பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 07, 2008

நகைமுகன் பேட்டி

நகைமுகன்...பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பெயர். தனித் தமிழர் சேனையின் நிறுவனர். பாரதீய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவரிடம் ஈழவிவகாரம் குறித்துப் பேசினோம்.அதிகாலை-க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இங்கே:-"இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடம் பிச்சை கேட்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அச்சமில்லாத வாழ்க்கை. மற்றபடி நிவாரணம் எனும் பெயரில் பிச்சை கேட்கவில்லை. பழ.நெடுமாறன் சேகரித்த நிவாரணப் பொருட்களை மட்டும் ஏன் அங்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.?

ஈழத் தமிழனின் பசி இப்பொழுதுதான் கருணாநிதிக்கு தெரிந்ததா? இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுக்காமல், நிவாரணப் பொருட்கள் வழங்குவதால் ஈழத் தமிழன் வாழ்ந்துவிடமுடியாது. ஈழத் தமிழர்களுக்கு அத்தியாவசியத் தேவை எது? என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொல்வதையும், இந்துக் கோவில்களை இடித்து நொறுக்குவதையும் ஒரு சாதனையாகவே சிங்கள ராணுவம் செய்து வருகிறது. இதனை இந்து மதப் பிரச்சனையாக இங்குள்ள பாஜக, வி.எச்.பி, சிவசேனா போன்ற அமைப்புக்கள் பார்க்கவேண்டும். ஒருமுறை அதிபர் ஜெயவர்த்தனே, தமிழர்கள் அனைவரும் பௌத்த மதத்திற்கு மாறிவிட்டால் பிரச்சனையே வராது என்றார். ஆகவே இங்கு மொழி இல்லை பிரச்சனை. மதமே முக்கியப் பிரச்சனை. எனவேதான் இதனை மதப் பிரச்சனையாக பார்க்கவேண்டும் என்று நான் கூறிவருகிறேன்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது அறவே பலன் தராது. அவை அனைத்தும் ஈழத் தமிழனின் கைகளுக்கு கிட்டப் போவதில்லை. எனவே சேரிக்கும் நிவாரணப் பொருட்களை எல்லாம் இங்குள்ள அகதிகளிடம் கொடுத்தாலாவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி அங்கு சென்று சேரும் பொருட்கள் எல்லாம் இலங்கை ராணுவத்துக்குத்தான் உதவப் போகிறது.

இந்தியாவிற்கு அகதிகளாக தப்பி வருபவர்களை கூட இங்கே வரமுடியாமல் இலங்கை கடற்படை தடுத்து வருகிறது. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஈழப்பிரச்சனைக்கு தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களால் மட்டும் தீர்வு காண முடியாது. இது ஒட்டு மத்த இந்துக்களின் பிரச்சனை. எனவே இந்தியாவில் உள்ள 85 கோடி இந்துக்களும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் ,சிங்கள கலாசாரம் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. இவை இரண்டும் எப்போதும் ஒத்துப்போகாது. எனவே கலாசார முரண்பாடு கொண்ட இவ்விவாகரத்தை மதரீதியான பிரச்சனையாக இந்துக்கள் அணுக வேண்டும்".

ஈழத்தமிழ் விவகாரத்தில் இப்படி ஒரு அணுகுமுறையா..?

நன்றி: அதிகாலை வெப்
அனுப்பியவர் http://thiagu1973.blogspot.com/2008/11/blog-post.html

4 Comments:

Anonymous said...

இந்த கட்டுரைக்கு மஞ்சக் கலர் சாயம் (ஹை லைட்டிங்) எதுவும் காணோம்? ஏன் இதில நகைச்சுவை கம்மியா இருக்கா என்ன? இல்ல இட்லிவடை சாயம் வெளுத்துப் போச்சா? கிகிகி

Anonymous said...

நகைமுகன் மற்றொரு தமிழ் கோமாளி. அடுத்து ஒரு வேளை மத்தியில் பா ஜ க அரசு வந்து விடுமோ என்ற சந்தேகத்தில் இந்துக் கட்சிகளையும் இவர்களது காசுவாங்கிக் கொண்டு குலைக்கும் வேலைக்கு சேர்க்கப் பார்க்கிறார்கள். விடுதலைப் புலிகள் சர்ச்சுகளின் சதி வலையின் ஆதரவில் நடந்து வருகிறார்கள் என்பது இந்து இயக்கங்களுக்கு நன்கு தெரியும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்திய தேசீயத்தில் நம்பிக்கையுள்ள இந்து கட்சிகள் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாம்புக்குப் பால் வார்த்து விடக் கூடாது, செய்யவும் மாட்டார்கள். இன்றைய புலிகளின் ஆதரவு நாளைய இந்தியாவின் அழிவு. மற்றொரு காஷ்மீர் பாரதமாதாவின் காலடியிலும் வேண்டுமா என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். நகை முகன்களின் பேச்சுக்களை நகைச் சுவையாக மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.

Madurai Tamilan said...

இவரை போல் வேலை இல்லாதவர்கள் நாட்டில் அப்பப்போ உயிர் பெறுகிறார்கள்... இவரை போன்றவர்களை பற்றி செய்தி போட்டு ஏன் உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் ....

madurai tamilan said...

இவரை போல் வேலை இல்லாதவர்கள் நாட்டில் அப்பப்போ உயிர் பெறுகிறார்கள்... இவரை போன்றவர்களை பற்றி செய்தி போட்டு ஏன் உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள் ....