பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 14, 2008

ராமதாஸ்-ஜாதி - தீவிரவாத-கமல்

டாக்டர் ராமதாஸ் கொஞ்ச நாட்களுக்கு முன் "ஜாதிவாரியாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். முன்பு தெரு பெயருக்கு கூட ஜாதி பெயர் இருக்க கூடாது என்று அழித்தார்கள், ஆனால் நம்ம ராமதாஸ் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுகிறார். ஆக ஜாதியை வளர்க்க வேண்டும் என்பது தான் அவர் எண்ணம். எந்த ஜாதியில் நிறைய பேர் இருக்கிறார்களோ அவர்களுக்கு சலுகை அளித்து, அறிக்கைவிட்டு ஓட்டு வாங்க வேண்டும். வேற என்ன ?

இலங்கை தமிழர்களுக்கான உண்ணாவிரத பேச்சில் "உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் பிறந்தே தீரும்" என்று கமல் அருமையாக பேசியுள்ளார் என்று அவர் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. காந்தியடிகள் உரிமைகள் மறுக்கப்பட்டபோது, அமைதியான முறையில் தன் எதிர்ப்பை உண்ணாவிரதம் மூலம் காண்பித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதே உண்ணாவிரத பந்தலில் கமல் தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று பேசியுள்ளது அவர் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. நடிப்பில் உலக நாயகனாக இருக்கலாம், பேச்சு அப்படி இல்லை.

29 Comments:

M Arunachalam said...

Kamal also tried to equate Indian freedom fighters like Vaanchi Nathan with LTTE terrorists.

Is Kamal trying to say Vaanchinathan also hid behind women, children & patients while fighting against the British?

Even pro-Tamil outfits have not denigrated Indian Freedom Fighters like this.

Truth said...

அவர் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை.

அந்த நான் யாருங்க? இட்லி வடையா இல்ல ராம்தாஸா?

அ. நம்பி said...

கமலஹாசனைச் சொல்லும் அதே பத்தியில் காந்தியடிகளைப்பற்றியும் சொல்கிறீர்களே, என்ன ஆயிற்று உங்களுக்கு?

உன்னதமான அறிவுஜீவியும் ஒட்டுமொத்த உலகத்துக்கு நாயகனுமாகிய கமலஹாசனோடு ஒப்பிடப்படும் அளவுக்குக் காந்தியடிகளுக்குத் தகுதி இருக்கிறதா என்ன?

Anonymous said...

Idly vadai,
For some days you have not written anything about charu Nivedita. Write something about that International amil Writer

Anonymous said...

இதப்படிச்சீங்களா ? இந்த வார குமுதத்தில் 'உஷ்...' பகுதியில்... 'ஜீரோடிகிரி' எழுத்தாளரைப்பத்தி ஏதோ வந்திருக்கிறதே ?
- கணேஷ்

(கமல் இந்தியன் தாத்தாவா ஆகறத்துக்கு முன்னால தீவிரவாதியாத்தான படத்துல வந்தாரு ? அஹிம்ஸையில் போராடினமாதிரி தெரியலையே ?)

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுவ்து ஜாதியை வளர்ப்பதற்கு அல்ல.

இந்திய அரசியல் சட்டத்திலே ஜாதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். பெரியார் 1946 இல் அரசியைல் சட்டம் எழுத குழு போடுவது முதற்கொண்டே சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்று எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அது கேளாக்காதாகி விட்டது .

அவசியம் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஏன்? என்பது பற்றி தி.க. தலைவர். கி.வீரமணி அவர்கள் கருத்து ஏற்புடையதாகவே இருக்கிறது.

அது இதோ:


"

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்

ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சி - முன்னேற்றம் என்ற
கண்ணோட்டத்தில் இது தேவையான ஒன்றே!

