அடிக்கிற கை தான் அணைக்கும் - அரசியலில் ராமதாஸ், வலைப்பதிவில் குழலி :-) அவர் இவ பற்றி சொல்லியது..
இட்லிவடை தமிழ் பதிவுலகின் முக்கியமான ஒரு பதிவு, செய்திகளை பிற தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட பதிவுகள் தான் இவைகள் என்று அலட்சியம் செய்ய முடியாத அளவிற்கு முக்கியமானதும் ஆபத்தானதும் ஆகும். இன்றைய செய்திகளே நாளைய வரலாறு. அந்த நாளைய வரலாறு எப்படி நாளைய சந்ததிகளுக்கு காண்பிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால் இட்லிவடைய ஏன் நான் வரலாறு என்று கூறுகிறேன் என்பது புரியும்.
வரலாறு என்பதே நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களை வைத்தே எழுதப்படுவது, நாம் வரலாறு என நினைப்பது வரலாறே இல்லாமல் இருக்கலாம்... ஏதோ ஒரு கட்டுரையில் படித்தேன், முனியாண்டி விலாஸ் கடையின் டம்ளர்களில் "இது முனியாண்டி விலாசில் இருந்து திருடப்பட்டது" என எழுதியிருக்கு என்று வையுங்கள், அகழ்வாராய்ச்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் இது கிடைக்கிறதென்றால் அந்த ஆராய்ச்சியாளன் இப்படி எழுதினான் என்றால் இப்படியிருக்கும், "அந்த கால மக்கள் திருடினாலும் நேர்மையாக திருடிய பொருள் எங்கிருந்து திருடப்பட்டது என்பதை அந்த பொருளின் மேல் எழுதிவைப்பார்கள்". கிடைத்த அரைகுறை தகவல்கள் எழுதியவர்களின் சார்பு அதைத்தாண்டி அதை வரலாறாக்கும் ஆராய்ச்சியாளனின் சார்பு அதாவது உதாரணமாக "சாலை" என்றால் துறைமுகத்தைக் குறிக்கும். பல துறை முகத்தைக் கொண்ட பாண்டியன் என்பதற்காகப் "பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்று புலவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் "பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்று "யாக" என்ற இரண்டெழுத்தை உட்செருகி பல யாகசாலைகள் வைத்திருந்தவன் என்று வரலாறாக எழுதப்பட்டது,
பரிமேலழகர் எழுதிய உரையில் ஆரம்பித்து பலவற்றை இன்று மீள் ஆய்வு செய்யும் நிலை.
என்னடா இவன் இட்லிவடையின் 5ம் ஆண்டு பதிவில் தொடர்பில்லாமல் எழுதுகிறேன் என்கிறீர்களா?
இட்லிவடை தொகுத்துக்கொண்டிருப்பது நிகழ்கால சமூகத்தை பற்றி வரும் செய்திகளை, ஆனால் கவனமாக இட்லிவடை தொகுக்காமல் விடுவதும்(சமீபத்திய உதாரணம் மாலேகோன் குண்டுவெடிப்பு தொடர்பான இந்து தீவிரவாத சாமியிரினி கைது), தொகுக்கும் விசயத்தில் செய்யும் திரிபுகள்(இடஒதுக்கீடு தொடர்பாக கனிமொழி பேசியதில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி போட்டு திரிபு செய்தது) போன்றவை
எதிர்கால தலைமுறைக்கு தவறான வரலாற்றை தொகுத்து தந்துவிடும் என்பதாலேயே இட்லிவடையை
ஆபத்தான வரலாறு என்கிறேன்.
பொதுவாக இட்லிவடையின் சாதனை பற்றி பலரும் சொல்வது
முகம் காட்டாமல் இத்தனை ஆண்டுகள் தள்ளுவது,
நானும் இதை இட்லிவடை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன், காப்பிரைட் பிரச்சினைகளுக்காகவோ, திரில்லுக்காகவோ இல்லை, சட்டக்கல்லூரி பிரச்சினையில் கோட்டாவை இணைத்து எழுதுவது போல செய்யப்படும் பல கிறுத்தரங்களுக்கு யார் கையிலாவது கிடைத்து நாலு அப்பு அப்பாமல்"
, அம்மாதிரியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு ரசாபாசமாகமல் இருக்கவாவது முகத்தை மூடிக்கொண்டே இருக்கவும்.
