பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 18, 2008

சானிடரி கல்கி - நாப்கின் முரசொலி

"ரேஷன் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொருள்களின் உறையில் முதல்வர் படத்தைப் போட்டு விளம்பரப்படுத்த வேண்டுமா?"

"பள்ளி மாணவிகளுக்குத் தரும் இலவச சானிடரி நாப்கின் உறைகளின் மேல் படம் போடாமல் இருந்தால் சரி; சந்தோஷம்; போட்டால் வியப்பதற்கில்லை என்னும் அளவுக்கு இன்றைய அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது"

- தராசு பதில்கள் - 16.11.08, கல்கி

இந்த கேள்வி பதிலை போன வாரம் கல்கியில் படித்த பிறகு, அட்டையை திரும்ப ஒரு முறை பார்த்து 'கல்கி' தானா என்று ஊர்ஜிதம் செய்திக்கொண்டேன்.

கல்கி பத்திரிக்கை மீது ஒரு மதிப்பு இருந்தது, தற்போது அது இல்லை.

இந்த பதிலை படித்துவிட்டு (பார்ப்பான்)இட்லிவடைக்கே கோபம் வருகிறது, என்றால் முரசொலி சும்மா இருக்குமா ?‘கல்கி’யின் ‘தரமும்’, ‘நிறமும்’, ‘மணமும்’, ‘குணமும்’! - முரசொலி 10.11.08


பார்ப்பனப் பத்திரிகைகளின் ‘தரம்’ நாளுக்கு நாள் அதலபாதாளம் நோக்கிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இந்த வாரத்துக் ‘கல்கி’ ஏட்டில் ஒரு கேள்வி பதில்.

"ரேஷன் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொருள்களின் உறையில் முதல்வர் படத்தைப் போட்டு விளம்பரப்படுத்த வேண்டுமா?"

- இது கேள்வி.

கல்கி - சீதாரவி என்கிற பார்ப்பனத்தியை ஆசிரியராகக் கொண்ட வார ஏடு - அளித்த தரம், குணம், மணம் மிகுந்த பதில் வருமாறு:-

"பள்ளி மாணவிகளுக்குத் தரும் இலவச சானிடரி நாப்கின் உறைகளின் மேல் படம் போடாமல் இருந்தால் சரி; சந்தோஷம்; போட்டால் வியப்பதற்கில்லை என்னும் அளவுக்கு இன்றைய அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது"

- என்று பதிலளித்திருக்கிறது ‘கல்கி’.

‘கல்கி’ வாசகர்கள் - கடைகளில் சென்று ‘கல்கி’ வாங்கும் போது

மகாத்மாகாந்தி படம் பொறித்த பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தால் கல்கி விற்பனையாளர்கள் அந்த ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது; மகாத்மா படம் பொறித்த ரூபாய் நோட்டு - தரம் தாழ்ந்த அரசியலின் அடையாளம். ஆகவே காந்தி உருவம் இல்லாத சில்லறைகளாகப் பத்து ரூபாய் தரும் வாசகர்களுக்கு மட்டுமே ‘கல்கி’யை விற்க வேண்டும் என்று ஒருபோதும் கல்கி - தனது விற்பனையாளர்களுக்கு உத்திரவு போடாது; காரணம் அது அவாளின் வயிறு - வயிற்றுப் பிழைப்பு சம்பந்தமானது!

ரேஷன் கடைகளில் விற்கும் பொருள்களின் உறை மீது முதல்வர் படம் போட்டால் கல்கிக்கு வயிறு எரியும்; அரசியலின் தரம் தாழ்ந்து விட்டதாக அது கூப்பாடு போடும்.

மாணவிகளுக்கு வழங்கும் நாப்கின் உறைகளின் மேல் படம் போடாமலிருந்தால் சரி; சந்தோஷம் என்று கேலி செய்கிறது கல்கி!

ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருள்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன.

பாக்கெட்டுகளின் மேல் முதல்வர் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பாக்கெட்டுகளை வாங்கும் பொதுமக்கள் பாக்கெட்டுகளுக்குள் உள்ள உணவுப் பண்டங்களைத்தான் சமையலில் உபயோகப்படுத்துவார்களே தவிர, பாக்கெட்டு களை உபயோகப்படுத்துவதில்லை!

நாப்கின் உறைகளின் மீது ‘கல்கி’ கூற்றுப்படி முதல்வர் படத்தை அச்சிட்டுத் தருவார்கள் என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்.