ஜாதி இன்னும் சட்டப்படி ஒழிக்கப்படாத நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (Census) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

நடக்கவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, "ஜாதி” (Caste) என்ற கலத்தில் (Column) அதைக் குறிப்பிடுவது ஒடுக்கப்பட்டவர்களது வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய கண் ணோட்டங்களில் மிகவும் தேவையான ஒன்றாகும்!

நீதிபதிகளின் தீர்ப்பு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப சமூகநீதி பெற்றிட, ஜாதி வாரி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் படவேண்டியது அவசியம்; இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை குறிப்பிட்ட கால வரம்புக்குள் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபெ தர்மாராவ் மற்றும் எஸ். தமிழ்வாணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் தெளிவாகக் கூறியிருப்பதும் (26.10.2008) வரவேற்கத்தக்கதாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலைச் சந்தித்து 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளனர் என்பதும் நல்ல செய்தியே!

சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படவில்லை

இன்று நாட்டில் உள்ள நிலையில், ஜாதியை ஒழிக்க நாம் கடுமையான முயற்சிகளை, பிரச்சாரங்களை, வேலைத் திட்டங்களை - ஜாதி மறுப்புத் திருமணங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகிறோம் என்றாலும்கூட,

நமது நாட்டில் ஜாதிமுறை - சட்டப்படி ஒழியவில்லையே!

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி” (Caste) என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது என்பதை கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான எல்.ஜி. ஹாவனூர் கமிஷன் அறிக்கையிலேயே மிகவும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது!

தந்தை பெரியார் கூட்டிய கடைசி மாநாட்டின் தீர்மானம்

அதனால்தான் ஜாதி ஒழிப்பையே தனது வாழ்நாள் தொண்டாகத் தம் மேல் போட்டுக்கொண்டு உழைத்த அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், நமது இந்திய அரசியல் சட்டத்தில் 17 ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், சட்டப்பூர்வமாக தடைப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் நிலையில்,

“Untouchability is abolished and its practice in any form is forbidden by law” (Article 17) என்பதில், ‘Untouchability’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ஜாதி (Caste) - என்ற சொல்லைப் போட்டுவிட்டு, அடியில் விளக்கத்திற்காக (By way of Explanation - Caste includes “untouchability also) என்று போட்டுவிடலாம் என்று, தாம் நடத்திய கடைசி மாநாடான தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் (சென்னையில் 1973 டிசம்பர் 8, 9) முக்கிய தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு வெளிச்சத்தைத் தந்தார்கள். அதனை இத்தனை ஆண்டுகள் - 35 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, சுதந்திர நாட்டில் சூத்திரன் இல்லை, பஞ்சமன் இல்லை; பார்ப்பான் இல்லை; மனிதர்கள் - உண்டு என்று காட்ட எந்த முயற்சியையும் எடுக்கவில்லையே!

பெரும்பாலும் எல்லா திருமண விளம்பரங்களில்கூட, ஜாதி - கோத்திரம் பார்க்கப்படுகின்றன; கேட்கப்படுகின்றனவே!

நெருப்புக்கோழி மனப்பான்மை வேண்டாம்!

இந்துக் கோயில் கருவறைகளில் உயர்ஜாதி பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராகி பூஜை செய்ய இயலும் என்று இதுவரை இருந்து வந்த நிலையை புதியதோர் சட்டம் கொண்டு வந்து நமது முதல்வர் கலைஞர் தலைமையில் உள்ள அரசு ஒரு சமூகச் சீர்திருத்தச் சட்டத்தை கொணர்ந்த நிலையில்கூட, அதையும் எதிர்த்து உச்சநீதி மன்றப் படையெடுப்புகள் நடைபெறாமலா இருக்கின்றன?

இந்நிலையில், சென்சஸ் - மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாத்திரம் ஜாதியைக் குறிக்காமல் விடுவதால் யாருக்கு லாபம்? முன்னேறிய ஜாதியரான - ஆதிக்க ஜாதியரான பார்ப்பனர் போன்றவர்களுக்குத்தானே அது கல்வி, உத்தியோகங்களை ஏகபோகமாய் அனுபவிக்க உதவிடும் - வாய்ப்புகளை ஏற்படுத்தும் மறைமுக வழியாகவிருக்கிறது?

