பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 05, 2009

மின்சாரத்துக்கு அடித்த ஷாக்

இந்த வாரம் துக்ளக் கார்ட்டூன் இது


இதற்கு விடுதலை நாளிதழில் மின்சாரம் எழுதிய கட்டுரை கீழே...


"வீரமணி பல்லக்கில் சவாரி!" - மின்சாரம்

"ஒரு சுய விமர்சனம்!"
"நான் ஒரு குழப்பவாதி - அது என் பிறப்புரிமை" ("துக்ளக்" 1.2.1987) "வயிற்றுப் பிழைப்புக்காகவே எழுதுகிறேன்!" ("துக்ளக்" 24.10.2008) "என் பேச்சைக் கேட்டு உருப்பட்டவர்கள் யார்?" ("தீக்கதிர்" 8.3.2008) இப்படி தன்னிலை விளக்கமாக சொல்லிக் கொள்ளும் "சோ" ராமசாமி அய்யர்தான் - தமிழர்கள் பற்றியும் திராவிடப் பாரம்பரியம் பற்றியும், மானமிகு மாண்புமிகு கலைஞர் பற்றியும் விதண்டாவாதமாக பேசுகிறார் - எழுதுகிறார். "துக்ளக்"கை - காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள் சிந்திக்கட்டும்!

மானமிகு கலைஞர் அவர்களின்மீது பார்ப்பனர் களுக்கு ஏன் இந்த எரிமலைக் காய்ச்சல்? இவ்வார துக்ளக் இதழில் (7.1.2009) அட்டைப் படத்தைப் பார்த்தால் அமைதியின் சொரூபங்களுக்கும் ஆத்திரம் வெடிக்கும்.

86-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழ் நாட்டின் மூத்த தலைவரை, அய்ந்தாவது முறையாக முதல் அமைச்சராகி சாதனை படைத்த ஒரு சான் றோரை கடைகோடியிலிருந்து கடும் உழைப்பால் சிகரத்தை எட்டியுள்ள ஒரு சீர்திருத்தக்காரரை -நாகரிகம் சிறிதுமின்றி எச்சில்தனமாக ஏளனம் செய்வது கண்டு இனவுணர்வுள்ள எந்தத் தமிழனும் ஆத்திரப் படவே செய்வான். கேலிக்கும், கண்டனத்துக்கும் வசைபாடுவதற்கும் ஒரு எல்லை உண்டு.

சோனியா காந்தியை கலைஞர் ஆதரித்தால் அது பாத பூஜை சோவின் கணக்குப்படி. அதே சோ அத் வானியை ஆதரித்தால் அது என்ன பூஜையாம்?

கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் கருத்து மாறுபாடுகள் வரவே கூடாதா? கருத்து மாறுபாடுகளுக்கிடையேயும் கூட்டணி தொடர்ந்தால் அதற்குப் பார்ப்பான் பார்வையில் பா.ம.க. வக்கிர பரிகார சாந்தியாம்.

பா.ஜ.க.வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிடையே மோதல்கள் வந்தது கிடையாதா? பீகாரில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

அத்வானி - வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அந்தப் பகுதிக்குச் சென்றபோது எந்த மாநில அமைச் சரும் அவரைக் கண்டு கொள்ளவில்லையே அதற்காக அங்கே கூட்டணி முறிந்து போய்விடவில்லையே! சோவின் கணிப்புப்படி அந்த நிலைக்கு எந்த வக்கிர மாலையைச் சூட்டப் போகிறார்? இதுவரை ஏன் அது குறித்த தகவல்கள் இல்லை! கலைஞர் ஹிந்து மதத்தை விமர்சித்தால் அது மதத்துவேஷ சாமியாட்டமாம்.

லாலா லஜபதி ஒருமுறை தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களைப்பற்றி முகம் வீங்க மொத்தினார்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றார். சோ ராமசாமி அய்யர்களைப் பார்க்கும் பொழுது லாலாலஜபதியின் வாய்க்குச் சர்க்கரையைத்தான் கொட்ட வேண்டும்.

உண்மையிலேயே - துவேஷம் செய்பவர் யார்? சோ ராமசாமி - சவாலை ஏற்கத் தயாரா?

பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் என்றும் அவர்கள் சூத்திரர்கள் என்றும், அவர்கள் விபச்சாரி மக்கள் என்றும் இந்து மதம் கூறவில்லை என்று விவாதிக்கத் தயாரா? ஆண்டுக்கொரு முறை சோ பார்ப்பான் உட்பட ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பிப்பதன் பொருள் என்ன? பூணூல் அணிந்தபின் பார்ப்பான் இருபிறப்பாளன் என்று மார்தட்டுவதன் தாத்பரியம் என்ன?

