பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 03, 2008

கருணாநிதி அரங்கேற்றிய கோமாளிக்கூத்து - ஜெ அறிக்கை

முதலமைச்சர் கருணாநிதி, மாறன் சகோரர்கள் குடும்ப சமரசத்தின் விளைவாக மக்களுக்கு எழுந்துள்ள கேள்விகளுக்கு, முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

1.12.2008 அன்று முதலமைச்சர் கருணாநிதி அரங்கேற்றிய கோமாளிக்கூத்து ஊடகங்கள் பயனடைவதற்காக நடத்தப்பட்டதே தவிர, அதை எவ்விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வெளிப்படையான விரோதத்தைப்போக்கி முறிந்த உறவை மீண்டும் புதுப்பிக்கும் விதத்திலோ அல்லது இரண்டு போரிடும் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிகமான போர் நிறுத்தம் எனும் விதத்திலோ அல்லது இரண்டு வணிக நிறுவனங்களுக் கிடையே ஏற்பட்ட நிதி உடன்பாடு என்றோ இந்தக் கேலித்கூத்தை கருத்தில் கொள்ளலாம்.

அவர்களுக்கிடையே நிகழ்ந்த பரிமாற்றம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை ஊடக நிகழ்ச்சியாக ஆக்கியதன் மூலம், இந்த கோமாளி நாடகம் குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்தையும், கணிப்பையும் தெரிவிக்க கதவுகளை திறந்து விட்டிருக்கிறார். இதற்கு முன்பு கூடகண்ணீர் ததும்பும் கட்டுரைகளை எழுதியும், கனல் கக்கும் கவிதைகளை புனைந்தும், குடும்பத் தகராறை பொது மேடைக்கு கருணாநிதி எடுத்து வந்து விட்டார்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள குடும்ப போர் நிறுத்தம் அல்லது உடன்படிக்கை குறித்து பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்லது ஆர்வம் உள்ளவர்கள் விமர்சித்தால் அது குறித்து கருணாநிதியால் புகார் கூறமுடியாது.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களை திருப்திபடுத்தும் வகையில் தலைவனுக்கு ஒன்று, மூத்த மகனுக்கு ஒன்று, இளைய மகனுக்கு ஒன்று, மற்றொரு வீட்டின் தலைவிக்கு ஒன்று என ஏற்கனவே தமிழ்நாடு பல பாகங்களாக பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய புது உடன்படிக்கையின் படி, ஏற்கனவே கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வைத்திருந்த தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் மாறன் சகோதரர்களுக்கு கொடுக்கப் பட்டதா? இல்லை, கேபிள் டி.வி வியாபாரத்திற்கான ஏகபோக உரிமை மாறன் சகோரர்களுக்கு கொடுக் கப்படும் என்ற உத்ரவாதம் அளிக்கப் பட்டுள்ளதா? கருணாநிதியின் குடும்பத் தகராறு குறித்து அவருடைய கவிதைகளையும், கடிதங்களையும் திரும்ப திரும்ப மக்கள் மீது திணித்து, மக்களை சலிப்படையச் செய்ததோடு அல்லாமல், அவர் நடத்திய "உடன்படிக்கை கண்காட்சிக்கும்' கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கு, இந்த பேரத்தில் உள்ள அம்சங்களை தெரிந்து கொள்வதில் எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்தியதாக சொல்லப்படும் மனக்கிலேசங்களையும், வேதனை களையும் தெரிந்து கொள்வதில் அவ்வளவு அக்கறை இல்லா விட்டாலும், சண்டைக்காரர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களின் கதி என்ன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

பிஎஸ்என்எல் ஒப்பந்தப்புள்ளியில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்கு, மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தான் பொறுப்பு என்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தற்போதைய கதி என்ன?

60,000 கோடி ரூõபய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினகரன் பத்திரிக்கையில் தினந்தோறும் வெளியிடப்பட்டு, சன் தொலைக்காட்சியிலும் மணிக்கு ஒருமுறை என்று மணிக்கணக்கில் ஒளிபரப்பப்பட்ட குற்றச்சாட்டுக் களின் நிலை என்ன?

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரிக்கு எதிராக கலாநிதி மாறனால் கொலை, சொத்துக்கள் தீயிட்டு சேதப்படுத்தியது, கொள்ளையடித்தது போன்ற குற்றச்சாட்டுக்களின் நிலைமை என்ன?

குடும்ப உறுப்பினர்களின் பார்வைக்கு தங்களுடைய குடும்பம் மிக உயர்ந்த குடும்பமாக தெரிந்தாலும், மேற்படி பிரச்சனைகள் குடும்ப உடன்படிக்கையின்படி பேரில் நிரந்தரமாக அமைதி அடையச் செய்யக்கூடிய பிரச்சனைகள் அல்ல. அல்லது ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு தீயினால் ஏற்பட்ட சேதமும், ஒவ்வொரு ஊழலும் மற்றும் அனைத்து பிற குற்றங்களும் இரண்டு குடும்பங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடிய அளவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற தற்போதைய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறாதா?

