பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 30, 2008

சிவராஜ் பாட்டீல் ராஜினாமா

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்தது மராட்டிய முதல்-மந்திரி விலாஸ் ராவ் தேஷ் முக் - இன்றோ, நாளையோ பதவி விலகுவார் என்று தெரிகிறது.

மும்பை தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அவசரமாக நேற்று இரவு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது பேசிய சில தலைவர்கள் உள்துறையின் செயல்பாடுகள், சரியாக இல்லை என்று சிவராஜ் பட்டீல் மீது புகார்களை அள்ளி வீசினார்கள். மராட்டிய முதல்-மந்திரி விலாஸ் ராவ் தேஷ் முக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மீதும் சரமாரி புகார் கூறப்பட்டது. ப. சிதம்பரம், கமல்நாத், கபில்சிபல், பரத்வாஜ் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து கடுமை யாக விமர்சனம் செய்தனர். அப்போது சிவராஜ் பட்டீல் எழுந்து, "மும்பையில் நடந்த சம்பவத்துக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நான் பதவி விலக தயாராக இருக்கிறேன்'' என்று தலைகுனிந்தபடி தெரிவித்தார். காரிய கமிட்டி எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன் என்றார். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதியிடம் நிருபர்கள் சிவராஜ் பட்டீல் ராஜினாமா செய்வாரா? என்று கேட்டபோது, "காலம் பதில் சொல்லும்'' என்று மட்டும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது

18 Comments:

Hariharan # 03985177737685368452 said...

இந்த பொறுப்பான மந்திரி பதவியில் இருக்க அருகதை / திறனற்ற நக்கிப்பிழைத்த இந்த அரசியல் வாதிக்கு, தன் திறன்குறைவால் பல்லாயிரம் இந்தியர்களை முஸ்லிம் தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளுக்கு தேசத்தின் பல்வேறு நகரங்களில் நரபலி தந்ததற்காக என்று என்ன தண்டனை தரப்பட இருக்கிறது?

வாடிகன் கைப்பாவை, கிறித்துவ தீவிரவாதி சோனியாவின் முழு அடிமையான, தேசத்திற்கான உரை என்று டிவியில் பூனைபோல் மியாவ் மியாவ் பேச்சு பேசும் ஆண்மையற்ற செயல்திறமற்றபிரதமர் மன்மோகன் சிங்குக்கு தேசத்தை சின்னாபின்னப் படுத்தியதற்காக என்ன தேசதுரோக தண்டனை தரப்பட இருக்கிறது??

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பூனைபோல் மியாவ் மியாவ் பேச்சு பேசும் ஆண்மையற்ற செயல்திறமற்றபிரதமர் மன்மோகன் சிங்குக்கு தேசத்தை சின்னாபின்னப் படுத்தியதற்காக என்ன தேசதுரோக தண்டனை தரப்பட இருக்கிறது??///
neethan inthiyan kannu .....yes u are correct....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சோனியா காந்தி பாவையாக உள்ள பிரதமர் என்பதால் மட்டும் அல்ல ....ஒரு தலைவர் ,பிரதமர் என்பதற்கும் ...ஒரு மிக பெரிய நாட்டுக்கு தலைவர் என்பதற்கும் ....வீரமும் விவேகமும் துணிச்சலும் இருப்பது அவசியம் ..என்பதை இந்த தாக்குதல் உறுதி படுத்து கிறது

Anonymous said...

http://www.rediff.com/news/2008/nov/29mumterror-are-you-a-brahmin-a-terrorist-asked-him.htm

A report on how a Brahmin escaped terrorist attack in Mumbai.

paarvai said...

இதெல்லாம் சும்மா சார்....இதோ பாருங்கள் நமது பிரதமர் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம்.....இது என்ன ஒரு முட்டாள்தனம்....இந்நேரம் நமது ஏவுகணைகள் பாக் காஷ்மீரத்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது பாய்ந்திருக்க வேண்டாமா? இப்படியே பேச்சுவார்த்தை நடத்தியே நமது தேசத்தை சுடுகாடு ஆக்கப்போகிறார்கள் இந்த இழவெடுத்த சோனியா கூட்டம்.

