பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 02, 2008

சூரியனை சிரிக்க வைத்த இரு கிரகங்கள்.

நிலவை சிரிக்க வைத்த இரு கிரகங்கள் என்று தான் டைட்டில் இருக்க வேண்டும். ஆனால் நே‌ற்று இரவு வான‌த்தை‌ப் பா‌ர்‌த்தவ‌ர்களு‌க்கு ஒரு அபூ‌ர்வ கா‌ட்‌சி தெ‌ன்ப‌ட்டிரு‌க்கு‌ம். அதாவது ‌நிலாவை‌ப் பா‌ர்‌க்க முடியாம‌ல் க‌ண் கூசு‌ம் அள‌‌வி‌ற்கு ‌நிலா‌வி‌ன் அரு‌கி‌ல் ‌வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் தோன்றியதுதா‌ன் அது. பார்த்தது சூரியனா ? நிலவா என்று தமிழ் மக்கள் குழம்பி போனார்கள்....

ஏழைக்கேத்த பொரியுருண்டையாக (எள்ளுருண்டை விலை அதிகம்) தினத்தந்தியில் வந்த இந்த படங்கள் இன்று காலை தான் எனக்கு கிடைத்தது.

நிலவின் ஓளியை பற்றி பேசும் முன் சூரியனின் ஒளி பற்றி...

சூரியனிலிருந்து வரும் வெண்மையான ஒளி, ஒரு குறிப்பிட்ட வண்ண ஒளி கிடையாது. பல வண்ண ஒளிகள் கலந்து கொடுக்கும் வண்ணமே இந்தப் பளிச்சிடும் வெண்மை. (சில சமயம் மஞ்சளாக தெரியும். அப்போது டாக்டரை பார்க்கவும்). இந்த ஒளிப்பட்டையை தான் ஸ்பெக்ட்ரம் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். வெள்ளை ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதனால் தான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்ப வேண்டாம் என்று பெரியவர்கள் இன்றும் சொல்லுகிறார்கள்.

சின்ன கிளாசில் பக்கத்து பையனை பார்த்து காப்பி அடித்தது, நினைவுக்கு வருகிறது..

திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. இவ்வளவு ராமன் வருகிறது உடனே இட்லிவடை ஹிந்து வெறியன் என்று சாயம் பூசாதீர்கள். இது விஞ்ஞானம் ;-)

நேற்று நிலவின் அருகே 2 கிரகங்கள் பிரகாசமாக தோற்றம் அளித்தன.

நிலவின் ஒருபகுதி, மனித முகத்தின் வாய் போலவும், அதற்கு மேலே தோன்றிய இரு கிரகங்களும் கண்கள் போலவும் இருந்தன. நேற்று திங்கள் ஆனால் நிலவின் அருகே தோன்றிய கிரகங்கள் வியாழன் மற்றும் வெள்ளி. இந்த இரண்டு கிரகங்களும் சூரியனை போல காட்சி அளித்த நிலவை நேற்று சிரிக்க வைத்தது. இதை தமிழ் மக்கள் கண்கள் பனிக்க, இதயம் நெகிழ, ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்கிறார்கள்.

சூரியகுடும்பம் பற்றி படித்தால் பலருக்கு அதிர்ச்சியே மிஞ்சும். இருந்தாலும் அதை பற்றி சொல்லுகிறேன்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவை உள்கோள்கள் என்றும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை வெளிக்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. உள்கோள்கள் தமிழ்நாட்டின் தென் பகுதியில் ( குறிப்பாக மதுரையில்) தெரியும். வெளிக்கோள்கள் வடக்கே டெல்லி பக்கம் தெரியும்.

