பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 22, 2008

தாத்தாவுக்கு பேரன் பதில்

நேற்று தயாநிதி மாறன் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.ஒன்றரை வருடம் அமைதி காத்தோம்

செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் அமைதியாக இருந்து வருகிறோம். ஆனால் எங்களது நிலையை விளக்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.

முதல்வர் கருணாநிதி சுமத்தியுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை, பாயிண்ட் பை பாயிண்ட்டாக அளித்து, 12 பக்க கடிதம் ஒன்றை எனது சகோதரர் கலாநிதி மாறன், முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார் (கடித நகலைக் காட்டினார்).

அன்புள்ள தாத்தா அவர்களுக்கு, வணக்கம்.

நாங்கள் இன்றும் எங்கள் ஆசானாக, எங்களது தந்தை மறைவுக்கு பிறகு தாத்தாவாக மட்டுமின்றி எங்களது தந்தையாகவும் மதித்திருக்கும் தாங்கள் இன்று எழுதியுள்ள கடிதம் எங்கள் இதயத்தை பிளப்பதாக இருப்பதால் இந்த தன் நிலை விளக்கத்தை பணிவன்போடு உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம்.

எங்கள் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்றால்கூட பொறுத்துக் கொண்டிருப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்களது நன்றியுணர்வு, நாணயம், நேர்மை இவைகளுக்கு எதிராக & தங்களை சுற்றியிருக்கும் சில சுயநலமிகள் கொடுத்த தவறான தகவல்களை நம்பி, எங்களை இதுவரை பல திக்குகளிலிருந்து அடித்துக் காயப்படுத்தியது போதாதென்று, இப்போது எங்களது இதயத்தையே வெடிவைத்து தகர்க்கும் அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்களை தந்திருப்பதால் இந்த விளக்கத்தை வெளியிட வேண்டி வந்துள்ளது.

இந்தக் கடிதம்கூட தங்களது மனதார எழுதியிருக்க மாட்டீர்கள்; யாரோ சிலரைத் திருப்திப்படுத்த எழுதியிருப்பீர்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வகையில் உங்களது மனசாட்சியாக விளங்கிய எங்கள் தந்தை முரசொலி மாறன் அவர்கள் மறைந்த பிறகு அவர் அடியற்றி இந்த இயக்கத்துக்கும், நம் குடும்பத்துக்கும் நன்றியுள்ளவர்களாக, விசுவாசிகளாக நடந்து வந்துள்ளோம்.

இரு குடும்பங்க ளுக்கும் சேர வேண்டிய தொகை பங்கீடு செய்ய சொன்னதே தாங்கள்தான். அதை தற்போதே பிரிக்க வேண்டாம் என்று நான் கூறியபோது தாங்கள் தயாநிதியை அழைத்து, ‘நான் இவ்வளவு சொல்லியும் இன்னுமா பங்கீடு செய்யவில்லை? இன்னும் 2 நாளில் முடிக்கவேண்டும்’ என்று தாங்கள் கட்டளையிட்டதை மறந்துவிட்டீர்களா? வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ‘தாத்தா சொல்படி செய்’ என்று சொன்னார்கள். பிறகுதானே தங்கள் விருப்பப்படி பங்கீடு செய்யப்பட்டது.

தங்கள் குடும்ப பங்கிற்கான தொகையை அதிகப்படுத்தி அதனை ‘ரவுண்டாக‘ தரக்கூடாதா என்று கேட்டபோது, ‘நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்‘ என்றுதானே பதிலளித்தோம்.

தற்போது முரசொலி இருக்கும் இடத்தை அப்படியே விட்டுக் கொடுக்க சொன்னீர்கள். அதற்கும் நாங்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு தாங்களே ‘மனமகிழ்வுடன் பிரித்துக் கொள்ளப்பட்டது’ என்று எல்லோரிடமும் கூறினீர்கள். பல பத்திரிகை சந்திப்பிலும் தாங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாக நமது உறவு சுமுகமாகவே சென்றது. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில்உள்ள எல்லா ஏடுகளும் தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தி.மு. க.வை இருட்டடிப்பு செய்தபோது, அதனால் மனம் நொந்த நீங்கள் ‘கழகத்துக்காக ஒரு நாளேடு வேண்டும். தினகரனை வாங்கி நடத்து’ என்று கூறியபோது, தங்கள் கட்டளையை ஏற்று அந்த இதழை வாங்கினோம்.

தினகரன் பத்திரிகையை ஆரம்பத்தில் ஒரு ரூபாய்க்கு விற்று அதன் விற்பனையை உயர்த்த வேண்டும்; அதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்ற நிலையிருந்தும், ஒரு சவாலாக ஏற்று நடத்த முன்வந்தோம். ஆரம்பத்தில் இவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று தங்களிடம் தெரிவித்தபோது நீங்கள்கூட ‘‘எனக்காக இதனை தாங்குவியா?‘‘ என்று கேட்டீர்கள். நான் அதற்கு, ‘தாங்கித்தான் ஆக வேண்டும். இன்றைய நிலையில் கழகத்துக்கு ஆதரவாக ஒரு ஏடு வேண்டும், அதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை’ என்று உங்களிடம் உறுதி கூறி பத்திரிகை ஆரம்பித்தோம்.

இதுபற்றி பேசியபோது ஸ்டாலின் மாமா மற்றும் குட்டியப்பா (செல்வம்) போன்றவர்கள் உடன் இருந்தனர். அப்போதே தங்களிடம் நாங்கள் ஒரு உறுதி கேட்டதையும் மறந்திருக்க மாட்டீர்கள். ‘தினகரனை முரசொலி போல நடத்த முடியாது. எல்லா செய்திகளையும் போடுவோம். தி.மு.க. செய்திக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் விற்பனையை உயர்த்த முடியும்’ என்று கூறினேன். அதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்த பிறகுதான் தினகரன் துவக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் தினகரன் நாளிதழ் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக எப்படி பாடுபட்டது என்பது தாங்களும், கழக தோழர்களும் அறியாததல்ல.

அப்படி கழக வெற்றிக்காக பாடுபட்ட தினகரன் ஏட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பும் திடீரென வெளியாகவில்லை. அரசியல் மட்டுமின்றி நாட்டிலுள்ள பல சூழல்களை ஆய்ந்து கருத்துக் கணிப்பு தொடர்ந்து வெளியானது. கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியும் உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்திடம் தரப்பட்டு அவர்கள் எடுத்துத் தந்த கருத்துக் கணிப்பைதான் வெளியிட்டோம்.

சிறப்பாக பணியாற்றும் மத்திய அமைச்சர் என்று தினகரன் கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் வெளிவரும் திவீஸீணீஸீநீவீணீறீ ணிஜ்ஜீக்ஷீமீss மிஸீபீவீணீ ஜிஷீபீணீஹ், பிவீஸீபீustணீஸீ tவீனீமீs, ஜிவீனீமீs ஷீயீ மிஸீபீவீணீ போன்ற ஏடுகளும் தயாநிதி மாறனுக்கு முதல் மற்றும் இரண்டாவது இடத்தை வழங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது தயாநிதியை நீங்கள் பாராட்டியதை நாங்கள் மறக்கவில்லை.

அதை தமிழாக்கம் செய்து முரசொலியில் முதல்பக்கத்தில் வெளியிட செய்ததும் தாங்கள்தானே. முரசொலியில் வந்த கருத்துக் கணிப்பிலும் தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சி சார்ந்த மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறனுக்கு பின்னர்தான் இடம் பெற்றிருந்தனர். அதை முரசொலி வெளியிட்டபோது தவறாகவோ, கூட்டணி யை பிளவு படுத்தும் என்றோ தங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் அதேபோன்ற கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டபோது அதற்கு சாயங்கள் பூசப்பட்டு, எங்கள் மீது வீண்பழி சுமந்தப்பட்டது.

ஸ்டாலின் மாமாவுக்கு முதலிடம் தந்து அளிக்கப்பட்ட கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டதும், மதுரையில் சிலர் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து & தினகரன் ஏட்டை கொளுத்தினர்.

‘தினகரன் கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்கு அரசு பஸ் என்ன செய்யும்? அதை ஏன் உடைக்கிறீர்கள். வேண்டுமானால் தினகரன் அலுவலகத்தை அடியுங்கள்‘ என சென்னையிலிருந்து யாரோ தெரிவித்ததாகவும் அதனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் நமது குடும்பத்தினரே பலரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதும் அதனால் மூன்று அப்பாவி உயிர்கள் பலியானதும், லட்சக் கணக்கில் நஷ்டம் உண்டானதும் தாங்கள் அறியாததல்ல!

கருத்துக் கணிப்பில் அதிகமான மதிப்பீட்டை ஸ்டாலின் மாமாதான் பெற்றிருந்தார் என்பதால் அதனை வெளியிட்டோம். பல ஆண்டுகாலமாக கட்சிக்காக தங்களைப் போன்றே தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்றி & கட்சிக்காக பலமுறை சிறைசென்று, மிசாக் கொடுமையை ஏற்ற ஒருவருக்குத்தானே அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது என்று தாங்களும் மகிழ்வீர்கள் என நினைத்தோம். ஏனோ அதனை பெரிய பாதகச் செயலாக தாங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.

தினகரன் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்புக்காக தயாநிதிக்கு தண்டனை வழங்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என்பதை தாங்கள் கோபத்தை துறந்து சிந்தித்திட வேண்டுகிறோம். வேறு யாரையாவது தயாநிதியின் இடத்துக்கு கொண்டு வரும் எண்ணம் தங்கள் மனதில் இருந்திருந்தால் அதை தெரிவித்திருந்தால் தயாநிதி தானே முன்வந்து ராஜினாமா செய்திருப்பார். அதனை சொல்லாமல் அவரை பெரிய குற்றவாளியாக சித்தரித்து நிர்வாகக் குழுவை கூட்டி, அதில் அவரை அழைத்து ஒரு விளக்கம் கூட கேட்காமல் & அவர் மீது நடவடிக்கை எடுத்தீர்கள். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கோ அங்கே மூன்று உயிர்கள் பலியானதற்கோ அந்த கூட்டத்தில் ஒரு அனுதாப தீர்மானம் கூட போடப்படவில்லை.

நிர்வாகக் குழு முடிவு குறித்து அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன், ‘‘நான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. உயிர் உள்ள வரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும், தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில் என்னை பதவி விலக்குவது தலைவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால் அதை ஏற்கவும் தயாராக உள்ளேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு‘‘ என்றுதான் அறிக்கை கொடுத்தார்.

அங்கும் நாங்கள் கண்ணியம் காத்தோமே தவிர எங்கும் உங்களுக்கு எதிராக & உங்கள் கருத்துக்கு எதிராக ஒரு வாக்கியம் கூட கூறவில்லை. எங்கள் பணியை தொடர்ந்தோம். இந்த நிலையில் எங்களை அழித்தொழிக்க பலமுனை தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.

எங்கள் தொழிலை நசுக்க பலவித முயற்சிகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டன. பல நிகழ்வுகள் உங்கள் கவனத்துக்கு வராமல் தொடர்ந்தன. உங்களுக்கு உண்மையை மறைத்து & பல தகவல்கள் தரப்பட்டன. பல முறை அவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தோம். அதில் சில நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டதும், சன் டிவியை முடக்கும் நோக்கத்துடன் சன் டிவியில் பணியாற்றிய சுமார் 250 பேர் ஒரே நாளில் இழுக்கப்பட்டனர். அதனை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தபோது அவர்களாகவே சன் டி.வி.யை விட்டு விட்டு வருவதாக தெரிவித்தார்கள் என்று உங்களுக்கு கூறப்பட்டதாக நீங்கள் தெரிவித்தீர்கள். அவர்களாகவே வந்திருந்தாலும் சேர்த்துக் கொண்டது எந்தவிதத்தில் நியாயம்? நமது தோழமைக் கட்சியை விட்டு விலகி யாராவது வந்து கழகத்தில் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வோமா? அதனையும் பொறுத்துக் கொண்டோம்.

பிறகு கலைஞர் டி.வி. ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் சன் டி.வி. துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்களிடையே கொதிப்பு எழுந்ததும், அது தங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் சன் டி.வி. இணைப்பு கொடுக்கப்பட்டது. சன் டி.வி. தொடர்புடைய எஸ்.சி.வி. இணைப்புகள் சென்னை & மதுரை நகரங்களில் துண்டிக்கப்பட்டு வேறு இணைப்புக்கு மாற்றப்பட்டன. இவற்றை எல்லாம் கடந்து மக்கள் ஆதரவுடன் சன் டி.வி. மேலும் மேலும் முன்னேறி நம்பர் 1 சேனலாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

மத்திய அமைச்சர் திரு.ராசா மீதும், தமிழக மின்துறை அமைச்சர் திரு.வீராசாமி மீதும் மற்றவர்கள் மீதும் தினகரன் மற்றும் சன் டிவி கடுமையான விமர்சனம் செய்த காரணத்தால்தான் அறிவாலயத்தை விட்டு காலி செய்ய சொன்னதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவல்ல உண்மை. கலைஞர் டி.வி.க்கு இடம் போதாததால் சன் டி.வி. யை காலி செய்ய சொன்னார்கள் என்பதுதான் நிஜம். மின்வெட்டு பிரச்னை, மத்திய அமைச்சர் ராசாவின் ஸ்பெக்ட்ரம் பிரச்னை, மற்ற பிரச்னைகள் எல்லாம் (நாங்கள் அறிவாலயத்தை காலி செய்த பிறகு) சமீப காலத்தில் தோன்றியவைதான். அந்த பிரச்னைகளை சன் டி.வி.யும் தினகரனும் மட்டும் வெளியிடவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.

