பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 05, 2009

டாப் 10 கேள்விகள்

வழக்கம் போல் சில கேள்விகள், பதில்கள் நீங்கள் சொல்லலாம் :-)

1. அஜினமோட்டோ எதிலிருந்து செய்யப்படுகிறது ? நீங்க (உடம்புக்கு) நல்லவரா கெட்டவரா ?

2. கலைஞருக்கு புத்தாண்டு வாழ்த்து யார் முதலில் சொல்லியிருப்பார்கள் ?

3. மொட்டை மாடி கூட்டத்துக்கு ஏன் மகளிர் யாரும் வரவில்லை ? நல்லி குப்புசாமி வராதது தான் காரணமா ?

4. முல்லைத்தீவை இலங்கை ராணுவம் கைப்பற்றிய பிறகு தான் பிரனாப் முகர்ஜி இலங்கை செல்வாரா ?

5. திருமங்கலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றால் கருணாநிதி, ஜெயலலிதா என்ன நினைப்பார்கள் ?

6. 'என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி' என்ற சொன்ன அக்கா ஜெயஸ்ரீக்கு என்ன பதிப்பகம், என்ன புத்தகம் என்று பொதுவில் சொல்ல தைரியம் இருக்கா ?

7. ராயப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் செய்த அத்தனை அடாவடி தனத்தையும் பத்ரி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் போய் செய்வாரா ? கோயிலுக்கு போனால் முதலில் பார்ப்பது பெருமாளையா அல்லது அவர் போட்டிருக்கும் நாமத்தையா ?

8.கஜினி படையெடுப்பில் ஜெயித்தது யார்? சூர்யாவா? அமீர்கானா?

9. "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" பாடலை முருகனை பார்த்து கமல் பாடினால் நன்றாக இருக்குமா ? அல்லது (இரா)முருகன் கமலை பார்த்து பாடினால் நன்றாக இருக்குமா ?

10. எ(டது கையால் ஈ ஓட்டும்)லக்கிய பிளாக் ஆரம்பித்த உடனேயே 3 லட்சம், 6 லட்சம் , 10 லட்சம் ஹிட்ஸ் வரவழிக்க என்ன செய்ய வேண்டும் ?

8 Comments:

Anonymous said...

//10. எ(டது கையால் ஈ ஓட்டும்)லக்கிய பிளாக் ஆரம்பித்த உடனேயே 3 லட்சம், 6 லட்சம் , 10 லட்சம் ஹிட்ஸ் வரவழிக்க என்ன செய்ய வேண்டும் ? //

நீங்க கிண்டல் பன்றது லக்கிலுக்கயா?

IdlyVadai said...

அனானி நிச்சயமாக இல்லை :-)

Naan Avan illai said...

1. அஜினமோட்டோ எதிலிருந்து செய்யப்படுகிறது ? நீங்க (உடம்புக்கு) நல்லவரா கெட்டவரா ?
உங்க மோட்டோ என்னனு தெரியல ... அட என்னுது கூட தாங்க.

2. கலைஞருக்கு புத்தாண்டு வாழ்த்து யார் முதலில் சொல்லியிருப்பார்கள் ?
ரொம்ப அவசியம் - இப்ப திருமங்கலத்துல யாரையோ வச்சிருக்காருல அட ச்சை... திருமங்கலத்துல யாரையோ நிக்க வச்சிருக்காருல ... அவங்க கூட சொல்லிஇருக்கலாம்.

3. மொட்டை மாடி கூட்டத்துக்கு ஏன் மகளிர் யாரும் வரவில்லை ? நல்லி குப்புசாமி வராதது தான் காரணமா ?
மொட்டை மாடி - குட்டிசுவர் - கடற்கரை பூங்கா இது எல்லாம் பசங்க சமாசாரம்.

4. முல்லைத்தீவை இலங்கை ராணுவம் கைப்பற்றிய பிறகு தான் பிரனாப் முகர்ஜி இலங்கை செல்வாரா ?
புலிகள் திருப்பியாடிக்கும்போது.

௫. திருமங்கலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றால் கருணாநிதி, ஜெயலலிதா என்ன நினைப்பார்கள் ?
அப்பாடி எப்படியோ எதிர்க்கட்சி ஜெயிக்கல...

6. 'என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி' என்ற சொன்ன அக்கா ஜெயஸ்ரீக்கு என்ன பதிப்பகம், என்ன புத்தகம் என்று பொதுவில் சொல்ல தைரியம் இருக்கா ?