தமிழர்களுக்கு நியாயமான தன்மான உணர்வு பீறிட்டுக் கிளம்பி, உயர்ஜாதி என்று அடையாளப் படுத்தும் பூணூலை அறுக்காத பொறுமையை சோ கூட்டம் பலகீனமாகக் கருது கிறதா? அச்சப்படாதீர்கள் - அப் படி அறுப்பதாகயிருந்தாலும் முன் கூட்டியே அறிவித்து விட்டுதான் அதனைச் செய் வோம்!

தமிழர்களை விபச்சாரி மக்கள் என்று கூறுவது துவேஷம் இல்லையாம்! இப் படிக் கூறும் ஒரு மதத்தை விமர்சித்தால் கலைஞர் துவேஷ சாமியாட்டம் ஆடு கிறாராம். 2009-லும் பார்ப் பனக் கொழுப்பின் உஷ்ணம் எத்தனை டிகிரியில் இருக் கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமிழக அரசின் சாதனை களை திராவிடர் கழகத் தலை வர் மானமிகு வீரமணி அவர் கள் பாராட்டினால் வீரமணி வாகன வீதி உலாவாம்.

தமிழர்களுக்காகப் பாடு படுபவர்களைத் தோளில் தூக்கி வைத்து அடையாளம் காட்டத் தானே திராவிடர் கழகம் இருக்கிறது! சோ அய்யர்வாள் எந்த அர்த்தத் தில் எழுதியிருந்தாலும் வீர மணி பல்லக்கில் கலைஞர் அவர்கள் உலா வருகிறார் என்று துக்ளக்கில் எழுதியி ருப்பது தமிழர்களுக்கு அடை யாளம் காட்டப் பயன்படக் கூடியதுதான்.

அக்கிரகாரக் கும்பலுக்கு கலைஞர் அவர்கள்மீது ஏன் அலைபுரளும் ஆத்திரம் -கட்டுக்கடங்காக் கோபம்?

பார்ப்பனர்களின் கூடார மாக இருந்த, சுரண்டல் வளை யாக இருந்த கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் தாழ்த்தப்பட்ட வர் உள்பட அனைத்துப் பிரிவினரும் அர்ச்சராகலாம் என்ற சட்டத்தை அவர்தானே நிறைவேற்றினார்!

தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று இருந்த லும் என்பதை அவர்தானே தூக்கி எறியச் செய்திருக் கிறார்?

பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கத்தின் சின்னமாக இருந்த சமஸ்கிருதப் பெயர் களைக் கொண்ட ஆண்டுக் கணக்கைக் தூக்கி எறிந்து - தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த மனிதர் இந்தக் கலைஞர் தானே! ஆரியத்தின் அடி மடியில் கை வைத்து விட்டால் ஆத்திரம் கொப் பளித்துக் கிளம்பாதா! நாச மாகப் போறவன் என்று நாடு மாறிக் கூட்டம் மண்ணை அள்ளித் தூற்றாதா? அதன் அடையாளம்தான் துக்ளக் அட்டைப்படம்.

சிதம்பரம் நடராசன் கோயி லிலே தேவாரம், திருவாசகம் பாடிட அட்டியில்லை என்று கூறப்பட்டு விட்டதால் அய்யர் எழுதுகிறார் பாருங்கள்:

ஒரு கோயிலின் வழி பாட்டு முறைகளில் தலையிட அறநிலையத்துறைக்கோ அதன் மூலம் அரசுக்கோ அதிகாரம் இருக்கிறதா? தலையிடலாம் என்றால் எதில், எந்த அளவில்? இந்தக் கேள்வி கள் - இந்த விவகாரத்தில் அடங்கியுள்ள விஷயம்

(துக்ளக் தலையங்கம் 19.3.2008)

புரிகிறதா பூணூல் கோத்தி ரத்தின் பூகம்ப எரிச்சலுக்கான காரணம்?

கோயில் விவகாரத்தில் இதுவரை அரசோ, இந்து அறநிலையத்துறையோ தலையிட்டது கிடையாதா? கோயிலுக்குள் தாழ்த்தப்பட் டவர்கள் நுழைந்தார்களே! அது எப்படி வந்தது? அரசோ, அறநிலையத்துறையோ தலையிட்டதால்தானே! கோயிலில் குறிப்பிட்ட ஜாதிப் பெண்களைப் பொட்டுக் கட்டிவிடும் வழக்கம் இருந் ததே - அது ஒழிந்தது அரசு தலையிடாமலா?

சிதம்பரம் நடராசன் கோயில் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடு வது குறித்து அறநிலையத் துறை தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததும் நீதி மன்றம் தானே! இது கூடத் தெரியாமல் பேனா பிடிக் கிறாரே இந்த அதிமேதாவி!

தமிழர்கள்மீது இந்தப் பார்ப்பனர்களுக்கு வாழையடி வாழையாக இருந்து வரும் ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் இப்படி சேற்றை வாரியி ரைப்பது?