அதற்கு பிறகு தமிழக மின்துறை அமைச்சர் வீராசாமி நேரில் வந்து ‘கலைஞர் டிவிக்கு இடம் வேண்டும். உடனே சன் டி.வி. அலுவலகத்தை காலி செய்துவிடுங்கள்’ என்று கூறினார். ‘தாத்தாவே விரும்பினால் நாங்கள் புதிய இடத்திற்கு சன் டிவி அலுவலகத்தை மாற்றுகிறோம்; அதற்கு சில மாத அவகாசகம் கொடுங்கள்’ என்றோம். மின்துறை அமைச்சர் வீராசாமி சரி என்று கூறி சென்று விட்டார். ஓரிரு மாதங்களில் மீண்டும் வீராசாமி என்னை சந்தித்தார். ‘கலைஞர் டிவிக்கு உடனே இடம் வேண்டும்.

இங்கிருக்கும் சன் டி.வி.யின் மேஜைகள், அலமாரிகள், கேபின்கள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு ஒரே வாரத்தில் காலி செய்ய வேண்டும் ’என்று நெருக்கடி தந்தார். நாங்களும் இரவு பகலாக வேலை செய்து ஒரே வாரத்தில் அவர் கேட்டுக்கொண்டபடி ‘கிs வீs ஷ்லீமீக்ஷீமீ வீs’ விட்டுவிட்டு சென்றோம்.

சன் டி.வி. அலுவலகம் அறிவாலயத்திற்கு சென்றது எப்படி என்பதை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கு சொந்தமான இடத்திற்கு சென்றால் ஆட்சி மாறும் போதெல்லாம் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் யாரும் அறிவாலயத்துக்கு வாடகைக்கு வர பயப்பட்ட நிலையில் சன் டி.வி.யை அங்கு கொண்டு வந்தோம்.

அங்கு வந்த பிறகு சன் டி.வி. செலவில் அறிவாலயத்தில் தாங்கள் அமரும் அறை, பத்திரிகையாளர் சந்திப்பு அறை & முரசொலி மாறன் அரங்கு, வெற்றிச் செல்வி கண் மருத்துவமனை போன்றவற்றை சீரமைத்து, அதற்காக நீங்கள் எங்களை அழைத்து பாராட்டியதை நாங்கள் மறக்கவில்லை. தாங்களே எல்லோரிடமும் ‘என் பேரன் கட்சி அலுவலகத்தை ஐந்து நட்சத்திர ஓட்டல் போல் மாற்றி அமைத்து கொடுத்துவிட்டான்’ என்று அங்கு வரும் தலைவர்களிடம் பெருமையாக கூறினீர்கள். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கேட்ட தலைவர்களும் மறந்திருக்க முடியாது.

இப்போது சன் டி.வி. அறிவாலயத்தை விட்டு வெளியேறியபோது, ஏதோ பல இடங்களை இடித்துவிட்டது போன்ற ஒரு பிரமையை உருவாக்கியுள்ளீர்கள். உண்மையில், சன் டி.வி. வெளியேறிய பிறகு, கலைஞர் டி.வி.க்காக அங்கே சில மாற்றங்கள் செய்தபோது அதற்காக இடிக்கப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களிடம் காட்டி, எங்கள் மீது தந்திரமாக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. வீராசாமி கேட்டுக்கொண்டபடி பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள் அலங்காரங்களை அப்படியே சன் டி.வி. விட்டுச் சென்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.

அறிவாலயத்தை விட்டு வெளியேறியதும் அமைச்சர் வீராசாமியையும், அமைச்சர் வீரபாண்டியாரையும் தயாநிதி மாறன் அழைத்து சென்று சன் டிவி காலி செய்த இடத்தை சுற்றிக்காட்டி, அவர்கள் திருப்தி அடைந்ததை உடனிருந்த பலரும் அறிவார்கள்.

ஆகஸ்ட் 1, 2008 அன்று அறிவாலயத்தை காலி செய்து சாவி ஒப்படைக்கும்போது ‘நீங்கள் கேட்டபடி ‘கிs வீs ஷ்லீமீக்ஷீமீ வீs’ நிலையில் ஒப்படைக்கிறோம் என்று கூறி, அறிவாலய மேலாளரிடம் சுற்றிக் காட்டி அவரும் ‘நல்ல நிலையில் இடத்தை பெற்றுக்கொண்டோம்’ என்று கையெழுத்திட்டு ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அன்றோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ எதுவும் சொல்லாமல் பல மாதங்கள் கழித்து திடீரென்று எங்கள் மீது வீண்பழி சுமத்துவதன் நோக்கம் புரியவில்லை.

இந்த வீண்பழிக்கு உள்நோக்கம் தயாநிதிமாறனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதாக இருந்தால், அதற்காக எங்கள் மீது அவதூறு பிரசாரம் செய்திருக்க தேவையில்லை.

தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம் என்று தெரிவித்திருந்தால், மறுநொடியே தயாநிதி மாறன் தன் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பார்.

இப்படி மீண்டும் மீண்டும் எங்கள் மீது வீண்பழி சுமத்தவேண்டாம். ஒன்றரை ஆண்டுகளாக மற்றவர்கள் வீண்பழி சுமத்திய போதும், புழுதி வாரி இறைத்தபோதும் வாய்மூடி மவுனமாக இருந்தோம். இன்று தாங்களே ஒரு வீண்பழியை சுமத்தும்போது அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தாங்கள் விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் எங்களது விளக்கத்தையும், எல்லா உண்மைகளையும் ஆதாரத்துடன் தெரிவிக்க தயாராக உள்ளோம்.

இப்படிக்கு
அன்பு பேரன்,
கலாநிதி மாறன்
21.11.2008
( கடிதம் தந்த அனானிக்கு, தினகரனுக்கு நன்றி )

எலாஸ்டிக் இல்லாத ஜட்டி ( ஒருவருடம் முன்பு எழுதியது)

17 Comments:

Anonymous said...

என்னாங்கடா தாத்தனும் பேரனும் விலகத் தயார் விலகத் தயார் என்று ஃப்லிம் காட்டுறீஙோ? விலகித் தொலைங்கடா மூதேவிகளா. ஒங்க குடும்பத்தின் மொத்த மதிப்பு இன்னைக்கு ஒரு பத்து பில்லியன் டாலர் இருக்குமே. வாரன் பஃபெட் அம்பானி எல்லாம் உங்க முன்னாடி பிச்சைக்காரனுங்கடா. அம்புட்டுச் சொத்தையும் தமிழ் பெயர் சொல்லியும் தமிழன் பெயர் சொல்லியும் கொள்ளையடித்து விட்டு இன்றைக்குத் தமிழ் நாட்டை இருளில் மூழக அடித்து விட்டு மாணவர்களை ரவுடிகளாக்கி விட்டீர்களேடா நாசக்காரர்களா? உருப்படுவீங்களாடா? கொள்ளை அடிச்ச பணத்தோட ஓடிப் போங்கடா இனிமேலாவது தமிழ் நாடு பிழைச்சுப் போகட்டும். சுரண்டுணது பத்தாம சேது சமுத்துரத்தில வேற தோண்டிக் காசு பாக்குறீங்களே நல்லாயிருப்பீங்களாடா?

