பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 01, 2008

FLASH: மாறன் பிரதஸ் - மு.க. இணைந்தனர்


மாறன் பிரதஸ் - மு.க. இணைந்தனர் - அழகிரி தலைமையில் வீட்டில் சமரசம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்-அமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு, தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மாலை 4 மணி அளவில் சென்றனர். அங்கு ஏற்கனவே, மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் இருந்தனர். அங்கு, சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்கள், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

இன்று தினமணியில் வந்த கட்டுரை படித்தால் கொஞ்சம் புரியும் :-)

மறப்பாரா தயாநிதி? மன்னிப்பாரா அழகிரி?
முதல்வர் கருணாநிதியின் குடும்பப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியின் முன்னோடியாக அவரது மகன்களான மு.க. அழகிரியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும் சந்தித்துப் பேசியிருப்பதாக, அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரிந்து போயிருக்கும் மாறன் சகோதரர்களுடன் மீண்டும் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வதுபற்றி சகோதரர்கள் கலந்தாலோசித்ததாகத் தெரிகிறது.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பின் விளைவாக, மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவியிலிருந்து விலகியதும், இரண்டு குடும்பங்களுக்கிடையே பேச்சு வார்த்தையே இல்லை என்கிற அளவுக்கு பிரச்னைகள் வலுத்ததும் ஊரறிந்த உண்மை. முதல்வரின் குடும்பத்தினர் சன் குழுமத்திலிருந்து விலகிக் கொண்டதற்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் பங்குகள் எதிர்பாராத விலையுயர்வை அடைந்ததுதான், அவர்களது கோபத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் தனது ஆதங்கத்தை மூத்த மகன் அழகிரியிடம் பகிர்ந்து கொண்டார் என்றும், அதன் விளைவாகத்தான் அவர் தனது அத்தையின் பேரர்களான கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்களை ஓரங் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. சன் குழுமத்தின் தொலைக்காட்சிச் சேனல்களுக்குப் போட்டியாகக் கலைஞர் தொலைக்காட்சியும், மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக ராயல் கேபிள் விஷனும் தொடங்கப்பட்டன.

முதலில் பனிப்போராகத் தொடங்கிய முதல்வரின் குடும்பச் சண்டை, வெகு விரைவிலேயே வெளிப்படையாக, நீயா நானா போட்டியாக மாறியது என்பது மட்டுமல்ல, எப்படியும் சன் குழுமத்தைப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்பதற்காக அரசும் அதிகாரமும் பயன்படுத்தப்பட்டன என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தயாநிதி மாறன் வெளிப்படையாகவே அழகிரியின் செயல்பாடுகளை விமர்சித்துப் பத்திரிகை பேட்டியும் அளித்தார். "நாங்கள் செய்த தவறுதான் என்ன?' என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர் மாறன் சகோதரர்கள்.

அண்ணன் மு.க. அழகிரி, மாறன் சகோதரர்களுக்கு எதிராக செயல்பட்டதை ஆரம்பம் முதலே மு.க. ஸ்டாலின் ஆதரிக்கவில்லை என்பதும், மாறன் சகோதரர்களுடனான அவரது உறவு சுமூகமாகவே தொடர்ந்தது என்பதும், இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இரண்டு மூன்று முறை சந்தித்துப் பேசியது உறுதிப்படுத்தியது. மேலும் சன் குழுமத்தின் தொலைக்காட்சி செய்திகளில் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் தரப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம்.

முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, முரசொலி மாறனின் சகோதரர் முரசொலி செல்வத்தின் மனைவி. கலாநிதி மற்றும் தயாநிதி ஆகியோரின் சிற்றன்னை. தனது சகோதரியான செல்வி, இந்தக் குடும்பச் சண்டையால் ஓரங்கட்டப்படுவதை அமைச்சர் ஸ்டாலின் விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். நம்ம வீட்டுப் பெண் புகுந்த வீட்டில் மரியாதை இழப்பது சரியல்ல என்று அமைச்சர் ஸ்டாலின் வாதாடியதாகவும் அதைத் தாயார் தயாளு அம்மாளும், அண்ணன் அழகிரியும் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 17 ஆம் தேதி முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மூத்த மகன் மு.க. அழகிரியின் மகள், பேத்தி கயல்விழியும், மகள் செல்வியும் அவருடன் துணைக்கு இருந்தனர். மருத்துவமனையில் இப்படி குடும்பம் பிளவு பட்டுக் கிடப்பது நல்லதல்ல என்றும், இதனால் பயனடையப் போவது நமக்கு வேண்டாதவர்கள்தான் என்றும் செல்வி வாதாடியதாகவும், ஒருவழியாக தயாளு அம்மாளையும், கயல்விழியையும் அவர் சம்மதிக்க வைத்துவிட்டதாகவும் தெரிகிறது.

அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, முதல்வர் கருணாநிதியே அமைச்சர் மு.க. ஸ்டாலினையும், மு.க. அழகிரியையும் கலந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வரும்படி கூறியிருப்பதாக, முதல்வருக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாறன் சகோதரர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கும் மு.க. ஸ்டாலின் இரண்டு தரப்பினரையும் சந்தித்துப் பேச வைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, மு.க. அழகிரியிடம் நீண்டநேரம் பேசி இருப்பதாகத் தெரிகிறது. அழகிரி - ஸ்டாலின் சந்திப்பைத் தொடர்ந்து, விரைவிலேயே அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மு.க. அழகிரியும் மாறன் சகோதரர்களும் சந்திப்பார்கள் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைமை, அதிலும் குறிப்பாக சோனியா காந்தி, முதல்வரின் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தனது அரசியல் செயலர் அகமது படேல் மூலம் தயாநிதி மாறனுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் இருப்பது நல்லது என்று முதல்வருக்குத் தெரிவித்திருக்கிறார் என்று ஆதாரபூர்வமற்ற வதந்தி அக்பர் சாலையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நிலவுகிறது.

""தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் நிலையில், தயாநிதி மாறன் ஓரங்கட்டப் படுவதும், சன் குழுமத்தின் ஆதரவைத் தங்களது கூட்டணி இழப்பதும் தேர்தலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சோனியாஜி கருதுகிறார். இதற்கு ராகுல் காந்தியிடமும் பிரியங்கா காந்தியிடமும் தயாநிதி மாறனுக்கு இருக்கும் நெருக்கமும், சோனியா காந்திக்கு அவரிடம் இருக்கும் அன்பும்கூட காரணம்'' என்கிறார் விவரம் அறிந்த மூத்த காங்கிரஸ் தலைவர்.

முதல்வரின் மனமாற்றத்திற்கு சோனியா காந்தி காரணமா, மனைவி தயாளு அம்மாள் காரணமா என்று தெரியாது. ஆனால், அமைச்சர் ஸ்டாலின் சமரச முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்பதும், இது தொடர்பாக அண்ணன் அழகிரியுடன் விவாதித்து அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார் என்பதும் உண்மை. இந்த சகோதரர்களும் அந்த சகோதரர்களும் சந்திக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

நீரடித்து நீர் விலகுமா என்ன?

31 Comments:

நல்லதந்தி said...

இவர்கள் சேர்ந்தாலும்,கூடினாலும் மொட்டையடிக்கப் படப்போவதென்னவோ தமிழக மக்கள்தான்.

M Arunachalam said...

//அழகிரி - ஸ்டாலின் சந்திப்பைத் தொடர்ந்து, விரைவிலேயே அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மு.க. அழகிரியும் மாறன் சகோதரர்களும் சந்திப்பார்கள் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.//

Will this meeting take place in the same burial ground where the three Dinakaran staffers who were killed by Azhagiri's rioters were buried?

Or will it take place in a plush star hotel under the auspicious of the Telecom Spectrum beneficieries?

Anonymous said...

மறப்போம், மன்னிப்போம் என்று ‘உருக்கமான' அறிக்கைகள்,
‘கண் கலங்கும்' பேட்டிகளை,
‘நல்ல கழக குடும்பம்' பற்றி கலைஞரின்
‘கவிதை'களை இனி எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. இவர்கள் பிரிந்தாலும் ,கூடினாலும் தங்கள் நலனை கவனிக்கத் தெரிந்தவர்கள்.
”இவர்கள் சேர்ந்தாலும்,கூடினாலும் மொட்டையடிக்கப் படப்போவதென்னவோ தமிழக மக்கள்தான்.”

இல்லை, இந்திய மக்களை.

Hariharan # 03985177737685368452 said...

தெரு நாய்கள் கார்த்திகை மாதத்தில் கடித்துகுதறிக்கொள்ளாமல் இணக்கம் காட்டிக்கொள்வது எதற்கு என்பதை ஊரார் அறிவார்!

கழக தலைமை குடும்பத்தின் உறுப்பினர்கள் இணக்கம் காட்டுவது மத்திய அமைச்சர் பதவிகளால் கிடைக்கும் பெருத்த பல்லாயிரம் கோடி ஊழல் பணத்தை பங்கிட்டுக்கொள்ளவே.

