matter, so called sensational stories of Nakkeeran and Sun tv were not even in the charge sheet just to prove it who is guilty in the Kanchi seer's case.

Anonymous said...

Yow idly vadai - if there is money there is no sanyasam??? Then you must write to all christian priests that call them saints. have you been to church? do you know how they pass around a hat to collect money? do you know how they make poeple guilty and collect donations??? Half knowledge is dangerous. If you apply your 'saint' rule for one community, apply for all. Mullah's marry women hald their age. What will you tell for that!!! You have already concluded there was sex in the mutt! The case is still in court. 5,000 pages could not prove shit and now you seem to know what happened inside... Nice.

RAMASUBRAMANIA SHARMA said...

WHY SUCH TYPE OF ARTICLES ARE BEING WRITTEN ABOUT THE SO CALLED CORRUPTION, WHICH IS HAPPENING EVERY DAY, IN ALL GOVT.,BANK PUBLIC SECTOR, PRIVATE INSTITUTIONS...etc...WHAT IS THE USE OF SEGRECATING THIS CORUPTION, COMMUNITY WISE. IT IS COMMON TO ALL IRERESPECTIVE OF CASTE OR CREED...LIKE "THIRU INDIAN THATHA" SAID..."OUR NATIONAL INTEGRETITY IS SHOWN IN CORUPPTION AND BRIBE ONLY....IT BECOMES OUR PART AND PARCEL OF OUR LIFE...SOME STRINGENT MEASURES HAS TO BE TAKEN BY THE GOVT.(WHICH WILL TAKE AT LEAST ANOTHER 10 YEARS)...OTHERWISE NO SOLUTION FOR THIS...WRITING SUCH ARTICLE, DIVIDING IT BY GIVING NAMES TO THE RESPECTIVE COMMUNITY....WILL UNNECESSARILY CREATE "CHAOS" AMONG US...PL TRY TO AVOID THIS TYPE OF ARTICLE POSTING IN YOUR BLOG. wHAT EVER JUSTIFICATION THE AUTHOR GIVES, IT IS ABSURD...SORRY ITS MY OPINION ONLY...DO NOT HAVE ANY INTENTION TO CRITICISE OTHERS ARTICLE.

Anonymous said...

What the shit is he talking about Brahmana ozhal

RAMASUBRAMANIA SHARMA said...

Summa chavadalaga pathivu mattum pottal pathathu...ithu mathiri sensitive matters poduvatharkku munbe ehtirpugal varum endu therinthu kondu prepared aka irukka vendum...comments vanthavudan escape aki odei viduvathu ...proves that both of the so called authors dosen't have any knowledge over the comments and just like that they have posted this article(might be copied from some other forum)...A tru soldier should be in the war front to fight with enemies...and here conciously I am telling, I do not see any body...irespective of their comments towards all communities...It is absurd....Normally this form is meant for discussing and sharing some useful information, instead of creating chaos among our brothers ansd sisters...please keep it in mind and post articles in future...After a serious thnking only...I am posting this comments...it is upto the authors to take it or leave it...

RAMASUBRAMANIA SHARMA said...

y.p