Anonymous said...

தமிழ் நாட்டுல கரெண்ட் இல்ல
விலைவாசி எங்கோ உயரத்தில் இருக்கிறது
ரவுடிகள் அட்டகாசம் கொள்ளை கொலைகள்
ரவுடிகள் ஆட்சி
ஊழல்
சாக்கடை
மோசமான சாலைகள்
மோசமான நிர்வாகம்

இதெல்லாம் கிடக்க இவிங்க குடும்பச் சண்டைதான் இப்போ ரொம்ப முக்கியம்? தாத்தனுக்கு வேற வேலை இல்லையா? ஒன்னு பாப்பானத் திட்டி கவித எழுதுறான் இல்லைன்னா சன் டி வி ல பங்கு சண்டை போட்டு லெட்டர் போடுறான். எப்படா நாட்டைக் கவனிப்பீங்க?

Expatguru said...

Idlyvadai,

The changing banners in your blog are pleasing and offer variety. Could you please let me know the algorithm you are using for this?

Anonymous said...

Idly,

Your post omits many facts and issues. There could be difference in opinion but not in facts. It is clear from the reply of Maran that CM has bluffed his way in his emotional letter. Very cheap tactic by Karunanidhi. Things like SunTV share etc.

I give the entire letter (from dinakaran.com) for readers' benefit.

அன்புள்ள தாத்தா அவர்களுக்கு, வணக்கம்.

நாங்கள் இன்றும் எங்கள் ஆசானாக, எங்களது தந்தை மறைவுக்கு பிறகு தாத்தாவாக மட்டுமின்றி எங்களது தந்தையாகவும் மதித்திருக்கும் தாங்கள் இன்று எழுதியுள்ள கடிதம் எங்கள் இதயத்தை பிளப்பதாக இருப்பதால் இந்த தன் நிலை விளக்கத்தை பணிவன்போடு உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம்.

எங்கள் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்றால்கூட பொறுத்துக் கொண்டிருப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்களது நன்றியுணர்வு, நாணயம், நேர்மை இவைகளுக்கு எதிராக & தங்களை சுற்றியிருக்கும் சில சுயநலமிகள் கொடுத்த தவறான தகவல்களை நம்பி, எங்களை இதுவரை பல திக்குகளிலிருந்து அடித்துக் காயப்படுத்தியது போதாதென்று, இப்போது எங்களது இதயத்தையே வெடிவைத்து தகர்க்கும் அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்களை தந்திருப்பதால் இந்த விளக்கத்தை வெளியிட வேண்டி வந்துள்ளது.

இந்தக் கடிதம்கூட தங்களது மனதார எழுதியிருக்க மாட்டீர்கள்; யாரோ சிலரைத் திருப்திப்படுத்த எழுதியிருப்பீர்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வகையில் உங்களது மனசாட்சியாக விளங்கிய எங்கள் தந்தை முரசொலி மாறன் அவர்கள் மறைந்த பிறகு அவர் அடியற்றி இந்த இயக்கத்துக்கும், நம் குடும்பத்துக்கும் நன்றியுள்ளவர்களாக, விசுவாசிகளாக நடந்து வந்துள்ளோம்.

இரு குடும்பங்க ளுக்கும் சேர வேண்டிய தொகை பங்கீடு செய்ய சொன்னதே தாங்கள்தான். அதை தற்போதே பிரிக்க வேண்டாம் என்று நான் கூறியபோது தாங்கள் தயாநிதியை அழைத்து, ‘நான் இவ்வளவு சொல்லியும் இன்னுமா பங்கீடு செய்யவில்லை? இன்னும் 2 நாளில் முடிக்கவேண்டும்’ என்று தாங்கள் கட்டளையிட்டதை மறந்துவிட்டீர்களா? வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ‘தாத்தா சொல்படி செய்’ என்று சொன்னார்கள். பிறகுதானே தங்கள் விருப்பப்படி பங்கீடு செய்யப்பட்டது.

தங்கள் குடும்ப பங்கிற்கான தொகையை அதிகப்படுத்தி அதனை ‘ரவுண்டாக‘ தரக்கூடாதா என்று கேட்டபோது, ‘நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்‘ என்றுதானே பதிலளித்தோம்.

தற்போது முரசொலி இருக்கும் இடத்தை அப்படியே விட்டுக் கொடுக்க சொன்னீர்கள். அதற்கும் நாங்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

அதன் பிறகு தாங்களே ‘மனமகிழ்வுடன் பிரித்துக் கொள்ளப்பட்டது’ என்று எல்லோரிடமும் கூறினீர்கள். பல பத்திரிகை சந்திப்பிலும் தாங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாக நமது உறவு சுமுகமாகவே சென்றது. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில்உள்ள எல்லா ஏடுகளும் தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தி.மு. க.வை இருட்டடிப்பு செய்தபோது, அதனால் மனம் நொந்த நீங்கள் ‘கழகத்துக்காக ஒரு நாளேடு வேண்டும். தினகரனை வாங்கி நடத்து’ என்று கூறியபோது, தங்கள் கட்டளையை ஏற்று அந்த இதழை வாங்கினோம்.

தினகரன் பத்திரிகையை ஆரம்பத்தில் ஒரு ரூபாய்க்கு விற்று அதன் விற்பனையை உயர்த்த வேண்டும்; அதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்ற நிலையிருந்தும், ஒரு சவாலாக ஏற்று நடத்த முன்வந்தோம். ஆரம்பத்தில் இவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று தங்களிடம் தெரிவித்தபோது நீங்கள்கூட ‘‘எனக்காக இதனை தாங்குவியா?‘‘ என்று கேட்டீர்கள். நான் அதற்கு, ‘தாங்கித்தான் ஆக வேண்டும். இன்றைய நிலையில் கழகத்துக்கு ஆதரவாக ஒரு ஏடு வேண்டும், அதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை’ என்று உங்களிடம் உறுதி கூறி பத்திரிகை ஆரம்பித்தோம்.

இதுபற்றி பேசியபோது ஸ்டாலின் மாமா மற்றும் குட்டியப்பா (செல்வம்) போன்றவர்கள் உடன் இருந்தனர். அப்போதே தங்களிடம் நாங்கள் ஒரு உறுதி கேட்டதையும் மறந்திருக்க மாட்டீர்கள். ‘தினகரனை முரசொலி போல நடத்த முடியாது. எல்லா செய்திகளையும் போடுவோம். தி.மு.க. செய்திக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் விற்பனையை உயர்த்த முடியும்’ என்று கூறினேன். அதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்த பிறகுதான் தினகரன் துவக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் தினகரன் நாளிதழ் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக எப்படி பாடுபட்டது என்பது தாங்களும், கழக தோழர்களும் அறியாததல்ல.

