பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 25, 2008

டாப் 10 கேள்விகள்

வழக்கம் போல் வாசகர்கள் பதில் சொல்லலாம் :-)

1. ஆடிட்டர் ராஜசேகர், கலைஞர் டிவி நிர்வாகி சரத் ரெட்டி இருவருக்கும் என்ன வித்தியாசம் ? இவர்கள் வீட்டு பாத்ரூம் வழுக்குமா ?

2. எவ்வளவு ஓபமா புத்தகங்கள் இந்த புத்தககண்காட்சியில் வரப்போகிறது ?

3. கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் கிறிஸ்துமஸ் பாட்டியுடன் வருவதில்லை ?

4. கலைஞருக்கு இப்போதெல்லாம் கனவுகள் வருவதில்லையே ஏன் ?

5. நம்மவர்களின் சத்யம் மீது வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை வருமா ?

6. [deleted]

7. புத்தகம் எழுத எவ்வளவு ஆகும், சமர்ப்பணம் செய்யவைக்க எவ்வளவு ஆகும்?

8. சீனாவில் காதலன் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த போது, காதலியின் வாய் பகுதியில் காற்றழுத்தம் குறைந்து போய், காது பகுதியில் பாதிப்பு உண்டானதாம். 8. முத்தம் கொடுத்தானா 10 ஹார்ஸ்பவர் பம்ப் வைத்து சுத்தம் செய்தானா?

9. படிப்படியாக மதுவிலக்கு என்பதில் எவ்வளவு படிகள் கடந்து செல்ல வேண்டும் ?

10. கேள்வியின் நாயகன் கேள்வி கேட்பவரா பதில் சொல்பவரா இல்லை தானே கேள்வி தானே பதில் பார்ட்டியா?

11 Comments:

ஆளவந்தான் said...

//10. கேள்வியின் நாயகன் கேள்வி கேட்பவரா பதில் சொல்பவரா இல்லை தானே கேள்வி தானே பதில் பார்ட்டியா?
//

கடைசி கேள்விக்கு கொஞ்சம் சீர்யஸான பதில் இங்கே

முகமது பாருக் said...

மக்களை கொல்லும் எவனுக்கும் மத நம்பிக்கை இல்லை..தன்னை காப்பாற்றிக்கொள்ள மதத்தை போர்வை போல பயன்படுத்துகிறார்கள்...

//கஸாப் ஒரு இஸ்லாமியர் கிடையாது என்று எப்போது பாக் சொல்லும் ? அவரை அரசு என்ன செய்யும் ?//

அடிக்கடி காவிநிறம் வெளில வந்துடுது...உங்களுக்கு அடுத்தவன மயக்கி நீங்க என்ன சொல்ல வரிங்களோ அதை அவன யோசிக்க விடாமலே செய்வீங்க..

பாகிஸ்தான் என்ற பயங்கரவாத நாட்டுக்கு நாம என்ன செய்யனுமோ அதை இப்ப செய்வோம்..

அதைவிட்டுபுட்டு மதத்தை இழுத்து மீண்டும் மீண்டும் எங்கள் சகோதர சகோதரிகளை ரத்தம் சிந்த வைக்காதீர்கள்.. காவிகளையும், இஸ்லாம் வெறியர்களையும் மீண்டும் ரத்தம் குடிக்க வைக்காதீர்கள்....

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

இஷ்டலிங்கம் said...

1. ஆடிட்டர் ராஜசேகர், கலைஞர் டிவி நிர்வாகி சரத் ரெட்டி இருவருக்கும் என்ன வித்தியாசம் ? இவர்கள் வீட்டு பாத்ரூம் வழுக்குமா ?

வாழ்கை ஒரு வட்டம் என புரிந்து கொள்ளாவிட்டால் வழுக்கும்.

2. எவ்வளவு ஓபமா புத்தகங்கள் இந்த புத்தககண்காட்சியில் வரப்போகிறது ?

எத்தனை பதிப்பகம் உள்ளது

3. கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் கிறிஸ்துமஸ் பாட்டியுடன் வருவதில்லை ?

வருடத்தில் ஒரு நாள் பாட்டியிடம் இருந்து விடுதலை

4. கலைஞருக்கு இப்போதெல்லாம் கனவுகள் வருவதில்லையே ஏன் ?

தூக்கம் இல்லையோ என்னவோ

5. நம்மவர்களின் சத்யம் மீது வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை வருமா ?
சத்யம் > சந்தேகம்

6. கஸாப் ஒரு இஸ்லாமியர் கிடையாது என்று எப்போது பாக் சொல்லும் ? அவரை அரசு என்ன செய்யும் ?

சொன்னாலும் சொல்லும். விசாரணை கைதி - விசாரணை கைதி - விசாரணை கைதி

7. புத்தகம் எழுத எவ்வளவு ஆகும், சமர்ப்பணம் செய்யவைக்க எவ்வளவு ஆகும்?

