பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 06, 2008

ஆல்ஃசைமரும் நெற்றிக்குறியும் நெடிய பூணூலும் - கி.அ.அ.அனானி

கி.அ.அ.அனானி எப்போது எ.அ.பாலாவிற்கு தான் அனுப்புவார் இந்த முறை இட்லிவடைக்கு அனுப்பியுள்ளார். ஏன் என்று உங்களுக்கே தெரியும் :-)

ஆல்ஃசைமரும் நெற்றிக்குறியும் நெடிய பூணூலும் - கி.அ.அ.அனானி
வயதானால் ஞாபகமறதி அதிகமாகி விடுகிறது. என் தாத்தாவுக்கு 84 வயதாகிறது. பாவம் இந்த ஆல்ஃசைமர் வியாதி பாடாய் படுத்துகிறது. இந்த வியாதியின் தன்மையே சின்ன வயதில் நடந்ததெல்லாம் நன்கு ஞாபகமிருக்கும். சமீபத்திய நிகழ்ச்சிகள் மறந்து போய் விடும்.( இதை ஒரு மாதிரி Blessing in Disguise என்று கூட சொல்லுவார்கள்) இந்தியாவில் முக்கால்வாசி வயதானவர்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. (குறிப்பாக முதிர்ந்த அரசியல்வாதிகளை இந்த வியாதி ரொம்பவே பீடிக்கிறது என்று நினைக்கிறேன் ;-)

உதாரணத்திற்கு சமீபத்தில் மதுரைக்கு அருகில் நடந்த ஜாதிக்கலவரத்தை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தனது சிறுவயது முதல் கைக்கொள்ளும் பழக்கத்தை மறக்காமல், நெற்றிக்குறியையும் பூணூலையும் விமர்சித்து கவிதை எழுதி விட்டார். வசதியாக அவர் மறந்த விசயம் இப்படிப்பட்ட விசயங்கள் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதையும் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர் என்ற முறையில் இவர் தான் அதற்க்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும்...

இன்னும் சொல்லப் போனால் ஓட்டு வங்கி (சாதீய) அரசியலுக்கு துணை போகவே, கலவரம் செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்து அத்தகைய நிலைமை திரும்பவும் ஏற்படாமல் தடுப்பதை விடுத்து, கையறு நிலைமையாக கவிதை பாடிக் கொண்டிருக்கிறார் என்று உலகம் இவரைப் பார்த்துச் சொல்லலாம்.

என் தாத்தா அடிக்கடி சொல்லுவார் என் தாத்தா அடிக்கடி சொல்லுவார் "காதலிப்பவனும், கையாலாகதவனும் தான் அடிக்கடி கவிதை எழுதுவான்" என்று ...

கையாலாகாதவர் என்று சொல்லவும் பயமாக இருக்கிறது. அப்புறம் பொன்முடி மாதிரி தொண்டரடிப்பொடிகள் கையாலாகாதவரின் குடும்பம் பற்றிய விவரங்களை (பணவரவு செலவு வரி) பப்ளிக்கில் அள்ளி விட ஆரம்பித்தால் நாம் முடியை பிச்சுக் கொண்டு ஓட வேண்டியது தான் :)

கடைசியாக ஒரு சந்தேகம், சென்ற வருடம் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு 3 பேர் இறந்தபோது, யாரும்(!) கவிதை எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை..

ஆண்டவா, வயதானவர்களிடமிருந்து தமிழகத்தை காப்பாற்று (முடிந்தால்)... தில்லுமுல்லுவில் தேங்காய் ஸ்ரீநிவாசன் சொல்வது போல ;-)

பிகு: தில்லுமுல்லு அருமையான படம், தேங்காய் ஸ்ரீநிவாசன் சூப்பரா நடிக்கிறார் என்று எ.அ.பாலா டிவிட்டரில் போன வாரம் சொன்னார் :-)15 Comments:

IdlyVadai said...

test comment :-)

( அப்படி போடுவது தானே மரபு )

enRenRum-anbudan.BALA said...