நாப்கின் உபயோகிக்கும் பெண்கள் - உறையைப் பிரித்து வீசிவிட்டு உள்ளே உள்ள நாப்கினைத்தான் உபயோகப்படுத்துவார்களே தவிர - உறைகளை அல்ல;

கல்கி குடும்பத்துப் பெண்கள் - ஒருவேளை - அந்த உறையையும் உபயோகப்படுத்திக் கொள்வார்களோ என்னவோ; தெரியவில்லை.


அரசாங்கம் விற்கும் பொருள்களின் பைகள் - உறைகள் மீது தலைவர்கள் படத்தைப் போடுவது என்பது சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே நடைமுறையில் இருந்து வருவதுதான்.

அரசாங்கத்தின் - காதி - கதர்க்கடைகளில் வேட்டி - துணிமணிகள் எடுத்தால் ஒரு பையில் ‘பாக்’ செய்து தருவார்கள். அதன்மேல் காந்தியடிகள் படம் எப்போதும் இருக்கும். இப்போதும் இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் அவரது படம் பொறிக்கப்பட்டுதான் இருந்தது. இலவச சைக்கிள் கொடுத்தார்; அதிலும் கூட சைக்கிளின் முகப்பில் உள்ள இரும்புக் கூடையிலும் ஜெயலலிதா படம் போட்டுத்தான் வழங்கப்பட்டது.

அப்போதெல்லாம் அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக கல்கி - அங்கலாய்க்கவில்லை.

காரணம் ஜெயலலிதா - அவர்களது சொந்த ஜாதியைச் சேர்ந்தவர். சுயசாதி அபிமானம் என்பது மட்டுமல்ல;

இப்போது முதல்வர் கலைஞரை எப்படி வேண்டுமானாலும் இழித்தும் பழித்தும் எழுதலாம். கலைஞர் பொறுப்புணர்வோடு பதில்தான் அளிப்பார்!

ஆனால் ஜெயலலிதாவை இப்படியெல்லாம் எழுதினால் என்ன நடக்கும்? கல்கிக்கு இந்த விஷயத்தில் சொந்த அனுபவம் உண்டு.

4 வழக்குகள் போட்டார் ஜெயலலிதா கல்கி மீது அவ்வளவுதான் - கல்கி - அன்னலட்சுமி ஜெயலலிதா - தைரிய லட்சுமி ஜெயலலிதா என்றெல்லாம் ஜெயலலிதாவின் படங்களைப் போட்டு பாராட்டுக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துவிட்டது. (கஜலட்சுமி ஜெயலலிதா என்று மட்டும்தான் சிறப்புக் கட்டுரையை வெளியிடவில்லை கல்கி! வெளியிட்டிருந்தால் ஆகா என்ன பொருத்தம் - ஆகா என்ன பொருத்தம் என்று வாசகர்களிடமிருந்து பாராட்டுக் கடிதம் வந்து குவிந்திருக்கும்.)

அது எப்படியோ இருக்கட்டும் - ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடுவதில் ‘கல்கி’க்கு என்று ஒரு தனித்திறமை உண்டு. இப்போது கூட "அம்பிகையின் அருள் வடிவங்கள்" என்று ஒரு தொடரை அது வெளியிட்டு வருகிறது.

சோட்டாணிக் கரை பகவதி அம்மன் கோயில் என்று ஒரு திருத்தலமிருக்கிறதாம். அந்த அம்மனுக்கு மாதம் மூன்றுநாள் மாதவிலக்கு உண்டாம். அந்த மூன்று நாட்கள் அங்கே பக்தர்கள் கூட்டம் குவியுமாம்!

கல்கியின் சார்பில் ஸ்வீட்டா ஸ்டைலா ஸ்மார்ட்டா நாப்கின் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டால் - சோட்டாணிக்கரை மாதவிலக்கு மகாத்மியம் பற்றி சாங்கோ பாங்கமாக - ஒரு தரம் உயர்ந்த கட்டுரையை அதில் பிரசுரிக்கலாம். அது தரம், குணம், மணம், நிறம் ஆகியவற்றில் கல்கியின் தரத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும்!
உங்கள் பதிலுக்கு பதில் சொல்வதாக நினைத்து முரசொலியில் அநாகரிக சாடலைப் பார்த்தீர்களா ?, வரதராஜன் மாம்பலம்

பதில்: ரூபாய் நோட்டில் காந்திஜி படம் போடுவதையும் ஒப்புநோக்க முடியாது. மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து ஆட்சியில் உள்ள தனி நபருக்கோ கட்சிக்கோ விளம்பரம் தேடிக் கொள்வதைத் தான் தராசுவின் பதில் சற்று காரமாகவே இடித்துக் காட்டியது. இது கூட புரியாமல்(வி)காரமாக, ஆனால் சாரமின்றிப் பதில் சொல்லியிருக்கும் முரசொலியின் தரம், நிறம், மணம், குணம் குறித்து நான் எதுவும் சொல்லத்தேவையில்லை.