ஜாதியை சட்டப்பூர்வமாக ஒழிக்க முன்வராத நிலையில், இப்படி ஒரு நெருப்புக்கோழி மனப்பான்மை எதற்குப் பயன்படக் கூடும்?

1931-க்குப் பிறகு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம்பற்றிய வழக்கு வந்தபோது, இதை ஒரு முக்கிய காரணமாக சில நீதிபதிகள் சுட்டிக்காட்டினரே!

1931-க்குப் பிறகு சென்சஸ் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடைபெறவே இல்லை; பழைய கணக்குப்படிதான், இந்த இட ஒதுக்கீடு உள்ளது என்று கூறி நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று ஆக்கிக் கொள்ள முயற்சித்தனரே!

மார்பில் முப்புரி நூல் - பூணூல் அணிந்துகொண்டே, ஜாதி யெல்லாம் போட வேண்டாம் என்று உபதேசம் செய்வதனால் அவாள் ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்களாகி(?) விட்டார்கள் என்று நம்மில் பெரும்பாலோர் நம்பி ஏமாற வேண்டுமா? கூடாது! கூடவே கூடாது!

போர்க்களத்தில் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது? என்பதை நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்ற மாவோவின் பொன்மொழிதான் நமக்கு இப்போது நினைவிற்கு வருகிறது!

1962 இல் தந்தை பெரியார் சொன்னது...

1962 ஆகஸ்ட்டில் புதுச்சேரியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிகழ்த்திய பேருரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள், ஜாதிப் பட்டத்தை நீக்கிவிட்டு, கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் அனுபவிக்க ஒரு முற்போக்கு வேஷம் போடுகிறார்கள் என்றால், அதைப் புரிந்துகொண்டோம் நாம் என்று காட்ட, நீங்கள் ஜாதிப் பட்டத்தையும் போட்டுக் கொள்ளத் தயங்காதீர்கள் என்று சொல்லவேண்டிய அவசியமும் கூட வரக்கூடும் என்று தெளிவாகச் சொன்னார்கள்!

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுப்பதில் எவ்வித முரண்பாடோ, பின்னடைவோ கிடையாது!

பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் புதுடில்லியில் பலரையும் கூட்டி எடுத்த முயற்சி மிகவும் வரவேற்கத் தக்க முயற்சி! நாம் காலங்காலமாக எடுத்துச் சொன்ன கருத்துகளின் உருவாக்கமே அது!

எனவே, மற்ற அரசியல், சமூக இயக்கங்களும், எவ்விதக் குழப்பத்திற்கும் ஆளாகாமல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ஜாதியைக் குறித்தாகவேண்டும் என்பதை வலியுறுத்திட முன்வரவேண்டும்.

ஜாதி ஒழிப்பு சட்டப்பூர்வமானால், பிறகு இப்படி ஒரு நிலைப்பாடு தேவைப்படாது என்பதையும் ஜாதி ஒழிப்பு ஆர்வலர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

------------------ "விடுதலை" 29-10-2008

அமுதப்ரியன் said...

மிகச் சரியாக சொன்னீர்கள்!!!

Rajamanohar said...

அவர் சொல்லவந்தது "போர் ஒரு நிரந்தர தீர்வு இல்லை" என்று நினைக்கிறேன் :) இலங்கை இராணுவம் போரில் வெற்றி பெற்றால் கூட திவிரவாதத்தை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அதைத்தான் அவர் சொன்னதாக நினைக்கிறேன் .

Anonymous said...

The meaning for "Indian Social justice" in Oxford encyclopedia>>> Quota system till eternity or till the entire Ethnic cleansing of Paappaans, whichever is earlier.

செந்தழல் ரவி said...

