பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 04, 2009

திருமங்கலத்தில் விளையாடும் பணமும், பவரும்

இத்தேர்தலில் ஜெயித்துக் காட்டினால், மக்கள் ஆதரவை லோக்சபா தேர்தலிலும் பெறலாம் என்று கணக்குப் போடுவதால் கட்சிகள், திருமங்கலத்தை ஒரு கவுரவ பிரச்னையாக கருதுகின்றன. இதுவரை நடந்த இடைத் தேர்தல்களை விட, திருமங்கலத்தில் பணமும், பவரும் விளையாடுவதற்கு இதுவே காரணம் என்று செய்திகள் வருகிறது. மாலை மலர் ரிப்போர்ட் அதிரவைக்கிறது.

மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருமங் கலம். இங்கு பிரதான தொழில் விவசாயம். அதற்கு அடுத்த படியாக ஓட்டல் தொழில். வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரி டிரைவர்களும், தொழிலாளர்களும் திருமங் கலத்தில் சாப்பிட்டு விட்டு தங்கி ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கம். திருமங்கலத்தில் சாலையில் இருபுறமும் நூற் றுக்கணக்கான ஓட்டல்கள் 24 மணி நேரமும் இயங்கும்.

இங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே மக் கள் உற்சாகம் அடைந்து விட்டனர். பிரசாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தேர்தல் திருவிழா "களை'' கட்டுகிறது. இந்த தொகுதியில் திருமங்கலம் நகரம் தவிர தொகுதியில் உள்ள மற்ற ஊர்கள் அனைத் தும் கிராமங்களே.

இதனால் கிராம மக்கள் அரசியல் தலைவர்களை போட்டி போட்டுக் கொண்டு வேடிக்கை பார்க்க ஓடி வரு கிறார்கள். தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியதும் மக்கள் விவசாய வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு தேர்தல் பணியில் இறங்கி விட்டனர்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள கிராமங்களை சுற்றி பார்த்த போது அவர்கள் பண மழையில் நனைவதை பார்க்க முடிந்தது. அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லும் போது 3 வேளை பிரியாணியுடன் சாப்பாடும் கையில் ரூ.100, ரூ.200 என பணமும் கிடைக்கிறது. அனைவரும் தேர்தல் பணிக்கு சென்று விட்டதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்க வில்லை.

தேர்தல் பிரசாரத்தின் போது சத்தம் போட்டு கோஷம் எழுப்ப சிறுவர் களும் ஈடுபடுத்தப்படு கிறார்கள். அவர்களுக்கு தின மும் ரூ.20, ரூ.50 சம்பளம் கிடைக்கிறது.

அடுத்ததாக ஓட்டுப் போடு வதற்காக வாக்காளர்களுக்கு சில கட்சிகள் ரகசியமாக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

தொடக்கத்தில் வாக்கா ளர்களுக்கு ஒரு கட்சி சார்பில் பணம் கொடுக்க சென்ற போது மற்ற கட்சியினர் தடுத்தால் மோதல்கள் ஏற்பட்டன. இதனால் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுப் பது தடுக்கப்பட்டது. இது, நமக்கு கிடைக்க இருந்த பணத்தை கொடுக்க விடாமல் தடுத்து விட்டார்களே என்ற அதிருப்தி வாக்காளர்களி டையே ஏற்பட்டது. இதை அறிந்த மற்ற கட்சியினர் பணம் கொடுக்கும் விவகாரத்தை பெரிது படுத்தாமல் விட்டு விட்டனர்.

இதனால் வாக்காளர் களுக்கு போட்டி போட்டு தாராளமாக பணம் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படு கிறது.

ஒரு கட்சி ரூ.1000 கொடுத் தால் இன்னொரு கட்சி ரூ.2000 கொடுப்பதாகவும் இப்படியாக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வாக்கா ளர் கிட்டத்தட்ட ரூ.6 ஆயி ரம் வரை பணம் பெற்று இருப்பதாக கூறுகின்றனர்.

எந்த கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளும் வாக்காளர்கள், யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதில் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.

நெடுமதுரையைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் கூறுகை யில், "எங்களுக்கு ஓட்டுக் காக ஒரு கட்சி ரூ.6 ஆயிரம் கொடுத்தது. இன்னொரு கட்சி ரூ.1000 கொடுத்தது. தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுமாறு சொல்லி பணம் கொடுத்தார்கள். குடும்பத்தில் எத்தனை ஓட்டு இருக்கிறதோ அத்தனை பேருக்கும் பணம் கொடுத்தார்கள். எல்லோரி டமும் பணம் வாங்கி விட்டோம். இப்போது யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது குழப்பமாக இருக்கிறது என்றார்.

இன்னொருவர் கூறுகை யில், "எங்கள் ஊரில் யாருக்கு ஓட்டு போடுவது என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டோம். பணம் கொடுப்பதை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக வாங்கிக் கொண்டோம்'' என்றார்.

சில கிராமங்களில் வாக்காளர்களுக்கு மிக்சி, செல்போன், வேட்டி, சேலை, டவல் போன்ற பரிசு பொருட் களையும் வீடு வீடாக சென்ற ரகசியமாக வழங்கி வரு வதாக கூறப்படுகிறது.

இது தவிர ரகசிய கூப்பன் களும் விநியோகிக்கப்படுகிறது. அந்த கூப்பன்களை சில கடைகளில் கொடுத்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற ஒட்டு மொத்த சலுகைகளால் திருமங்கலம் வாக்காளர்கள் திக்கு முக்காடிப்போய் இருக் கிறார்கள்.
எனக்கு என்னவோ விஜயகாந்த் ஜெயித்துவிடுவார் என்று தோன்றுகிறது

8 Comments:

Anonymous said...

Is Vijakanth also offering freebies. your comment after the list of freebies in some way implies.
Also, can this not be notified to the EC to take necessary action and ban the parties who disburse cash for vote.
Really shameful.

Anbu said...

BUY election - ன்னு மக்கள் சரியா புரிஞ்சிகிட்டாங்க!

அன்புடன்,
அன்பு

Anonymous said...

எனக்கு என்னவோ விஜயகாந்த் ஜெயித்துவிடுவார் என்று தோன்றுகிறது..

----------------------------
உங்களுக்கு மஞ்சள் காமாலையென்று நினைக்கிறேன்.....

paarvai said...

//எனக்கு என்னவோ விஜயகாந்த் ஜெயித்துவிடுவார் என்று தோன்றுகிறது..//
ஆமாமா....இவ்வளவு பணத்தை அள்ளிவிட்டா....ஊழல்களைத்தடுக்க வந்த ஊழல் மன்னராச்சே..

KaveriGanesh said...

இட்லி வடையாருக்கு வேர ஒன்னும் பிரச்சனையில்லையே , தத்து, பித்து உளர்கிராறே, இங்கெ வந்து பாருங்க, அசந்து போய்ருவிங்க , எங்க அண்ணண் அ இப்போ லீடிங் .

விசயகாந்த் ரொம்ப கொளம்பி போயிருக்காரு

Anonymous said...

http://ibnlive.in.com/news/dmk-leader-stalin-caught-on-tape-bribing-voters/81946-3.html


-Raji

TamilBloggersUnit said...

மக்கள் சரியா புரிஞ்சிகிட்டாங்க!

Idly Vadai said...

(Uruppadiyaana) Kanavu Kaanungal - Abdul Kalaam.


Innuma intha ooru nammalai nambittu irukku :)