பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 03, 2008

மாயாவதியாகும் மயிலாப்பூர்

மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர். அ.தி.மு.க.வில் சமீபகாலமாக அவர் ஓரம் கட்டப்படுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் சேர அவர் முடி வெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சியில் எஸ்.வி. சேகருக்கு முக்கிய பொறுப்பு வழங்க உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி எஸ்.வி.சேகர் என்ன சொல்லுகிறார் ? கீழே...

மாயாவதி கட்சி நிர்வாகிகள் என்னிடம் பேசியது உண்மைதான். மாயாவதியை நானும் விரைவில் சந்திக்க இருக்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சியில் 25 முதல் 30 சதவீத இடங்கள் பிராமண சமூகத்தினருக்கு வழங்கப்படுகிறது. எனவே அக்கட்சியில் இணைவது பற்றி நான் பரிசீலித்து வருகிறேன். பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவது என்று சமுதாய மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைப்ம் என்று கருதுகிறேன். பிராமண சமுதாயத் தினரையும், தலித் மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போகிறேன். எங்கள் உரிமைகளை பெற இணைந்து போராடு வோம். வருகிற 6-ந்தேதி குரு பெயர்ச்சி வருகிறது. அதன் பிறகு மாற்றங்கள் இருக்கும்.

பாராளுமன்றத்துக்கு போவேன் என்று ஏற்கனவே எஸ்.வி.சேகர் கூறி இருந்தார். மாயாவதி கட்சியில் சேர்ந்ததும் உத்தரபிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபை எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.வி.சேகரின் ஒரு நாடகத்தின் பெயர் - எல்லாமே தமாஷ்தான்

15 Comments:

Anonymous said...

sirichu sirichu vaiyuru valikuthu...ungaluku ellame nakkalthan

Sethu Raman said...

ulloorley onaan pidikka theriyadhavan udayarpalayathiley udumbu pidikka ponaanaam! endru oru solavadai undu. sekar will be committing a blunder if he joins the Bahujansamaj, feel he should quit politics and concentrade on his dramas!

Silly Village Girl said...

Yesterday I have commented in your post regarding Achudanandan refereing Sve.Shekar. Today you have posted about him. :)

Anonymous said...

As a Mylaporean, I hang my head in shame at this comedy_MLA SV Shekar, who I thought had some brain. He has shown that he is also pachchonthi and a trash.

Anonymous said...

இட்லிவடை எப்போது மாயாவதி கட்சியில் சேருவார்(கள்)?. :).

Anonymous said...

Ithila enna tamash iruku....Idly vadaiku Brahmin Mayavathi kooda serathu kuthu tha? illai SV Sekar nra thu nala ivvalo nakkala?

நல்லதந்தி said...

//மாயாவதி கட்சியில் சேர்ந்ததும் உத்தரபிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபை எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
மாயாவதி கட்சியில் சேர்ந்ததும் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் சரி! :)

Anonymous said...

Matavathy is another Jeya.Sv sekher may join BJP again.becuase he will get some respect.

enRenRum-anbudan.BALA said...

IV,
I dont understand what is so funny about this news when hundreds of tamashas are happening in TN politics !!! This time, you badly goofed up in your YELLOW comment, sorry ...

Anonymous said...

Mayavathi is more relevant to TN now. The oppression of Dalits by OBCs will stop. The Brahmins will equip the Dalits to tackle the games the OBCs play against them.

Ant-pappan said...

வன்முறையை தூண்டும் மாயாவதியும் பார்ப்பனர்களும் தமிழ்நாட்டின் அரசியலில் புகுந்து அரசியல் நாடகம் ஆடுவதற்காக எஸ்.வி.சேகரை பகடக்காயாக பயன்படுத்துகின்றனர். இந்த மைவெப்துனியா ப்ளாக் போஸ்ட் படியுங்கள்..

ஜயராமன் said...

எஸ்.வீ. சேகர் அவர்கள் மாயாவதியாகலாம், ஆனால், மயிலாப்பூர் ஆகுமா என்பது தெளிவில்லை. பெரும்பாலும் ஆகாது. மாயாவதிக்கு தமிழகத்தில் கொடிநாட்ட இன்னும் பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். தமிழகம் என்பது பிராமண ஆதிக்கத்தை வேரறுத்து மற்றும் தலித்களை வாழவிடாத ஒரு மாநிலம். இங்கு தலித்கள் பிரிந்து அரசியல் பகடைகளாக இருக்கிறார்கள். பிராமணர்களும், தலித்களும் மட்டுமே இன்றும் இந்தியா முழுவதும் வியாபித்துள்ள ஒரே homogeneous ஜாதிக்குழுமம். இவர்களின் பேரைச்சொல்லி இந்தியாவில் நிறைய அரசியல் நடந்திருக்கிறது. ஆனால், இங்கே உண்மையாக ஜாதியை ஒழிக்கவோ, உண்மையாக தகுதியை வளர்க்கவோ ஆளில்லை, நாதியில்லை. இன்று ஆதிக்க வர்க்கமாக வளர்ந்திருக்கும் சில சாதி-இந்து குழுக்கள் இந்திய அரசியலில் புற்றுநோயாக புரையோடி இருக்கிறார்கள். இவர்களின் மறைக்கத்தோணாத ஊழலும், கொள்கையற்ற வெறும் பதவி அரசியலும், அப்பட்டமான வோட்டு வங்கி ஆதரவும் இந்தியாவைப் பிளந்துகொண்டிருக்கின்றன. இதில் மாயாவதி விளக்கில்லை. மாயாவதி ஊழலை வெளிப்படையாக தெனாவட்டாக ஒரு சாதி மறுப்பாக ஏற்று நடத்தும் ஒரு அருவருப்பான கொள்கை கொண்டவர். ஆனால், மாயாவதியின் எழுச்சி - யாதவ், டாகுர், கவுண்டர், தேவர் களின் எழுச்சியின் முடிந்துபோன கட்டத்தைக் குறிக்கும். இது இந்தியாவுக்கு நல்லது. மேலும், பிராமணர்களுக்கும் நல்லது. பிராமணர்கள் தலித்துகளின் தோழர்கள் என்பது அரசியலில் அடையாளம் ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு அரசியல் இல்லாமல் போகும். இது நல்லதுதான். வடக்கே பிராமணர்கள், தலித்கள் இணைந்தால் அது சிறுபான்மையினரை மிஞ்சும். ஆனால், தமிழகத்தில் இந்த இரு இனங்களும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள். இந்த பட்ட மரங்கள் தளிர்க்க நாளாகும். எஸ்.வீ.சேகரால் முடியுமா என்று தெரியவில்லை. இதற்குத்தேவை மாயாவதி போன்று இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு பதிலடி தரத்தெரிந்த ஒரு அரசியல்வாதி.

நன்றி

ஜயராமன்

geeyar said...

சேகர் பேசுவதை கேட்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இனி ஐயர் ஆத்திலே தலித்களை பார்கலாம். இரு சமுகத்திற்கும் இடையே என்னென்ன மாற்றங்களை கொண்டுவறுவார்? தன் வீட்டிற்கு ஒரு தலித் வரனை கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். இனி தலித் இல்லங்களுக்கு அடிக்கடி வருவார், ஒருவேளை சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் ஐயர் என்ற வார்த்தையோடு இனி அம்பேத்கர் பற்றியும் பேசுவார். பொரி(தலித்) யோடு உமி(ஐயர்) கலந்து ஊதி ஊதி தின்னலாம்.

Senthil said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

IdlyVadai said...

//அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி//

என் முகவரி - idlyvadai2007@gmail.com அல்லது
idlyvadai@gmail.com