இதென்ன கலாட்டா (உஜாலா விளம்பரம்!) ? :)

இலவசக்கொத்தனார் said...

//ஏன் என்று உங்களுக்கே தெரியும் :-)//

ஏன்னா அவருதானே இவரு!! :)

சுரேஷ் said...

//கி.அ.அ.அனானி எப்போது எ.அ.பாலாவிற்கு தான் அனுப்புவார் இந்த முறை இட்லிவடைக்கு அனுப்பியுள்ளார். // இப்போதும் அதேதானே செய்திருக்கிறார்??

மாயவரத்தான்.... said...

"என்னையும் என்னுடைய ஆட்சியையும் ஒழித்துக் கட்டுவதற்காக பல வழிகளில் பலர் முயன்று வருகிறார்கள்."

(இதுக்கு வெளியில இருந்தெல்லாம் ஆள் தேவையா என்ன? நீங்களும், உங்க குடும்பத்தினரும், போதாக் குறைக்கு ஆற்காடு வீராசாமியும் போதாதா?!)

"பிராமணர்கள் நெற்றியில் விபூதியும், மார்பில் பூணுலும் அணியக் கூடாது"

(முஸ்லீம் பெண்கள் பர்தா அணியக் கூடாது, வெள்ளிக்கிழமை தொழுகைகளில் முஸ்லீம்கள் ஈடுபடக்கூடாது, சீக்கியர்கள் 'டர்பன்' அணியக் கூடாது, பெயரை வைத்து என்ன மதம் என்று கண்டுபிடிக்கிற மாதிரியான பெயர் வைத்துக் கொள்ளக்கூடாது, யோகா மாஸ்டர் சொன்னார் என்பதற்காக (மட்டும்) யாரும் மஞ்சள் துண்டு அணியக் கூடாது என்றெல்லாம் விரைவில் சமத்துவ முதல்வர் அறிவிப்பார்!)

lok said...

இட்லி வடை , அது சரி, இதெல்லாம் சரியா போடுற நீங்க ஒரு மிலிடரி ஆபிசர் கைது ஆனதை பத்தி பதிவு ஏன் போடலை ?

இங்கிலாந்து குண்டு வெடிப்புல சம்பந்தம் இருக்கலாம்னு சந்தேகப்பட்ட டாக்டரை மற்றும் குடும்பத்தை பத்தி பக்கம் பக்கமா எழுதிய பத்திரிகைகள் எங்க போச்சுன்னு தெரியல....... இந்த வியாதிக்கு என்ன பேரு ?

Anonymous said...

கருணாநிதிக்கு சாமி கண்டனம்


பிராமணர்களை புண்படுத்துவதா?


சென்னை, நவ.7: பிராமணர்கள் பொட்டு வைக்கக் கூடாது, பூநூல் போடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி கண்ணியக்குறைவாக பேசுவதா என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமரின் சிலைகள் ஆடைகள் இன்றி நிர்வாணமாகதான் நிறுவப்படுகின்றன என்று மிகவும் கண்ணியக்குறைவாக முதல்வர் கருணாநிதி சொல்லியுள்ளார்.
கருணாநிதி நல்லாட்சி செய்வதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக மக்கள் எதை அணிய வேண்டும், எதை அணியக் கூடாது என்று பேசுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.
சமீபத்தில் அவர், Ôபிராமணர்கள் பூநூல் அணியக்கூடாது, பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் மக்கள் மனதில் சமத்துவ எண்ணம் ஏற்படும்Õ என்று மோசமாக பேசியுள்ளார். சீக்கியர்கள் தலைப்பாகை அணியக் கூடாது, முடி வளர்க்க கூடாது என்றும், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து செல்லக் கூடாது என்றும் விரைவில் அவர் சொல்வார்.
இப்படியெல்லாம் பேசுவதற்கு முன்பு, பிரமாண யோக ஆசிரியர் சொன்னபடி, பேய் பிசாசுகளால் எந்த தீங்கும் ஏற்படாமல் இருக்க தோளில் போட்டுக் கொண்டிருக்கும் சால்வையை கருணாநிதி முதலில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு சாமி கூறியுள்ளார்

