பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 11, 2008

செய்திகள்

கடந்த சில நாட்களாக செய்திகளை ஃபாலோ செய்ய முடியவில்லை. இன்று தான் செய்திகளை பார்க்க முடிந்தது.

கண்ணில் பட்ட செய்திகள் இவை

1. பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் போலீஸ் காவல் 24-ந்தேதி வரை நீடிப்பு ( எதற்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த சடங்கு என்று தெரியவில்லை )

2. தேனாம்பேட்டையில் இலங்கை ராணுவ தளபதி கொடும்பாவி எரிப்பு ( கோமாளிகள் என்ன செய்வார்கள் )

3. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தாம்பரத்தில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு ( எங்க தெரு குழாயில் தண்ணீ வரவில்லை ஒரு ஆர்ப்பாட்டத்துகு ஏற்பாடு செய்யுங்கள் )

4. தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பை பலப்படுத்த சட்டம்: பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் ( அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் )

5. வெள்ளப்பாதிப்பு கருணாநிதிக்கு ஜனாதிபதி கடிதம். ( பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரியப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் )

6. வங்கக் கடலில் மெலிந்த காற்றழுத்த தாழ்வு நிலை; தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் ( அடுத்த ஜனாதிபதி கடிதம் ரெடி )

7. பவுன்விலை ரூ.9440 ஆக உயர்வு; தங்கம் விலை ரூ.200 அதிகரிப்பு ( அட இதுவும் தினமும் வரும் செய்திதாங்க )

6 Comments:

Nilofer Anbarasu said...

இலங்கை பிரச்சனை என்ன ஆச்சு?

thesun said...

வாழ்க உம் தமிழுணர்வு...!!!
வளர்க உம் சூடு சொரணை(ஏதாவது இருந்தால்)...!!!

Anonymous said...

een software velai puttukichcha. :))

M Arunachalam said...

//1. பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் போலீஸ் காவல் 24-ந்தேதி வரை நீடிப்பு ( எதற்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த சடங்கு என்று தெரியவில்லை )//

The reason is our existing criminal laws, that is, Indian Penal Code (E.P.Co. in Tamil) is so outdated that it did not even envisage such ruthless terrorist attacks & bloody-minded criminals. That is why BJP is crying hoarse to bring in special laws to tackle & contain terror like TADA & POTA but our psudo-seculars, for the sake of minority votes, won't have any of that. They don't care if the country goes to dogs. All they want is vote & power so that they can swindle the country for their own & their families' welfare. For their omissions & commissions, we the people are all suffering now.

Anonymous said...

//இலங்கை பிரச்சனை என்ன ஆச்சு?//

- காவிரி பிரச்சனை என்ன ஆனதோ
- ஒக்கேனக்கல் பிரச்சனை என்ன ஆனதோ
- தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் எரித்துக் கொலையில் என்ன ஆனதோ
- சட்டக் கல்லூரி வன்முறை என்ன ஆனதோ

அதே கதிதான்.

gopi said...

//இலங்கை பிரச்சனை என்ன ஆச்சு?//

- காவிரி பிரச்சனை என்ன ஆனதோ
- ஒக்கேனக்கல் பிரச்சனை என்ன ஆனதோ
- தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் எரித்துக் கொலையில் என்ன ஆனதோ
- சட்டக் கல்லூரி வன்முறை என்ன ஆனதோ

அதே கதிதான்.

----------------------------------

Asathal ANONY..........