அப்படி கழக வெற்றிக்காக பாடுபட்ட தினகரன் ஏட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பும் திடீரென வெளியாகவில்லை. அரசியல் மட்டுமின்றி நாட்டிலுள்ள பல சூழல்களை ஆய்ந்து கருத்துக் கணிப்பு தொடர்ந்து வெளியானது. கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியும் உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்திடம் தரப்பட்டு அவர்கள் எடுத்துத் தந்த கருத்துக் கணிப்பைதான் வெளியிட்டோம்.

சிறப்பாக பணியாற்றும் மத்திய அமைச்சர் என்று தினகரன் கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் வெளிவரும் திவீஸீணீஸீநீவீணீறீ ணிஜ்ஜீக்ஷீமீss மிஸீபீவீணீ ஜிஷீபீணீஹ், பிவீஸீபீustணீஸீ tவீனீமீs, ஜிவீனீமீs ஷீயீ மிஸீபீவீணீ போன்ற ஏடுகளும் தயாநிதி மாறனுக்கு முதல் மற்றும் இரண்டாவது இடத்தை வழங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது தயாநிதியை நீங்கள் பாராட்டியதை நாங்கள் மறக்கவில்லை.

அதை தமிழாக்கம் செய்து முரசொலியில் முதல்பக்கத்தில் வெளியிட செய்ததும் தாங்கள்தானே. முரசொலியில் வந்த கருத்துக் கணிப்பிலும் தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சி சார்ந்த மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறனுக்கு பின்னர்தான் இடம் பெற்றிருந்தனர். அதை முரசொலி வெளியிட்டபோது தவறாகவோ, கூட்டணி யை பிளவு படுத்தும் என்றோ தங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் அதேபோன்ற கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டபோது அதற்கு சாயங்கள் பூசப்பட்டு, எங்கள் மீது வீண்பழி சுமந்தப்பட்டது.

ஸ்டாலின் மாமாவுக்கு முதலிடம் தந்து அளிக்கப்பட்ட கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டதும், மதுரையில் சிலர் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து & தினகரன் ஏட்டை கொளுத்தினர்.

‘தினகரன் கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்கு அரசு பஸ் என்ன செய்யும்? அதை ஏன் உடைக்கிறீர்கள். வேண்டுமானால் தினகரன் அலுவலகத்தை அடியுங்கள்‘ என சென்னையிலிருந்து யாரோ தெரிவித்ததாகவும் அதனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் நமது குடும்பத்தினரே பலரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதும் அதனால் மூன்று அப்பாவி உயிர்கள் பலியானதும், லட்சக் கணக்கில் நஷ்டம் உண்டானதும் தாங்கள் அறியாததல்ல!

கருத்துக் கணிப்பில் அதிகமான மதிப்பீட்டை ஸ்டாலின் மாமாதான் பெற்றிருந்தார் என்பதால் அதனை வெளியிட்டோம். பல ஆண்டுகாலமாக கட்சிக்காக தங்களைப் போன்றே தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்றி & கட்சிக்காக பலமுறை சிறைசென்று, மிசாக் கொடுமையை ஏற்ற ஒருவருக்குத்தானே அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது என்று தாங்களும் மகிழ்வீர்கள் என நினைத்தோம். ஏனோ அதனை பெரிய பாதகச் செயலாக தாங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.

தினகரன் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்புக்காக தயாநிதிக்கு தண்டனை வழங்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என்பதை தாங்கள் கோபத்தை துறந்து சிந்தித்திட வேண்டுகிறோம். வேறு யாரையாவது தயாநிதியின் இடத்துக்கு கொண்டு வரும் எண்ணம் தங்கள் மனதில் இருந்திருந்தால் அதை தெரிவித்திருந்தால் தயாநிதி தானே முன்வந்து ராஜினாமா செய்திருப்பார். அதனை சொல்லாமல் அவரை பெரிய குற்றவாளியாக சித்தரித்து நிர்வாகக் குழுவை கூட்டி, அதில் அவரை அழைத்து ஒரு விளக்கம் கூட கேட்காமல் & அவர் மீது நடவடிக்கை எடுத்தீர்கள். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கோ அங்கே மூன்று உயிர்கள் பலியானதற்கோ அந்த கூட்டத்தில் ஒரு அனுதாப தீர்மானம் கூட போடப்படவில்லை.

நிர்வாகக் குழு முடிவு குறித்து அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன், ‘‘நான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. உயிர் உள்ள வரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும், தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில் என்னை பதவி விலக்குவது தலைவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால் அதை ஏற்கவும் தயாராக உள்ளேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு‘‘ என்றுதான் அறிக்கை கொடுத்தார்.

அங்கும் நாங்கள் கண்ணியம் காத்தோமே தவிர எங்கும் உங்களுக்கு எதிராக & உங்கள் கருத்துக்கு எதிராக ஒரு வாக்கியம் கூட கூறவில்லை. எங்கள் பணியை தொடர்ந்தோம். இந்த நிலையில் எங்களை அழித்தொழிக்க பலமுனை தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.

எங்கள் தொழிலை நசுக்க பலவித முயற்சிகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டன. பல நிகழ்வுகள் உங்கள் கவனத்துக்கு வராமல் தொடர்ந்தன. உங்களுக்கு உண்மையை மறைத்து & பல தகவல்கள் தரப்பட்டன. பல முறை அவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தோம். அதில் சில நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டதும், சன் டிவியை முடக்கும் நோக்கத்துடன் சன் டிவியில் பணியாற்றிய சுமார் 250 பேர் ஒரே நாளில் இழுக்கப்பட்டனர். அதனை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தபோது அவர்களாகவே சன் டி.வி.யை விட்டு விட்டு வருவதாக தெரிவித்தார்கள் என்று உங்களுக்கு கூறப்பட்டதாக நீங்கள் தெரிவித்தீர்கள். அவர்களாகவே வந்திருந்தாலும் சேர்த்துக் கொண்டது எந்தவிதத்தில் நியாயம்? நமது தோழமைக் கட்சியை விட்டு விலகி யாராவது வந்து கழகத்தில் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வோமா? அதனையும் பொறுத்துக் கொண்டோம்.