கி.அ.அ.அ ரசிகர் மன்றம் said...

lok அய்யா,

எதுக்கெடுத்தாலும் 'அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்' என்று நாயகன் ஸ்டைலில் பதிவுக்கு தொடர்பில்லாம வசனம் பேசுவதே ஒரு வகை வியாதி தானே. எல்லாத்த பத்தியும் பதிவு போடறது இட்லிவடைக்கே ஆவுற காரியமில்ல :)

பொறுப்பான முதல்வர் பதவியில் இருப்பவர் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காம கவிதை எழுதினா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா? மிலிட்டரி ஆபிஸருக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? நல்லா இருடே ... சாத்தான்குளத்தார் ஸ்டைலில் ;)

உங்களுக்கு சு.சுவாமியே எவ்வளவோ பெட்டர்

lok said...

கி.அ.அ.அ ரசிகர் மன்றம் பெரியவா,
நான் இட்லி வடை ரொம்ப நாளா படிச்சிண்டு வரேன்
சமீப காலமா கருணாநிதி எதிர்ப்பு பதிவுகளா இருக்கே நாட்டு நடப்பை பத்தி ஏன் போடலைன்னு ஆதங்கத்துல கேட்டேன் , பெரியவாக்கு ஏன் BP ஏறுது :)
இட்லி வடை சாயம் வெளுத்துடுதா ?

ராஜ்மோகன் said...

நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை.அதைவிட நான் சொல்றது 200 சதவீதம் வாழ்க்கைக்கு உருப்படற மாதிரி ஒரு ஐடியா சொல்றேன் கேளுங்கய்யா.

பேசாம இந்த மாதிரி வெட்டி பிளாக்கெல்லாம் மூடிட்டு போய் அவனவன் பொழப்ப போய் பாருங்கடா வெண்ணைங்களா.

Anonymous said...

lok வெண்ணை, கருணாநிதி எதிருப்பு தான் இப்போதைக்கு நாட்டு நடப்பு. இது கூடத் தெரியாம எழுத வந்திட்டியேப்பா.

Sharepoint the Great said...

மன்னிக்கவும். ரீட் மோர் க்ளிக் செய்தால்.. வேறு பக்கத்தைத் திறக்காமல் போஸ்ட் பேக் ஆகாமல் இருக்கிறது..

வாழ்க உங்களது ஜாவாஸ்க்ரிப்ட் புலமை.

நன்றாக உள்ளது

இப்படிக்கு,

போஸ்ட்பேக் விரும்பாதவர் சங்கம்

Anonymous said...

பதிவிட்ட இட்லி வடைக்கும் பின்னூட்டமிட்ட எ அ பாலா, மாயவரத்தான் ,ராஜ் மோஹன் அனைவருக்கும் நன்றி

இலவசக் கொத்தனார், சுரேஷ் : நல்லா இருங்க :)

கி அ அ அனானி

Anonymous said...

கிஅ அ பெயரில் பாலா தான் அறுக்கிறார் என்றால் இப்போது இட்லிவடையுமா?

செம போர். வேறு ஏதாவது முயற்சிக்கவும் இட்லி.

கி.அ.அ.அ ரசிகர் மன்றம் said...

உங்க ஒருத்தர் பொழுதுபோக்குக்காக மட்டும் இ.வ பதிவு போடல... அதனால 'போர்' அடித்தால் உங்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுதும் வலைப்பதிவர்களின் இடுகைகளை வாசிக்கவும்... சுவாரசியமாக இருக்கும் ;-)