பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 02, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல் - எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - ராமதாஸ்

திருமங்கலம் இடைத் தேர்தலில் பா.ம.க. ஆதரவுயாருக்கு என்பது தொடர்பாக 2-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார். அதன்படி பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடை பெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். தற்போது நடை பெறும் திருமங்கலம் இடைத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு அளிக்கவில்லை. அந்த தொகுதியின் பா.ம.க. நிர்வாகிகள் அனுதாபிகள், தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் தொகுதிக்கு யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அறிந்து வாக்களித்து கொள்ளலாம் என்று பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படுகிறது.

4 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

ராமதாஸ் சுத்த மோசம்

ஒரு வருஷத்தின் சிறந்த காமெடியினை
வருஷ ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்

டன்மானடமிழன் said...

இதனால் சகலமானவருக்கும்
அறிவிக்கும் செய்தி என்னவென்றால்

கலைஞருக்கு குருபெயர்ச்சியியால்
எந்த சுயபலனும் இல்லை

அதாவது வெகுவிரைவில்
ஜென்ம சனி
அவரை பிடிக்கபோகிறது...

சோ...(So)
இதுவரை
தமிழன் தலையில் போட்டார்
துண்டை
இனி
தனக்குதானே
போட்டுக்கபோகிறார்

Anonymous said...

People who recently started parties are contesting elections. Ramados is running political party for more than 15 yrs, but he doesn't have dareness to contest in election. If he contest in election, people will come to know his strength. All the parties should leave ramadoss like, so that people will come to know his strength.

Anbu said...

ஐயா எப்பொழுதும் safe game ஆடுபவர். He keeps others guessing !
எல்லோருக்கும் மண்டை வெடிக்கனுமில்ல!

--
அன்புடன்,
அன்பு