பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 06, 2008

எதற்காக நெற்றிக் குறி? நெடிய பூணூல்?

கலைஞர் கவிதை

மத மோதலில் மண்டை உடைதல்
சாதிய ரீதியாக சண்டை போடுதல்
(வேட்பாளர் தேர்வு போது இதை மறந்துவிடுவோம்)
அரசியல் அடுப்புக்கு அணையாத விறகென்று
ஆனமட்டும் பற்ற வைத்துப் பார்க்கின்றார் -
அருள் பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை; எனும்
வள்ளலார் வாசகம் என்ன வேண்டிக் கிடக்கிறதோ?
எம்மதமும் சம்மதமே என வாழ்ந்த திருநாட்டில்;

எதற்காக நெற்றிக் குறி? நெடிய பூணூல்?

( எதற்காக மஞ்சள் துண்டு, எதற்காக பூமி பூஜை, எதற்காக வேதம் படிக்க வேண்டும்)
இடக்காக இப்படிக் கேட்கலாமா என்று;
மிடுக்காக கோபித்துக் கொள்ளும் மேலோர் என்போர்-
வள்ளுவரின் குறள் வழியில் சொன்னால்;
வைதீகக் குரங்கினத்தின் வாலோரேயாவார்!
ஆன்மீகம் என்பது ஆண்டவனை போற்றும் ஒருமுறை எனினும்
ஆத்திக நாத்திக சொற்போருக்கு அவற்றிடையே இடமில்லை -
நாத்திகமென்பது நடமாடும் கோயில்களின் திருப்பணி எனில்
ஆத்திகம் அதற்கு மறுப்பு சொல்லத் தேவை என்ன?
``நல்லதே நினை, நல்லதே செய்'' - நாத்திகமெனில்
இல்லையே அதற்கோர் ஈடு; எனப் போற்றினால் அது ஆத்திகமாம் -
நாத்திகம் ஆத்திகம் என்பதும் நமக்குள்
அம்மதம் இம்மதம் என்று போரிட்டுப் புலம்புவதும் வீண்தானே!
எல்லோரும் ஒரே குலம்- உண்மையே கடவுள்
என்று அறியாதார் பேதமையே ஆகும் என்போம்!
மதபேதமெனும் மரக்கிளைகள் ஈன்ற விழுதுகளே
மலையாக மடுவாக இருக்கின்ற ஏற்றத் தாழ்வுச் சாதிகளாம்-
மரத்தையே வெட்டிச் சாய்த்து விட்டால்;
கிளைகள், வேர்கள், விழுதுகள் பட்டுப் போகும்!
அங்கே அழகாக ஓர் உருவம் தோன்றும்
அதன் பெயர்தான் சமத்துவம் என்போம்!

16 Comments:

Anonymous said...

எம்மதமும் சம்மதம் என்னும் நாட்டில் தொப்பி எதற்கு, நீண்ட சிலுவை எதற்கு என்று கேட்க முடியாது அவரால். விடுங்கள்.இது போன்று அவர் பிதற்றுவது புதிதா என்ன. நாடகங்களில் கோமாளிகள் செய்யும் தத்துபித்தை பார்த்து சிரிப்பது போல, இதையும் பார்த்து சிரித்துவிட்டு செல்ல வேண்டும்.

கொடும்பாவி-Kodumpavi said...

MK is correct.! there is no need of any symbol for 'anyone' why there is a kulla for Islam brothers. why there is turban for sikhs? all should be dressing normal. he will not say this because then it will be a communal issue..

அமுதப்ரியன் said...

Hey Man Finala நீ என்ன சொல்ல வர?

.............

நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா!!!!!

Seetha said...

rightnow he has to divert attnetion from lot of his govt's failures. so all these kavidhai.

hopefully no on will take notice and make noise.the bjp characters will make noise for good for nothing causes.

ஹரன்பிரசன்னா said...

ஹிந்து மதத்தை மட்டும் கேள்வி கேட்பதில் கருணாநிதிக்கு இணையான வீரர் இவ்வுலகத்திலும் எவ்வுலகத்திலும் இல்லை என்பது அறிந்ததே.