//நம்ம ராமதாஸ் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுகிறார். ஆக ஜாதியை வளர்க்க வேண்டும் என்பது தான் அவர் எண்ணம். எந்த ஜாதியில் நிறைய பேர் இருக்கிறார்களோ அவர்களுக்கு சலுகை அளித்து, அறிக்கைவிட்டு ஓட்டு வாங்க வேண்டும்.///

ஜாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுப்பது ஜாதியை வளர்ப்பதற்கு என்று எப்படி பார்ப்பண புத்தியில் மட்டும் தோன்றுகிறது ?

இட்லிவடை அவர்களே, உங்கள் சட்டைக்குள் இருக்கவேண்டிய பூநூல் வெளியே வந்து டிங்கிரி டிங்கிரி என்று ஆடுகிறது...

தாம்புக்கயிறு அளவுக்கு பெரிய பூநூல்...அது உங்கள் கழுத்தை இறுக்கும் முன் இந்த கசட்டு சிந்தைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்...

Mukkodan said...

It's very difficult to induce some sense into dumbs like Ravi. Failing to see the obvious is understandably insane, but ignoring to listen to the blunt purpose behind everything is lunacy.

ரெங்கதுரை said...

நடிப்பில் உலக நாயகனாக இருக்கலாம், பேச்சு அப்படி இல்லை

நம்ம காஞ்சி சங்கராச்சாரியாரும்தான் தன்னை 'ஜெகத் குரு'ன்னு சொல்லிக்கிறாரு. அதைப் போலத்தான் கமலஹாசன் ஐயங்காரும் தன்னை 'உலக நாயகன்'ன்னு சொல்லிக்கிறாரு. அக்கிரகாரத்திலிருந்து பெரியார் திடலுக்குப் போனவராச்சே!

Anonymous said...

//ஜாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கெடுப்பது ஜாதியை வளர்ப்பதற்கு என்று எப்படி பார்ப்பண புத்தியில் மட்டும் தோன்றுகிறது ?

இட்லிவடை அவர்களே, உங்கள் சட்டைக்குள் இருக்கவேண்டிய பூநூல் வெளியே வந்து டிங்கிரி டிங்கிரி என்று ஆடுகிறது...

தாம்புக்கயிறு அளவுக்கு பெரிய பூநூல்...அது உங்கள் கழுத்தை இறுக்கும் முன் இந்த கசட்டு சிந்தைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்...//


இதைவிட கேவலமாக சிந்திக்க முடியாது. இட்லிவடை சொன்னதில் என்ன தப்பு ?

உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்க அதை விட்டுவிட்டு பார்ப்பான் என்று எவ்வளவு நாட்களுக்கு சொல்லிக்கொண்டிருப்பீர்கள் ?

இட்லிவடைக்கு பூணூல் மாதிரி உங்களுக்கு சிலுவை, அதுவும் கழுத்தை இறுக்கும்.

Anonymous said...

இட்லிவடை அஹிம்சையைப் பற்றி பேசுவது நல்ல முரண் நகை. நரேந்திர மோடியை ஆதரிப்பது அஹிம்சை என நீங்கள் நினைக்கிறீர்களா?.

Anonymous said...

//ஆக ஜாதியை வளர்க்க வேண்டும் என்பது தான் அவர் எண்ணம். எந்த ஜாதியில் நிறைய பேர் இருக்கிறார்களோ அவர்களுக்கு சலுகை அளித்து, அறிக்கைவிட்டு ஓட்டு வாங்க வேண்டும். வேற என்ன ?//
நிச்சியமாக அவர் எண்ணம் அது தான்.

Anonymous said...