நேற்று இரவு சந்திரனின் இடது புறம் நல்லபிரகாசமான ஒளியுடன் காணப்பட்டது, வெள்ளி (வீனஸ்) கோள் ஆகும். இது சூரியன் மறைந்த பிறகு நிலவில் இருந்து மேல் புறத்தில் தெரியும். நிலவின் உயரே வலது புறத்தில் தோன்றியது வியாழன் கோள் ஆகும். இது வெள்ளியை விட பிரகாசம் குறைவாக இருந்தது. ஆனால் மதுரை பக்கம் இது பிரகாசமாக தெரியும் என்று சென்னை பிர்லாகோள் அரங்க இயக்குனர் கூறினார். மேலும் அவர் கூறியது...

வானத்தில் தோன்றிய இந்த காட்சி அதிசயம் அல்ல. நிலவும் இரு கோள்களான வெள்ளியும் வியாழனும்தான்.

சந்திரன் பூமியை சுற்ற 291/2 நாட்கள் ஆகும். வியாழன் சூரியனை சுற்றி வர 12 வருடம் ஆகும். வெள்ளி சூரியனை சுற்றிவர 224 நாட்கள் ஆகும். மாம்பழத்துக்கு பிள்ளையராரும் முருகனும் சிவனை சுற்றிவில்லையா ? அதே போல மந்திரி பதவிக்கு சுற்றுவது என்ன தவறு. கடவுளுக்கு ஒரு நியாயம் மனிதர்களுக்கு ஒரு நியாயமா ? இப்படி கேள்வி கேட்டால் அதற்கு பெயர் தான் பகுத்தறிவு.

இவை இப்படி அருகருகே வருவது வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். இக்காட்சி இந்த வருடம் கடந்த சில நாட்களாகவே தெரிகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டமாக இருந்ததால் நம்மால் சரியாக பார்க்க முடியாமல் இருந்தது. நேற்று வானம் தெளிவாக இருந்ததால் இந்த காட்சி கண்களுக்கு தெரிகிறது.

இவை எல்லாம் ஒரே சூரிய குடும்பம் தான். அதை பார்க்கும் நமக்கு தான் அது பிரிந்துவிட்டது, சேர்ந்துவிட்டது என்று சொல்லுகிறோம். இது ஒரு வகை illusion என்றார்.

காட்சியை சரியாக பார்க்காதவர்கள் (குறிப்பாக விஜயகாந்த், சரத்குமார், வைகோ) தினகரன், அல்லது சன் நியூஸ் பார்க்கவும்.

இப்போது எல்லாம் பத்ரி விஞ்ஞானம் கலந்து எழுதுகிறார். நாமும் டிரை பண்ணலாமே என்று இந்த முயற்சி. எப்படி இருக்கிறது என்று (கனிமொழியில்) பின்னூட்டமாக சொல்லவும். நன்றி

32 Comments:

Anonymous said...

"அடி தூள்" !

போட்டுத் தாக்கு !

"செம அங்கதம் இ.வ" !

மும்பை நிகழ்விலிருந்து வெளி வந்து விட்டீர்கள் என்பது இந்த பதிவிலிருந்து தெரிக்றது.

நாகை சிவா said...

:))

நல்லா தான் இருக்கு

வெண்பூ said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இட்லிவடை டச்சோட சூப்பரான பதிவு.. உங்க குசும்புக்கு அளவில்லைன்னு தெரியும். ஆனாலும் இது கிராண்ட் நக்கல்... :))))

M Arunachalam said...

IV,

One of the Best posts from you so far. Excellant creativity shown by you. Hats off.

Even though Moon will be the brightest on Pournami Day & subsequently, it will start losing its shine as the days go by & become completely invisible on Amavasya day. It can't expect neither Venus (Velli) nor Jupiter (Viyazhan) to come to its rescue as all three being visible together is a once in a life time phenomenon.

இ.வ.கழகம் said...

தோடா...
வரலாற்றில்
அரசியல் பார்த்துள்ளேன்

அறிவியலில்
அரசியல் இங்குதான் பார்க்கிறேன்

நல்லா கலாய்க்கிற ப்பா..

யோசிப்பவர் said...