Anonymous said...

from Dinamalar

மும்பை தாக்குதலில் ஜன்னல் வழியாக உயிர் தப்பிய தமிழகத்தைச் சேர்ந்த வங்கி தலைவர்
நவம்பர் 30,2008,02:21 IST
தமிழகத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஐ.என்.ஜி.,வைஸ்யா வங்கியின் தலைவர். மும்பை தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, இவர் அங்கு தங்கியிருந்தார். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்த அவரை, பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து உயிர் தப்பிய திகிலான அனுபவம் குறித்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: தாஜ் ஓட்டலில் நான் தங்கியிருந்த அறைக்குள் அதிரடியாக புகுந்த ஒரு பயங்கரவாதி, துப்பாக்கி முனையில் என்னை பிடித்து வைத்துக் கொண்டான். சரமாரியாக என்னை விசாரிக்க துவங்கி விட்டான். என் பெயரை கேட்டதும், "உங்கள் பெயரை கேட்டாலே, நீங்கள் இந்தியாவின் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறதே. பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவரா. உங்கள் பின்னணி என்ன' என்றான்.அவனை ஏமாற்ற முடிவு செய்த நான், பெங்களூரில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறேன் என்றேன். இதைக் கேட்ட பயங்கரவாதி,"கதை விடாதீர்கள். ஒரு பள்ளி ஆசிரியர் எப்படி நட்சத்திர ஓட்டலில் தங்க முடியும். நீங்கள் தங்குவதற்கான பணத்தை யார் செலுத்துவர்' என்றான். அத்துடன் என்னை தாக்கினான். தலையணையை குறுக்காக பிடித்து தாக்குதலில் இருந்து தப்பினேன். அப்போது மற்றொரு பயங்கரவாதி, ஓட்டலில் பணிபுரியும் ஐந்து ஊழியர்களை துப்பாக்கி முனையில் அங்கு அழைத்து வந்தான். ஓட்டல் ஊழியர்களின் வாய், துணியால் கட்டப்பட்டிருந்தது. கைகளும் படுக்கை விரிப்புகளால் கட்டப்பட்டு இருந்தது. அவர்களின் பெயர்களை பயங்கரவாதிகள் விசாரித்தனர். பயங்கரவாதிகள் தெளிவான இந்தியில் பேசினர். அவர்களின் ஆங்கில உச்சரிப்பு பிரிட்டன்காரர்கள் பேசுவது போல் இருந்தது.ழே வந்ததும் முதல் வேலையாக என் மனைவிக்கு போன் செய்து பாதுகாப்பாக இருப்பதாக கூறினேன். என் மொபைல் போன், உடைமைகள் அனைத்தையும் ஓட்டலிலேயே போட்டு விட்டு வந்து விட்டேன்.


இவ்வாறு ராமமூர்த்தி கூறினார்.

Anonymous said...

மத்தியில் யாராவது அமைச்சர் கொடியேற்றினாலே அது தன்னுடைய சாதனை தாண் என்று சொல்லி பெருமை பீற்றிக் கொள்ளும் கருணாநிதி தனது பதைவியை ராஜினாமா செய்வாரா? தன்னுடைய கூட்டணிக் கட்சியின் கையாலாகாத் தனத்தைக் கண்டு ஒரு மான ரோஷமுள்ள மனிதனாக இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும். அதெல்லாம் நம்மாளுக்கு ஏது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். ரொம்ப கேட்டால் 'நீ தான்டா கொலைகாரன்' என்று சொல்லிவிட்டு வரும் பத்தாம் தேதி கஞ்சி குடிக்க போய் விடுவான்.

விஜய் said...

