பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 18, 2009

டாப்-10 வலைப்பதிவுகள் - குமுதம்

சமீபகால புரட்சி பிளாக்குகள் ( புரட்சி என்பதை கவனிக்கவும் ) என்று 21.1.09 குமுதத்தில் வந்த டாப்-10 வலைப்பதிவில் இட்லிவடைக்கு முதல் இடம் தந்துள்ளார்கள்.

சர்வே மூலம் இதை முடிவு செய்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரத்தில் 30% ஓட்டு பதிவு செய்ய அழகிரி போல் யாரும் இல்லாமல் இட்லிவடை முதல் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

குமுதத்துக்கும், இட்லிவடைக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். டாப்-10ல் இடம்பெற்ற மற்ற வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
விவரம் கீழே...


தமிழ் எழுத்துலகில் நிகழ்ந்துள்ள சமீபகால புரட்சி பிளாக்குகள். ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழில் பிளாக் எழுதுகிறார்கள். இதில் பிரபலமானவை எது என பிளாக்கர்கள் மத்தியில் எடுக்கப்ட்ட ஒரு குட்டி சர்வே.

1. இட்லிவடை
www.idlyvadai.blogspot.com

`பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா, பன்ச் வெச்சா இட்லி தாண்டா' என பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் இந்த பிளாக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் இதன் பலமும்கூட. முகம் தெரியாததால் தைரியமாக கருத்துச் சொல்கிறார்கள்.

2. திணை இசை சமிக்ஞை
www.nagarjunan.blogspot.com

சிறுபத்திரிகை எழுத்தாளர், ஆம்னஸ்டிக் இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்ட நாகார்ஜுனின் பிளாக். இந்த பரந்த அனுபவம் இவரது பலம். அதிகம் சீரியஸான விஷயங்களைத்தான் எழுதுகிறார்.

3. பிகேபிஇன்
www.pkp.blogspot.com

அமெரிக்கா சாஃப்ட்வேர்காரரான பி.கே.சிவகுமாரின் பிளாக். பிரசித்திப் பெற்ற அலெக்ஸா டாட் காம் சர்வேயில் நிறைய பேர் படிக்கும் தமிழ் பிளாக்காக தேர்வு செய்திருந்தார்கள். பொது அறிவு விஷயங்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.

4. எண்ணங்கள்
www.thoughtsintamil.blogspot.com

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் பிளாக். எல்லாவற்றைப் பற்றியும் தன் எண்ணங்களை எழுதியுள்ளார். எப்படி தமிழிலேயே டைப் செய்வது, ஃபாண்டுகளை மாற்றுவது என்பது உட்பட தமிழ் மென்பொருள்கள் பற்றியும் அறிவியல் விஷயங்களையும் எளிமையாக எழுதியுள்ளார்.

5. யுவகிருஷ்ணா
www.luckylookonline.com

தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத்தான் பிளாக் தொடங்கியுள்ளதாக சொல்கிறார் இவர். படுசீரியஸாகவும் இல்லாமல் மொக்கையாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக எழுதுவதால் அனைத்து தரப்பினராலும் படிக்கப்படுகிறார்.

6. பரிசல்காரன்
www.parisalkaaran.com

திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமார் பிளாக். மே 2008ல்தான் தொடங்கியிருக்கிறார். நிறைய எழுதுவதால் குறுகிய காலத்திலேயே ஹிட் ஆகிவிட்டார். யூத் பிளாக்கர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு.

7. அதிஷாவின் எண்ண அலைகள்
www.athishaonline.com

பிளாக்கர்களின் பலமான மொக்கைத்தனமும், சகட்டுமேனிக்கு அடிக்கும் கிண்டலும்தான் இவரது பலமும். எந்த புது சினிமா வெளியானாலும் முதல் காட்சி முடிந்து இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்குள் இவர் விமர்சனம் வெளியாகிவிடும்.

8. மொழிவிளையாட்டு
www.jyovramsundar.blogspot.com

சென்னையைச் சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர் பிளாக். சிறுபத்திரிகை வட்டாரத்தில் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் குறைந்துவிட்டாலும், பிளாக்கில் ஒரு பெரிய அணியே இருக்கிறது. அவர்களில் இந்த பிளாக் பிரசித்தமானது.

9. சத்தியக்கடுதாசி
www.satiyakadatasi.com

ஈழத்து எழுத்தாளரான ஷோபாசக்தியின் பிளாக். இலங்கைப் பிரச்னை பற்றி இவர் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அ.மார்க்ஸ், ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை பிரபலங்களும் எழுதுகிறார்கள்.

10. ஸ்மைல் பக்கம்
www.livingsmile.blogspot.com

திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் பிளாக். இலக்கியமும் சினிமா-வும் அதிகம். சினிமாகாரர்கள் திருநங்கைகளை சித்திரிக்கும் விதம் பற்றி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

- தளவாய் சுந்தரம்
( நன்றி: குமுதம் )

22 Comments:

Anonymous said...

//சமீபகால புரட்சி பிளாக்குகள்//
எழுத்துலகில் நிகழ்ந்துள்ள சமீபகால புரட்சி பிளாக்குகள்.

Nilofer Anbarasu said...

