பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 12, 2009

ஜெயிக்கப் போவது யார்?

பெரியவங்க....
பதிவானவை- 1,38,191
தி.மு.க. -79,422
அ.தி.மு.க. -40,156
வித்தியாசம் - 39266


சின்னவங்க ...
தே.மு.தி.க. -13,136
ச.ம.க.-831.
வித்தியாசம் - 12305


சில நாட்கள் முன்பு அழகிரி கொடுத்த போட்டி:

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக அளவாக வாக்குகள் பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இதனால் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமோக வெற்றி பெறும்
திருமங்கலம் தொகுதியில் 968 பேர் தபால் ஓட்டுகள் போட தகுதியானவர்கள் அவர்களுக்கு தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்டு இருந்தன. அதில் 175 பேர் மட்டும் தபால் ஓட்டுகளை பெற்றுக்கொண்டதற்காக அத்தாட்சி சான்றிதழ் கிடைத்தது. மீதம் உள்ள 793 தபால் ஓட்டுகளும் ஆள் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. இதனால் தபால் ஓட்டுகள் ஒன்று கூட பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா (வெளியிட போகும்) அறிக்கை

இந்தத் தேர்தல் முடிவுகளில் எதிர்பாராதது ஒன்றும் இல்லை. பணத்தைத் தண்ணீராய் ஓடவிட்டு, வன்முறை அச்சுறுத்தல்களுக்கு வாக்காளர்களை ஆளாக்கி தேர்தல் கமிஷனைக் கைக்குள்ளே போட்டு, ஓட்டு இயந்திரங்களை மாற்றி எழுதி - வெற்றி பெறவில்லை, எம் எல் ஏ சீட்டை வாங்கியிருக்கிறார்கள். இந்த மாதக்கடைசிக்குள் இந்த மைனாரிட்டி ஆட்சி கவிழும், பொதுத் தேர்தல் வரும் - அப்போது எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள் இந்தக் குடும்பத்தினர்?

இட்லிவடை வாக்கெடுப்பு :-)


7 Comments:

Nilofer Anbarasu said...

Don't worry abt these crap partys, put a new post with the messgae "A.R Rehman won Golden Gloge award for Slumbog Millionair."

Just now announced

Nilofer Anbarasu said...

//வித்தியாசம் - 8600//
டக்குன்னு பார்த்தவுடன vijayakaanthனு நினச்சு கொஞ்சம் சந்தோசப்பட்டேன் :(

Anonymous said...

SHARATH KUMAR GOT THIS 800 VOTES FOR HIS 10 DAYS WORK. HE SHOULD WIND UP HIS PARTY. SIMILARLY MR RAJNI SHOULD NEVER ENTER TAMILNADU POLITICS. BETTER LEAVE TAMILS TO BE GOVERNED BY PEOPLE LIKE MK, STALIN, UDAYANIDHI AND SOME OTHER NIDHIS EVEN GOD CAN NOT SAVE TAMIL NADU. VERY SAD DAY FOR DEMOCRACY RAVI CHENNAI

Anonymous said...

தமிழக சிவசேனா 1000 க்கும் மேற்பட்ட வோட் பெற்றுள்ளது.

நீங்க கவனிக்க வில்லையா?

பி.ஜே.பி நின்றிருந்தால் கணிசமான வோட் வாங்கியிருக்கும்.

ஜெய் ! ஸ்ரீ ராம் !!!

Anonymous said...

Hats Off - Vijayakanth (DMDK) lost it's DEPOSITE in this Election..Keep it Up...

Guruprasad said...

So IDLYVADAI polled on everyone's behalf in இட்லிவடை வாக்கெடுப்பு :-)?
How else can one comprehend GapTEN VijayCANT to garner so much votes? ;-)

gopi said...

காத்திரு தம்பி அழகிரி! கட்டளை வரும். நானும் பேராசிரியரும் கலந்து பேசி, அந்த கட்டளை பிறப்பிக்கப்படும். அது நீ கழகத்தைக் காப்பாற்றுகின்ற கட்டளையாக அமையும். உன்னுடைய குணம் பார்த்து, வலிவு பார்த்து, நலம் பார்த்து, பலம் பார்த்து, நிச்சயமாக தர வேண்டிய நேரத்தில் நானும், பேராசிரியரும் கலந்து பேசி தீர்மானிப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.