Resignation!! This guy should have been fired from his post and even his MP post should also be stripped off. When an Army person is investigated, for not taking proper action and he is subject to punishment, why a politician should be spared?
Also VilasRao Deshmukh and his bunch of idiotic Cabinet. This guy didn't have the courage to arrest the MNS cartoon character Raj Thakeray. His deputy RR Patil says, "Such incidents do happen in cities like Mumbai". For what F...king reason, they holding onto power.
There are media reports that the IB warned the Maharashtra Government about a possible attack on Mumbai from the sea route. One thing, I don't understand, why should they alert a state government, which has only Pot Bellied Policemen who don't have the strength to run behind a chain snatcher. Are they going to work against the high profile Terrorist, who are much more sohisticated. Look at the Guns carried by the state police. They are as archaic to the days of Mangal Pandey. I think only India still has the highly in-effective state police force. They don't have a helicopter for a state. The IB should have alreted the coast guard and the Indian Navy, who should have put a virtual fence on the Arabian sea.

நல்லதந்தி said...

இந்த கையாலாகாத அமைச்சர் போனதடவையும் மாட்ன போது,அப்பவும் இவரை அமைச்சரவைக் கூட்டத்துக்கு கூப்பிடவில்லை என்று ஞாபகம்.போன தடவை என்றால் ...எந்த போன தடவை...,பெங்களூரு குண்டா?,ஹைதராபாத் குண்
டா?,ஜெய்ப்பூர் குண்டா?,அஸ்ஸாமா?,திரிபுராவா?,மகாராஸ்ட்ராவா?குஜராத்தா?.தெரியலையே!.இத்தனை குண்டுங்க வெடிச்சா எந்த குண்டு வெடிப்பை ஞாபகம் வெச்சிக்கிட்டு அந்த பிரகஸ்பதியைக் கூப்பிடவில்லை ,அப்படிங்கறதே தெரியாம போகுதே.சரி விட்டுத் தொலைங்க..எதோ ஒரு குண்டு வெடிப்பு,நான் தப்பாச் சொன்னாக்கூட நாளைக்கு காலையில அந்த ஊருல நம்ப அன்பு தீவரவாதிங்க இன்னொரு பட்டாசை கொளுத்திப் போடாமலாப் போகப் போறாங்க!.என்னமோ சொல்ல வந்த மாதிரி இருக்கு. எங்கையோ இழுத்துட்டு போயிட்டனோ!.
சரி அந்த அமைச்சரை அப்பவே டீல்ல உட்டாங்க.இருந்தாலும் அந்த அமைச்சர் பெருமகனை ஏன் மாற்றவில்லை?.தெரியாது.ஏதோ அரசியல் காரணமா இருக்கும்.இந்த மாதிரி அரசியல் பண்றதுக்கு நாங்கதான் கிடைச்சமா?.இந்த மாதிரி பல கேள்விகள் இருக்கு,இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ற அரசியல் தலைவர்களுக்குத்தான் எங்கள் ஓட்டு அப்படின்னு பெரும்பான்மை கும்பல் , (தன் தலையில் கொள்ளிக் கட்டையை,செக்யூலர்,அப்படின்னு மதசார்பின்மையை பேசிக்கிட்டு இருக்கிற கும்பல்) திருந்த நினைச்சாவே போதும்,எல்லாமே தானே சரியாகிடும்.அதே போல இஸ்லாமிய பெருமக்களும்,மத மாச்சரியத்தை விட்டு,உண்மையை உணர்ந்து, எப்படி மோடிக்கு ,குஜராத்தில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்கள், ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்களோ,அதே போல இந்தியா முழுமைக்கும்,ஒரே நினைப்போட,இந்த ஆட்சி மாறி ஒரு நல்லாட்சி வரணும்ணு ஒட்டு போடணும்.அப்போ தானாவே எல்லாம் சரியாயிடும்.
இஸ்லாமியரை வன்முறை கும்பல்களாவும்,தீவிரவாதிகளாகவும் நினைத்து,அதற்கு அவர்கள் ஆதரவு தருவதாக,நினைத்து,இந்த மும்பைத் தாக்குதல்களிலும் சரி,இதற்க்கு முந்தைய,தாக்குதல்கள்களிலும் சரி,இந்த காங்கிரஸ் அரசு,ஓட்டு போய்விடும் என்ற பயத்தில் மெத்தனமாக இருக்குது,என்று இஸ்லாமிய பெருமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இது உங்களையும்,உங்கள் நாட்டுப் பற்றையும் எவ்வளவு கேவலப் படுத்துகிறது என்பது உங்களுக்குப் புரியவேண்டும்.நாடு போற்றுகின்ற அப்துல்கலாமை அளித்த இஸ்லாமிய பெருமக்கள் இந்த கும்பல்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்.