இன்னொருபுறம் எழுகின்ற கேள்விபேரனுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படப் போகிறதா?

அரசு கேபிள் நிறுவனம் மூடு விழா திட்ட முறை குறித்தும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப் படவேண்டும்.அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா? அல்லது மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில், பார்க்க தகுதியற்ற, பார்க்க சகிக்காத, யாரும் பார்க்காத, பயனற்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு தன் பணியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?

இவை அனைத்தையும் தமிழக மக்களுக்கு விளக்கக்கூடிய கடமை முதலமைச்சருக்கு உண்டு. இரு குடும்பங்களுக்கு இடையில் சண்டை நடந்து கொண்டிருந்தபோது, போர் நிருபராக பணியாற்றிக் கொண்டு மனம் நெகிழக்கூடிய கதைகளை எழுதி கருணாநிதிக்கு போர் நிறுத்தம் ஆனவுடன் அது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை உண்டு.
இந்தப்போரில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் மனம் மாறிவிட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு மனம் இருக்கிறது என்று கூறினார் கருணாநிதி. இது வெறும் மனமாற்றமா? இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து, இதயமே மாற்றப்பட்டது போல் அல்லவா தோன்றுகிறது? இதயம் இனித்தது என்றார் கருணாநிதி.

முதலமைச்சர் சொன்னதுபோல் இந்த இருதய மாற்றம் ஏற்படுவதற்கு புது இதயத்தைக் கொடுத்த நன்கொடையாளி யார்? கருணாநிதி குடும்பத்தின் அரசியல்உயிரிகள் முறை, மாற்றி பொறுத்தப்பட்ட புது இதயத்தை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நீக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

உடன்படிக்கையினால் எழும் இந்த வினாக்களுக்கெல்லாம் பதிலளிக்க கருணாநிதி விரும்பாவிட்டால், உடன்படிக்கையின் மூலம் ஏற்பட்டது மனமாற்றம் அல்ல, வெறும் பணப்பரிமாற்றம்தான் என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டியிருக்கும்.
( நன்றி: மாலை சுடர் )

21 Comments:

நல்லதந்தி said...

ஒரு வாரத்துக்கு முன் தான் மாறன் சகோதரர்களைத் திட்டி ஒரு நீண்ட அறிக்கையை விட்டார் கலைஞர்.அதற்குள் என்ன மனமாற்றம் இருக்கப் போகிறது.கருணாநிதியும்,அவரது வாரிசுகளும் சன் டிவியைப் பார்த்து பயந்து விட்டார்கள் என்பதைத் தவிர!.

Srinivasan said...

Can anyone guess the monetary worth of kalaignar's family which was nothing before 2 decades...Let me start with it

50000 crores ???

gopi said...

Super NETHI ADI from JJ.

Lets wait and see how our great Manjal Kavignar reacts to JJ ??!!!

ஹரன்பிரசன்னா said...

யார் எழுதிக்கொடுத்தது என்று தெரியவில்லை. செமயாக இருக்கிறது. :))

gopi said...

Srinivasan said...
Can anyone guess the monetary worth of kalaignar's family which was nothing before 2 decades...Let me start with it

50000 crores ???
-----------------------------------

Srinivasan, enga irukeenga ... when Spectrum Oozhal itself is worth more than 65,000 crores ?/!!!

Please, dont underestimate thala Manjal Kavignar's capacity .....

MALAIYAIYEY VIZHUNGUCHAAM ORU MALAI PAAMBU

ANDHA MALAI PAAMBAIYAE VIZHUNGI EAPPAM VIDUVAAR ANNAN MK......

Ippo sollunga !!!!!!

Sethu Raman said...

what are the details of the assets declared by M.K. in 2006 election time? I think the media gave only a figure of 5 crores or so -

Kamal said...

நியாயமான கேள்விகள்.....
இதற்கு பதில் தான் யாருக்கும் தெரியாது....கலைஞர் உட்பட...

Anonymous said...

@Srinivasan

I think 50000 crores is just a pocket money compared to their total assets. Thatz a figure for a UPA minister.

I wud put THE ENTIRE FAMILY'S WORTH at minimum 10 Lakh crores in Indian rupees. Forbes could put them in top 10 in Asia (Not South Asia) and in top 50 in the World after this Financial meltdown, which saw many heavyweights crumble. Our Kingdom with hard cash everywhere like the King of Brunei will top the charts.

Anonymous said...

Raja and other DMK sycophants wud be shitting in their dhoties on seeing this re-union.

Guruprasad said...

