பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 14, 2008

பூதாகாரமாகும் 'ஸ்பெக்ட்ரம்' பூதம்..

பூதாகாரமாகும் 'ஸ்பெக்ட்ரம்' பூதம்..

தி.மு.க-வின் ஆ.ராசா கையில் உள்ள தொலைத் தொடர்புத் துறையின் ஸ்பெக்ட்ரம் விவகாரம், பூதாகாரமாகிக்கொண்டே போகிறது. இந்த விவகாரத்தை இந்திய அளவில் வெடிக்க வைத்திருக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு அறுபதாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு' ஏற்பட்டிருப்பதாக... சி.பி.எம். அறிக்கை வெளியிட, ஆடிப் போன மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ராசா மறுநாளே, ''இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருந்தால், அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்துவிடுவேன்!'' என அறிவித்தார்.



[இவரு பதவியை ராஜினாமா பண்ணட்டும் பண்ணாம போகட்டும், அது பைசாவுக்குத் தேறாத விசயம், முறைகேடே இல்லாவிட்டாலும் கூட (ஒரு பேச்சுக்கு வச்சுப்போம்), மூளையை சரியா பயன்படுத்தாததினால (இங்கிலிபீசுல application of mind னு ஒண்ணு இருக்கு) அரசு இழந்த மக்கள் பணமான 60000 கோடி ரூபாய் போனது போனது தானே ??? இவரு ராஜினாமா பண்ணா, அந்தப் பணம் திரும்பக் கிடைச்சுடுமா ??? இந்தத் தொகையில் 15 ராமர் சேது கால்வாய் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது கூடுதல் தகவல்..]


இதுபற்றி நம்மிடம் பேசிய தோழர்கள், ''மத்திய அரசின் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களோடு தொடர்புடைய நிறுவனங்கள்தான், இந்த அலைவரிசைத் தொகுப்புகளைப் பெற்றுள்ளன. இப்படிப் பெற்றவர்கள், செல்போன் வசதிகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கியிருந்தால் பாராட்டலாம். ஆனால், இவர்கள் அரசாங்கத்தில் தங்களுக்கிருக்கும் செல்வாக்கால், பெற்ற அலைவரிசைத் தொகுப்பை வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபத்தில் விற்றுள்ளனர். ஸ்வான் நிறுவனம், பெற்ற மொத்த அலைவரிசையில் 45 சதவிகிதத்தை ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த 'எடிசாலட்' நிறுவனத்துக்கு சுமார் நாலாயிரத்துஐந்நூறு கோடிக்கு விற்றது. ஸ்வான் நிறுவனம் மத்திய தகவல் தொடர்புத் துறைக்குச் செலுத்தியது, 1,537 கோடி ரூபாய்தான். இதே மாதிரி யுனிடெக் நிறுவனம், தான் பெற்ற அலைவரிசைத் தொகுப்பில் 60 சதவிகிதத்தை நார்வேயைச் சேர்ந்த 'டெலினார்' நிறுவனத்துக்கு 6,120 கோடிக்கு விற்றது. இந்த நிறுவனம் மத்திய தொலைத் தொடர்புத் துறையிடம் செலுத்தியது, ரூபாய் 1,651 கோடி மட்டுமே! இப்படி குறைந்த விலையில் பெற்று, அதிக விலைக்கு விற்ற இந்த நிறுவனங்களின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்தும் சந்தேககத் தகவல்கள் உலா வருகின்றன.



[மொத்த அலைவரிசைக்கு ஸ்வான் அரசுக்கு கொடுத்தது 1537 கோடி, அதில் 45%-ஐ எடிசலாட்டுக்கு விற்ற கணக்குப்படி பார்த்தால், ஸ்வான் பெற்ற அலைவரிசையின் நிகர மதிப்பு 10000 கோடி, அதாவது ஆறரை மடங்கு லாபத்தில் ஸ்வான் விற்றுள்ளது, மக்கள் பணம் தனியாருக்கு இப்படி தாரை வார்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது...]


தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் புள்ளிகளும் மகாராஷ்டிராவைச்சேர்ந்த அரசியல் புள்ளிகளும் இடம் பெற்றுள்ளதாகச்சொல்லப்படுகிறது. இவர்களில் சிலர் மத்தியில் அமைச்சர்களாகவும் நாடாளு மன்றஉறுப்பினர்களாகவும் உள்ளனர். எனவேதான் இந்தப் பிரச்னையை நாடு தழுவிய வகையில் எடுக்கவேண்டியதாக இருக்கிறது!'' என்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நிலோத்பால் பாசுவிடம் பேசினோம். ''இதுவரை நடைபெற்ற ஊழல்களிலேயே இது பெரிய ஊழல்! அந்த இரு நிறுவனங்களும் அலைவரிசைத் தொகுப்பு களை வாங்கிய, விற்ற விலைகளின் விகிதா சாரங்களைப் பார்க்கும்போது, இருபதாயிரம் கோடிக்கு வாங்கியிருக்க வேண்டிய பங்குகளை வெறும் மூவாயிரம் கோடிக்குப் பெற்றுள்ளனர். இதுதவிர, மற்ற சி.டி.எம்.ஏ. நிறுவன தொலைத் தொடர்பு அலைவரிசை தொகுப்புப் பங்குகளையும் கணக்கிட்டால், கிட்டத்தட்ட இந்த விவகாரத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வியாபாரப் போட்டி மிகுந்த இந்தக் காலகட்டத்தில், குறைந்தபட்சம் ஏல முறையில்கூட விற்கப்படாமல் இப்படி அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளனர். நிதியமைச்சர், பிரதமர் போன்றவர்களின் அனுமதியின் பேரில்தான் இந்த உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜா சொல்கிறார். சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று சொல்பவர்கள், சட்டத்தை மாற்றாமல் தங்கள் வசதிக்கேற்ப அதைப் பயன்படுத்திக்கொண்டு தவறு செய்திருக்கிறார்கள்.



[இந்த விசயத்தில் நிதியமைச்சர் மற்றும் பிரதமர் அனுமதி பெறப்பட்டது என்பது திசை திருப்பும் வேலை. தொலைத் தொடர்பு அமைச்சகமும் அதன் அமைச்சரும் யோசித்து அரசுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்கும் வகையில் சரியான முடிவுகள் எடுக்கவில்லை என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு]


இதில் தவறு இருந்தால், அதை அமைச்சர்தான் சரிசெய்ய வேண்டும். இப்போது அமைச்சரை நாங்கள் நன்னடத்தை அடிப்படையில் கேள்வி கேட்கிறோம். இப்படி குறைந்த விலைக்குக் கொடுக்கும்போது, இதைப் பெற்ற இந்த நிறுவனங்களுக்கு, 'நுகர்வோர்களிடம் குறைந்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும்' என்ற நிபந்தனையை அரசு ஏன் விதிக்கவில்லை? இப்படி நிபந்தனை போடாததால்தான், இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்று, கோடிக் கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளன. இப்படி தனியார் நிறுவனங்கள் விற்கும்போது, அரசே ஏன் இதை இந்த மதிப்பில் விற்கவில்லை? ஏற்கெனவே இருந்த முறையில் தவறுகள் இருக்கும் போது, புதிய முறையைக் கொண்டு வந்திருக்கலாம். அதிகத் தொகை கொடுத்து உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள், அதிகக் கட்டணத்தை பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம்தான் காரணம்!'' என்கிறார்.

இந்த விவகாரம் வெடிக்கக் காரணமே காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்குள் நடந்த பங்குத் தகராறுதான் என்றும் டெல்லியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.



[(இது போன்ற பங்குத் தகராறு நடப்பதால் தான், இது போன்ற விவகாரங்கள் மீடியா மூலம் மக்களுக்குத் தெரிய வருகின்றன. அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது தான் மக்களுக்கு நல்லது ;-) ]


''ஸ்பெக்ட்ரம் உரிம விஷயத்தை காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் பல தங்களுக்கு வேண்டியவர் களுக்கு வழங்கியுள்ளன. மத்திய அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய தோழனாகச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி, தன்னுடைய ஆதரவுக்கு விலையாக முதலில் தொலைத் தொடர்பு துறையைக் கேட்டது. பின்னர், 'எங்களுக்குத் தொலைத் தொடர்பு துறை வேண்டாம். தி.மு.க. அமைச்சரே தொடரட்டும். ஆனால், எங்களுடைய கோரிக்கையை தி.மு.க. அமைச்சர் நிறைவேற்றித் தரவேண்டும். எங்கள் ஆதரவு தொழில் அதிபருக்கு சலுகை தரவேண்டும். அதோடு எங்களுக்கும் தேர்தல் செலவு இருக்கிறது. அதனால் பங்கு எங்களுக்கும் வந்து சேர வேண்டும்' என நிபந்தனை விதித்ததாம். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் சில மீறல்கள் தென்பட்டதால், சமாஜ்வாடி கட்சியே இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் கசியவிட்டிருக்கிறது'' என்ற பரபரப்பும் டெல்லி பத்திரிகையாளர்களிடம் பேசப்படுகிறது.