நேற்று அந்த ஸ்மைலியை பார்த்துவிட்டு, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத்து, நண்பர்களுக்கு எஸ். எம்.எஸ் அனுப்பினேன். ஆனால் ரொம்ப சீக்கிரமே மொத்த காட்சியையும் மேகம் மறைத்துவிட, நண்பர்கள் ஆளாளுக்கு "ஒன்னும் பிரச்சனையில்லையே?! ஏதாவது கேம் ஆடறியா? என்னைப் பார்த்தா ஒனக்கு கிறுக்கனாத் தெரியுதா"ன்னு தொலைப்பேசி கலாய்ச்சுட்டாங்க. அதனால, "பூமிதான் சூரியனை சுத்துது"னு சொன்ன கலீலியோ கணக்கா கமுக்கமா இருந்துட்டேன்.

ஹலோ! நான் ஒரிஜினலா வானத்துல பார்த்ததை பத்திதான் சொன்னேன். கோபாலபுரம் பத்தி இல்லை!!

Hariharan # 03985177737685368452 said...

ஸ்பெக்ட்ரம் சூரியக்குடும்பத்தில் பிறந்தும் அட்ரஸ் இல்லாமல் போன புளூட்டோவை மு.க முத்து என்பார்கள்.

தமிழகத்தின் சமீக கோராமையான போட்டோவில் வொய் கருத்து புரூட் லாங்வேஜ் மிஸ்ஸிங்?? எனி கருத்து இ.வ??

Anonymous said...

பத்ரிதான் இந்த இடுகையை நடையை மாற்றி எழுதினாரா, இல்லை, பத்ரி
எழுதிய சரக்கிலலிருந்து எழுதி, அத்துடன் உம்முடைய சரக்கை, அதாவது மாவை [மாவோ வை அல்ல:)] கலந்தீரா :). காமாலை
கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
என்பார்கள், அது போல் உங்களுக்கும்
சூரியனே மஞ்சளாக தெரிகிறதா :).உங்கள் தானைத்தலைவர் விஜயகாந்த்
இதைப் பற்றி அறிக்கை இன்னும்
விடவில்லையா?.

Mani said...

Indha theruporukki naaigal yellam onnu senthittanga...Konja naal munnadithanada neenga ellarum sorinaai maathri sandai paooteenga...

Pavamda nanga ellam (Thamilaga makkal)

Anonymous said...

இட்லி வடை,

சோலார் சிஸ்டம் ஃபோட்டோவில துணை(வி) கிரகம் காணோமே?இது பார்ஷியல் எக்லிப்ஸ் போட்டோவா?தெளிவு படுத்தவும்.

Anonymous said...

அமெரிக்காவில் தலைகீழாக தெரிந்தது. அதனால் ஸ்மைலி தலைகீழாக அழுத முகம் மாதிரி தெரிந்தது. அங்கே சூரியக் குடும்பம். இங்கே சூரியக் குடும்பத்தை பார்த்த மக்கள் :-)

Anonymous said...

அமெரிக்காவில் தலைகீழாக தெரிந்தது. அதனால் ஸ்மைலி தலைகீழாக அழுத முகம் மாதிரி தெரிந்தது. அங்கே சூரியக் குடும்பம். இங்கே சூரியக் குடும்பத்தை பார்த்த மக்கள் :-)

Nice Logic

நல்லதந்தி said...

சான்ஸே இல்லை!.இந்த மாதிரி வேறு யாரும் எழுதுவதற்கு!.பட்டைய கிளப்புறதன்னா இதானா?

இலவசக்கொத்தனார் said...

//உள்கோள்கள் தமிழ்நாட்டின் தென் பகுதியில் ( குறிப்பாக மதுரையில்) தெரியும். வெளிக்கோள்கள் வடக்கே டெல்லி பக்கம் தெரியும்.//

ஆக மொத்தம் சென்னையில் இதுங்க தொந்தரவு இன்னும் கொஞ்ச நாளைக்கு இல்லைன்னு சொல்லுங்க! :)

இலவசக்கொத்தனார் said...

//இப்படி கேள்வி கேட்டால் அதற்கு பெயர் தான் பகுத்தறிவு.//

இப்படி கேள்வி கேட்டா அது பகுத்தறிவு இல்லை பகூத் அறிவு.