அதே நேரத்தில் கொலைக் குற்றவாளியாக ஜெயிலுக்கும் பெயிலுக்குமாகத் திரிந்து கொண்டு அலைகிறாரே, காஞ்சி புரம் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ் வதி என்பவர் - கேடு கெட்ட நிலைக்கு அவர் ஆளான நிலை யிலும்கூட அவர்மீது ஒரு துரும்பைத் தூக்கிப் போடு கிறதா இந்த சோ கூட்டம்?

இந்தக் கேவலமான நிலைக்கு அந்தப் பேர் வழி ஆளான பிறகும்கூட பெரி யவாள் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லை அவர்கள் உச்சரிப்பதில்லையே!

கொலைக் குற்றம் மட்டுமா? இன்னும் எவ்வளவு எவ்வளவு அசிங்கமான, அரு வருக்கத்தக்க குற்றச்சாற்றுகள் அந்த ஆசாமிமீது!

ஏதோ அபாண்டமாக எதையும் நாம் கற்பித்துக் கூறவில்லையே! தினகரன் ஏட்டில் (6.12.2004) வெளிவந்த தகவல்கள்தான் அவை!

கொலை வழக்கை விசா ரித்த போலீசார், சங்கரமடத் தில் நள்ளிரவு நேரங்களில் என்ன சமாச்சாரங்கள் நடந் தன என்று அலச ஆரம்பித்த வுடன், புற்றீசல்போல பல அந்தரங்க விஷயங்கள் கிளம்பி வரத் தொடங்கி உள்ளன. தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் பாலியல் புகாரை ஜெயேந்திரர் மீது தூக்கிப் போட்டார். ஜெயேந் திரர் தனது அறையில் என்னை ப லாத்காரம் செய்ய முயன்று கட்டிப் பிடித்தார். நான் தப்பி வந்து விட்டேன் என்று அனுராதா ரமணன் கூறினார்.

அதன் பிறகு நடிகைகள் ஸ்ரீவித்யா, சுகன்யா, சொர்ண மால்யா ஆகியோரின் அடிக் கடி சங்கரமடத்துக்கு போய் வந்த விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. அவர்களிட மும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரன், அவருடைய தம்பி ரகு ஆகியோர் பற்றியும் கசமுசா பேச்சுக்கள் அடி பட்டுக் கொண்டு இருக் கின்றன. கொலை செய்யப் பட்ட சங்கரராமன் தான் எழுதிய மொட்டை பெட்டி ஷன்களில் சங்கரமடம் சல் லாபக் கூடம் ஆகிவிட்டது. அந்தப்புரம் போல அதைப் பீடாதிபதிகள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று பச்சையாகவே குறிப் பிட்டு இருக்கிறார். தற்போது விசாரணை மேற்கொண்டு இருக்கும் போலீஸ் அதிகாரி கள் அந்தக் கோணத்திலும் விசாரித்துக் கொண்டிருக் கிறார்கள்.

இந்த நிலையில் ஜெயேந் திரர் ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததாக புதிய புகார் ஒன்று அதிர்ச்சி தரும் வகையில் கிளம்பியிருக் கிறது. இந்தப் புகாரை நடிகையின் சினேகதி ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய தோழி அபூர்வ ராகங்கள் படத்தில் துணை நடிகையாக நடித்த வள். அவருடைய மகனுக்கு காஞ்சி மடம் நடத்துகிற கல்லூரியில் சீட் கேட்டு ஜெயேந்திரரிடம் என் தோழி சென்றாள். 35 வயதிலும் அவள் ரொம்ப அழகாக இருப்பாள். இரண்டு முறை அப்புறம் பார்க்கலாம் என்று ஜெயேந்திரர் சொல்லி அனுப்பி விட்டார். அடுத்த முறை சென்றபோது ஜெயேந் திரர், நீ என்கூட இருந்தா உன் பையனுக்குச் சீட் தரு வேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைதானே தொலை கிறது என்று அவள் சம் மதித்து இருக்கிறாள். இதை யடுத்து அவளுடைய மகனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு அடிக்கடி ஜெயேந்திரரி டமிருந்து டெலிபோனில் தொல்லை வந்திருக்கிறது. உன்னை மறக்க முடிய வில்லை. வந்துட்டு சீக்கிரம் போய்விடலாம். உன் பையன் படிப்பை மனத்தில் வைத்து என்னிடம் வா என்று அவ்வப் போது அழைத்து இருக்கிறார். அவர் கூப்பிட்ட போதெல் லாம் போக வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டு இருக் கிறாள் அந்தப் பெண். அத னால் மனநிலை பாதிக்கப் பட்டாள்; 4 வருடங்களுக்கு முன்பு இந்த உலகத்தை விட்டே போய் விட்டாள் - இவ்வாறு அந்த நடிகையின் தோழி தெரிவித்து இருக்கிறார்

("தினகரன்" 6.12.2004)

இந்த ஒழுக்கம் கெட்ட மனிதரைப்பற்றி விமர்சிக்க மனம் வரவில்லை இந்த அக் கிரகாரவாசிக்கு விமர்சிக்கா விட்டாலும் பரவாயில்லை. இந்த மனிதர் பேட்டி கொடுக் கிறார். சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று

("இந்தியா டுடே" - 9.2.2005).

கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் காமக் குரோதக் கொடிய பேர் வழியாக இருந்தாலும் ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப்பானை விட்டுக் கொடுப்பதில்லை என்பதை இதன் மூலம் தமிழர்கள் உணர வேண்டும் என்பதே திராவிடர் கழகத் தின் எதிர்பார்ப்பு.

திமுக ஆட்சிபற்றி எந்த அளவுக்குக் கண் மூடித் தனமான எதிர்ப்புத் தெரி யுமா? இதோ துக்ளக்கில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்.

கேள்வி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வைப் போலவே மாநில அரசு ஊழியர்களின் சம்பள மும் உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித் திருப்பதுபற்றி?

பதில்: அவர்கள் கேட்கா மலேயே முதல்வர் இதைச் செய்திருக்கிறார். பொருளா தாரப் பொறுப்பின்மை என்பதன் உச்சக் கட்டம் இது.

("துக்ளக்" 3.9.2008 பக்கம் 25)

மத்திய அரசுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு முதல் அமைச்சர் ஊதியம் கொடுக்கிறார் என்றால், அது வும் ஊழியர்கள் கேட்காம லேயே கொடுக்கிறார் என் றால் பாராட்டுதலுக்குரிய அந்தப் பெரு நிலையை சோ பார்ப்பனர் தலைகீழாக புரட் டிச் சொல்லுகிறார் என்றால் அதற்குப் பெயர்தான் துவே ஷம் என்பது. தமிழர்கள் நலன் செய்தாலும் அதனைக் கெடு தலையாகத் திரிப்பது என்பது திரிநூலார்களோடு உடன் பிறந்த ஜீவ சுபாவமாகும்.

அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் (ராஜாஜி) 1953-இல் ஆட்சிக்கு வந்தபோது கொண்டு வந்தார்.

தந்தை பெரியார் கிளர்ந்து எழுந்தநிலையில், தமிழகமே ஆர்ப்பரித்து எழுந்தது - ஆச்சாரியாரே வெளியேறு என்ற அரிய குரல் எங்கும் எழுந்தது. அதன் விளைவாக ஆச்சாரியார் - ஆட்சிப் பீடம் விட்டு விலகி ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு 1988-இல் சோ ராமசாமி எழுதுகிறார்: ஆச்சாரியார் கொண்டு வந்தது அருமை யான திட்டமாம் அதனைத் திரித்துக் கூறி ஆச்சாரியாரை விரட்டி விட்டார்கள் என்று எழுதுகிறார் என்றால் ("துக்ளக்" 15.7.1988) அக்கிர காரத்து நஞ்சு அப்படியே நீர்த்துப் போகாமல் காலம் காலமாக வழிந்து ஓடிக் கொண்டு இருக்கிறது என்று தானே பொருள்!

தமிழர்கள் ஆட்சி என்றால் அந்த ஆட்சியின்மீது அவ தூறுகளை அள்ளி வீசுவது என்பது அவாளின் பரம்பரைக் குணம். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று புரளியைக் கிளப்புவது அவாளின் புத்தி.

அதே நேரத்தில் குஜ ராத்தில் என்ன நடந்தது? நரேந்திர மோடி தலைமையி லான பா.ஜ.க. ஆட்சியின் பூர்ண ஒத்துழைப்போடு முசுலிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அரசு புள்ளி விவரப்படியே 2000 பேர்கள் கொல்லப்பட்டனர். இதனை மனதிற் கொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல் லுவேன் என்று பிரதமராக விருந்த வாஜ்பேயியே மனம் குமுறினார்.

இந்த யோக்கியதையில் நரேந்திர மோடிதான் இந்தி யாவிலேயே சிறந்த முதல் அமைச்சர் என்றும், இந்தி யாவில் பிரதமராக ஆக வேண்டியவர் என்றும் கை கூசாமல் சோ வால் எழுத முடிகிறது என்றால், இதை விட அறிவு நாணயமற்றதனம் வேறு ஒன்று இருக்க முடி யுமா? 2000 பேர்கள் கொல் லப்படுகிறார்கள் ஒரு ஆட் சியில் என்றால், அந்த ஆட் சியின் சட்டம் ஒழுங்கு பாது காப்பு எந்த ரகத்தைச் சேர்ந் தது? சோ கூட்டத்துக்கே வெளிச்சம்!

சிறுபான்மையினர்மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல் தொடுத்தால் சோ பார் வையில் அதுவன்முறையல்ல! மாறாக தங்கள் மக்களைக் காப்பாற்ற விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினால். அய்யயோ, பயங்கரவாதம், தீவிரவாதம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் பாசாங் குத்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் அரசப் பயங்கரவாதமாக நடை பெற்ற வன்முறைகள், பாலியல் வன்முறைகள் பற்றி கலவ ரங்கள் முடிந்தபின் டெஹல்கா ஊடகம் வீடியோ எடுத்து விளக்கமாக உண்மை நிலைமையை அம்பலப் படுத்தியுள்ளது.