- தராசு பதில்கள் - கல்கி 23.11.08

( நன்றி: கல்கி, முரசொலி )
இந்த நன்றி இவர்களுக்கு தேவையா என்று கூட தெரியலை, அகழ்வு ஆராய்ச்சிக்கு இருக்கட்டுமே என்று போடுகிறேன் ;-)

கீழே வைத்திருக்கிறேன் எதற்கு என்று சொல்ல தேவையில்லை

கல்கிக்கு:முரசொலிக்கு:


36 Comments:

ranjane said...

arasiyal migavum tharam thazhnthu poi vitathu.. ketkavae hu kusugiraathu........ avamanam..........

Anonymous said...

கல்கி பத்திரிக்கையின் உவமை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில் ஒன்றும் விரசமில்லை. இன்னும் கொஞ்சம் நாசூக்காக சொல்லியிருக்கலாம். ஆனால், சொன்னது சுள்ளென்றுதான் இருக்கிறது. ஆனால், முரசொலியின் பதில் மிகவும் அருவருப்பாக இருக்கிறது. சானிடரி விஷயத்தினால் அல்ல, மீண்டும் சாதிவெறியை மட்டுமே கொண்டு பதில் கொடுத்திருப்பதால். சாதிவெறியும், சாதி காழ்ப்பும்தான் நிஜமான அசிங்கம். அது தெரியாமல் ஒரு அரசாங்கம். "அடியிலே ரத்தமா, அடியிலே ரத்தமா!" என்று கருணாநிதி கேட்டதாக சொல்வார்கள். அவ்வளவு கீழ்த்தரமானவருடன் வம்பு வைத்துக்கொண்டால் கல்கி போல கேட்கவேண்ண்டியது இருக்கும். சாக்கடையில் கல் வீசினால் கும்பி நம்மேல்தானே தெரிக்கும்.

ம.கு

gopi said...

Manjal Kavignar nu thaan avarukku romba naal munnadiyey peru koduthaachey. Andha perukku eatha maathiri ezhudharaaru.....

Idhula aachariya pada onnumey illayey .....

MK - Anaagarigathin ucha kattathai manam koosaamal ezhudhum oru kedu ketta arasiyal vyabaari........

Anonymous said...

The un-called for retaliation was nasty by Murasoli. Can't blame Kalki for this.

Anonymous said...

Quality of a magazine should not be valued on your moral restriction.

The answer by Kalki is really superb.

A Tamilian said...

Kalki has not written anything of a personal attack on Karunanithi or the ladies in his zenana.

I have read Kalki writing against Jayalalitha with such a strong language.

Posting Karunanithi or any ruling power's picture on every government sponsored work is utterly disgusting, and worth such a criticism.

The response of Karunanithi's Murasoli should be punished by law.

This is nothing but curbing the freedom of the press by violent method.

But, for such a mean creature as Karunanithi knows no respect to feminity.

Anonymous said...

Kalki's answer has bluntly and truely reflected the recent trend in political governance.

Murasoli is a pure political paper that can go the extremes in manipulating for the sake of some cheap benefits. No wonder they have replied in such a vulgar manner to Kalki.They claim to be non religious but attack on every religion in a dirty way which leads to social evils. No political party is good in TN and are equally vulgar, corrupted and violent. DMK under the aged leadership of MK is offlate setting a new benchmark on how a party should not operate. Murasoli is there own paper and they can even publish a totally nude poster in that and claim it is right.

Real Tamilan said...

What else you can expect from a party started by evangelical rings and funded by jihadi fringes ?

Anonymous said...

நிலவாவது ராக்கெட்டாவது. இங்க அடிப்போம் பாரு கும்மி. அல்லாம் அவங்கவங்க சாதியையும் சொல்லிட்டு ஆடுங்கப்பு, இன்ட்ரஷ்டிங்காப் போகும்.

Fruit Language said...