பெரம்பலூர் ராசாவை விட டிடிஎச் திட்டத்தில் ரத்தன் டாடாவையே மிரட்டிய தயாநிதி-கலாநிதியின் தயவு கருணாநிதிக்கு தேவையாக இருக்கிறது ஸ்பெக்டிரம் அலைவரிசை பல்லாயிரம் கோடி ஊழல் பணத்தை தமிழீன "ப்ரூட் லாங்வேஜ்" குடும்ப தனிச் சொத்தாக்கிக் கொள்வதற்கு!!

அழகிரி போன்ற தெரு ரவுடியால் கழகத்தின் மத்திய அமைச்சர் பதவியைக்கொண்டு என்ன ஆதாயம் கிட்டிவிடும் தமிழீன கழகத்தலைமைக்கு??

ஊழலில் ஊறிப்போன மனச்சாட்சி அற்றவர்கள் குடும்பமாக இல்லாவிட்டால் என்ன இணைந்தால் தான் என்ன மாற்றம் தமிழகத்தின் சாமானிய பொதுஜனத்துக்கு???

மணிகண்டன் said...

Very Good News !

Anonymous said...

இவர்கள் ஒரு நாள் அடித்து கொள்வார்கள், மறு நாள் சேர்ந்து கொள்வார்கள், எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? அவர்களின் நிலை அப்படியே தானே இருக்கிறது?

Anonymous said...

veetile irukkum pombalainga tamil naatu politics le mudivu edukkaraanga.. avanga kudumba kashtam theera, tamil naatu makkalai vechu velayaadraanga...

அச்சுப்பிச்சு said...

நிதானமாக சிந்திப்போம். தமிழ்நாட்டை ஆளுவது திருவாரூர் சோழன் என்று ஆனபிறகு, இளவரசர்களுக்குள் சண்டை சச்சரவில்லாமல் இருப்பது நாட்டு மக்களுக்கு நல்லது. அரசன் இருக்கும்போதே நாட்டைப்பிரித்து கொடுத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் இவர்கள் சண்டையில் தமிழ்நாடே பற்றியெரியும்.

அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும், அவர் இருக்கும்போதே குடும்ப சச்சரவுகள் நீங்கி இளையவர்கள் ஒற்றுமையாக இருந்தால் நாட்டுக்கு நல்லது. அவர் குஷியாக கவிதை புனையலாம்!

அச்சுப்பிச்சு

Anonymous said...

They joined together for hiding all the corruption news especially spectrum. There is no use for tamil nadu people. what is their answer for families of Muthuramalingam,Gopi & elango all innocent killed in dinakaran office

Krish said...

அடுத்த முறை "அம்மா" வந்து இரும்புக்கரம் கொண்டு தடுத்தால் ஒழிய, இவர்களின் கோட்டம் அடங்காது. ஊழலுக்கு ஒரு பட்டம் இருந்தால் அதை ஜெயலலிதாவிற்கு கொடுக்கலாம் என்று சொல்லும் கருணாநிதி, தனக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதை சொல்ல முடியுமா? இல்லை சாதாரண கேசட் கடை வைத்திருந்த மாறன்கள் எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் (1996-2001) அடைந்தார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்களுக்கெல்லாம் ஊழல் பற்றி பேச அருகதையே கிடையாது!

காடு வெட்டி குருவை உயர் நீதி மன்றம் ஜாமீனில் விடுவிதிருப்பது மும்பை தாக்குதல் செய்திகளால் அப்படியே அமுங்கி விட்டது. கருணாநிதி யை விட 'அந்தர்" பல்டி அடிப்பவரை, சுயநலக் காரரை பார்க்கவே முடியாது! தீவிரவாதிகளைப் போல, நாட்டை அழிக்கும் "புற்று நோய்கள்" இந்த அரசியல்வாதிகள். இவர்களே போதும், நாட்டை குட்டி சுவராக்க!

ஒளிவிளக்கு said...

*****/////தெரு நாய்கள் கார்த்திகை மாதத்தில் கடித்துகுதறிக்கொள்ளாமல் இணக்கம் காட்டிக்கொள்வது எதற்கு என்பதை ஊரார் அறிவார்!////*****

செம்மமமமமமம ஹாட் மச்சி.....

(ஆற்காட்டுக்கு ரொம்பநாளா
ஒரு கேள்விக்கு பதில் தெரியலையாம்
பதில் தெரிந்தவஙக் சொல்லுங்கப்பா...
தமிழ்நாடின் ஒளிவிளக்கு யார்?)

குப்பன்_யாஹூ said...