அதுபற்றி சோ ராமசாமி என்ன சொல்லுகிறார்?

டெஹல்கா வெளியிட்ட டேப்பின் காட்சிகளில் வருகிற வர்கள் எல்லாம் நான் கற் பழித்தேன் நான் இத்தனைப் பேரைக்கொலை செய்தேன் என்கிறார்கள். இதையெல் லாம் எவனாவது கேமிராமுன் சொல்வானா? என்று புத்திசாலித்தனமான கேள்வி என்பதுபோல பேசுகிறாரே!

கேமிரா முன் சொல்லப் பட்டவைகள்தானே டேப்பாக வெளியிடப்பட் டுள்ளது. டேப் போலியானது பொய்யானது என்று இது வரை நிரூபிக்கப்பட்டுள்ளதா? அப்படி பொய்யாகத் தயாரிக் கப்பட்டு இருந்தால் நரேந் திரமோடி சும்மாவிருந் திருப்பாரா?

நான்தான் கற்பழித்தேன் கொலை செய்தேன் என்று சொல்லுகிறார்கள் என்றால் நீரோ மன்னன் நரேந்திர மோடி ஆட்சியில் (இப் பட்டம் உச்சநீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டதாகும்!) நம்மை என்ன செய்ய முடியும் என்ற திமிரில் தின வெட்டில் அவர்களால் கூற முடிந் திருக்கிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மானமிகு கலைஞர் அவர்கள் யார்மீது சவாரி செய்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இவர் யார்மீது சவாரி செய்கிறார் அல்லது இவர்மீது யார் சவாரி செய் கிறார்கள் என்பது தெரியாதா?

அரசியல் புரோக்கர் வேலை என்பதுதானே இவர் தொழில்! இவரே ஒப்புக் கொண்டு இருக்கிறாரே

1996-ல் திமுக - த.மா.க. உறவு ஏற்படவும் 1999-ல் திமுகவும், பா.ஜ.க.வும் இணையவும் நான் முக்கிய காரணமாக இருந் தேன் என்று குறிப்பிட்டுள் ளாரே (இந்தியா டுடே 9.2.2005). அப்போதெல்லாம் யார்யார்மீது சவாரி செய் தார்களாம். விளக்குவாரா வெங்கண்ணா பரம்பரை?

ஜெயேந்திரர்மீது அதிக மதிப்பு வைத்துள்ள நிலையில் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளிய செல்வி ஜெயலலிதாமீது பார்ப் பனர்களுக்குக் கோபம் வர வில்லை. இந்த இடத்தில் தான் தமிழர்கள் கொஞ்சம் கூர்மை யாகப் புத்தியைச் செலுத்த வேண்டும்.

அது எப்படியோ நடந்து விட்டது. அதற்காக ஜெய லலிதாவை வெறுத்து ஒதுக்கி விட்டால் அதன் வாய்ப்புக் கேடு யாருக்கு? நம்மவாள் முதல் அமைச்சராகும் வாய்ப் பைப் புறத்தள்ளி விடலாமா? திராவிடஇயக்கத்தில் நம்ம பெண் ஒருவர் இருப் பதால்தான் சி.எம் ஆக முடி கிறது - அந்தக் கண்ணோட் டத்தில் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் - என்று அவர்கள் நினைக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு இன ரீதியாக இருக்கும் இந்தச் சுயநலம்தான் அவர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மவாள் புரிந்து கொள்ள இன் னும் எவ்வளவு காலம் பிடிக் குமோ?

நினைத்தேன் எழுது கிறேன்

முதல்வர் ஜெயலலிதா ஒரு பார்வை என்ற தலைப்பில் திருவாளர் சோ எழுதியி ருப்பதை ஊன்றிப் படிக்க வேண்டும் திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத் தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம்; அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரிய முள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம்பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப் பட்டதோ, அந்தச் சமூ கத்தைச் சேர்ந்தவர்.

சரி, இப்படிப்பட்ட பாரம் பரியத்துக்கு தலைமை ஏற் பதற்காக அவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா? என்று கேட் டால் கிடையாது. கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாகயிருந்தாலும், தெலுங்கைப் பற்றியதாக யிருந்தாலும் அதை நசுக்கவே முயற்சிப்பேன் என்ற முனைப்பு வேறு ஒருபுறம்; தொழிலாளிகளுக்கும் கட மைகளும் பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்க மாட்டேன் என்ற தீர்மானம் மற்றொரு புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண் டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இன்னமும் ஒருபுறம். இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங் களை ஜெயலலிதா ஏற்க வில்லை. தன்னுடைய நம்பிக் கைகளை அந்தப் பாரம் பரியம் ஏற்கும்படிச் செய்தார். இது சமீப கால தமிழக அரசியல் அற்புதம் ("துக்ளக்" 21.9.2005) என்று செல்வி ஜெயலலிதா குறித்து ஒரு கணிப்பை அவர் பார்வையில் தந்துள்ளார் திருவாளர் சோ ராமசாமி.

1) திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கிறார். ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை விலக்கிய வரலாற்று ரீதியான திராவிட இனத்தின் பண்பு நலன்கள் தான் திராவிடப் பாரம்பரியம்.

2) திராவிடப் பாரம் பரியத்துக்குச் சம்பந்தம் இல்லாதவர் திராவிடர் பாரம் பரியத்தின் கொள்கைகளை ஏற்காதவர் என்று சொல்லுவ தன்மூலம் ஒரு உண்மை வெளியாகி விட்டது. ஜெய லலிதாவை திராவிடப் பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நம்பி அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் அண்ணா திமுக தோழர்களை சீண்டியிருக்கிறார் என்பதை விட, ஏதோ ஒரு வகையில் அவரை அறியாமலேயே யோசிக்க வைத்துள்ளார். இதன் மூலம் திராவிட இயக் கப் பாரம்பரியம் இல்லாதவர், ஒரு திராவிட கட்சிக்குத் தலைமை தாங்கி வருகிறார் என்ற கருத்தையும் வெளி யிட்டுள்ளார். ஜெயலலிதாவை இதன்மூலம் பெருமைப்படுத் துகிறாரா - சிறுமைப்படுத்து கிறாரா என்பது தெய்வ பக்தரான அவர் புத்திக்கே வெளிச்சம்.

3) செல்வி ஜெயலலிதா வைப் பார்ப்பனர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ப தற்கு சோ ஒரு போக்கினை காட்டியுள்ளார்.

திராவிடப் பாரம்பரியம் பேசும் ஒரு கட்சியில் நம்ம வாளான ஒரு பெண் இருக் கிறார். சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்றும் பறைசாற்றி அடையாளம் காட்டியுள்ளார். பார்ப் பனர்களான நம்மிடமிருந்து வேறு ஒருவர் முதல் அமைச் சராக வரவே முடியாது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை திராவிடப் பாரம்பரியம்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை யிருந்து வரும் சூழ்நிலையில் நம்மினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அந்தத் திராவிட ஆட்சி ஒன்றுக்குத் தலைமை யேற்றுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா என்று சோ கோடிட்டுக் காட்டியுள்ளார்.

திராவிடப் பாரம்பரி யத்தை எதிர்ப்பது என்ற பெய ரால் கலைஞர் அவர்களைச் சிறுமைப்படுத்துவதும் அதே திராவிடப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தி தம்மினப் பெண்ணை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நயவஞ்சக கவுடில்ய திட்டத் தின் அடிப்படையில்தான் என்பதை பார்ப்பனர் அல் லாத மக்களான நம் மக்கள் அறுதியிட்டு உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்குப் பார்ப்பன இனத்துக்குக் கிடைத்த பெரிய தலைவரே சோ ராமசாமி தான். அந்த அளவுக்கு அந்த இனம் தாழ்நிலைக்கு போய் விட்டது.

இந்த ஆசாமியின் யோக் கிதை என்ன? நாம் எடை போட வேண்டிய அவசியம் இல்லை. அவரே தன்னைப் பற்றி சுயமதிப்பீடு செய்துள்ளார்.

தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் என்ற ஆங்கில நூல் வெளி யீட்டு விழாவில் (2008 மார்ச் சில்) திரு சோ பேசியதாவது:

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்ட தில்லை. ஆலோசனையைக் கேட்டவர்கள் என்ன ஆனார் கள் என்பது உங்களுக்குத் தெரியும்

சோ கூறும் ஆலோசனை யின் யோக்கியதை இவ்வளவு தான்!

இன்னொன்று இருக்கிறது.

கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத் தியும் எந்த ஒரு பலனும் ஏற் பட்டதாகத் தெரியவில் லையே என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்த துண்டா?

பதில்: எந்தப் பலனும் இல்லையென்று எப்படி சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!

("துக்ளக்" 24.10.2005 பக்கம் 26)

அவசரம் வேண்டாம்! இன் னொன்றும் அவரைப்பற்றி அவரே அறிவித்துள்ள ஒன்று மிக முக்கியமாக தெரிவிக் கிறது.

கேள்வி: துக்ளக் விலை யேற்றத்தைப் பற்றிய அறிவிப் பிலும் தாங்கள் குழம்பியி ருப்பதாக எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்களே?

பதில்: குழப்புவது எனது பிறப்புரிமை.

