பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 22, 2008

திமுகவில் அழகிரியின் கை 30 டிகிரி உயர்ந்திருக்கிறது


நேற்று: திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ”நான் இல்லாவிட்டால்… என்ன செய்வீர்கள்” என்று ஆவேசமாக கேட்டார்

இன்று: ”எனது அன்பு தம்பியின் வேண்டுகோளை ஏற்று நான் தேர்தல் பணிக்குழு தலைவராக தொடர்வதற்கு முடிவு செய்துள்ளேன்”

நாளை: ?

7 Comments:

gopi said...

Naalai :

Therdhal nerathil Madurai Dinakaran Office 3 per erithathu pol, 30, 300 perai erippaar ....

idhu kooda theriyaamayaa naama ellaam irukkom IV ???!!!

Anonymous said...

Its possible only in DMK...!

கிரி said...

:-)))))

கவுண்ட மணி said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

Sundar said...

u have thatha's speech at Dinamalar function?

வால்பையன் said...

நாளை:
அன்பு தம்பிக்கு எதாவது போட்டு கொடுக்கும்படி தலைமையகத்திடமிருந்து எதாவது வேண்டுகோள் வரலாம்

Anonymous said...

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தை பற்றியோ குடும்பச் சண்டைகளைப் பற்றியோ விவாதிப்பது தேவையற்றது; ஆனால், அவரது குடும்ப நலனே அவரது அரசியல் என்ற நிலை உருவாகியிருப்பதால் அவரது குடும்ப அரசியலை பற்றி விவாதிப்பது தவிர்க்கவியலா ஓன்றாகிவிட்டது.அவரது குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள் மற்றும் சமரசங்களால பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறது.

மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் ஏற்பட்ட பதவிப் போட்டியில் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்டார்;

மாறன் சகோதரர்களுக்கும் அழகிரிக்கும் ஏற்பட்ட மோதலில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 அப்பாவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்; தனது மகன் அழகிரிக்கு ஆதரவாக செயல்பட்ட கருணாநிதி, மாறன் சகோதரர்களை ஒடுக்க மக்கள் வரிப்பணத்தில் அரசு கேபிள் டி.வி. துவக்கினார்; இப்போது அழகிரியும் மாறன் சகோதரர்களும் ஓன்றானபின் அரசு கேபிள் டி.வி.க்கு மூடுவிழா நடத்தப்படுகிறது. இதனால் சுமார் 150 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் பிரச்னை இருந்தபோது, மத்திய ( தி.மு.க. )அமைச்சர் ராசா, தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது சுமார் 10000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டினார்; அதே போல அமைச்சர் ராசா ஸ்பெக்ட்ராம் ஊழலில் 60000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாறன் சகோதரர்கள் தாங்கள் நடத்தும் செய்திப் பத்திரிக்கைகள் மூலமும், சன் டி.வி.மூலமும் பிரச்சாரம் செய்தனர்; இப்போது கருணாநிதியின் குடும்பம் ஓன்றான பின் இந்த ஊழல்கள் யாவும் அப்படியே மூடி மறைக்கப்பட்டு விட்டன. மக்கள் வரிப்பணம் கோடி கோடியாய் கொள்ளை போனதுதான் மிச்சம்.

இந்தியாவிலேயே அரசியலில் இருக்கிற பெரும் பணக்கார குடும்பம் கருணாநிதியின் குடும்பம்தான்; தங்களிடமிருக்கும் இந்த பெரும் பணபலத்தையும் அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி, எல்லா துறைகளீலும் நுழைந்து மேலும் கோடி கோடியாய் சம்பாதிப்பதோடு ஆக்டோபஸ் போல தமிழகத்தை வளைத்துப் போடவும் முயல்கின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழகம் கருணாநிதி குடும்பத்தின் வேட்டைக் காடாகிவிடும்;