போயஸ் தோட்டத்துல இருந்து அம்மா விரட்டிடாங்க போல. சசிகலாக்கு அழஅகிறியே பரவா இல்லை போல என்று உணர்ந்திருப்பார்கள்.

இறந்து போன அந்த மூன்று அப்பாவி தினகரன் ஊழியர்கள் ஆண்மா ippodhuthaan சாந்தி அடையும்.

வைகோ இனிமேல் சண் டி வி ல வர மாட்டாரா.


குப்பன்_யாஹூ

Anonymous said...

Money is thicker than blood!

KaalayaarIraivan said...

பதவி வெறிக்காகவும், பணத்தாசைக்காகவும் இந்த தேவனுக்கு அடியவர்கள் (தமிழில் பிரித்து எழுதுக: தேவன் + அடியா) என்ன வேனாலும் செய்வார்கள். இவர்கள் அனைவரின் அந்தம் தமிழகத்தின் ஆதி.

இறைவா !!!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றேமது அன்னை கை விலங்குகள் போகும்? என்றேமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

paarvai said...

இந்த கூத்தெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்தது தான். திமுக தலைமைக்கு வரும் தேர்தலை எதிர்கொள்ள நல்ல பிரச்சார மீடியா தேவை. தங்கள் புளுகு மூட்டைகளை மக்களை நம்ப வைக்க இதெல்லாம் தேவை. இன்னும் பாருங்க இட்லி வடையாரே.....மதவாத பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டார் நம்ம அரசியல் சாக்கடையார் ஆன கலைஞர்.

மாயவரத்தான்.... said...

மேட்டரே புரியாம பேசக்கூடாது. மாறன் இருக்கிற வரைக்கும் சென்ட்ரல் 'டீலிங்' எல்லாம் அவராலத் தான் நடந்திச்சி.

அவரு போன பிறகு டீலிங் தொடர அவரோட பையன அனுப்பினாங்க. அவரு என்னடான்னா டீலிங் 'நமக்கு' இல்ல, 'எனக்கு' மட்டும் தான்னு போக ஆரம்பிச்சாரு. அடடே, அப்படீன்னு இதான் சாக்குன்னு கழட்டி விட்டாங்க.

உடனே நம்ம அடுக்குமொழி பந்து அமைச்சருக்கு எல்லாம் சுலுவாகிடுச்சு. பூந்து வெளயாட ஆரம்பிச்சாரு. அங்கே தோண்டினேன்னு காண்ட்ராக்ட் எடுத்து அதில காசு. அதை இங்கே கொட்டினேன்னு அதுக்கும் காசு. வழக்கம் போல பங்கு வரல.

அடப்பாவிகளான்னு சொல்லிட்டு கூஜாவை உட்கார வெச்சா, அவரு அலைவரிசையில புகுந்து விளையாடப்போறாருன்னு தகவல் வந்திச்சு.

ஆஹா இதென்னடா வம்பாப்போச்சு? தென்கிழக்காசியாவில முதல் பணக்காரக் குடும்பம்கிற தன்னோட ஸ்டேட்டஸ் காணாமப்போயிடும் போலருக்கேன்னு புரூட்லாங்க்வேஜை அவசர அவசரமா அனுப்பினாங்க. முதல் கட்ட அலைவரிசையில சுனாமி. ஆனாலும் எதிர்கட்சிகள் பிரச்னை பண்ண ஆரம்பிச்சப்புறம் அதையே சொல்லி நம்ம கூஜா அடுத்த ரவுண்டு கல்லா கட்டி 'எனக்கே எனக்கா'ன்னு பாட்டு பாடி வெச்சுக்கிட்டாராம். இந்த மேட்டர் காதில விழுந்தவுடனே, "அடப்பாவி, நீயும் அந்த மாதிரிதானா?"ன்னு கேட்டுட்டு என்னடா பண்ணூறதுன்னு யோசிச்சாங்க, எவன் எவனோ அடிச்சிட்டு போறாதுக்கு நம்ம ஆளையே திரும்ப கூப்பிட்டுக்குவோம் அப்படீன்னு கூப்பிடுறாங்க.

அதான் மேட்டரு.

அதுவுமில்லாம வர்ற தேர்தலில காங்கிரஸுக்கு சங்குன்னு புரிஞ்சிடிச்சி.. அதனால 'பண்டாரப் பரதேசிகள்'கிட்ட திரும்ப கூட்டணி பிச்சை கேட்கணுமே.. அதுக்கு சரியான ஆளு, நம்ம கல்லுளி மங்கன் தான்.

Anonymous said...

Now the King's family fortunes back in Top 10 in Asia and Top 20 in the World. For details grab a copy of Forbes.

ஜோ / Joe said...