ஒரு மொட்டை மாடி - ஒரு நாள்

8. சீனாவில் காதலன் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த போது, காதலியின் வாய் பகுதியில் காற்றழுத்தம் குறைந்து போய், காது பகுதியில் பாதிப்பு உண்டானதாம். 8. முத்தம் கொடுத்தானா 10 ஹார்ஸ்பவர் பம்ப் வைத்து சுத்தம் செய்தானா?

ஹா ஹா ஹா

9. படிப்படியாக மதுவிலக்கு என்பதில் எவ்வளவு படிகள் கடந்து செல்ல வேண்டும் ?

பத்து படி முன்பும் பத்து படி பின்பும்

10. கேள்வியின் நாயகன் கேள்வி கேட்பவரா பதில் சொல்பவரா இல்லை தானே கேள்வி தானே பதில்
பார்ட்டியா?

இட்லி கடை

IdlyVadai said...

முகமது பாருக்,
தவறு தான் அந்த கேள்வியை எடுத்துவிட்டேன்.
மன்னிக்கவும்
நன்றி
இட்லிவடை

முகமது பாருக் said...

நன்றி இட்லிவடை அவர்களே...

ஏனெனில் உங்கள் பதிவை எனது நண்பர்களிடம் எடுத்து சென்றவன் என்ற முறையிலும் அவர்களின் நண்பர்களின் வட்டாரத்திலும், ஏன் உலகமெங்கும் உள்ள முகம் தெரியாத அனைத்து தமிழ் தெரிந்த மக்களால் வாசிக்கப்படும் உங்கள் பதிவில் உணர்ச்சிக்கு உயிர் கொடுக்க படலாம் ஆனால் அதுவே உயிரை எடுத்து விடக்கூடாது..

அனைத்து கருத்துக்களை பரப்பும் பகிரும் உங்கள் சேவை பாராட்ட படவேண்டும்...

இந்த எளியவனின் கருத்துக்கு மதிப்பளித்த தோழருக்கு வாழ்த்துக்கள்..

தோழமையுடன்

முகமது பாருக்

வந்துட்டான்யா said...

முகமது பாருக் மற்றும் இட்லி வடை இருவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த கேள்விக்கு பாருக் இட்லி வடையை சாட்டையால் அடித்திருக்கலாம், ஆனால் மிக அழகாக தவறை சுட்டி காட்டினார். பாருக்கின் பதிவை பார்த்த உடனே இட்லி வடையும் தனது கேள்வியை எடுத்து விட்டார். எனக்கு ஒரு புறநானுறு தான் நினைவுக்கு வந்தது.

ஈ என இரத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயென் என்றல் அதனினும் ஈழிந்தன்று; கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று

அர்த்தம் என்னமோ நேரடியாக இல்லாவிட்டாலும் சேய்கை என்னமோ இந்த செய்யுள் போல தான் இருந்தது.

Anonymous said...

1. ஆடிட்டர் ராஜசேகர், கலைஞர் டிவி நிர்வாகி சரத் ரெட்டி இருவருக்கும் என்ன வித்தியாசம் ? இவர்கள் வீட்டு பாத்ரூம் வழுக்குமா ?

இதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாராமுங்கோ!

2. எவ்வளவு ஓபமா புத்தகங்கள் இந்த புத்தககண்காட்சியில் வரப்போகிறது ?

அதுக்கு ஒரு ஓ போடுங்கோ!

3. கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் கிறிஸ்துமஸ் பாட்டியுடன் வருவதில்லை ?
இதுதான் பார்ப்பனக் குறும்பு!

4. கலைஞருக்கு இப்போதெல்லாம் கனவுகள் வருவதில்லையே ஏன் ?

எல்லாப் பிரச்சனையும் தீர்த்திட்டுராலில்ல

5. நம்மவர்களின் சத்யம் மீது வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை வருமா ?
கோவிந்தோ1 கோவிந்ந்தோ! க்கொவிவந்தோ

6. [deleted]

இட்லி வடை சரியா டெலிட் செய்யவும் .பின்னூட்டத்தில் இருக்கு
கஸாப் ஒரு இஸ்லாமியர் கிடையாது என்று எப்போது பாக் சொல்லும் ? அவரை அரசு என்ன செய்யும் .

மதசார்பின்மை போற்றி போற்றி/

7. புத்தகம் எழுத எவ்வளவு ஆகும், சமர்ப்பணம் செய்யவைக்க எவ்வளவு ஆகும்?

அது ஒரு கானாக் காலம்

8. சீனாவில் காதலன் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த போது, காதலியின் வாய் பகுதியில் காற்றழுத்தம் குறைந்து போய், காது பகுதியில் பாதிப்பு உண்டானதாம். 8. முத்தம் கொடுத்தானா 10 ஹார்ஸ்பவர் பம்ப் வைத்து சுத்தம் செய்தானா?

