பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 03, 2008

எப்போது அரசியல் ? - ரஜினி பேச்சு

ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு...

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அரசியலில் வெற்றி பெறுவதற்கு அவரவர் திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு ஆகியவைதான் காரணம் என்றால் அது முட்டாள் தனம். அரசியலில் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் முக்கியம். நல்ல சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் அரசியலில் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் குட்டிக்கரணம் அடித்தாலும் அரசியலில் ஜெயிக்க முடியாது. நான் அரசியலுக்கு வருவதென்றால் 1996-லேயே வந்து இருக்கலாம். நான் எதையும் ஆழமாக சிந்திக்காமல் இறங்க மாட்டேன். சினிமாவில் வர விரும்பிய போது கூட பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து விட்டுத்தான் வந்தேன். அது போல் எந்தவித அனுபவமும் இல்லாமல் எதிலும் இறங்க மாட்டேன். அரசியலுக்கு வருவது பற்றி ஆண்டவன்தான் முடிவு செய்ய வேண்டும். நம் கையில் எதுவும் இல்லை.

தினமலர் - ரோபோவுக்கு பின் அரசியல் பிரவேசம் ? ரஜினி
தட்ஸ் தமிழ் - கடமையைச் செய்; பலனை எதிர்பார்!-இது ரஜினி!
யாஹூ - அரசியலில் குதிப்பது எப்போது? ரஜினி பதில்
தனத்தந்தி/மாலைமலர் - அரசியலில் ஜெயிக்க சந்தர்ப்பம், சூழ்நிலை அவசியம் - ரஜினி

ரசிகர்கள் கேள்வி - ரஜினி பதில் ( நன்றி மாலைமலர் )

கேள்வி:- எதிர்கால திட் டம் என்ன?

பதில்:- ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை கவ னிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை காப்பதுதான் முக்கியம். எனது எதிர்கால திட்டம் என்பது "எந்திரன்'' படம்.

கேள்வி:- ரசிகர்களை தொடர்ந்து சந்திப்பீர்களா?

பதில்:- ராகவேந்திரா மண்டபத்தில் உங்களுடன் தொடர்பு வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதி தாக இரண்டு, மூன்று டெலிபோன்கள் செயல் பட உள்ளன. சிறப்பு அலுவலர் களும் நியமிக்கப்படுகிறார் கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம். முக்கிய மான பிரச்சினை என்றால் நானே பேசுவேன்.

கேள்வி:- "எந்திரன்'' படம் எப்படி இருக்கும்?

பதில்:- இந்தியாவிலேயே சிறந்த படமாக இருக்கும். இப்படம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

கேள்வி:- ரசிகர்கள் அந்தஸ்தை உயர்த்து வீர்களா?

பதில்:- அந்தஸ்தை தேடி நாம் போகக் கூடாது. நம்மை தேடித்தான் அந்தஸ்து வர வேண்டும்.

கேள்வி:- மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்வீர்களா?

பதில்:- பணம்-ஜனம் இரண்டும் ஒன்று சேரக் கூடாது. சேர்ந்தால் அரசியல் வந்து விடும். என்னிடம் பணத்தை எதிர் பார்க்காதீர்கள். எனக்கு தோன்றினால் தனிப்பட்ட முறையில் நான் உதவுகிறேன். நீங்களும் அது போல் செய்யுங்கள்.

கேள்வி:- மாவட்டம் தோறும் ரசிகர் மன்ற அலுவலகம் திறக்க ஏற்பாடு செய்வீர்களா?

பதில்:- கண்டிப்பாக செய்கிறேன்.


கேள்வி:- நீங்கள் தொண்டு செய்வதை திடீ ரென நிறுத்தி விட் டீர்களேப

பதில்:- முதலில் இலவச திருமணங்கள் நடத்தி வைத்தேன். 30 மாவட்டங் களில் இதை முடித்து விட்டேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் செய்யவில்லை. எதிர் காலத்தில் இப்பணிகள் தொடரும்.

கேள்வி:- ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க என்ன செய்வீர்கள்?

பதில்:- இந்த சமுதாயம் மரியாதை செலுத்தும் வகையில் செய்வேன்.

கேள்வி:- குசேலன் படம் பற்றி கருத்து என்ன? அதில் நடிக்க ரூ. 25 கோடி சம்பளம் வாங்கினீர்களா?

பதில்:- குசேலன் பட பூஜை போடப்பட்ட போதே எனக்கு அதில் கவுரவ தோற்றம்தான் என்பதை சொன்னேன். படத்தில் டைரக்டர் வாசு கூடுதலாக என் பாத்திரத்தை சேர்த்தார். தெலுங்கு உரிமை கொடுக்க வேண்டாம். நாமே படத்தை ரிலீஸ் செய்யலாம் என் றேன். ஆனால் தெலுங்கு உரிமை கொடுக்கப்பட்டது. ரூ. 60 கோடிக்கு படத்தை விற்று விட்டனர். இதில் என் தப்பு எதுவும் இல்லை. ரூ. 25 கோடி வாங்கவில்லை.

கேள்வி:- தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா?

ப:- பணம்-புகழுக்காக நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர்கள், இவரால்தான் இந்த கேரக்டரை செய்ய முடியும் என்று வந்தால் நடிப்பேன்.

கேள்வி:- ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா முன்பு போல் மன்றப் பணிகளில் தீவிரமாக இல்லையே?

