பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 06, 2008

இட்லிவடை பதில்கள்

ராஜா அனுப்பிய கேள்விகளுக்கு பதில்கள்

1. கலைஞர், ஜெயலலிதா, விஜய் என அனைவரும் பிரதமருக்கு தந்தி அடிக்க சொல்லுகிறார்களே அதனால் உண்மையிலேயே பயன் இருக்குமா?

நிச்சயமாக இருக்கு. விஜய் அடிக்க சொன்ன தந்திகளை கவுண்ட் செய்தால் எவ்வளவு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பிரதமர் தெரிந்துக்கொள்ளலாம். தந்தி பற்றி பதிவு எழுதலாம், நீங்க கேள்வி கேட்கலாம்.. இந்த மாதிரி எவ்வளவோ பயன்கள் இருக்கு.

2. விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் ரசிகர்களைப் போலவே நானும் அவரை பின்பற்ற தயாராக இருக்கிறேன் அன்று சந்திரசேகர் சொல்லுகிறாரே. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

"இதெல்லாம் ஒரு மூஞ்சி இவரை எல்லாம் வைத்து படம் எடுக்கிறார்கள்" என்று முன்பு குமுதம் திரைப்பட விமர்சனத்துக்கு விஜய்யை கமெண்ட் அடித்து. ஆனால் இப்போது(இந்த வருடம் கூட) குமுதத்தின் தீபாவளி இதழ் அட்டை படத்தில் விஜய் தா சிரித்துக்கொண்டிருக்கிறார். அது மாதிரி இன்று விஜய்யை பற்றி ஏதாவது சொல்ல போக 2010ல் விஜய் சி.எம். என்றால் ? எந்த கமெண்டும் அடிக்காமல் இருப்பது இட்லிவடைக்கு நல்லது

3. வைகோவின் அடுத்தகட்ட மூவ் என்னவாக இருக்கும்?

பதில்: Vaiko will move out of the prison with a suitcase. சன் டிவி அதை 'லைவ்'வாக ஒளிபரப்பும்.

4. உங்களை கவர்ந்த 2 புதிய (கடந்த 3 மாதத்தில் எழுத வந்தவர்கள்) பிளாக்கர் யார்?

சினிமா விரும்பி - http://cinemavirumbi.tamilblogs.com/
கலைப்போராளி சீமான் - http://seemaan.wordpress.com/
கடந்த மூன்று மாதங்களில் யார் யார் எழுத வந்தார்கள் என்ற லிஸ்ட் இருந்தால் சொல்லுங்க

4 Comments:

Anonymous said...

The only benefit is the Post Office would earn a good amount of money by sending these telegrams - the Black Money which are lying the in chest of the Politicians would come out in the name of their party memebers to show a huge numbers of telegrams are sent to satisfy thie leaders.
SUPPAMANI

Anonymous said...

The only benefit is the Post Office would earn a good amount of money by sending these telegrams - the Black Money which are lying the in chest of the Politicians would come out in the name of their party memebers to show a huge numbers of telegrams are sent to satisfy thie leaders.
SUPPAMANI

Basaki said...

//விஜய் அடிக்க சொன்ன தந்திகளை கவுண்ட் செய்தால் எவ்வளவு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்//

தன்னோட ரசிகர்கள் மட்டும்னா மாட்டிக்குவோம்னுதான, "என் ரசிகர்கள் மட்டும் இல்லை எல்லோரும் தந்தி அடிங்க" - னாரு.

Cinema Virumbi said...

manamaarntha nanRi idlyvadai avargaLE!

Cinema Virumbi

http://cinemavirumbi.tamilblogs.com