அ. நம்பி said...

Dotage

Anonymous said...

"MAZHITHTHTHALUM NEETTALUM VENDAAVAM ULAGAM PAZHITHTHATHU OZHITHTHUVIDIN" - THIRUKKURAL -

wHEN i READ THIS article i CAN REMEMBER THE ABOVE kURAL ONLY.

sUPPAMANI

gopi said...

VAAI SOLLIL VEERAR, MANJAL KAVIGNAR, SIRANDHA PAGUTHARIVU ILLA VAADHI, MANJAL THUNDU MINOR etc............

Ivar Yaarrrrrrrrrrrrrrr

சி.தவநெறிச்செல்வன் said...

ஆரம்பிச்சுட்டார்யா? அது எப்படி இப்படி வேண்டியபோது மட்டும் நாத்தீகம் பேச முடிகிறது, இலங்கை பிரச்சினை ஒரு வழியா மறந்தாச்சு.

Sethu Raman said...

Has MK become senile? and with all the burden of administering Tamil Nadu on his head, where does he find time for writing all this poetry! He should go full poetic!

We The People said...

அவருக்கு நாம் வள்ளுவரின் குறள் வழியில் சொல்வதானால்:

யாகாவாராயினும் நா காக்க, காவாக்கால், சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று மட்டுமே சொல்லமுடியும்.

உண்மையிலேயே இவரு எம்மதமும் சம்மதமே என வாழ்ந்த திருநாட்டில் ஒரு வீர தலைவரானால் மற்ற மதத்தின் இது போன்ற ஒரு கேள்வி கேட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்??! ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவருக்கு ஒரு ஓட்டு கூட அந்த மததினரிடமிருந்து கிடைக்காது என்று நன்கு தெரியும். இளிச்சவாயன் இந்துக்கள் மட்டுமே இதுவும் அவருக்கு நல்லா தெரியும் :)))))))

Anonymous said...

The whole family of Karunanithi is going to temple, wearing kungumsm, veeputhi etc (Mrs. Dayalu, Mrs. Durga Stalin. Selvi etc). The same applies to Satyaraj's wife.

When they are not able to advise and convince their family and follow his principle, what right he got to advise others.

First let them clean and convince their house. Let him stop wearing manjal thundu.

Ravi

Anonymous said...

Karunanithi's wife (Dayalu),daughter (Selvi), daughter in laws (Durga stalin, Mrs Alagiri) are wearing kungumam (including naduvaghidu kungumam), veeputhi etc.,

Karunanithi is not able to advise convince, implement his principles at their house (for 50 years atleast). He wants the whole thamilargals to follow him.

Let him stop wearing manjal thundu.

Take Satyaraj, his wife wearing veeputhi kungumam, his son's marriange was celebrated with Hindu rituals, Did he try to stop it ? No He will not.

Advices are all for others only.

NAMELLAM ROMBA PAAVAM

A RAI

Sharepoint the Great said...

ஊர் என்ன சொன்னால் என்ன - என் பணி கவிதை எழுதுவதே. என ஆரம்புச்சுட்டாருய்யா....

சாரி. மன்னிக்கவும்.

தொடர்ந்துட்டாருய்யா.. தொடர்ந்துட்டாரு..

நல்லதந்தி said...

//ஹரன்பிரசன்னா said...
ஹிந்து மதத்தை மட்டும் கேள்வி கேட்பதில் கருணாநிதிக்கு இணையான வீரர் இவ்வுலகத்திலும் எவ்வுலகத்திலும் இல்லை என்பது அறிந்ததே.//

ஹலோ! சிலசமயம் கரெண்ட் எப்போ போவும் அப்படின்ன்னுட்ட்டு அமாவாசை அமைச்சர் கிட்ட கேள்வி கேட்ப்பார்!.கிகிகிகிகிகிகி

Anonymous said...

perusukku vayisaaippochu pinaathuthu, pora kaalathula paavam theeduthu, poruthukkittu pongappa, paavam!.