பிறகு கலைஞர் டி.வி. ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் சன் டி.வி. துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்களிடையே கொதிப்பு எழுந்ததும், அது தங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் சன் டி.வி. இணைப்பு கொடுக்கப்பட்டது. சன் டி.வி. தொடர்புடைய எஸ்.சி.வி. இணைப்புகள் சென்னை & மதுரை நகரங்களில் துண்டிக்கப்பட்டு வேறு இணைப்புக்கு மாற்றப்பட்டன. இவற்றை எல்லாம் கடந்து மக்கள் ஆதரவுடன் சன் டி.வி. மேலும் மேலும் முன்னேறி நம்பர் 1 சேனலாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

மத்திய அமைச்சர் திரு.ராசா மீதும், தமிழக மின்துறை அமைச்சர் திரு.வீராசாமி மீதும் மற்றவர்கள் மீதும் தினகரன் மற்றும் சன் டிவி கடுமையான விமர்சனம் செய்த காரணத்தால்தான் அறிவாலயத்தை விட்டு காலி செய்ய சொன்னதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவல்ல உண்மை. கலைஞர் டி.வி.க்கு இடம் போதாததால் சன் டி.வி. யை காலி செய்ய சொன்னார்கள் என்பதுதான் நிஜம். மின்வெட்டு பிரச்னை, மத்திய அமைச்சர் ராசாவின் ஸ்பெக்ட்ரம் பிரச்னை, மற்ற பிரச்னைகள் எல்லாம் (நாங்கள் அறிவாலயத்தை காலி செய்த பிறகு) சமீப காலத்தில் தோன்றியவைதான். அந்த பிரச்னைகளை சன் டி.வி.யும் தினகரனும் மட்டும் வெளியிடவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.

அதற்கு பிறகு தமிழக மின்துறை அமைச்சர் வீராசாமி நேரில் வந்து ‘கலைஞர் டிவிக்கு இடம் வேண்டும். உடனே சன் டி.வி. அலுவலகத்தை காலி செய்துவிடுங்கள்’ என்று கூறினார். ‘தாத்தாவே விரும்பினால் நாங்கள் புதிய இடத்திற்கு சன் டிவி அலுவலகத்தை மாற்றுகிறோம்; அதற்கு சில மாத அவகாசகம் கொடுங்கள்’ என்றோம். மின்துறை அமைச்சர் வீராசாமி சரி என்று கூறி சென்று விட்டார். ஓரிரு மாதங்களில் மீண்டும் வீராசாமி என்னை சந்தித்தார். ‘கலைஞர் டிவிக்கு உடனே இடம் வேண்டும்.

இங்கிருக்கும் சன் டி.வி.யின் மேஜைகள், அலமாரிகள், கேபின்கள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு ஒரே வாரத்தில் காலி செய்ய வேண்டும் ’என்று நெருக்கடி தந்தார். நாங்களும் இரவு பகலாக வேலை செய்து ஒரே வாரத்தில் அவர் கேட்டுக்கொண்டபடி ‘கிs வீs ஷ்லீமீக்ஷீமீ வீs’ விட்டுவிட்டு சென்றோம்.

சன் டி.வி. அலுவலகம் அறிவாலயத்திற்கு சென்றது எப்படி என்பதை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கு சொந்தமான இடத்திற்கு சென்றால் ஆட்சி மாறும் போதெல்லாம் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் யாரும் அறிவாலயத்துக்கு வாடகைக்கு வர பயப்பட்ட நிலையில் சன் டி.வி.யை அங்கு கொண்டு வந்தோம்.

அங்கு வந்த பிறகு சன் டி.வி. செலவில் அறிவாலயத்தில் தாங்கள் அமரும் அறை, பத்திரிகையாளர் சந்திப்பு அறை & முரசொலி மாறன் அரங்கு, வெற்றிச் செல்வி கண் மருத்துவமனை போன்றவற்றை சீரமைத்து, அதற்காக நீங்கள் எங்களை அழைத்து பாராட்டியதை நாங்கள் மறக்கவில்லை. தாங்களே எல்லோரிடமும் ‘என் பேரன் கட்சி அலுவலகத்தை ஐந்து நட்சத்திர ஓட்டல் போல் மாற்றி அமைத்து கொடுத்துவிட்டான்’ என்று அங்கு வரும் தலைவர்களிடம் பெருமையாக கூறினீர்கள். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கேட்ட தலைவர்களும் மறந்திருக்க முடியாது.

இப்போது சன் டி.வி. அறிவாலயத்தை விட்டு வெளியேறியபோது, ஏதோ பல இடங்களை இடித்துவிட்டது போன்ற ஒரு பிரமையை உருவாக்கியுள்ளீர்கள். உண்மையில், சன் டி.வி. வெளியேறிய பிறகு, கலைஞர் டி.வி.க்காக அங்கே சில மாற்றங்கள் செய்தபோது அதற்காக இடிக்கப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களிடம் காட்டி, எங்கள் மீது தந்திரமாக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. வீராசாமி கேட்டுக்கொண்டபடி பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள் அலங்காரங்களை அப்படியே சன் டி.வி. விட்டுச் சென்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.

அறிவாலயத்தை விட்டு வெளியேறியதும் அமைச்சர் வீராசாமியையும், அமைச்சர் வீரபாண்டியாரையும் தயாநிதி மாறன் அழைத்து சென்று சன் டிவி காலி செய்த இடத்தை சுற்றிக்காட்டி, அவர்கள் திருப்தி அடைந்ததை உடனிருந்த பலரும் அறிவார்கள்.

ஆகஸ்ட் 1, 2008 அன்று அறிவாலயத்தை காலி செய்து சாவி ஒப்படைக்கும்போது ‘நீங்கள் கேட்டபடி ‘கிs வீs ஷ்லீமீக்ஷீமீ வீs’ நிலையில் ஒப்படைக்கிறோம் என்று கூறி, அறிவாலய மேலாளரிடம் சுற்றிக் காட்டி அவரும் ‘நல்ல நிலையில் இடத்தை பெற்றுக்கொண்டோம்’ என்று கையெழுத்திட்டு ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அன்றோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ எதுவும் சொல்லாமல் பல மாதங்கள் கழித்து திடீரென்று எங்கள் மீது வீண்பழி சுமத்துவதன் நோக்கம் புரியவில்லை.

இந்த வீண்பழிக்கு உள்நோக்கம் தயாநிதிமாறனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதாக இருந்தால், அதற்காக எங்கள் மீது அவதூறு பிரசாரம் செய்திருக்க தேவையில்லை.

தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம் என்று தெரிவித்திருந்தால், மறுநொடியே தயாநிதி மாறன் தன் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பார்.

இப்படி மீண்டும் மீண்டும் எங்கள் மீது வீண்பழி சுமத்தவேண்டாம். ஒன்றரை ஆண்டுகளாக மற்றவர்கள் வீண்பழி சுமத்திய போதும், புழுதி வாரி இறைத்தபோதும் வாய்மூடி மவுனமாக இருந்தோம். இன்று தாங்களே ஒரு வீண்பழியை சுமத்தும்போது அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தாங்கள் விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் எங்களது விளக்கத்தையும், எல்லா உண்மைகளையும் ஆதாரத்துடன் தெரிவிக்க தயாராக உள்ளோம்.

இப்படிக்கு
அன்பு பேரன்,
கலாநிதி மாறன்
21.11.2008

மோகன் காந்தி said...

சபாஷ்! வீட்டுச் சண்டை வீதிக்கு வந்து விளக்குமாறு அடி வரை கொண்டு வந்து விட்டார்கள்!

Anonymous said...