இலவசக்கொத்தனார் said...

ட்ரேட்மார்க் இவ பதிவு. ரொம்ப நாள் ஆச்சு இப்படிப் படிச்சு!! வெல்கம் பேக். :))

Anonymous said...

Innum sirithu nalkalil Raja ponra kolhal suriyanal Ull vangapattu kanamal poi vidum.Vaiko, JJ, V.kanth pondravargal Black dwarf ahi kankalukku theriyamal marainth viduvargal.

பினாத்தல் சுரேஷ் said...

கெரகம்!

Anonymous said...

//அதாவது மாவை [மாவோ வை அல்ல:)] //

அல்லது பாரா போடும் மாவாவை கலந்து எழுதினாரோ என்னவோ :-)

உதயசூரியன் சரணம் கச்சாமி
இட்லிவடை சரணம் கச்சாமி
நக்கல் சரணம் கச்சாமி

Ravi said...

இவங்க அடிச்சுகிட்டா என்ன இல்ல சேர்ந்துகிட்டா என்ன? ஆனா இவங்க குடும்ப சண்டையில மூணு அப்பாவி உயிர்கள் போயிடுச்சே. Now that they have joined hands, the chances of getting justice to those affected families is even more bleak! I just pray that DMK does not win even a single seat in the forth coming parlimentary and (later) assembly elections! But I know our people would disappoint me again :)

விஜய் said...

Idlyvadai back to form :-)

ஹரன்பிரசன்னா said...

:))))) good one.

Anonymous said...

Karunanidhi daugher having Red rope tied in her hand.. Athu yenna Pagutharivu noola....Udanpirapukal soolungalen

ILA said...

The Best Post of the Month

கையும் பதிவுமாக பிடிபட்ட இட்லிவடை

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

எப்ப சோதிடப் பதிவு தொடங்கினீங்க:-) இந்த பெயர்ச்சியால் பலன் - More of the same?

வெள்ளி = உள்கோள் = மதுரையில் நன்றாக தெரியும்.
வியாழன் = வெளிக்கோள் = வடக்கே நன்றாக தெரியும்.
ஆனால், //வியாழன் கோள் ஆகும். இது வெள்ளியை விட பிரகாசம் குறைவாக இருந்தது. ஆனால் மதுரை பக்கம் இது பிரகாசமாக தெரியும் என்று சென்னை பிர்லாகோள் அரங்க இயக்குனர் கூறினார்// குழப்பறீங்களே? அறிவாலய அரங்க ப்ரொஜக்டர் இயக்குனர் கிட்ட கேட்டு வாங்குங்க, சரியா இருக்கும்.

இளா வேற இப்படி போட்டிருக்கார்!

ஹ்ம், கிரகப் பெயர்ச்சி விளைவா?

இப்படிக்கு,
ஆராய்ச்சி மாணவி.

Anonymous said...

Thalaiva intha pathivu super. Neeyum oru periya arasiyal vathi

r.selvakkumar said...

சமீபகாலங்களில் நான் மிகவும் இரசித்துப் படித்த பதிவு.

வடுவூர் குமார் said...

அருமை - படமும் பாகங்களும். :-)

Anonymous said...

Grand

Oru cinemavil (Kadalikka Neramillai?) Nagesh cholluvar: "Ithunoondu moolailey
evvalo irukku paathiyaa? enru.
So do I admire your fantastic
sarcasm. It is a shining jewel in
your diadem. May you continue to
"enlighten" us thus. One of the
best satires I have read in the
recent past. Keep it up friend.

Anonymous said...

They fight,
We die,
Now they have 2 Television group(son sorry sun,kalaingar)
2 Cable vision.

One thing, no other man in the world has this much brain.

Us ??????

Arasu said...

Back to form...Very good. We are missing this type of articles from IV for some time.

Keep going...

-Arasu

Chuttiarun said...

thanks for your support..

thanks,
thamizhstudio.com