பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 29, 2008

காதும் காது வைத்த மாதிரி...

இன்று வந்த இரண்டு நியூஸ்...

காது-1

எழும்பூரில் வாலிபரின் காதை கிழித்த சப்-இன்ஸ்பெக்டர்

எழும்பூர் ரெயில் நிலையத்தை யொட்டி மாநக ராட்சிக்கு சொந்தமான பொதுகழிப்பிடம் ஒன்று உள்ளது. அங்கு பராமரிப்பு பணி செய்து வருபவர் வெங்கடரமணய்யா (வயது 35) சம்பவத்தன்று கழிப்பிட சுவற்றில் ஏராள மான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஏகாம் பரம் இதை பார்த்தார். வெங்கட ரமணய்யாவை கூப்பிட்டு மாநகராட்சி சுவற்றில் போஸ்டர் ஒட்ட எப்படி அனுமதித்தாய் என கேட்டு முகத்தில் லத்தியால் அடித்தார், அதோடில்லாமல் அவரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டுசென்று அங்கு வைத்தும் அடித்து உதைத்துள்ளார். இதில் வெங்கடரமணய்யாவின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் மயங்கி விழுந்தார்.

அவரை சினிச்சைக்காக ராயபேட்டை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது காதை பரிசோதித்த டாக்டர்கள் நரம்பு பாதிக்கப்பட்டுள்ள தாகவும் இன்னும் 3 மாதங்கள் ரத்தம் கசியும் என தெரிவித்தனர். சிகிச்சை பெற்றுவந்த அவரை போலீசார் மிரட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

காது-2
ரூ.50 தராததால் நண்பரின் காதை கடித்து துப்பிய வாலிபர்

வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் அருள் (19), அதே பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (19) நண்பர்கள்.

இருவரும் ரூ.50 பந்தயம் வைத்த கோலிக்குண்டு விளையாடினார்கள். இதில் முனியாண்டி தோல்வி அடைந்தார்.

இனால் அருள், முனியாண்டியிடம் ரூ.50 தருமாறு கேட்டார். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அருள் முனியாண்டி மீது பாய்ந்தார். வெறி பிடித்தவர் போல் மாறிய அவர் முனியாண்டியின் காதை கடித்து துப்பினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

எம்.கே.பி. நகர் இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

6 Comments:

Anonymous said...

வர வர இட்லி வடை தினத்தந்தி மாதிரி ஆயிடிச்சு !!!

வடுவூர் குமார் said...

மொபைல் மீனா - சூப்பர்.

கொடும்பாவி-Kodumpavi said...

நெசமாலுமே உங்களுக்கு செய்தியே இல்லையா..? முக்கிய செய்திகளை போட்டு.. இதை கொசுறு செய்தியா போட்டிருக்கலாம்.. இ.வ க்கு காப்பி பேஸ்ட்க்கு கூட நேரமில்லையா.. ?புது வருஷம் வருதுய்யா இந்த வருஷ சூளுரை என்ன?

Anonymous said...

இது உண்மையாக இருக்-காது என்று நினைக்கிறேன்.

மடல்காரன்_MadalKaran said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இட்லி வடை மற்றும் அவரின் வாசகர்களுக்கும்.
அன்புடன், கி.பாலு

Cinema Virumbi said...

காதோடுதான் நான் எழுதுவேன்!

இப்படியும் இருக்குமா? சே! சே! இருக்காது !
இதில் ஏதோ சூது வாது கீது!
இதைப் படிப்பவர் மனம் நிஜமாகவே உருகாது?
அமைதி விரும்பும் தமிழ்நாட்டுக்கு இது அடுக்காது!
ஐயோ! இந்தக் கொடுமையை எல்லாம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறதே என் காது!
ஞாபகம் வருதே தினம் தூங்கும் போது!
தெலுங்குக்காரர் யாராவது சொல்லக் கூடாதா? 'இதி நிஜம் காது '
பிரச்னையைத் தீர்க்க யாராவது போனார்களா தூது?
சரி, இப்போ எப்படியிருக்கு கிழிஞ்ச ரெண்டு பேர் காது?

நன்றி!
சினிமா விரும்பி