பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 14, 2009

துக்ளக் 39 - FIR

* மதியம் 2:30 மணிக்கு மௌண்ட் ரோடில் ஒரு வேலையை முடிக்க அந்த வழியாகச் சென்றபோதே தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அளவுக்கதிகமான கூட்டம்.

* சொந்தவேலையை முடித்து 4:30 மணிக்குத் திரும்பி, க்யூவில் நின்றபோது உள்ளே இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகமே எனக்கு வரவில்லை. இடம் இல்லை. அரங்கம் முழுமையாக நிரம்பிவிட வெளியே அமர்ந்து கவனிக்கவே ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன்.

* வரிசையில் நின்றபோது நடந்த பொதுஜன சம்பாஷணைகள் படு சுவாரசியம். ஒருவர் தானும் கேள்விகேட்க என்ன செய்யவேண்டும் என்று ஸ்கூல் மாணவனின் சீரியஸ்தனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். விஜய்காந்த் பற்றிக் கேட்கப்போவதாக அதே கேப்டனின் மிடுக்கோடு சொன்னவரை திருமங்கலம் பற்றிக் கேட்கப்போவதாகச் சொன்னவர் விரோதி மாதிரிப் பார்த்தார்.

* முதலில் திரு.குருமூர்த்தி அரங்கில் நுழைந்தபோது கைத்தட்டல் காதைப் பிளந்தது.

* SVசேகர், கட்டம் கட்டப் படுவோமோ என்ற பயமே இல்லாமல் மஞ்சளில் கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தார். ஒருவேளை திமுகவில் சேரும் முடிவுக்கு வந்துவிட்டாரோ என்னவோ.

* ரஜினி அரங்கில் நுழைந்தபோது மணி 6:27. அத்தனை கேமிரா வெளிச்சமும் அவர் இருந்த திசையில் திரும்பிவிட அந்தத் திசை மக்கள் அதீத வெளிச்ச மழையில் திக்குமுக்காடினார்கள்.

* சரியாக 6:30 மணிக்கு திரை விலக சோ தரிசனத்தில் மற்றுமொரு காதைப் பிளந்த கைத்தட்டல். பொங்கல் வாழ்த்துச் சொல்லி ஆரம்பித்தவரை கூட்டம் புத்தாண்டுக்கும் வாழ்த்தச் சொல்லிக் கேட்க, தான் இன்னும் தைத்திருநாளை புத்தாண்டாக லீகலைஸ் செய்யவில்லை அதனால் சொல்லமுடியாது என்று அதிரடியாக ஆரம்பித்தார். லீகலைஸ் செய்தவர்கள் யாரும் தங்கள் சொந்தப் பிறந்தநாளைக்கூட தமிழ்நாளில் கொண்டாடாமல் ஆங்கிலத் தேதியிலேயே கொண்டாடுவதைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

* மக்கள் தொடர்ந்து குரல் எழுப்ப, வழக்கம்போல் கேமிரா வெளிச்சம் பார்வையாளர்கள் பக்கம் ஃபோகஸ் செய்யப்பட, கண் கூசுவதாகவும் அதனை நிறுத்தும்படியும் எல்லோரும் கூக்குரலிட்டார்கள். சோ கேமிராகாரர்களிடம், "தமிழர்கள் இருளிலேயே மூழ்கி, வாழப் பழகிவிட்டார்கள், வெளிச்சத்தை அவர்களால தாங்க முடியாது, அணைத்துவிடுங்கள்" என்று தன் பன்ச்களைத் தொடர்ந்தார்.

* வழக்கம்போல் வாசகர்கள் கேள்விகளோடு கூட்டம் ஆரம்பித்தது. கேள்வி கேட்டவர்கள் வரிசையாக பாலமுருகன், ஜேம்ஸ், அயூப்கான் என்று இருந்ததில் கூட்டம் செக்யூலரானது என்று நிரூபிக்கப்பட்டது.

* தொடர்ந்து திருமங்கலம், ப.சிதம்பரம், ஒகனேக்கல், நடிகர்கள் ஆவேசம், பா.ம.க., மும்பைத் தீவிரவாதத் தாக்குதல், LTTE, தமிழீழம், பத்திரிகைகளுக்குப் பூணூல் போடும் புரோகிதர், ஸ்பெக்ட்ரம், தயாநிதி வகையறா, கலைஞர் குடும்ப அரசியல் என்று பலவற்றைத் தொட்டு கேள்வி பதில்கள் இருந்தன.

இப்பொழுதைக்கு இவ்வளவுதான். வெளியே அமர்ந்து ஒரு ஸ்பீக்கர் அருகே வைத்துப் பதிவு செய்ததால் ஆடியோ சுமாரான தரத்திலேயே இருக்கிறது. முடிந்தால் முழுவதும் ஆடியோ அல்லது எழுத்தில் பேச்சின் தொகுப்பை நாளை வெளியிடுகிறேன்.

14 Comments:

Anonymous said...

Thanks IV...I am eagerly waiting for further updates..

ரிஷபன் said...

செய்திகளை முந்தித் தருவதில் தினத் தந்தியையும் முந்தி விட்டது இட்லி வடை !
பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு (கலைஞர் version ) வாழ்த்துக்கள் !!. சோ வின் அதிரடி பேச்சைக் கேட்க வேண்டும். டைமிங் மிஸ் பண்ணாது எப்படித் தான் இப்படி கமென்ட் அடிப்பாரோ தெரியாது.

R.Gopi said...

IV

Thanks for your lightning report.

Very eagerlt waiting to read the full program report.

R.Gopi said...

IV

Thanks for your lightning report.

Very eagerlt waiting to read the full program report.

Krishnan said...

Just today morning watched some excerpts of Cho's speech on Jaya TV news in which he was wishing for Amma rule in TN again !

வடுவூர் குமார் said...

திரு டோண்டு பதிவை எதிர்பார்க்கிறேன்.

தவநெறிச்செல்வன் said...

ஐயா சீக்கிரம் ஆடியோ link கொடுங்க

நன்றி

நாரத முனி said...

டோண்டு மாமா எல்லாத்தையும் சப்ஜாடா அப்டேட் பண்ணிட்டார். நீர் என்னடான்னா இன்னும் முழிசுக்காம இருக்கீர்

IdlyVadai said...

மக்களே பெரிய ஆடியோ கோப்பாக இருப்பதால் அதை அப்லோட் செய்ய முடியவில்லை. சிறு கோப்புகளாக போடுகிறேன். கொஞ்சம் வெயிட்டீஸ் :-)

Silky woven said...

பொங்கலுக்காக நான் இழந்த வருடாவருடம் தவறவிடுவது.

நன்றி,

கிரி said...

//லீகலைஸ் செய்தவர்கள் யாரும் தங்கள் சொந்தப் பிறந்தநாளைக்கூட தமிழ்நாளில் கொண்டாடாமல் ஆங்கிலத் தேதியிலேயே கொண்டாடுவதைக் குறிப்பிட்டுச் சொன்னார். //

:-)))

சுவாராசியமாக இருந்தது (விழாவும் உங்கள் பதிவும்)

technicalsathish said...

அய்யோ சீக்கிரம் Audio Link தாங்க? பொறுக்க முடியல...!

IdlyVadai said...

// அய்யோ சீக்கிரம் Audio Link தாங்க? பொறுக்க முடியல..//

போட்டு பல மணி நேரம் ஆகிவிட்டது :-)

neysamy said...

Cho.Ramasami is educated fool