இந்தக் காதலுக்கு அவ்வளவு பவராம்!

9. படிப்படியாக மதுவிலக்கு என்பதில் எவ்வளவு படிகள் கடந்து செல்ல வேண்டும் ?

அப்படியாவது பாமக மீண்டும் அந்த ப்படி வழியா ஏறி ,கூட்டணிக்குள் வருமா?
இலவு காத்த கிளியா?

10. கேள்வியின் நாயகன் கேள்வி கேட்பவரா பதில் சொல்பவரா இல்லை தானே கேள்வி தானே பதில் பார்ட்டியா?

இது ஊரறிந்த விசயம் தானே!

நாரத முனி said...

//அனைத்து தமிழ் தெரிந்த மக்களால் வாசிக்கப்படும் உங்கள் பதிவில் உணர்ச்சிக்கு உயிர் கொடுக்க படலாம் ஆனால் அதுவே உயிரை எடுத்து விடக்கூடாது..//

முஹமது பாருக், இட்லி வடை இருவருக்கும் இதய பூர்வ பாராட்டுக்கள்.

முகமத் பாருக், உங்களுக்கு ஒவ்வாத/மாறுபட்ட கருத்தை எத்தனை அழகாகவும், சிறிதும் கண்ணிய குறைவின்றியும் இங்கே தெரிவித்தீர்கள்.hats off to you!

டன்மான டமிழன் said...

1. ஆடிட்டர் ராஜசேகர், கலைஞர் டிவி நிர்வாகி சரத் ரெட்டி இருவருக்கும் என்ன வித்தியாசம் ? இவர்கள் வீட்டு பாத்ரூம் வழுக்குமா ?

மஞ்சமகான்னு யாரை சொல்வார்கள்...2. எவ்வளவு ஓபமா புத்தகங்கள் இந்த புத்தககண்காட்சியில் வரப்போகிறது ?

வைகோ விடம் கேளுங்கள்

3. கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் கிறிஸ்துமஸ் பாட்டியுடன் வருவதில்லை ?

சந்தோசம் தனியாகதான் வரும்

4. கலைஞருக்கு இப்போதெல்லாம் கனவுகள் வருவதில்லையே ஏன் ?

துங்கினால் தானே கனவு வரும்

5. நம்மவர்களின் சத்யம் மீது வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை வருமா ?

நமக்கு இதுதான் முதல் சத்தியம்
அவர்கள்
இதுபோல் நிறைய பிராமிஸ் பார்த்துள்ளார்கள்

6. [deleted]
சரியாக பண்ணதெரியவில்லை

7. புத்தகம் எழுத எவ்வளவு ஆகும், சமர்ப்பணம் செய்யவைக்க எவ்வளவு ஆகும்?

"அரைவேக்காடு" தனமான கேள்வி :-)

8. சீனாவில் காதலன் தன் காதலிக்கு முத்தம் கொடுத்த போது, காதலியின் வாய் பகுதியில் காற்றழுத்தம் குறைந்து போய், காது பகுதியில் பாதிப்பு உண்டானதாம். 8. முத்தம் கொடுத்தானா 10 ஹார்ஸ்பவர் பம்ப் வைத்து சுத்தம் செய்தானா?

வீடியோ கிளிப்பிருந்தால் லோடு செய்யவும்
படம் பார்த்துவிட்டுதான் பதில் எழுத
முடியும்

9. படிப்படியாக மதுவிலக்கு என்பதில் எவ்வளவு படிகள் கடந்து செல்ல வேண்டும் ?

எந்தனை
எம்.பி.சீட்டோ அத்தனை படிகள்

10. கேள்வியின் நாயகன் கேள்வி கேட்பவரா பதில் சொல்பவரா இல்லை தானே கேள்வி தானே பதில் பார்ட்டியா?

சில கேள்விக்கு மட்டும் விடைத்தெரியாது
அந்த கேள்விதான் இது.

geeyar said...

தீவிரவாதிகள் தாக்கும்போது என்ன மதமென்று பார்க்கவில்லை. இந்தியாவை தாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தான் தாக்கியுள்ளனர். ஆனால் இங்கேதான் தாக்கியவனுடன் அவனது மதமும் தாக்கப்படுகிறது. தீவிரவாதம் வேறு மதம் வேறு. ரயிலை எரித்ததற்கும் பாதிரியாரை எரித்ததற்கும் ஒட்டுமொத்த இந்துக்களும் பொருப்பேற்றுக் கொள்வீர்களா?

Anonymous said...

idlyvadai, when u can delete the question no 6, why cant you delete the comment posted by geeyar, which is another crap.?