// /காந்தியடிகள் உரிமைகள் மறுக்கப்பட்டபோது, அமைதியான முறையில் தன் எதிர்ப்பை உண்ணாவிரதம் மூலம் காண்பித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது///
இதுவே ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. என்னமோ காந்தி என்ற தனி மனிதனின் அஹிம்சை மட்டுமே விடுதலை வாங்கி தந்தது என்று சொல்வது எப்படி அய்யா ஏற்றுக்கொள்ள முடியும்....? அது பலரின் கூட்டு முயற்சி, தீவிரவாதிகள் உட்பட.
கமல் குறிப்பிட்டது வஞ்சி, நேதாஜி போன்ற தீவிரவாதிகளை....அடுத்த வரியில் அவரே குறிப்பிடுகிறார் "காலம், நாட்டின் விடுதலைக்குப்பின் அவர்களை தியாகிகள் என சொல்லக்கூடும்" என்று.

///கமல் தீவிரவாதம் பிறந்தே தீரும் என்று பேசியுள்ளது அவர் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது///
வாங்க...எனக்கு தெரிந்து உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் ஒரு முதிர்ந்த கலைஞனாக பேசியது கமல் மட்டுமே. அதே மேடையில் "இன்னொருவர்" முப்பது வருடமாக புலிகளிடம் தோற்றுக்கொண்டிருக்கும் சிங்கள இராணுவம் ஒரு ஆம்பளையா என கேட்டாரே அது இட்லிவடைக்கு முதிர்ச்சியான பேச்சாக தெரிகிறது போலும்.....

பி.கு: நான் கமலின் அடிவருடியும் அல்ல, இட்லிவடையின் பரம வைரியும் அல்ல.

Anonymous said...

WHat is That he wants to convey? Does he mean only Brahmins stick to Caste and religion ? Is the So called Secular Parties select their Candidates on Non-Secular basis? Are they not choosing candidates of Predominent Community of the constitution. Or is it that the selectors are of Brahmin Community ?

Anonymous said...

WHat is That he wants to convey? Does he mean only Brahmins stick to Caste and religion ? Is the So called Secular Parties select their Candidates on Non-Secular basis? Are they not choosing candidates of Predominent Community of the constitution. Or is it that the selectors are of Brahmin Community ?

Mani-bahrain said...

உன்னதமான அறிவுஜீவியும் ஒட்டுமொத்த உலகத்துக்கு நாயகனுமாகிய கமலஹாசனோடு ஒப்பிடப்படும் அளவுக்குக் காந்தியடிகளுக்குத் தகுதி இருக்கிறதா என்ன?

VERY FUNNY...GANDHI THAATHAVAI...KAMALODA THAGUDIYODA OPPITTA..UNGAL THAGUDIYAI ENNAVENRU SOLVADHU...? DESAPIDHAVAI YAARODUM OPPIDA MUDIYADHU...AVAR KADAVUL...ENDRUM VANANGALAM...BUT KAMAL!!!???

SambarVadai said...

IdlyVadai Stinks ....

மொட்ட கடுதாசி said...

\\காந்தியடிகள் உரிமைகள் மறுக்கப்பட்டபோது, அமைதியான முறையில் தன் எதிர்ப்பை உண்ணாவிரதம் மூலம் காண்பித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது.\\

அப்போது நேதாஜி போன்றவர்கள் கை சூப்பிக்கொண்டிருந்தார்களா?? நமக்கு சுதந்திரம் காந்தி மூலம் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான். ஒருவேளை நேதாஜிக்கு தேவையான படைகள் கிடைத்திருந்தால், இந்தியா 1945லேயே சுதந்திரம் ஆகியிருக்கும்.. காந்தி ஆசைப்பட்ட பெண் சுதந்திரமும் கிடைத்திருக்கும்..

\\"உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் பிறந்தே தீரும்"\\

இதற்கு அர்த்தம் தீவிரவாதம் மட்டும்தான் உரிமைகளை பெற்றுத்தரும் என்பதல்ல..