The used tissue paper in a latrine has higher value than Murasoli.

lok said...

முரசொலி சொல்லி தப்பில்லை, நம்மக்களின் ரசனை அப்படி. விருமாண்டியில் கமலஹாசன் நாசூக்காக சொல்லி இருப்பார் " எனக்கு இப்போ எங்க அரிக்குதுன்னு சொல்லு பார்ப்போம்" இதுக்கு ஒரு கூட்டம் கைதட்டும்

இலவசக்கொத்தனார் said...

பெரிய குப்பைத் தொட்டி, சின்னக் குப்பைத் தொட்டி. என்னே நின் நுண்ணரசியல்! :)

Anonymous said...

முரசொலி சோட்டானிக்கரா அம்மனைப் பற்றி எழுதியதை
மலையாளத்தில் மொழிபெயர்த்து
கேரளாவில் பரவலாக அறியத்தர
வேண்டும்.அவர்களாவது முரசொலியை கண்டிக்கிறார்களா
என்று பார்க்கலாம்.

ப்ரீதாப்ரியன் said...

இப்படியாக...
அரசியல் விபசாரிகளுக்கு
குப்பைதொட்டி வைத்து
துப்ப சொன்னால்

குப்பை தொட்டி தான்
நிறைய தேவைப்படும்

ஆனா
எங்ககிட்ட துப்ப
எச்சம் தான் இருக்காது...

Ballelakka said...

I think in the anti-brahmin tirade of Murasoli, every one seemed to have overlooked Murasoli's indirect attempt to equate Karunanidhi with (hold your breadth) Mahatma Gandhi. That toilet paper quotes GandhiJi's photo being printed on RBI currency asks whether Kalki will ask its readers not to give such notes but only pay in coins.

Has anyone ever come across Mahatma Gandhi being insulted more than this by these anti-national elements before?

We The People said...

கல்கி & முரசொலி, இரண்டின் ‘தரமும்’, ‘நிறமும்’, ‘மணமும்’, ‘குணமும்’ நன்றாக தெரிகிறது!

//அரசாங்கத்தின் - காதி - கதர்க்கடைகளில் வேட்டி - துணிமணிகள் எடுத்தால் ஒரு பையில் ‘பாக்’ செய்து தருவார்கள். அதன்மேல் காந்தியடிகள் படம் எப்போதும் இருக்கும். இப்போதும் இருக்கிறது.
//

அது போகட்டும், மத்திய அரசு என்ன மன்மோகன் சிங் அல்லது சோனியா காந்தி போட்டோவையா ரூபாய் நோட்டிலும்/ காசி போட்டுவிட்டது?? காந்தி அவர்கள் இதுவரை எந்த அரசாங்க பதவியிலும் இருந்ததாக தெரியவில்லை!

//ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் அவரது படம் பொறிக்கப்பட்டுதான் இருந்தது. //

அப்ப அந்த அம்மா செய்தால் நானும் செய்வேன் என்று சொல்லறாரோ?? ஆனாலும் யாரை பின்பற்ற வேண்டும் என்று கூட தெரியாத ஒரு அரசியல் தலைவரா நம்ம முதலவர்?? என்ன கொடும சரவணா இது??!!

Anonymous said...

I feel that kalki's answer about sanitary napkins is not bad at all. I do not know why is murasoli coming up with such horrible explanations for such a simple answer. I really think the murasoli article is "keezhtharam" and not the kalki one.

Anonymous said...

//Has anyone ever come across Mahatma Gandhi being insulted more than this by these anti-national elements before?//

காந்தியை கொல்ல தூண்டியவருக்கு மரியாதை செலுத்தும் anti-national elements பற்றி சோவிடம் கேளுங்களேன்.

Nilofer Anbarasu said...

குப்பை தொட்டியின் அளவு இரண்டுக்கும் சமமாக அல்லவா இருக்க வேண்டும்? எதற்காக இந்த பாரபட்சம்?

இந்த நிகழ்ச்சியை பற்றி வேற ஏதாவது துப்பு கிடைத்திருகிறதா? :)

சகி said...

what kalki said was horrible,isnt there anyother example.I was really horrified with murasoli's reply,we could see the morality of the writer & his book. kanimozhi, should be really ashamed of this .let her get respect from her house first ,then she can come to politics to improve the country.

Anonymous said...

Only Murasoli needs a Spittoon here. By Tamil magazine standards Kalki's answer is not that vulgar.