("துக்ளக்" 1.12.1987 பக்கம் 9)

போதுமா? இந்தக் குழப்பவாதிதான் வயிற்றுப் பிழைப்புக்காக பத்திரிகை நடத்துபவர்தான் என் பேச்சை யார் கேட் டாலும் உருப்பட மாட்டார் கள் என்று தனக்குத்தானே சான்று அளித்துக் கொள் பவர்தான் திராவிடப் பாரம் பரியத்தைக் கொச்சைப் படுத்துகிறார். தமிழகத்தின் மூத்த திராவிட இயக்கத் தலைவரான மானமிகு கலை ஞர்மீது அழி - பழிச் சகதி களை கைநிறைய அள்ளி வீசுகிறார்.

தமிழர்கள் புரிந்து கொள் வார்களாக! துக்ளக்கை வாங்கிப் படித்த பார்ப்பனர் அல்லாத மக்கள் குறிப்பாகத் தெரிந்து கொள்வார்களாக.

பார்ப்பனர்களில் மிகப் பெரிய மேதாவியாக அவாள் தூக்கிச் சுமக்கும் பேர் வழியே இந்தக் கதியில்தான் உள்ளார் என்பதையும் கவனத் தில் வைப்பார்களாக!"சோ"வின் பார்வையில்
பார்ப்பனர்களும் தமிழர்களும்

இலங்கையில் அந்த நாட்டுக்குரிய தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக்கணக்கில் அகதிகளாக ஆகிவிட்ட கொடுமை கண்டு மனிதநேயம் உள்ளவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதெல்லாம் 'சோ' பார்ப்பனர் கூட்டத்திற்கு ஒரு பொருட்டல்ல; தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு "சபாஷ்! சபாஷ்!" என்று உசுப்பேற்றுகின்றனர்.

அதே நேரத்தில் - காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகள் அகதிகளாகி விட்டார்களே என்று கண்ணீர் வடிக்கிறார் சோ.

"லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளி யேறி அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே - ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததும் அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை" என்று சோ ஒப்பாரி வைக்கிறார் ("துக்ளக்" 20.8.2008)

தமிழர்கள் இலங்கையில் இலட்சக்கணக்கில் அகதிகளாக ஆக்கப்பட்டால் அது ஒரு பொருட்டல்ல; அவர்களைப் பற்றி அக்கறையுடன் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பேசினால் ஈழத் தமிழர் தோஷம் என்று நையாண்டி செய்கிறார். அதே நேரத்தில் இந்தியாவில் பண்டிட்டுகள் அகதிகளாக ஆனதுபற்றி புலம்புகிறார். காரணம் என்ன? ஈழத்தில் அகதிகளாக ஆனோர் தமிழர்கள் - இந்தியாவில் அகதிகள் என்று சோ கூறும் பண்டிட்டு என்பவர்கள் பார்ப்பனர்கள். இந்த வேறுபாடுதான் சோவின் முரண்பட்ட முகாரிக்கான காரணம், பார்ப்பனர்களை அடையாளம் காண இன்னும் என்ன எடுத்துக்காட்டுத் தேவை?


சோவின் பேனாவுக்குச் சுளுக்கா?

கலைஞர் குடும்பப் பிரச்சினை மற்றும் ஒற்றுமைபற்றியும் கொச்சைப்படுத்தத் தவறவில்லை திருவாளர் சோ. கலைஞருக்குக் குடும்பம் இருக்கிறது. பிரச்சினைகள் ஏற்பட்டன; ஒற்றுமை வந்தது. இது அவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல - நாட்டுக்கே நல்லது என்று தமிழினத்தார் மகிழ்கின்றனர். ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்று குதியாட்டம் போட்டவர் கள் இன்று கால் ஒடிந்து கவலைப்படுகின்றனர் என்பது சோவின் எழுத்துக்கள் மூலம் தெரிகிறது.

குடும்பத்தை விட்டு சந்நியாசம் ஏற்று, சங்கராச்சாரியார் என்ற நிலைக்கு வந்த பிறகும், காஞ்சி மடத்திலே சங்கராச் சாரியாரின் உறவினர்கள் கூடாரம் அடித்து கும்மாளம் போடு கிறார்களே! அது எப்படி? யார் அந்த ரகு? அந்த ஆளின் லீலை கள் மடத்துக்குள்ளேயே பேசப்படுகிறது என்று ஏடுகள் விலா வாரியாக வெளியிட்டனவே! அது எப்படி? அந்தக் குடும்பம் பற்றி எல்லாம் எழுதிட முடியாமல் சோவின் பேனாவுக்கு சுளுக்கு ஏற்பட்டது - ஏன்? பார்ப்பான் - சூத்திரப் பேதம் தானே?( நன்றி: விடுதலை 3.1.09 )

மின்சாரத்துக்கு ஷாக் அடித்திருக்கிறது என்ன செய்ய ?

6 Comments:

Nokia Fan said...

Funny world.

--Nokia Fan

தமிழ் ஓவியா said...