முதலில் டாப்-10ல் இடம்பெற்ற எல்லா வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள். இட்லிவடைக்கு முதலிடம் என்பதில் எனக்கு துளி கூட மாற்று கருத்து இல்லை. என் மதிப்பீடும் அதுவே. ஆனால் இதர வரிசையில் நிறையவே மாறுபடுகிறேன். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் சில வலைப்பூக்கள் எப்படி டாப்-10ல் வராமல் போயின என்பது மிகவும் ஆச்சரியத்தை தருகின்றன.

//சர்வே மூலம் இதை முடிவு செய்திருக்கிறார்கள்.//
இந்த சர்வே எப்போது எடுத்தார்கள், எவ்வளவு பேர் வாக்களித்தார்கள் போன்ற இன்னபிற விவரங்கள் ஏதேனும் உண்டா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
டன்மான தமிழன் said...

//திருமங்கலம் யாருக்கு?//
தேர்தல் முடிவு அப்படியே நம்ம சர்வேவுக்கு உல்டாவா வந்திருக்கு பார்த்தீங்களா?

Raj Subramanian said...

Congratulations on the top ranking. Keep it up.

நல்லதந்தி said...

போன புதன்கிழமையே,பொங்கல் அன்றே நான் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன்!

Vidhya said...

congratulations!!

மடல்காரன்_MadalKaran said...

தமிழனின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமான இட்லி வடை (அட சாப்பாடுங்க.!) பிளாக் உலகில் டாப் ஒரு அங்கமாகி விட்ட இட்லி வடை ( அட இது பிளாக்) இவர்(களி)ன் முயற்சிக்கும் பதிவிற்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன், கி.பாலு

Sethu Raman said...

Looks like a replica of the recent Thirumangalam election... did idlyvadai cover the surveyors to come first, as definitely idlyvadai has fallen down in bloggers estimates recently -- this is proved by the recent decline in 'comments' to i.v.blogs--- and some really top blogs are not even in the picture!!

Anonymous said...

information about animation film about MGR.


mgr's first 3 D animated film

http://puratchithalaivan.com/


Contact Us At:
Mayabimbham Media (P) Ltd.
Plot No. 6/1,
Nakkeeran Street,
Valasaravakkam,
Chennai - 600 087.
Phone No : 91-44-24866149
: 91-44-65877828
E Mail ID : info@mayabimbham.com

srinivasan said...

IV leading the pack was no big surprise.

There is one more blogger.
www.dubbukku.blogspot.com

has an absolute sense of humour.His notings on snatches of conversation at a "brahmin marriage" was just out of this world.

was he ever considered in the ranking list?

gopi said...

சர்வே மூலம் இதை முடிவு செய்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரத்தில் 30% ஓட்டு பதிவு செய்ய அழகிரி போல் யாரும் இல்லாமல் இட்லிவடை முதல் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------

Paaraattukkal Idlyvadai. Indha nakkal commentukkum matrum ungal no.1 placekkum....

LOSHAN said...

வாழ்த்துக்கள்.. உங்கள் காரம்,சாரம் இரண்டும் தொடரட்டும்.. மற்றப் பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

நாரத முனி said...

வாழ்த்துக்கள் நண்பா
சரி சரி... எவ்ளோ செலவாச்சு :-) ?? மிக்ஸ்யா ? செல்போனா? இல்ல ஹாட் கேஷா ?

IdlyVadai said...

வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. நல்லதந்திக்கு ஸ்பெஷல் நன்றி :-)

சந்திரமௌளீஸ்வரன் said...

மேலும் வளர்க

வாழ்த்துகள் இ.வ

neysamy said...

Congratulations.Keep it up.

ஷாஜி said...

டாப்-10ல் இடம்பெற்ற எல்லா வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

Sethu Raman said...

அய்யா இட்லிவடையாரே!
குமுதத்தின் வழக்கமான குசும்பை விட
உமது குசும்பு மிகவும் நன்று! அந்தத்
தலையங்கத்தை நான் இவ்வாறு தான்
படித்தேன் -
சமீபத்திய புரட்சி! -- பிளாக்குகள்!
இவ்வாறு அல்ல!
சமீபத்திய புரட்சி பிளாக்குகள்!

பிளாக்குகள் புரட்சி செய்கின்றன
என்பது தான் உண்மையே தவிர
குமுதம் குறிபிட்ட பத்து பிளாக்குகளும்
நிச்சயம் 'புரட்சி' பிளாக்குகள் அல்ல!
தளவாய் சுந்தரத்தையே கேளுமே?

Anonymous said...

மிக குறுகிய காலத்தில் பெரும் கவனத்தைப் பெற்ற,விவாதங்களை கிளப்பிய வினவு வலைப்பதிவு இதில்
இல்லை.பாஸ்டன் பாலாவின் வலைப்பதிவுகள் உட்பட பல
வலைப்பதிவுகள் இந்த பத்தில்
உள்ளவற்றை விட உள்ளடக்கத்தில்
மேலானவை,பிரபலமானவை.

இட்லிவடையில் ஒரிஜனல் சரக்கு 5% கூட கிடையாது. அப்புறம் அதை எப்படி புரட்சி பிளாக் என்று சொல்ல முடியும்.

Krish said...

Congratulations Idly!

Kavitha said...

Congratulations...Kumudam padittha piragu thaan idli vadai blog spot endru ondru iruppathai therinthu konden...interesting to read your blog..keep it up...