பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 14, 2009

புதிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !


பொங்கல் பற்றிய குறிப்புகள் கீழே...

பொங்கல் சில குறிப்புக்கள்:

பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

பானை எந்த பக்கமாக இருக்க வேண்டும்: கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, கோலமிட்ட அடுப்பின் மீது பானையை வைக்க வேண்டும்.

எவ்வளவு பானை வேண்டும்: வெண் பொங்கலுக்கென்று ஒரு பானையும், சர்க்கரைப் பொங்கலுக்கு என்று மற்றொரு பானையும்; ஆக இரண்டு பானையில் பொங்கல் வைக்க வேண்டும்.

ஒற்றைப்படை காய்கறி கூட்டு:

வெண் பொங்கலுக்கு கூட்டு காய்கள் வைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

இந்த கூட்டுக்காய் சமைக்கும் போது கிடைக்கும் காய்கறிகளை ஒற்றைப்படை வரிசையில் பயன்படுத்துவது நல்லது.

கத்தரிக்காய், வாழைக்காய், பரங்கிக்காய், சுரைக்காய், மொச்சைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொத்தவரங்காய் போன்ற காய்கறி வகைகளில் 9, 11, 13 என்ற எண்ணிக்கையில் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைக்க வேண்டும். இதற்கு இணையாக பலாக்காய் பயன்படுத்தி கூட்டு ஒன்றும் வைக்க வேண்டும். வெண் பொங்கலுடன் இந்த பல காய்கள் மற்றும் பலாக்காய் கூட்டு வைத்து, பருப்பு மசித்து, நெய் ஊற்றி படைக்க வேண்டும்.
அப்பறம் டாக்டரிடம் போக வேண்டும்.


நாளை மாட்டுப் பொங்கல்:
விஜயகாந்த் முதல்வரான பின் வீட்டுக்கு ஒரு இலவச மாடு வழங்குவேன் என்று கூறியுள்ளார், அது வரை காத்திருக்கவும்.


10 Comments:

Hariharan # 03985177737685368452 said...

என்னது தமிழகத்தில் பொங்கல் பண்டிகை புதிய தமிழ்ப் புத்தாண்டா??

மைனாரிட்டி கழக அரசு அறிவிப்ப்பெல்லாம் சர்ச்கிட்ட எலெக்சனுக்கு கலெக்சன் செய்து வாங்கின காசுக்கு மஞ்சள்துண்டு செய்கிற அல்லக்கை வேலை!

அடுத்த எலெக்சனில் 2011ல் மைனாரிட்டி கழகம் ஆட்சியில் வந்தா தமிழ்ப்புத்தாண்டு டிசம்பர் 25 என்று அறிவிப்பு வரும். அப்படியே கிறிஸ்து ஜெயந்தியை கிருஷ்ண ஜெயந்தியாக்கி காசு பார்த்துவிடலாம்!

பகுத்தறிவுன்னு பேசினா ஆச்சா?? யோசிங்கய்யா!!

அக்மார்க் தமிழ்ப்புத்தாண்டு என்றைக்கும் சித்திரையில் தான்!

Anonymous said...

க்ரூப் ஃபோட்டோல ஒரு குட்டிப்பையன் காதப் பொத்திக்கிட்டு இருக்கான் பாத்தீங்களா?? தாத்தா எழுதின கவிதையைரும் படிச்சுக் காமிச்சாங்களா??? :-))

Raja said...

இந்த தமிழ் புத்தாண்டு நிரந்தரமில்லை. தி.மு.க ஆட்சி மாறியதும் இதுவும் மாறும்.

R.Gopi said...

நாளை மாட்டுப் பொங்கல்:
விஜயகாந்த் முதல்வரான பின் வீட்டுக்கு ஒரு இலவச மாடு வழங்குவேன் என்று கூறியுள்ளார், அது வரை காத்திருக்கவும்.
----------------------------------
This is idlyvadai special.

Find below my PONGAL VAAZHTHU.

பொங்கலோ பொங்கல்
நண்பர்கள் அனைவருக்கும் மனம்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மார்கழி முடிந்து பிறந்தது தை
மனதில் நாளும் நம்பிக்கை வை

புதிதாய் வாங்கிய பானை இங்கு
அதை சுற்றி கட்டிய மஞ்சள் கிழங்கு

சந்தையில் வாங்கிய அடிக்கரும்பு
அதனுடன் வாங்கிய பூவும் அரும்பு

மாவால் போடப்பட்ட நெளிக்கோலம்
அது காட்டியது கன்னியர்களின் கைஜாலம்

உமி களைந்து எடுத்த சம்பா அரிசி
அது நீரோடு நீராக ஒட்டி உரசி

அதனுடன் உடைத்து சேர்த்தது வெல்லம்
அதை பதமாய் சமைத்தது இல்லம்

மேக கூட்டம் களைந்து, வானத்தை பிளந்து
சூரிய கதிர்கள் பிரகாசம் காட்ட

அனைவரும் உரக்க கூவினோம் - பொங்கலோ பொங்கல்

சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய
நம் பூவுலகின் இருள் விலகியது.
அதுபோல் நம் வாழ்வின் இருள் விலக
இறைவனை வேண்டுவோம்

Valluvan said...

Watch his Grandson, he is expecting a cracker there..first need to teach him the technical difference between Pongal and Deepavali ;)...looks like no body in the tamil family has time ...

நல்லதந்தி said...

வாழ்த்துகள்! குமுதத்தின் டாப் டென்னில் முதல் இடம் பிடித்தமைக்கு!.அ..வாழ்க..ஆஅ ..வாழ்க! வாழ்க! கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்!(வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?. மென்மையாக வாழ்த்து சொன்னால் அழுத்தம் வரமாட்டேன் என்கிறதே!)

நல்லதந்தி said...

நான் நிஜமான தமிழ்ப்புத்தாண்டான எப்ரல் ஒண்ணுக்கே புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லிக்கிறேன்!

Anonymous said...

தகவல் சரியாகத்தான் இருக்கிறது. தலைப்பு ஏப்ரல் மாதம் வரவேண்டியது.

நாரத முனி said...

சாமீ எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்.. ஸ்டாலின் மனைவி பேரு சாந்தாவ இல்ல துர்காவா ?

ப்ரியா said...

manja paint matter padichchttu saththama sirichuttenga...
unga thalaiya neengale ipdi vaaruna epdi???