மின்சாரத்துக்கு ஷாக் அடிக்கவில்லை. சோ வின் பார்ப்பனக்கூட்டத்திற்கு மின்சாரம் ஷாக் கொடுத்திருக்கிறார்.

கட்டுரையை அப்படியே திருப்பிப் போடுவதுதான் உங்களது அறிவு நாணயமா?.

கட்டுரையை முழுவதும் படித்தால் பார்ப்பனர்களின் சுயரூபம் அப்பட்டமாகத் தெரியும்.

வாசகர்கள் தலைப்பை பார்க்காமல் இக்கட்டுரையை உண்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

//இந்தக் குழப்பவாதிதான் வயிற்றுப் பிழைப்புக்காக பத்திரிகை நடத்துபவர்தான் என் பேச்சை யார் கேட் டாலும் உருப்பட மாட்டார் கள் என்று தனக்குத்தானே சான்று அளித்துக் கொள் பவர்தான் திராவிடப் பாரம் பரியத்தைக் கொச்சைப் படுத்துகிறார். //

ஆமாமாம். தமிழீனத்தலைவர் எல்லோடவல் ப்ரேவ் மேன் வழிநடத்த 3G ஸ்பெக்ட்டிரம் 60000 கோடி ரூபாய் ஊழல் செய்ததே தமிழினத்தின் வாழ்வுக்காகத்தான்.

மிகக்குறிப்பாக இலங்கைத்தமிழர்கள் நலனுக்குத்தானே!

இவனுங்க மோசமான ஆட்சியை கேள்வியே கேட்காமல் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு பிரதிபலனாக கழக அரசு சாதனைகளை விளக்கும் ரெண்டு அரசு விளம்பரம் பெற்றுக் கொண்டு இருந்தால் தமிழ் இனமான உணர்வுள்ளவர்!

தமிழீனத்தலைவர் மஞ்சள் டவல் பேச்சைக்கேட்டு பிரதமர், பிரசிடெண்டுன்னு இன்னொரு ரவுண்டு தந்தி அனுப்பி கைக்காசை செலவழிங்க மக்கா!

ராசா / தயாநிதி பொறுப்பு வகிக்கும் போஸ்டல் டிபார்ட்மெண்டுக்கு வருவாய் காட்ட கழகத்தலைவரின் உள்குத்து டெக்னிக்!

நெல்லிக்கனி தர அதியமான் இல்லாத போதும் 86 வயது அகவை எய்தி அவ்வையை மிஞ்சிய தமிழ்த் தலைவா தைலபுரத் தலைவலி பேச்சைக்கேட்டு டாஸ்மாக்கை ஒன் அவர் சீக்கிரமா குளாஸ்செய்யச் சொன்னது சரிதானா!!

தமிளன் வால்க! தமில் வழர்க!

Anonymous said...

தமிழ் ஓவியா / இட்டிலி-வடை

உண்மை.. கட்டுரைக்கு நன்றி..

கட்டுரையை திருப்பி போட்டதற்கு நன்றி. திருச்சிதான் போடக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

பார்பனக்கூட்டமா/பன்னிகூட்டமா என்பதேல்லாம் கவலை இல்லை..
கட்டுரை மிக அருமை !...

இதே பாப்பாத்தி ஆட்சியில் இருந்தா... நம்ப மின்சாரத்துக்கு ... வீராஸ்வாமிதான்...?

ஜயராமன் said...

/// சோ வின் பார்ப்பனக்கூட்டத்திற்கு மின்சாரம் ஷாக் கொடுத்திருக்கிறார். ///

அறிவு நாணயத்தை அறிந்திருக்கும் நம் தோழருக்கு என்னே எழுச்சி!! ஜெயலலிதாவிற்கு தூக்கிய பல்லக்கில் பணம் பண்ணி தூக்கி எறியப்பட்டு இப்போது மஞ்சள்காவடி எடுக்கும் வீரமில்லா ஆனால் மணி உள்ள பகுத்தறிவுக்குஞ்சு ப்யூஸ் ஆகி பல நாள் ஆகிவிட்டது, இதில் ஷாக் அடிப்பதாம். நல்ல ஜோக். சாதிவெறியைத் தவிர வேறு எதுவும் தெரியாத பகுத்தறிவு படைத்த கட்டுரை.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

Innum ethanai kalam than ematruvar intha naatile...

Thravida thamiz iname thravidan endra peyaril thirudanai aatharikathe.

Kalainjar & Co adikum kollaiai maraika jathi pakkam mooda makkalai thirupugirargal. Thamizha thelinthidu, thuyilil irundhu ezhundhidu.

Kalainjar yaasikum pathavigalai pichai podum Sonia thravidana? Kalinjar kudamba, ottrumai adainthathu thamiz nalanuka illai avargal kudamba nalanuka.

Briyanikum, kaasukum aasai pattu un than-manathai adagu vaikathe.

Sindhipir, Seyal paduveer.

- matrum oru tamizan