இது வரை மாறன் பிரதர்ஸை தலையில் தூக்கி வச்சு ஆடுன இட்லிவடை ,சட்னிதோசை ,கோழிக்கறிஆப்பம் வகையறாக்கள் எப்படி தொபுகட்டீர்ன்னு கீழே போடுவ்வாங்க பாருங்க.

விஜய் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணு்ம் ஐயா. இவனுங்க சண்டையினால் மூன்று உயிர்கள் போச்சே, அது எதற்காக?
அப்போ கொலைஞர் தொலைகாட்சி இனிமேல் கிடையாதா?
மானாட மயிலாட இனிமேல் கிடையாதா?

பாவம் விஜய்காந்த். அவர் தான் ரொம்பவே பாதிப்படையப் போகிறவர்.

ப்ரியா said...

இட்லிவடை,
இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க???

Silly Village Girl said...

Namma Kudumbam!!! Nalla kudumbam!!!

Anonymous said...

look at today's Front page...The Patchup has been officially announced

இ.வா. கழகம் said...

/////ப்ரியா said...

இட்லிவடை,
இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க???////

ஒரு மனுசன் நொந்து இருக்கும்போது
ப்ரியா எல்லாம் காமெடி
பண்னுது என்ன கொடுமை இ.வா..

Anonymous said...

இது வரை மாறன் பிரதர்ஸையும், சன் டி.வி.யையும் திட்டிக் கொண்டிருந்த ஜோ, சிங்கம் - அல்லக்கை & கோ., மீன்கறி, கஞ்சாக்குடிக்கி வகயறாக்கள் இனிமேல் அவர்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் பாருங்கள்.

Mani said...

I have requested many times to Dinamalar do not insert the smiling picture of our Perusu Karuna...Now Im requesting ot Idlyvadai also...Please dont Insert the smiling picture of MK

Once he stop his smiling then only our TN people can smile...in our life...(Let him die soon...Tamilnadu Kapatrapadattum..)

//அடுத்த முறை "அம்மா" வந்து இரும்புக்கரம் கொண்டு தடுத்தால் ஒழிய, இவர்களின் கோட்டம் அடங்காது.// It is a very good point by Krish...

Bart said...

Heartfelt condolences to:
a) Dinakaran dead and affected victims
b) Gaptan Viji, hereon
c) Madurai movie and cable viewers
d) Kollywood, hereon
e) Raasa
f) Tamilnadu voters...

Anonymous said...

//ஜோ / Joe said...
இது வரை மாறன் பிரதர்ஸை தலையில் தூக்கி வச்சு ஆடுன இட்லிவடை ,சட்னிதோசை ,கோழிக்கறிஆப்பம் வகையறாக்கள் எப்படி தொபுகட்டீர்ன்னு கீழே போடுவ்வாங்க பாருங்க.
//

ஜோ,

உங்களுக்கு வெக்கமே கிடையாதா? மதுரை தினகரன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டபோதும் இப்படித்தான் ஒரு கமெண்ட் போட்டீங்க.

இப்படி சுயபுத்தியே இல்லாம கருணாநிதியே தலைவர்ன்னு எதுக்கெடுத்தாலும் சப்பைகட்டு கட்டுற பொழப்புக்கு, என்னத்த சொல்ல.

Anonymous said...

பாகப் பிரிவினையும் பங்காளிகளும்
செல்லமுத்து குப்புசாமி

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=604

அமிர்தவர்ஷினி அம்மா said...

இவர்கள் சேர்ந்தாலும்,கூடினாலும் மொட்டையடிக்கப் படப்போவதென்னவோ தமிழக மக்கள்தான்.

உண்மைதான்

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அந்த கூத்தாடிக்கேஏஏஏஏ சோதனை வந்தா எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்:-))

ப்ரியா,
//இட்லிவடை,
இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க???
//
அவங்க‌ இட்லி\வடையிலேருந்து (நொந்த) நூடுல்ஸ் பண்ணுவாங்க‌:-)

Srinivasan said...

Nandini summons karikalan to kadambur in a bid to separate chola kingdom. The proposal is to divide the kingdom into 2; the region north of kollidam will be given to karikalan and southern region be given to Maduranthankan. The result will be PEACE. ~ thanks Ponniyin selvan.
You people are so inular and do not see the magnanimity of our grandpa here. Let my son Stalin have Chennai and Alagiri will have Madurai. And my nears and dears should not be out-cast. I give them Delhi and north. Let Kalaignar TV and SCV merge and our total worth beat Ambhani brothers....Vazhgha anna (makkalukku potta) namam...valargha dravida iyakkam