Apparently MK learns a lot from his Jihadi vote bank. Civilized world tries to tell those jihadis that they cannot pursue violence and those Jihadis promptly hit back with manifold violence to SAY! that they are not violent.

Raja said...

இட்லி வடையோ இல்லை nonhitlivalaiyo எனக்கு தெரியாது. ஆனால் அந்த கல்கி ஜெயலலிதாவை விமர்சனம் செய்தபோது அதை தொடர்ந்து எதிர்த்தவன் நான். அப்பொழுதெல்லாம் கல்கி உயர்ந்த இடம். இப்பொழுது தாழ்ந்த இடமா? உங்கள் கருணாநிதி ஆதரவை உங்களால் மறைக்கடியவில்லை போலிருக்கிறது.

Dr.Rudhran said...

kALKI IS NOW A COMMERCIAL ATTEMPT, A FAR CRY FROM ITS EARLIER LITERARY CLASS. MURASOLI WILL ALWAYS POUNCE IN THIS FASHION. I PERSONALLY FEEL IT IS OK TO GIVE NAPKINS WITH THE CM'S PIC ON IT...NAPKINS ARE MOSRE USEFUL THAN THE COLOR TVS

Renga said...

//நிலவாவது ராக்கெட்டாவது. இங்க அடிப்போம் பாரு கும்மி. அல்லாம் அவங்கவங்க சாதியையும் சொல்லிட்டு ஆடுங்கப்பு, இன்ட்ரஷ்டிங்காப் போகும்.//

agreed 10000% with you.... frustrated with these sort of nasty political drama...

Anonymous said...

Sorry to say this but people like Muka dont even deserve to have their pictures printed on napkins. These napkins are meant to maintain cleanliness but these filthy peoples pictures only induce disgust.

Dew Drop said...

Equating Gandhi's picture on the rupee notes to printing Karunanithi's picture on government supplies is the usual dravidian way of rationalism.

Printing Gandhi's picture on the rupee notes is not done by Gandhi when he was ruling a state or nation. It is done by people out of love and respect for him.

But, with Karunanithi, will anyone in his own zenana or wild oats sown by him and his family members remember him after he dies?

With dravidian idealogy only sickness prevails.

Disgusting people.

சுழியம் said...

Dear Dr. Rudran,

//kALKI IS NOW A COMMERCIAL ATTEMPT, A FAR CRY FROM ITS EARLIER LITERARY CLASS. //

1. Kalki is always a commercial attempt, but with a higher literary class. You may aware of the commercial marketings that both Sadhasivam and Kalki did to become a commercial success. (Being commercial is not bad, but being unethical is.)

2. When the land is dry with failed rainfall blaming a huge tree for lack of fruits while standing under its shadow cannot be the words of Dr. Rudran.

When the current literary level of Tamilnadu only grows around the napkins of women due to dravidian and other abrahamic movements, how can one expect Kalki to maintain its earlier literary class?

Krish said...

/// இந்த பதிலை படித்துவிட்டு (பார்ப்பான்)இட்லிவடைக்கே கோபம் வருகிறது, என்றால் ////
இதில் கோவப்பட என்ன இருக்கிறது? நியாயமான கேள்விதானே?

Anonymous said...

இட்லி வடை

இந்தப் போலித்தனத்தை முதலில் விட்டொழியுங்கள். நீங்கள் கோட்டாவைப் பற்றிய கோட்டை எடுத்ததே முதலில் தவறு. மிரட்டலுக்கு அடிபணியாதீர்கள். நமக்கும் மனதில் உண்மை என்று படுவதை உரக்கச் சொல்ல வேண்டும்.

கல்கியின் பதிலில் என்ன அருவருப்புக் கண்டீர்கள்? சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்கள்? கருணாநிதியின் அடியாட்கள் இந்திராகாந்தி மதுரைக்கு வந்த பொழுது கல்லாலும் கம்பாலும் அடித்தார்கள். அப்பொழுது அவர் உயிர் தப்பியதே பெரிய விஷயம். அப்பொழுது அவருக்கு அடிபட்டு ரத்தம் வந்ததாகச் சொன்ன பொழுது இதே கருணாநிதி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

[edited ] அப்படிப் பட்டக் கருணாநிதியுடன் தான் இன்று வெட்க்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லாத சோற்றால் அடித்தப் பிண்டங்களான காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது. ஏன் அதே இந்திராவும் கூட மானம் கெட்டுப் போய் இந்த் ஆளுடன் கூட்டு வைத்துக் கொண்டார். அதுதான் கேவலமான அரசியல்வாதிகளின் ஈனமான குணங்கள். அதைத்தான் கல்கி சரியாகச் சொல்லியிருக்கிறது.

