பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 17, 2008

இலவசமாக சர்க்கரைப் பொங்கல்! 70 கோடியில் அல்வா!!

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசம் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவு - இது செய்தி.

சரி என்ன என்ன பொருட்கள் எல்லாம் இலவசம் என்ற பட்டியல் கீழே...


பச்சரிசி 500 கிராம்,
வெல்லம் 500 கிராம்,
பாசி பருப்பு 100 கிராம்,
முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம்

இதை வைத்துக்கொண்டு சக்கரைப் பொங்கள் செய்ய முடியுமா என்று சமையல் குறிப்பு எழுதும் மாமிஸ் அல்லது வீட்டில் சமையல் செய்யும் ஆண்களோ பின்னூட்டதில் சொல்லலாம்.

70 கோடி அல்வா என்ற வாசகத்தை பார்த்து இது ஏதோ ஸ்பெக்டரம் ஊழல் என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த விளக்கம் : அரிசி, வெல்லம், பாசி பருப்பு, முந்திரி,திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றின் இன்றைய மதிப்பு ரூ.40 ஆகும். தமிழ்நாட்டில் 1 கோடியே 99 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அனைத்து கார்டு களுக்கும் சர்க்கரைப் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித் துள்ளது. எனவே இதற்கு சுமார் ரூ.70 கோடி செலவு ஆகும்.

13 Comments:

gopi said...

இட்லி வடை

கட்டுரையை விட அதன் தலைப்பு சூப்பரப்பு

ஆனா ஒரு சின்ன விளக்கம். இவங்க எத்தன கோடி போட்டு எவ்ளோ கிலோ அல்வா கெளறினாலும் :

அவக திம்பாக
அவுக வூட்டுல இருக்கறவக திம்பாக
கட்சிக்காரங்க திம்பாக - அவரின்
மற்ற பல உறவினர்களும் திம்பாக

பாக்கத்தானே போறீக இந்த டகால்டிகள ...

இதுவரைக்கும் :

கெளறி தந்தீக ... திங்க சொன்னீக

இனி :

கெளறி தருவீக ... திருப்பி தருவோம் ... நீங்களே தின்னு தீப்பீக ......

Baski said...

1.ThriuMangalam Election
2.PowerCut
3.Lok Shaba Election Trial

நாரத முனி said...

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே

Anonymous said...

மின்வெட்டு போன்ற பிரச்சனைகளால் தொழில்கள் முடக்கப்பட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதை கலைஞர் நன்கு அறிவார்.

மக்களை வறுமையில் தள்ளி இலவசம் என்ற பெயரில் பிச்சை போட்டு ஓட்டு பொறுக்கப் பார்க்கிறார்.

வியர்வை சிந்தி உழைத்த காசில் பொருட்கள் வாங்கி அதில் சாதா பொங்கல் செய்தாலும் சக்கரைப் பொங்கலாய் இனிக்கும் என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

இலவசக்கொத்தனார் said...

அடுத்த இலவசங்கள் எவை? அப்படின்னு ஒரு டாப் 10 பட்டியல் போடுங்க.

நாகராஜன் said...

இந்த பொருட்களை வைத்து பொங்கல் செய்ய முடியுமா என்று தமிழக தாய்மார்கள் கேட்பதாக “அம்மா” ஆவேசமாக கேள்வி எழுப்பும் நாளை எதிர்பார்க்கிறோம்.

நாகராஜன் said...

இந்த பொருட்களைக் கொண்டு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பொங்கல் செய்ய முடியும் ? என்று தமிழக தாய்மார்கள் ஆவேசத்துடன் கேட்பதாக “அம்மா” அறிக்கை விரைவில் வெளிவரலாம்.

Nilofer Anbarasu said...

//இதை வைத்துக்கொண்டு சக்கரைப் பொங்கள் செய்ய முடியுமா என்று சமையல் குறிப்பு எழுதும் மாமிஸ் அல்லது வீட்டில் சமையல் செய்யும் ஆண்களோ பின்னூட்டதில் சொல்லலாம்.//

எனக்கு தெரிந்து முக்கியமாக நெய், கிஸ்மிஸ், தேங்காய் தேவை. அது இந்த லிஸ்டில் மிஸ்ஸிங் :)

Diet Pepsi மாதிரி ஒருவேளை இது Diet Pongalao?

Itsdifferent said...

Is there anyway, that we can file a PIL to stop these kind of nonsense?

Anonymous said...

Thamizh Puthaandu (Arasa Kattalai)
Thamizhar Thiruvizha
Thamizh Pongal
Pamara, Saamaanyarin Pongal
Idhil ellam, Kismis, Ghee matrum
mundiri paruppugalai edhirpaarkalaama? Ivai ellam
mettukkkudi makkalin, theeyorin, thamizhinaathin edhirigalin
suvaigal anro?! Adhai ellam eppadi thamizhinathalaivarin aatchiyil koduppaargal?

geeyar said...

நாட்டுக்குத் தேவையான எவ்வளவோ இருக்க தேவையில்லாத வேலை பார்க்கிறார். அவர் தமிழக முதல்வர்தான் தமிழ்நாட்டு அரசர் இல்லை என புரியவைக்கணும்

Ramakrishnan said...

மக்களே பிட்சை எடுப்பதை நிறுத்துவோம், நாம் நிறுத்தும்வரை அவர்கள் போடுவதை நிறுத்த மாட்டார்கள். இதனால் நமக்கு என்ன பயன். அவர்கள் நம்மை மேலே கொண்டுவருவதற்காகவே நாம் அவர்களை தலைவர்களாக ஆக்கினோம் ஆனால் அவர்கள் அதை விடுத்து நம்மை பிட்சை காரர்களாகவே இருப்பதை தான் அவர்கள் விரும்ம்புகிறார்கள். எல்லோரும் உயர்ந்துவிட்டால் பின் அவர்கள் எப்படி கலாம் தள்ள முடியும். எப்பொழுது நாம் அறிவிலும் அந்தஸ்திலும் முன்னேருகிரோமோ அப்பொழுதுதான் நமக்கு விடிவுகாலம், இப்படி பிட்சை எடுத்து / வாங்கி கொண்டிருந்தால் எப்போது முன்னேறுவது!!! அவர்கள் இந்த மூன்றாம் ரக அரசியல் நடத்துவதை விடுத்து நல்லாட்சி எப்பொழுது நடத்துவார்கள். அரசியல் வாதிகளே எங்கள் தலைவர்களே உங்களுக்கு எப்பொழுது போதும் என்ற மனது வரும், எங்களுக்கு, நம் நாட்டுக்கு எப்பொழுது விடிவுகாலம் வரும், எப்பொழுது நாங்கள் தன்மானத்துடன் வாழ விடுவீர்கள். இனிப்பு கொடுப்பதற்கு பதிலாக கொஞ்சம் மிளகாய் போடி கொடுங்கள் எங்களுக்கு ரோசம் வரட்டும்.

Balaji, CA, USA said...

Intha thirutta kalaighan ozhinthal vidivukalam arambamakalam. When he dies I will make Chakkarai pongal and distribute. JJ did a very decen job in the last period and unfortunately this stupid people of Tamilnadu could not encourage that good work and got this rougue back.

-Balaji