//கருத்துக் கணிப்பில் அதிகமான மதிப்பீட்டை ஸ்டாலின் மாமாதான் பெற்றிருந்தார் என்பதால் அதனை வெளியிட்டோம். பல ஆண்டுகாலமாக கட்சிக்காக தங்களைப் போன்றே தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்றி & கட்சிக்காக பலமுறை சிறைசென்று, மிசாக் கொடுமையை ஏற்ற ஒருவருக்குத்தானே அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது என்று தாங்களும் மகிழ்வீர்கள் என நினைத்தோம். ஏனோ அதனை பெரிய பாதகச் செயலாக தாங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.//

என்னே ஒரு நுண்ணரசியல்!!!

Krish said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

lok said...

எவ்வளவு அழகா கரண்ட் கட் - இலங்கை பிரச்சனை - சட்ட கல்லூரி சாதி பிரச்சனை - எல்லாத்தையும் தீர்த்து கடும்ப பிரச்சனைக்கு வந்திருக்காரு, சும்மா திட்டிகிட்டு அவர பாராட்டி ஒரு பதிவு போடப்பா!!!

Mani said...

The first 2 anonys comments are very good

டன்மான டமிழன said...

முக்காலமும் உணர்ந்த பாடிகாட் முனிஸ்வரனுக்கு ஓன் கடிதம்...

///// லக்கி நெம்பர் 2011 ? /////

ன்னா சொல்லி ஆரம்பிக்கிறதுனு
எனக்கு தெரியலை...

யாருனு தெரியாத ஆனா தெரிந்த
இட்லிவடை குரூப்புக்கு... உங்க குரூப்லா மொத்தம் 5 பேர்தானே
(உங்க குரூப் போட்டோவில் 4 இட்லி 1 வடைதான் இருந்தது)

எப்பவுமே தெருக்கோடியில விழுந்துகிடப்பேன்...
இப்பதான் கொஞ்சநாளா நெட்வலையில்
விழுந்த
டன்மான டமிழன் எழுதுவது

நானும் நிறைய வலைபூ போய் பார்த்தேன்
எதுவும் என்னை டச் பண்ணலை
ஆனா உன் பெயரை கேட்டவுடனே
ஒரு ஃபிலிங்...
ஒரு டச்சிங் இருந்தது
ஐ லைக்ட்
உன்னை எனக்கு ரொம்ப
பிடிச்சிபோச்சு

உன்னை பிடிச்சுபோக 2 காரணங்கள்...

காரணம் : 1
அது எப்படி நான் தினமும் தட்டுக்கடையில் (சென்னை டமிழ் தெரியாதவர்களுக்கு- கையேந்திபவன்) தினமும் நான் விரும்பி இட்லிவடைதான் சாப்பிடறேன்னு (காவி ஆட்சியில் சும்மா நமீதா மாதிரி ரொம்ப புசுபுசுனு இட்லி இருந்தது இப்ப கதர் ஆட்சியில் மார்கெட்போனா த்ரீஷா மாதிரி
ரொம்ப ஸ்லிம் ஆயிடுச்சி) தெரிந்து அந்த பெயரை வைத்தால்.

காரணம் : 2
என்னுடைய சாமியும் உன்னுடைய சாமியும் ஒண்ணு என்பதால் (ஸ்ரீ பாடிகாட் முனி) உன்னை எனக்கு (இ.வ) பிடிச்சு போச்சு. பாடிகாட் முனியாண்ட நிறைய டைம்
செல்லுல பேசியிருக்கேன்(இப்ப எல்லாம் மிஸ்டுகால் கொடுத்த கால் பண்ணமாட்டிக்கிறருப்பா) அதனால அவருக்கு கடுதாசி போட்டலாம்னு
முடிவு பண்ணிணேன்... நீதான் அவருடைய பி.எம் (போஸ்ட் மேன்) என்பதால் உன் மூலமா என்னுடைய முதல் கடுதாசியை எழுதறேன். அவருகிட்ட பதிலை எழுதி வாங்கிடு.

முக்காலமும் உணர்ந்த பாடிகாட் முனிஸ்வரனுக்கு...

நான் நல்லாருக்கேன்... அதுபோல் நீ நல்லா இருக்கையானு நான் கேட்க மாட்டேன் அப்படி கேட்ட கலைஞருக்கே கவிதை எழுதன மாதிரி

நான் நல்லருப்பதால நீயும் நல்லருப்பேங்கற நம்பிக்கையில உன்கிட்ட ஒன் கேள்வி கேட்கனும்.

நான் சின்னபிள்ளையா இருக்கும்போது
எங்க பெரிய தத்தா அடிக்கடி 2000 ஆயிரத்துல உலகம் அழிஞ்சிடும்னு சொல்லிக்கிட்டே
உலகம் அழியறதை பார்க்கமா
அவருபோய்ட்டாரு... நான் கொஞ்சம் பெரிய பிள்ளையான போது எங்க சின்ன தாத்தா 2000 ஆயிரத்துல Y2K பிரச்சனையினாலா எல்லா
கம்ப்யூட்டரும் நின்னுபோயி உலகமே
நின்னுடும்னு சொன்னாரு... அதுக்கு முன்னாடியே
அவரு மூச்சி நின்னு போயிடுச்சி...

இருட்டுல மூச்சா போக பயப்படும் பிள்ளையாட்டம்... 2000 வருஷத்தை நினைத்து பயந்துகிட்டே
இருந்தேன்...எங்க பெரிய, சின்ன தாத்தா சொன்னமாதிரி எதுவுமே
நடக்கல அவங்களுக்கு திதிதான் வருஷம் வருஷம் நடந்துகிட்டு வருது....

அப்புறம் நான் எந்த வருஷத்தை நினைத்தும் பயப்படமா ஜாலியா லைப் ஓடிக்கிட்டு இருந்தது...
இப்ப தான் இந்த ஒரு வருஷமா... டமிழ்நாடு முழுக்க 2011ன் 2011ன்னு எங்கபோனாலும் எக்கோ மாதிரி எதிரொலிச்சிக்னு
இருக்காங்க...

முதல்ல சாதரணமாதான் நினைச்சேன் ஆனா கலைஞரு கவிதை மாதிரி முதல்ல நல்லாதான் இருந்தது போக போக
பயமா மாறிடிச்சி. 2011 மாற்றம் வரும் மாற்றம் வரும் நாங்க நல்லாட்சி வழங்குவோம்னு
நான்தான் முதல்வர் என்று ஏகப்பட்ட பேர் சொல்லிகினு இருங்காங்க... 2011ன்னுல தமிழ்நாட்டுல யாருவருவாங்க

அப்பாவின் ஆட்சியா
அம்மாவின் ஆட்சியா
அண்ணியாரின் ஆட்சியா (விஜயகாந்த்)
சித்தியின் ஆட்சியா (சரத்குமார்)
குடும்ப ஆட்சியா (கூட்டணிப்பா)
கதர் ஆட்சியா
காவி ஆட்சியா

இவங்கள்ள யாருவந்து தமிழகத்துக்கு (ஏ)மாற்றம் தருவாங்க.