பதில்:- அவருக்கு உடல் நிலை சரியில்லை.

கேள்வி:- ராகவேந்திரர், அருணாசலேஸ்வரர், பாபாஜி என்று அடிக்கடி குருக்களை மாற்றுகிறீர் களே?

பதில்:- மதம் மாறினால் தான் தப்பு. அது கூட அவரவர் தனிப்பட்ட விஷயம். நான் இந்த சாமி களை வழிபடுவது ஆன்மீக விருத்திக்குத்தான்.

கேள்வி:- உங்களின் பூர்வீக மான கிருஷ்ண கிரி மாவட்டம் நாச்சிக்குப் பத்தில் உங்களது பெற்றோ ருக்கு நினைவிடம் அமைப் பீர்களாப

பதில்:- இந்த கேள்வியை யார் கேட்டதுப (கிருஷ்ண கிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் நான்தான் கேட் டேன் என்று எழுந்து நின்றார்) நல்ல விஷயம். யோசிப்போம்.

கேள்வி:- உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிகைகளில் எழுது கிறார்களே. அதை படிக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

பதில்:- பத்திரிகைக்காரர் களை வைத்துக் கொண்டே இக்கேள்வியை எழுப்பு கிறீர்களே (சிரிப்பு) சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தானே இருக்கிறது. எல்லாமே அனுபவத்தால் தெரிந்து கொள்வதுதான். இதை செய்தால் இது ஆகும் என்று யூகித்து எதையும் செய்ய முடியாது. நான் நினைப்பதை பேசுகிறேன். மற்றவர்கள் அதை வேறு கோணத்தில் பார்க்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. சுயநலத்துக்காக நான் எதையும் செய்ய மாட்டேன். பேசவும் மாட்டேன். எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்வேன். என் அறிக்கையில் குழப்பம் என்றார்கள். நான் அந்த முடிவு எடுத்திரா விட்டால் நாட்டில் என்ன குழப்பம் வரும் என்று எனக்கு தெரியும். குழப்பம் வர வேண் டும் என்று சிலர் நினைக் கிறார்கள். அது அவர்கள் விருப்பம். மற்றவர்களுக்காக நான் நிறைய விட்டுக் கொடுத்தேன். அவர்கள் அமைதியாகி விட்டார்கள். நானும் அமைதியாகி விட்டேன்.

கேள்வி:- ஒகேனக்கல் பிரச்சினையில் மன்னிப்பு கேட்டீர்களா? விளக்கமாக சொல்லுங்கள்.

பதில்:- நான் முன்னே போக ஆசைப்படுகிறேன். நீங்கள் பின்னால் போகச் சொல்லுகிறீர்கள். விட்டு விடுங்கள். ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகா வில் தமிழ்ப் படங்கள் ஓடிய தியேட்டர்கள் தாக் கப்பட்டன. அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை உதைக்க வேண்டும் என்றேன். நான் அதை தெளிவாக சொல்லாததால் ஒட்டு மொத்த கன்னடர்களையும் உதைக்க வேண்டும் என்பது போல் பொருள் கொள்ளப்பட்டது. நான் தெளிவாக பேசாததால் வருத்தம் தெரிவித்தேன். மன்னிப்பு கேட்கவில்லை.

கேள்வி:- 30 ஆண்டு களாக ஆசியாவில் பெரிய இடத்தில் இருக்கிறீர்களே?

பதில்:- இதற்கு காரணம் என் ரசிகர்கள் தான். அவர்களை மறக்க மாட்டேன்.

கேள்வி:- பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பீர் களா?

பதில்:- நான் ஏன் பிறந் தேன் என்று யோசிப்பதற்கு அந்த நாளை பயன்படுத்திக் கொள்கிறேன். அன்றைய தினம் தனிமையில்தான் இருப்பேன். அன்று என் குடும்பத்தினர் கூட என்னை தொந்தரவு செய்வதில்லை. குடும்பம், தாய்-தந்தையரை கவனியுங்கள். கடமையை செய்யுங்கள். பலனை எதிர் பாருங்கள்.

2 Comments:

Anonymous said...

இவ்ளோ தெளிவா பேசறாரு! அப்பறம் என்ன? இ. வ. வின் தலைவர் வி.காந்த் மாதிரி ஏமாத்தவா செய்யறாரு!

R A J A said...

இட்லி வடையில் கேள்வி பதில் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே ஏன்? கேள்விகள் வரவில்லை என்பது காரணமாக இருந்தால், இதோ சில கேள்விகள்...
1. கலைஞர், ஜெயலலிதா, விஜய் என அனைவரும் பிரதமருக்கு தந்தி அடிக்க சொல்லுகிறார்களே அதனால் உண்மையிலேயே பயன் இருக்குமா?
2. விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் ரசிகர்களைப் போலவே நானும் அவரை பின்பற்ற தயாராக இருக்கிறேன் அன்று சந்திரசேகர் சொல்லுகிறாரே. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
3. வைகோவின் அடுத்தகட்ட மூவ் என்னவாக இருக்கும்?
4. உங்களை கவர்ந்த 2 புதிய (கடந்த 3 மாதத்தில் எழுத வந்தவர்கள்) பிளாக்கர் யார்?
5. இத்தனை தோல்விக்குப் பிறகும் இன்னும் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் பற்றி?