[(இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை, அமர்சிங்ஜியின் கார்ப்பரேட் நண்பர்கள் பற்றியும், அவரது
அறிவுக்கூர்மை பற்றியும் சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியும் :-) ]


நன்றி: ஜுனியர் விகடன்




11 Comments:

Anonymous said...

பார்ப்பன சதி.

M Arunachalam said...

IV,

This Telecom 2G License Sale is going to be the Mother of All Kick-backs deals in India.

As per TOI, 2G Lic sale has been undervalued between 6 to 7 times. So, out of the Rs. 60,000 crores saved for the bidders (and consequent loss to GoI), even assuming a conservative 10% commission was paid to Raja (and thru him to Karunanidhi), it amounts to a massive Rs. 6,000 crore.

Thru this deal, DMK has denied a massive revenue to GoI in order to get their Commission.

In the case of Sethu Project, DMK is forcing the Govt. to spend massive amounts of money - both initially & on a recurring basis - in order to get their commission from the contractors.

DMK i.e. Thi. Mu. Ka. - Thirudargal Munnetra Kazhagam - is living upto its name.

Now this case has been taken up as a PIL by Delhi HC which has refused to dismiss the PIL & asked GoI to explain its stand within 3 weeks.

Though, as usual, such cases will never come to light thru proper investigation & the accused will never be caught, it looks like a potent weapon for the opposition to beat the UPA & its constituents with during the April General Election.

But, definitely something fishy must have happened in the deal because of two reasons:

1. Karunanidhi, like whenever he finds himself cornered, answered to the Communists' charge by saying that since Raja is a Dalit all these charges are raised against him.

2. Raja also, instead of answering straight, is trying to hood-wink by quoting Telecom Policy of 1999 & TRAI's recommendations, etc. Of course, he is quoting things selectively & out of context, which TOI has refuted already.

Arun

Anonymous said...

உடன்பிறப்பு எழுதுகிறார்:

அதான் தலைவர் சொல்லிட்டாரே,
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரின் வளர்ச்சியை பொறுக்க
முடியாமல் செய்யப்படும் அவதூறுன்னு. ரொம்ப பேசினா
தலித்களே, உங்களுக்கு எதிராக
பார்பன சதி, பொங்கி எழுவீர்ன்னு
அறிக்கை விடுவோம்.பஸ்வானை
துணைக்கு கூப்பிடுவோம்.ராமதாஸ்
வாயைத் திறக்காம பாத்துக்குவோம்.

கம்யுனிஸ்ட்கள் கத்திக்கிட்டே இருக்கட்டும்.கேட்டா ஏதாவது
தர மாட்டோமா, பில்லியனர்கள் நாங்க, அந்த ரேஞ்சில டீலிங் இருக்கும் போது கேட்டா,சில கோடியை தர அன்பா மாட்டோமா.கருணையும், நிதியும் சேந்துதான்யா இருக்கு. எப்பவும் இந்த அவாளே நமக்கு சவால்தான்.புழைக்க தெரியாத
பார்டிங்க.

Anonymous said...

thirutu mutal kzudigal kuthaku thilavan oru mutal kzathai.

Plase type this in tamil and put it in the comments

Mukkodan said...

I bet Manjal kavignar wud be into the top 10 Forbes richest list, if he has everything in white.
(Forbes List for the World, not the one for Asia.)

Some Major projects he got,
Veeranam 1
Veeranam 2
Flyovers part 1
Flyovers part 2
Sethu Samudhram
Spectrum license
Koovam purification
Desalination

and the list goes on and on.... I've a very short memory of all these kickbacks. Please do add the rest you guys remember.

Litmuszine said...

ராசாவோட மூளையை நசுக்கி , defacto ministerரா இருந்து , moronக்கு போட்டியா , தானும் ஆயிரக்கணக்கான கோடிகளை கேடித்தனமாய் அள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு 'ஸ்பெக்ட்ரம்பாட்' அடித்து, பதினைந்தாயிரம் கோடிகளை பிள்ளையார் சுழியாய் போட்டு (!?), 'சுவிசு' வங்கியில் 'பழ' மொளி, தனி வழியில் சென்றால், ராசா பாவம் கூசா தூக்குவதை தவிர என்ன செய்வார்? 'பழ' மொளி பதினைந்தாயிரத்துக்கு எத்தனை பூசியங்கள் என்று போவோர் வருவோர் கேட்டுள்ளார், தங்களை பார்த்தல் சற்று உதவி செய்யவும்.

பின் குறிப்பு: முதல் வரியில் உள்ளது 'மூளை' தான், அவசரத்தில் வேறு எதையோ படித்து அதிர்ச்சி அடையவேண்டாம்!!.

Badri said...

All media articles, including JV article, are stupid to the core.