Krishnan said...

Good riddance !

Anonymous said...

ராமமூர்த்தி is a black sheep for all of our brahmins.Looks like he would have been begged those terrorists to save his life...Compare him with all those commandos who marched bravely to fight.He has proved again that we brahmins are only capable of writing such things but act...we can easily write "our missiles should have been hit by this time",are we ready to participate...? please stop writing if you are not capable of doing something...

Anonymous said...

இந்த வார ஜோக்

விலைவாசியை எல்லாம் கட்டுப்படுத்திய சிதம்பரம் இப்ப தீவிரவாதத்தை கட்டுப்படுத்தப் போகிறார்.

Anonymous said...

இந்த வார ஜோக்

விலைவாசியை எல்லாம் கட்டுப்படுத்திய சிதம்பரம் இப்ப தீவிரவாதத்தை கட்டுப்படுத்தப் போகிறார்.

Anonymous said...

PM's all - party meet on security.....

http://cms.mumbaimirror.com/portalfiles/1/63/200811/Image/011208/Jst.jpg

மாயவரத்தான்.... said...

//Ramamurthy Looks like he would have been begged those terrorists to save his life...Compare him with all those commandos who marched bravely to fight.He has proved again that we brahmins are only capable of writing such things but act...we can easily write "our missiles should have been hit by this time",are we ready to participate...? please stop writing if you are not capable of doing something..//

இங்கே பேரு போட்டே எழுத துப்பில்ல. பேச்சக் கேளு. வந்திட்டானுங்க தூக்கிகிட்டு. நீயோ, உன்னோட சொந்தக்காரங்களோ அந்த இடத்திலே இருந்தா என்ன(டா) பண்ணியிருப்பீங்க? வெண்ணை. இதிலே பிராமண முகமூடி வேற. நாதாறி நீ யாருன்னு தான் உன்னோட இங்கிலிபீசிலேயே தெரியுதே. இல்க்னகைக்கு கெளம்புறியாமே, மொத ஆளா நின்னு போராட?! இலங்கை பிரச்னை பத்தி வாய் கிழிய பேசுற, எழுதுற, அப்போ மொத ஆளா அங்க போய் போராடேன். உன் தலைவன் மாதிரி ஊருக்கு தான் உபதேசமா?

மாயவரத்தான்.... said...

இந்தியா டைம்ஸில் ஒரு நியூஸ்.

Bush sends Rice to India :
http://broadband.indiatimes.com/videoshow/3778047.cms

தலைப்பை பார்த்து விட்டு என்னுடைய நண்பன் ஒருத்தன் கேட்டான். "இவனுங்க எதுக்குடா நமக்கு அரிசி அனுப்புறானுங்க டோமரு! பாகிஸ்தானுக்கே தீவிரவாதமா?" என்று. நண்பருக்கு விளக்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. நம்மூரு பேப்பர் தானே, கொஞ்சம் விளக்கமாக முழு பெயரை போட்டுத் தொலைத்தால் என்ன?!

மாயவரத்தான்.... said...

மனதை உருக்கும் இந்தக் காட்சியைப் பாருங்கள்..

http://broadband.indiatimes.com/videoshow/3777142.cms

tamil ponnu said...

//இந்த வார ஜோக்

விலைவாசியை எல்லாம் கட்டுப்படுத்திய சிதம்பரம் இப்ப தீவிரவாதத்தை கட்டுப்படுத்தப் போகிறார்.//
சூப்பரப்பு...இது இந்த வார ஜோக் இல்ல...இந்த வருட ஜோக்....