அத முறையா எடுத்துக்க கூடிய பக்குவம் உங்ககிட்ட இருக்கா?

7. ராயப்பேட்டை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் செய்த அத்தனை அடாவடி தனத்தையும் பத்ரி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் போய் செய்வாரா ? கோயிலுக்கு போனால் முதலில் பார்ப்பது பெருமாளையா அல்லது அவர் போட்டிருக்கும் நாமத்தையா ?

நாமத்தை அன்றி வேரரியோம் பராபரமே.

8.கஜினி படையெடுப்பில் ஜெயித்தது யார்? சூர்யாவா? அமீர்கானா?

கண்டிப்பா முதன்மை சூர்யா - அமீர் தழுவியதால்.

9. "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" பாடலை முருகனை பார்த்து கமல் பாடினால் நன்றாக இருக்குமா ? அல்லது (இரா)முருகன் கமலை பார்த்து பாடினால் நன்றாக இருக்குமா ?
ரெண்டுமே முருகனுக்கு நல்லது இல்ல.

10. எ(டது கையால் ஈ ஓட்டும்)லக்கிய பிளாக் ஆரம்பித்த உடனேயே 3 லட்சம், 6 லட்சம் , 10 லட்சம் ஹிட்ஸ் வரவழிக்க என்ன செய்ய வேண்டும் ?

லக்கிலுக்க நேரா கேக்கவேண்டியதுதான?

Rakesh said...

1.இந்த லிங்கை சுட்டவும்..
http://en.wikipedia.org/wiki/Ajinomoto
(நான் நல்லவன்! )

2.ஆற்காடு வீராஸ்வாமி

3. Out of Syllabus

4.அப்பயும் போக மாட்டார். நீங்களும் ஏன் கருணாநிதி மாதிரி காமெடி பண்ணறீங்க!

5. தவறான கேள்வி. திருமங்கலம் தொகுதியில் விஜயகாந்த் நிற்கவில்லை. அவரோட கட்சி சார்பில் 'தன பாண்டியன்' தான் நிற்கிறார். திருத்திக்கங்க! தன பாண்டியன் வெற்றி பெற்றுட்டார்னா தமிழ் நாட்ல எல்லாரும் மொட்டை அடிச்சிகரோம்னு தைரியமா பந்தயம் கட்டலாம்.

6,7. Out of Syllabus

8. 2 பேருமே தான். அமிர்கான் கொஞ்சம் அதிகமா ஜெயிச்சிட்டார்.

9,10. Out of Syllabus

Anonymous said...

'"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" பாடலை முருகனை பார்த்து கமல் பாடினால் நன்றாக இருக்குமா ? அல்லது (இரா)முருகன் கமலை பார்த்து பாடினால் நன்றாக இருக்குமா ? '

இரா.முருகன் அந்த நிலைக்கு வந்து விட்டாரா?

Anonymous said...

' 'என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி' என்ற சொன்ன அக்கா ஜெயஸ்ரீக்கு என்ன பதிப்பகம், என்ன புத்தகம் என்று பொதுவில் சொல்ல தைரியம் இருக்கா ? '
அக்காவுக்கு அவர்கள் ஒசியில் புத்தகங்கள் தருகிறார்களோ ?

ஜயராமன் said...

/// ' 'என் தூக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தார்களுக்கும் என் நன்றி' என்ற சொன்ன அக்கா ஜெயஸ்ரீக்கு என்ன பதிப்பகம், என்ன புத்தகம் என்று பொதுவில் சொல்ல தைரியம் இருக்கா ? ' ///

பதிப்பகம் பெயரைச் சொல்ல தைரியம் தேவையில்லை. சுயபெயரில் ப்ளாக் எழுதத்தான் தைரியம் தேவை.

தூக்கமாத்திரை புத்தகங்கள் எல்லா பதிப்பகங்களிலும் இருக்கின்றன. அவரவர்கள் வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம். இதில் பொது லிஸ்ட் இருக்கிறதா என்ன? உங்களுக்கு சமையல் குறிப்பு படித்தால் தூக்கம் வரலாம். சிலருக்கு இட்லிவடை, சூபியிஸம் படித்தால் தூக்கம் வரலாம்.

நன்றி

ஜயராமன்

Boston Bala said...

//ரெண்டுமே முருகனுக்கு நல்லது இல்ல.//

தூள் பதில்