\\'அன்பும் மணியும்' உள்ளவர் ரஜினி அதனால் அவர் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் போதும். அப்படியே இந்த அன்பும் மணியும் உள்ளவர் அரசியலுக்கு வந்தால் முன்பக்கமாக தான் அரசியலுக்கு வருவார், அன்புமணியை போல் பின்பக்கமாக வரமாட்டார்.\\

உங்களது முந்தைய பதிவில் வரும் இந்த வரிகளும், இந்த அதிர்வில் கமல் பற்றிய கருத்துகளையும் பார்க்கும்போது உங்களை ஒரு சராசரிக்கும் கீழான, சாதாரண ரஜினி ரசிகனை போல நினைக்க தோன்றுகிறது. அனைவரிடத்திலும் குறை/நிறை உண்டு. ஒருவரிடத்தில் குறையும், மற்றவரிடத்தில் நிறையும் காண்பது, உங்கள் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

நீங்கள் Copy/Paste மட்டும் செய்வதே உகந்தது. உங்களுடைய கருத்துக்களை அதிக பின்னூட்டங்கள் தேவைப்படும்போது மட்டும் இடுவது நல்லது..

அ. நம்பி said...

//VERY FUNNY...GANDHI THAATHAVAI...KAMALODA THAGUDIYODA OPPITTA..UNGAL THAGUDIYAI ENNAVENRU SOLVADHU...? DESAPIDHAVAI YAARODUM OPPIDA MUDIYADHU...AVAR KADAVUL...ENDRUM VANANGALAM...BUT KAMAL!!!???//

Mani-bahrain,

நான் எழுதியதை மீண்டும் படித்துப்பாருங்கள்; பொறுமையாகப் படித்துப்பாருங்கள்; புரியும்.

Shajahan.S. said...

நேதாஜியை அப்ப நீங்க எப்படி அழைக்கிறீங்க? கமல் என்ற மனிதநேயமிக்க சிலர் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதால் தான் மக்களுக்கு சிந்திக்க வேண்டும் என்ற எண்ணமே வருதுங்க! அவர் எப்பவோ பேசியது இப்ப உங்களுக்கு வலிக்குது என்றால் அவரது கருத்துக்கு கிடைத்த வெற்றி!!!!!!!!!

இலந்தை கணேசன் said...

இதே நிலையில் சமூக நீதிக்கு எதிராக இயங்கினால் தினமணி , துக்ளக் , இந்தியா டுடே போன்று இட்லி வடையும் ஹிட்டிலிருந்து நிராகரிகிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. பார்ப்பானுக்கு ராமதாசும் திருமாவும் தானே எதிரியாக இருக்க முடியும். அதுதானே உங்கள் பினாத்தலுக்கு காரணம். ராமதாஸ் மட்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் அத்தனை சலுகைகளையும் எவன் அனுபவித்திருப்பான் என்பது எல்லோருக்கும் தெரியும் . பிரித்தாளுவது , சிண்டு முடிவது ,அவதூறு கிளப்புவது கலாசாரத்தை சீரழிப்பது , புளுகு மூட்டைகளை அள்ளி விடுவது -இது எல்லாமே அவாளுக்கு கைவந்த கலை.

enRenRum-anbudan.BALA said...

//அதுதானே உங்கள் பினாத்தலுக்கு காரணம்.//
ஏன்யா பினாத்தல் சுரேஷை இதில இழுக்கறீங்க ? ;-)

Mani-bahrain said...

Sorry Mr. Nambi...

I was in hurry...to read the comments...I got it now...

pattali said...

Don't criticize Dr.Ayya he is god father for many poor backwrd class people with his efforts first generation of backward class people enter in to professional colleges.now they successfully shine in their field India &abroad.

pattali said...

Don't criticize Dr.Ayya he is god father for many poor backwrd class people with his efforts first generation of backward class people enter in to professional colleges.now they successfully shine in their field India &abroad.

lightink said...

ஏன் போய் சொல்கிறீர்கள்? கமல் சொன்னது " மக்களுக்கான உரிமை மறுக்கும் போது அங்கு தீவிரவாதம் வல்லரும்".
மக்களுக்காக போராடுகிற எவன் ஒருவனும் முதலாளித்துவ அரசால் தீவிரவாியாக தான் கருதப்படுவான்
பின்பு வரலாறு விடுதலை செய்யும்.