செய்திகளின் வேகம்,
மிக நிச்சயமாக தொய்வில்லாமல் தொகுக்க முடிவது ஒரு மகத்தான சாதனை, தனியாகவோ குழுவாகவோ எப்படியோ இந்த ஆவணப்படுத்துதல் முடிகின்றது என்பது நிச்சயம் சாதனை, இந்த ஆவணப்படுத்துதலே இட்லிவடையின் சாதனை.
நான் இட்லிவடையை தேர்தல் முடிவுகள் சமயத்தில் சிலருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன், தினமலர், தட்ஸ்டமில் போன்றவைகள் அதிகமான பார்வையாளர்களினால் தொங்கியபோது இட்லிவடை தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள உதவியது. (தேர்தல் சமயத்தில் ஏன் இட்லிவடையை அறிமுகப்படுத்தவில்லை என்பது என் அரசியலுக்குட்பட்டது :-) )
இழையோடும் நகைச்சுவை:
இட்லிவடை பதிவுகளில் நகைச்சுவை இழையோடும் என்று சொல்வார்கள், அது நகைச்சுவை என்று சிரிப்பவர்களுக்கும் அது எரிச்சல் ஏற்படுத்தி கோபப்படுபவர்களு அரசியல் கண்டிப்பாக ஒன்றாக இருக்க முடியாது, நகைச்சுவை என்பவர்களின் அரசியல் வேறு... கோபப்படுபவர்களின் அரசியல் வேறு...
இட்லிவடையின் முனிக்கடிதம்:
இட்லிவடை ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்திக்கு எழுதாமல் முனிக்கு கடிதம்
எழுதுவதும் முனி எங்களுக்கெல்லாம்
கடிதம் எழுதாமல் இட்லிவடைக்கு எழுதுவதும் நிச்சயம்
ஆச்சரியப்படுவதற்கில்லை, முருகன், சிவன், ஐயப்பன், பலராமன், காமாட்சி, மீனாட்சி போன்ற கடவுளர்களுக்கு ஏற்பட்ட நிலை முனிக்கு வருங்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த குறிப்பு தற்போது படிக்கும் வாசகர்களுக்கு அல்ல
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வேளை இந்த இட்லிவடை தொகுப்பு மட்டுமே கிடைத்து அதை மட்டுமே கொண்டு வரலாற்றை தொகுக்கப்போகும் ஆராச்சியளருக்கு இதன் மூலம் நான் சொல்லவிரும்புவது இந்த இட்லிவடையின் தொகுப்பு சொல்வது மட்டுமே எங்கள் காலத்தில் நடந்த வரலாறு அல்ல...
இட்லிவடையின் இன்னும் 10 ஆம் ஆண்டு 15ம் ஆண்டு தொடக்க விழாக்களுக்கும் என் போன்றுபலரும் வாழ்த்து எழுத இட்லிவடையை வாழ்த்துகிறேன்.
என்றென்றும் அன்புடன்
குழலி
குழலி அவர்கள் பேசுவதை வைத்துப் பார்த்தால், என் வலைப்பதிவு பிற்காலத்தில் சோழர் காலத்து கல்வெட்டுகளுக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சான்றாக ஆகக் கூடிய சாத்தியம் அல்லது அபாயம் இருக்கிறது அதனால், இனிமேல் கட் & பேஸ்ட் பண்ணும்போது, கவனமாக முழு மேட்டரையும் எடுத்துப் போடுகிறேன், வரலாற்றில் இட்லிவடை புரட்டும் திரிபும் செய்து திரிந்த ஒருவராக பதிவு செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, சில அரசியல்வியாதிகளைப் போல ;-)
குழலி என்னை அப்பி விடாமல் இருக்கு, சிங்கப்பூர் செல்லும்போது நிச்சயம் ராமதாஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு செல்லவே உத்தேசம், எதற்கு வெளியூரில் தகராறு ? :)
எனக்கும் முனிக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பை புரிந்து கொண்ட குழலிக்கு என்றென்றும் அன்புடன் நன்றி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, November 17, 2008
இட்லிவடை ஒரு வரலாறு ஆனால் ஆபத்தான வரலாறு - குழலி
Posted by IdlyVadai at 11/17/2008 11:00:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










11 Comments:
குழலி பதிவை எதிர்கால வரலாற்றிசிரியர்கள் படித்தால்
யார் இந்த கிறுக்கன் என்று நினைப்பார்கள் என்று குழலிக்குத்
தெரியும் :).அதற்காத்தான்
குழலி பாமக சார்பில் தமிழ்நாடெங்கும்
உண்மையான வரலாற்றை 2000 கல்வெட்டுக்களில் எழுதி புதைத்து
வைத்திருக்கிறார் :). அதன் ஒரு
பிரதி சிங்கப்பூர் அருங்காட்சியத்தில்
ரகசியமாக உள்ளது:).