கக்கூசில் ஆண் என்ற எழுத்தைப் படிக்கத் தெரியாதவர்களுக்காக ஒரு ஆணின் படத்தை வரைந்து வைத்திருப்பார்கள். அந்த ஆணின் படம் கூட தன் முகமாகவே இருக்க வேண்டும் என்று [edited] காந்தி ஒரு தேசத் தலைவர் என்ற விதத்தில் ரூபாய் நோட்டிலோ கதர் கடைப் பைகளிலோ இருப்பதில் தவறில்லை. மாறாக சோனியாவின் படமோ, மன்மோகனின் படமோ இருந்தால் தவறு. காந்தியும் கருணாநிதியும் ஒன்றா? யாரை யாருடன் ஒப்பிடுவது என்று தகுதி வேண்டாம் தராதரம் வேண்டாம்.

கல்கி இவரை விமர்சித்திருந்தால் உடனே கல்கி ஆசிரியரை பாப்பாத்தி என்று எழுதுகிறார். பதிலுக்குக் [edited] என்று கல்கி எழுதினால் கருணாநிதி பொறுத்துக் கொள்வாரா? கல்கிக்கு ஏதேனும் மானம் இருந்தால் அப்ப்டித்தான் எழுத வேண்டும். இனியும் பொறுப்பதில் பயனில்லை.

மேலும் தேவையில்லாமல் இந்து கடவுளைப் பற்றி இழிவாக எழுதியதற்கு இந்து இயக்கங்கள் கடுமையாகப் போராட வேண்டும். பிராமண சங்கங்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை அநாகரிகமாகப் பேசும் இந்தக் [edited] இழிந்த குணமுடைய ஒரு ஜென்மம் என்பதை கடுமையாகச் சொல்ல வேண்டும்
[ edited ]

Anonymous said...

ஏம்ப்பா இத்தனை எடிட் செய்யுற அளவுக்கு அந்த அநாநி என்னதான் எழுதினார்? அது சரி கருணாநிதியின் ஜாதியைச் சொல்ல ஏன் இட்லி வடை இவ்வளவு பயப்படுகிறார்? எடிட் பண்ணி விடுகிறார். அவர் மட்டும் பாப்பான் பாப்பாத்தில் என்று ஒரு நாளைக்கு பத்து தடவை எழுதும் பொழுது ஒரு தடவையாவது அவனது உண்மையான ஜாதியை அந்த அநாநி சொல்லி விட்டுத்தான் போகட்டுமே. கருணாநிதியின் ஜாதி பெயர் தே பி இதையாவது எடிட் பண்ணாமல் போடுங்கள் ஐயா

Kalyan said...

இட்லி வடை படிக்க ஆரம்பிச்சப்பரம் துப்பி துப்பி எச்சிலே வாயில இல்லை

lucky said...

hmm..nalla B P raise aahuddhu, ippo elaam idlyvadai pakkam vandhhalle..Enna Kodumai Sir Idhu..hmm..

Kalki kodda okay, edho kovaltthulla, but Murosoli meggggggga mattam..hmmmmmmmm

Anonymous said...

Hello Idlyvadai, MN nambiyar passed away.!!!

charmlee said...

பின்னூட்டங்களை த்மிழிலேயே போடக்சொல்லுங்கள். தமிழ் படித்துக்கொண்டிருககும்போதே இங்க்லீஷில் படிப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்கிற்து.

கபீரன்பன் said...

தேதிகள் முன் பின் ஆகிவிட்டனவோ?

//- தராசு பதில்கள் - 16.11.08, கல்கி

- முரசொலி 10.11.08 //

????

Anonymous said...

இது ஒரு முறை அல்ல.. பல முறை இந்த மாதிரி முற்றிலும் அநாகரிகமாக பேசுவது அவருக்கு கை வந்த கலை.


வேண்டுமானல் ஒன்று செய்யட்டும் இலவச ஆணுறை மீது இவர் படமும் நாப்கின் மீது தலைவி படமும் போடலாம் என்று சொன்னால் சந்தோஷ படுவாரோ என்னவோ..??

என்ன தான் துண்டு போட்டு மூடினாலும் மனதுக்க்குள் இருப்பது என்னவோ..??