Investment in an entity which has a license and spectrum is not the same as "paying" the fellow who has obtained the spectrum and license, which can then be shown as 'flipping the license' and making profits.

That is not the case here.

How quickly we show the accusing finger at a politician!

And to extend this and say that Raja has made money, Karunanidhi has made money... is nothing but scurrilous. They may be perfectly capable of corruption elsewhere. But I can't see any scope for the same in 2G spectrum sale.

You cannot switch from sale of license against fixed license fee to auctioning of license overnight. It will make it unfair for the new entrants.

But then, do we really care for the truth? It is much easier to blame it all on the politicians.

The only problem I see with Raja is, he is not articulate enough in explaining that he has not committed any hanky-panky.

Anonymous said...

ஒண்ணுமே நடக்கல அறிவு கெட்டத்தனமா இட்லி வடை ராசா மீது குற்றம் சாட்டுகிறார் என்று பத்ரி சொல்லுகிறார். சரி பத்ரிக்கு இதில் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. சுப்ரமணிய சுவாமி இதில் தலையிட்டு ஊழல் பெருத்த அளவில் நடந்திருப்பதாகவும் தான் கேஸ் போடப் போவதாகவும் சொல்லியுள்ளார். சுப்ரமணிய சுவாமி வெத்து வேட்டு அல்ல பல கேஸ்கள் போட்டு பலரையும் பதவி இழக்கவும் வைத்துள்ளார். யார் சொல்வது இங்கு சரி பத்ரி சொல்வதா, சுவாமி சொல்வதா? பத்ரி ராசாவுக்கு பரிந்து கொண்டு வரும் முன்னால் சு சுவாமியிடம் ஒரு வார்த்தை விளக்கம் கேட்டிருந்தால் சுவாமி சொல்லியிருப்பாரே? ராசாவின் இன்றைய சொத்து மதிப்பு பத்ரிக்குத் தெரியுமா அல்லது ஃப்ரூட் லாங்குவேஜின் சொத்து மதிப்பாவது தெரியுமா? ராசா தனக்குக் கீழே உள்ள ஐ ஏ எஸ் அதிகாரிகளை நாய் மாதிரி நடத்துபவர். இவர் எல்லாம் தலித் என்று சொல்லிக் கொண்டு தன்னை எல்லோரும் கீழாக நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கே அருகதை இலலாதவர். திறமையும் தகுதியும் இல்லாத ஒரு மந்தி ரி. நாலு வார்த்தைக் கோர்வையாக ஆங்கிலம் பேச வருவதில்லை, இவருக்கு எப்படி சிக்கலான தொழில்நுட்பங்கள் எல்லாம் புரியும்?மிகவும் சிக்கலான தொழில்நுட்பம் நிறைந்த ஒரு துறைக்கு ஒரு தற்குறியை மந்திரியாகப் போட வேண்டிய அவசியம் என்ன?

enRenRum-anbudan.BALA said...

Even Idlyvadai is not accusing the minister for corruptiuon. Point is whether thousands of crores were lost to exchequer because of non-application of mind !!!

Public may not be really interested in the technicalities like "fixed license", "auctioning the license" etc. A minister should work towards maximizing revenue for the Govt.

Finally, if the sum involved is as big as 60000 crores, it is likely to create a furore in a democracy and the concerned has the responsibility to come out clean and clear !!!

M Arunachalam said...

While doing the "sale" of 2G licenses, the DoT, which comes under the Minister of Communications, which is Raja, "conveniently" forgot/ changed some M & A clauses in order to help the licenses winners to literally mint crores of money.

For eg. TRAI's recommendation says "permission of merger & acquisition should not be entertained unless roll-out obligation is met" wheras DoT has omitted to include the word "acquisition" while announcing M & A Guidelines in April, 2008, from the 3 year lock-in.

Using this particular omission, both Swan & Unitech, without any roll-out in sight, as of now, have already sold substantial parts of their euqity to foreign companies at 6 to 7 times higher value.

Some people may be naive in thinking Raja & Karunanidhi are angels but anybody who has followed the Bheeshma Pithamagar of Indian Corruption i.e. Karunanidhi from his Chennai Corporation Muster-roll Corruption onwards will know that these are the kind of "scientific corruption" Karunanidhi is practicing from Day 1. That is why Karunanidhi is able to get such support from educated naivaites.

Don't ever under-estimate Karunanidhi. He is capable of even selling this country if it fetches him the right price.

gopi said...

M Arunachalam said...

Don't ever under-estimate Karunanidhi. He is capable of even selling this country if it fetches him the right price.
-----------------------------------

Arunji, perfect NETHI ADI statement from you on Manjal Kavignar (MK) ..........