இட்லிவடை ஊசிப்போனால் வயிற்றுக்கு ஆபத்தானது, அது
வரலாறு ஆகாது, வாந்தி போதியில்
முடியும்.
கலைஞரை வாழும் வரலாறு என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
அது போல் இட்லிவடையும்
வாழும் வரலாறிகிவிட்டார்.குழலிக்கு
இருவருமே ஆபத்தான வரலாறுகள்தான்.
குழலி என்னை அப்பி விடாமல் இருக்கு, சிங்கப்பூர் செல்லும்போது நிச்சயம் ராமதாஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு செல்லவே உத்தேசம், எதற்கு வெளியூரில் தகராறு ? :)
-----------------------------------
Superrrrrrrrrrrrrr. Idhu dhaan IDLYVADAI touch...........
Kalakkunga idlyvadai. idlyvadaiyaavadhu indha sala salappukkellaam anjuvadhavadhu ... hmmm hoom
ஸ்.. அப்பா, முடியல...
இப்பவே கண்ணக்கட்டுதே..!
பில்ட்-அப் ரொம்ப ஓவருங்ணா..!
என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் :)
//என்றென்றும் அன்புடன் நன்றி.
//
குறிப்பு கொடுத்ததற்கு நன்றி ;-) கிட்டத்தட்ட புரிஞ்சிடுச்சு...
Hi,
I am better to be an anonymous.
If murasoli or viduthalai papers mask some important things and published the biased new, where were you with your neutral view of approaching the things. here, you willcome and speak all these... if you really have gutts to speak about the neutrality, please write to editor of followng magazines/bloggers etc..
1) Murasoli
2) vidurthalai.
3) nakheeran.
4) luckylook(blogger)
கோட்டா பற்றி மாறு பட்ட கருத்து வரும்போது, கோட்டா ஆதரவாளர்கள் 'பாட்டா பிய்யும், நாலு அப்பு' என்றெல்லாம் பேத்துவது, 'கோட்டாவுக்கும் வன்முறைக்கும் தொடர்பு' என்ற அந்தக் கருத்தையே நிரூபிக்கிற மாதிரி இல்லை? இந்தளவு கூடச் சிந்தனை இல்லாத அறிவு சீவிகளையா கோட்டா உருவாக்குகிறது? கிளிஞ்சுது போ.
மிக சரியாக சொன்னீர்கள்
இந்த இட்லிவடை இப்படி கஷ்டபட்டு கட் & பேஸ்ட் பண்ணுதேன்னு பரிதாப பட்டு ஒரு அருமையான செய்தி திரட்டியை கொடுத்தேன். அத சிறிது காலம் இங்கே ஓட வுட்டு திரும்பவும் அத இந்த சைட்டிலிருந்து எடுத்து விட்டது. என்ன காரணம்னு தெரியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டு வலைத ஒலகத்திலே எல்லா பிரச்சனைக்கும் பார்பனர்கள் தான் காரணமுன்னு சொல்றாங்க . ஒரு வேல அந்த அற்(ப)புத மான செய்தி திரட்டி இந்த வலைப்பூவில் காணாமல் போனதுக்கும் பார்பனர்கள் தான் காரணமாக இருக்கும்.
### சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood Sports ///
சினிமாவில் ரவுடியாகவும், திருடனாகவும் நடிப்பவர்கள் பொது வாழ்க்கையில் நல்லவர்களாக இருக்கிறார்கள், "ரஜினி அரசியலுக்கு வர கூடாது" என்று ராமதாஸ் சொல்லுகிறார். இந்த மாதிரி ரவுடிகள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார் போல. மரமோ, மனிதர்களோ, இவர்களுக்கு எதையாவது வெட்ட வேண்டும். காடு வெட்டி குரு போன்றவர்கள் பேச்சுக்களை கேட்டால் காதிலிருந்து ரத்தம் வரும், இவர் ரஜினியை பார்த்து அரசியலுக்கு வராதீர்கள், வந்தால் ஜெயிக்க முடியாது என்று சொல்ல, எந்த அருகதையும் கிடையாது. 'அன்பும் மணியும்' உள்ளவர் ரஜினி அதனால் அவர் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் போதும். அப்படியே இந்த அன்பும் மணியும் உள்ளவர் அரசியலுக்கு வந்தால் முன்பக்கமாக தான் அரசியலுக்கு வருவார், அன்புமணியை போல் பின்பக்கமாக வரமாட்டார். /// # # #
குழலி அவர்களே!