The only answer we will get is a poe with the following sentiments
1. Pillai illatha Paapaathi
2. Kudumbam illatha koothiya
3. peranum, magangalum ondraaga searntha oru soothiran kudumbathai parthu poruthukka mudiyatha mysore maharajavin hehheh hehheh ellam pesuvatha?

what else can we get from our MK? I am wondering why not JJ, or even some fundamentalist outfit, once file a case against MK stating he is fanning jaathi-reethiyana kalavarangal by talking about paapaara jaathi! There will be atleast one use from these fundamentalist outfits...instead of filing case against Rajini saying he "izhivupadufithied" bagavat gita, or against Khusboo etc...

Oh by the way, the entire "arikkai" seems like it was ghost written by CHO...where else we can get such nakkal, company-to-company dealing matter and all?

Arasu said...

\\ ஹரன்பிரசன்னா said...
யார் எழுதிக்கொடுத்தது என்று தெரியவில்லை. செமயாக இருக்கிறது. :))
//

IV-yaga irukkumo?

-Arasu

Anonymous said...

Ivanunga akkapor thanga mudiyala pa.. :)

Anonymous said...

”மைனாரிட்டி அரசு” என்ற வார்த்தை இல்லாததே இது ஜெ எழுதவில்லை என்பதைக் காட்டுகிறது

Anonymous said...

நாடே கொந்தளிப்பில் இருக்கும்போது ராகுல் காந்தி - இரவு முழுவதும் பார்ட்டியில் (சனிக்கிழமை இரவு)

http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&task=view&id=21442&sectionid=4&issueid=82&Itemid=1

'எங்க பாட்டி இருந்திருந்தா.... கதையே வேற..' - ப்ரியங்கா வாத்ரா

http://economictimes.indiatimes.com/News/Indira_Gandhi_would_have_acted_differently_says_Priyanka/rssarticleshow/3774485.cms

Srinivasan said...

@ gopi

Ammadiiii....I have grossly underestimated their capacity :-(

Anyways, thanks for the wisdom

Srinivasan said...

vayasu kaalathula avarai ivvalavu kelvi ketta pavam enna pannuvar...

"enghal veetil ella naalum kaarthigai...lalala nu SA Rajkumar mathiri pattu paduvara illa namma urupadi illadha kelvikkellam badhil solluvara?"

kaathigai nu paada mattar..adhu thirudargal(Hindus) pandigai....enghal veetil ella naalum bakrid nu paduvar

sriram said...

செம காட்டு பா!! :-) I am totally with JJ in this case.People have all the rights to know about the status these allegations , just like the way Moo ka washed his loins in the newspapers everyday.

கிங்ஆப் சென்னை said...

எல்லாம் பணமயம்... அப்படியே பயமும்தான். இவங்க டீவியை யாருமே பாக்குறதில்லை. அதனால மாறன் காலில் விழுவதே நல்ல வழி அப்படினு யோசிச்சி குடும்பமே கவுந்துடுச்சி.

Anonymous said...

ஜெயலலிதாவுக்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்க அருகதை இருக்கிறதா

டான்சி வழக்கில் அது என் கையெழுத்தே இல்லை என்றாரே அதுவும் நீதி மன்றத்தில் அது எப்படி

உலகமே வியக்கும் வண்ணம் தன் வளர்ப்பு மகனுக்கு கல்யாணம் செய்தாரே அது எப்படி

அந்த வளர்ப்பு மகன் இப்ப வளர்ப்பு மகன் இல்லியாமே அது எப்படி

வருமான வரிக்கணக்கில் இத்தனை குளறுபடி வைத்துக் கொண்டு வழக்கை இழுத்தடிக்கும் ஜெயலலிதா போன்ற கீழ்த் தரமான ஆட்கள் கருணாநிதி போன்ற உலகமஹா கொள்ளையன்
நமக்கெல்லாம் எப்பங்க விடுதலை

Anonymous said...

'கருணாநிதியின் ஆட்சி களவாணிப்பய ஆட்சி' என்று சும்மாவா சொன்னார்கள்?

ந.தம்ழ் செல்வன் said...

ஒரு குற்றத்தை சுட்டிக்காட்டும் பொழுது நாம் அதற்க்கு தகுதியானவரா
என்று சிந்திக்க வேண்டும்.
கருணாநிதியின் குடுமப அரசியலால் தமிழகம் பாழ்பட்டுக் கொண்டு இருப்பதை யாவரும் அறிந்ததே.நாட்டை பாதிக்காதவரையில் அது அவர்களின் குடும்ப விசயம்.ஆனால் கருணாநிதியின் குடும்ப அரசியல் அப்படிப்பட்டது அல்ல.
ஆனால் இதையெல்லாம் சொல்ல செயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கிற்து? இவரும் தோழியும் செய்த அரசியல் நாடு மறக்கவில்லை.
என்ன செய்வது? நம் அரசியல் அமைப்பு அப்படி.நம் மக்களின் சிந்தனையும் எப்படி எப்படியோ.இந்தக் கும்பல் சனநாயக அமைப்பிலோ அல்லது மக்களின் சிந்தனையிலோ மற்றம் வராமல் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.