2011ன்னு தமிழகத்தின் லக்கி நெம்பரா?
இல்ல அன்லக்கி நெம்பரா?

யாருகிட்ட போய் கேட்பது நியூமராலஜி காரன் கிட்ட போய் கேட்கலாம்னா அவன்
என்கிட்ட காசு கேட்பான்.... பகுத்தறிவின் பாசறையிலிருந்து
வந்த வம்சம் எங்க வசம்சம் காசுவாங்கிதான் பழக்கம்.
என்னால காசு கொடுத்து எல்லாம் எதிர்காலத்தைபற்றி தெரிஞ்சுக்க முடியாது. ஆகவே

நீதான் முக்கலாமும் உணர்ந்த முனி என்பதால் எனக்காக என் பயத்தை போட்க கொஞ்சம் Forward போய் 2011ன்னுல
டமிழகம், டமிழினம் இருக்குமான்னு பார்த்து சொல்லு...

2011 வருஷம் தமிழகத்துக்கு அன் லக்கி நெம்பர்னா தெரிஞ்சுதுனா.....

இப்பவே கிளம்பி (கோவாவுல எங்க துரத்து உறவுக்காரங்க இருக்காங்க) அங்க போய் தோல்காப்பியத்திற்கு உரை
எழுதலாம்னு நினைக்கிறேன். (கோவாங்கற இடச்சொல் வர்றதாலா தொல்காப்பியத்திற்கு
ஒத்த சுழி கொம்பு போடுவாங்களா... இல்ல இரட்டை சுழி கொம்பு
போடுவாங்களா யாரவது டமிழ் அறிஞர் இருந்தா சொல்லுங்கப்பா)

ஆகாவே இந்த கடிதத்தை தந்தியா
(இலங்கை பிரச்சனை மாதிரி
பதிலே தெரியமா போய்டப்போவுது) பாவித்து உடனே பதில் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
உன்னை இதயத்தில் வைத்து
பணத்தை (பாதுகாப்பா) பேங்கில் வைத்து வழிப்படும்

டன்மான டமிழன்

பின்குறிப்பு :
முந்தியேல்லாம் பொங்கல் வைக்கிறமாதிரி நாங்களே டமிழின முறைபடி சுட சுட சரக்கு காய்சி உன்கிட்ட வைச்சி கும்பிடுவோம்.... ம்ம்ம்ம்ம்..... அது ஒரு பொற்காலம். இப்ப எல்லாம் டாஸ்மாக் சரக்குதான் வைச்சி கும்பிடுறாங்க. உனக்கு தெரியுமா?... அம்மா ஆட்சியில சரக்கு நல்ல பவரா இருந்தது... இப்ப டமிழின டலைவர் ஆட்சியில டமிழ்நாட்டுக்கும் பவரு போய்டுச்சி சரக்குலையும் பவரு போய்டுச்சி... குவாட்டர் அடிச்சாகூட போதை ஏறமாட்டிக்குது
ஏதோ கூல்டிரிங்க்ஸ் சாப்பிட்டமாதிரியே இருக்கு. முன்னாடி ஓட்டு போட்டா
பின்னாடி வேட்டு வைக்காறங்கப்பா... எந்த டமிழக அரசியல்வாதியையும் நம்ப முடியலை....

பின்பின்குறிப்பு :
நான் எழுதுனதுல ஏதாவது சொற்பிளை,
பொருட்பிழை, சந்திப்பிழை, இலக்கணபிழை எல்லாம் இருந்ததுனா... அப்ப நான் டமிழ்லதான் எழுதியிருக்கேன்னு அர்த்தம்

அச்சுப்பிச்சு said...

டன்மான் தமிழன் நல்லாவே சொல்லீருக்காரு.

கருணாநிதி ஐம்பதுகளில் இருந்தது போலவே இப்போதுமிருக்கிறார். அப்போதிருந்த பெட்டி ---பணப்பெட்டியல்ல petty -- அரசியல்வாதி யிலிருந்து Statesman ஆக காலம் அரைநூற்றாண்டை அவருக்குக்கொடுத்தாலும், நான் மாறுவேனா என்று அப்படியே இருக்கிறார். கருணாநிதியென்ற பெயரை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது.

பேரன்கள் விளக்கத்திலிருந்த தெளிவு அவரது குற்றச்சாட்டில் இருக்கிறதா?

அன்றைக்கிருந்த அரசியல்/தனிமனித/ஜாதிமுறையிலான காழ்ப்புணர்ச்சி இன்னும் அதிகமாகியிருக்கிறது.

இன்னும் யாருக்கு பணம் சேர்க்கிறார்? தான் சாப்பிடும் ‘இட்லி-வடை’க்குப்பதிலாக பணத்தை சாப்பிடமுடியாதென்பது இன்னும் அவருக்கு தெரியவில்லையா?

தன் ஆட்சி/ஆஸ்தியை தான் இருக்கும்போதே குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டால், அவர் இல்லாதபோது வாரிசுகள் சண்டையில் தமிழ்நாடே பற்றியெரிவதை அவரால் தடுக்கமுடியும்.

செய்யமாட்டார். வீல் செயரோ படுக்கையோ, தானும் படுத்து தமிழ்நாட்டையே படுக்கவைத்துவிட்டார்.

After all, we will get the Leaders we deserve! ஜெய் ஹிந்த்!

அச்சுப்பிச்சு.

Anonymous said...

/// அளவில் வெளிவரும் திவீஸீணீஸீநீவீணீறீ ணிஜ்ஜீக்ஷீமீss மிஸீபீவீணீ ஜிஷீபீணீஹ், பிவீஸீபீustணீஸீ tவீனீமீs, ஜிவீனீமீs ஷீயீ மிஸீபீவீணீ போன்ற ஏடுகளும் ///

இது போன்ற ஆங்கில வார்த்தையிடங்கள் அபத்தமாக வந்திருக்கின்றன. மாற்றிவிடுங்கள்.

Sethu Raman said...

enna, adichup pottangala? 22 thethikku appuram onnaiyum kaanom!!

Anonymous said...

தாத்தாவுக்கு பேரன் பதிலையே எத்தனை நாள் பார்த்துக்கொண்டிருப்பது? புதிய பதிவு ஏதாவது போடுங்களேன் please

Anonymous said...

தாத்தா, மாமான்னு சகிக்கலை இவிங்க அரசியல். இந்த பங்காளிப் பிரச்னையெல்லாம் பதிவு போட்டு நேரத்தை செலவிட வேண்டாம்.

geeyar said...

கலைஞருக்கு பிராமின்ஸ் மேல் வெறுப்பு என்பதைவிட பிராமின்களுக்கு அவர்மேல் எவ்வளவு வெறுப்பு இருக்கு என்பதை சில அனா(தை)னிகளின் வாயிலாக தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது. நன்றி.

லவ்டேல் மேடி said...

சிறந்த காமெடிக் குடும்பம்....!!! வேறென்ன சொல்வது......