நீங்கள் குறிப்பிட்ட ஆபத்தான, நூதனமான தெரிந்தே செய்யக்கூடிய வரலாற்று பிழை அல்லது நூதனமான நன்சேற்றும் செயல் எது என்றால் மேற்கண்ட பாராதான்.
சட்ட கல்லூரியின் கலவரத்துக்கும் ராமதாசுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ரஜினி பற்றி அவரது கருத்துக்கு வேறு இடத்தில் பதில் சொன்னால் கூட பரவாயில்லை.
வலை உலகமே உற்று நோக்கும் ஒரு விஷயத்தில், சட்டகல்லூரியில் நடந்த கொடுமையைவிட, ராமதாசின் மீது விஷம் இட்லி வடையால் கக்கப்படுகிறதென்றால் இது என்ன வகை நேர்மை?
ராமதாசை பற்றியும் மக்களுக்கு நன்கு தெரியும். ரஜினியை பற்றியும் நன்கு தெரியும். எதற்கு இந்த சிண்டு முடியும் வேலை?
ஆறு தொகுதியிலும் ரஜினியே நேரடியாக எதிர்த்தும் பாமாகாவினர் வெற்றி பெற்றது வரலாறு. ஆறு பேரை ஜெயிக்க வைக்க தெரிந்த ராமதாசுக்கு அன்புமணியை ஜெயிக்க வைக்க தெரியாதா? ஏன் இட்லி வடைக்கு இது தெரியாதா?
இங்குதான் இட்லி வடை விஷத்தை கக்குகிறது.
ஆனானப்பட்ட ஜஸ்வந்த் சிங் முதல் பிரமோத் மகாஜன் வரை தேர்தலில் தோற்ற பின்னும் கூட ஆட்சியை பிடித்த காரணத்தால் மந்த்ரி ஆக, இதே பின் வாசல் வழியாக வந்தவர்களும் இருந்தார்கள். இருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.
இவளவு ஏன் இட்லி வடையின் பிதா மகன் சோ அவர்கள் எந்த வழியில் பாராளுமன்றத்தில் நுழைந்தார்கள்.
இட்லி வடை இவர்களை எல்லாம் கிண்டல் அடிக்காது.
ஊருக்கு இளைத்தவனை அடிப்பார்கள் . கழுவில் ஏற்றுவார்கள். என்ன செய்வது ? பேசுவது சொல்வது எழுதுவது எல்லாம் அவாளாச்சே!
மன்மோகன் சிங்கை பின் வாசல் வழியே வந்தவர்னு இட்லி வடை கூப்பாடு போடுமா?
நல்ல வேளை! நடந்த கலவரத்தில் வன்னியர் மாணவர்கள் சம்பந்தப் படவில்லை. அப்படி மட்டும் நடந்திருந்தால் ... அப்பப்பா .... நினைக்கவே முடிய வில்லை. அய்யராத்து ஊடகங்களிலிருந்து அடுத்த சாதிகாரனின் ஊடகங்கள் வரை ராமதாசையும் இந்த வன்னியர் சாதியையும் என்ன பாடு படுத்தியிருப்பார்கள் என நினைத்தாலே குலை நடுங்குகிறது. அய்ம்பது ஆண்டுகளாக அடங்கி கிடந்தவன் கொஞ்சம் மேலே வருவதற்குள் எத்தனை எத்தனை எதிர்ப்புகள் . இட்லி வடையும் தன்னாலான மட்டும் இட்லியால் அடிக்கிறது. ( இது மட்டும் வன்முறை இல்லையா? அது பிளட் ஸ்போர்ட்ஸ் என்றால் இது மட்டும் என்ன விளையாட்டாம்? அன்புமணி என்னும் ஒரு பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்து உலகையே வலம் வந்து சிறப்புற பணியாற்றுவதை பாராட்ட மனம் இல்லாவிடினும் இப்படி கேவலமாக எழுதுவதை தயவு செய்து கை விடவும். ஏன் எனில் இவரில் பத்தில் ஒரு பங்காவது உங்கள் ரசினி மற்றும் விசயகாந்துகளால் முடியும் என்று இட்லி வடையில் உத்திரவாதம் தரமுடியுமா?)
Post a Comment