பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 02, 2008

என் வாழ்க்கை, என் தேசம், எங்க கூட்டணி


எல்.கே.அத்வானி எழுதிய என் தேசம், என் வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா 12-11-2008 அன்று மாலை 6 மணிக்கு நாரத கான சபாவில் நடக்கிறது

அல்லயன்ஸ் வெளியீடு, விலை ரூ600/=, முன்பதிவு செய்தால் ரூ450/=. மற்ற பதிப்பகங்கள் பர்வீஸ் முஷாரப் வாழ்க்கை வரலாறு, பின் லாடன், அல்-காயிதா போன்ற புத்தகங்களை தான் பதிப்பிப்பார்கள். அத்வானியின் புத்தகங்களை பதிப்பித்தால் தங்களுக்கு காவி நிறம் பூசப்படும் என்று ஒதுங்கிவிடுகிறார்கள்.

12ஆம் தேதி அத்வானி சென்னைக்கு வரும் போது, குஜராத் முதல்வர் மோடிக்கு போயஸ் தோட்டத்தில் விருந்து அளித்த்தது போல் இந்த முறை அந்த்வானி ஜெ விருந்தளிப்பார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத் செய்து வருகிறார். (ஜெயலலிதாவின் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட்டில் ரவிசங்கர் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது. )

விருந்தில் ஜெ அத்வானிக்கு அல்வா கொடுக்காமல் இருந்தால் சரி.

0 Comments: