ஏமாற்றாதீர்கள் ஆமாம் சொல்லிட்டேன் - சும்மா ஒரு பேச்சுக்கு :-)
பாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே
எத்தனை வருத்தமும் ஏமாற்றமும் அளித்திருக்கீங்க
எல்லாமே நாடகம் என்று எண்ணுகிற அளவுக்கு கொண்டுவந்து விட்டீர்கள்
நீங்கள் எழுதியது எத்தனையோ நாடகங்கள்
இது லேட்டஸ்ட் என்கிற மாதிரி ஆய்டுச்சே
அவங்களும் எத்தனை "தபா" கெஞ்சுவாங்க. நீங்க என்னன்னா கண்டுக்கவே
மாட்டேங்கறீங்க.
அவங்க என்ன உணவும் மருந்துமா கேட்டாங்க. சண்டையை நிறுத்துனு நீங்க ஆர்டர்
போட்டா இலங்கை சர்க்கார் உடனே கேக்கப் போறாங்க.
நீங்க அணை கட்டாதேனு சொன்னா கேக்காம போறதுக்கு இது என்ன அண்டை மாநிலமா.
இல்லே நீங்க தண்ணீர் திறந்து விடறியா இல்லையானு கேட்டா, சும்மாவே
இருக்கிற பக்கத்து மாநில முதல்வரா
நிவாரணம் தேட இறங்கிட்டீங்கனு எத்தனை வருத்தம் பாருங்க.
அதிக நிதி திரட்டி அண்ணா அவர்கள் கையாலேயே மோதிரம் பரிசா வாங்கினவர்
நீங்கனு எல்லாருக்கும் தெரியாதா
நீங்க சட்டசபையிலே 50 வருசம் அனுபவம் கண்டவர்னு சொல்லிக்க சட்ட மன்ற
சிறப்புக் கூட்டம் போட்டு எல்லாரும் பாராட்டுனாங்களே அது மாதிரி ஏதாவது
செய்வீங்கனு பார்த்தா, அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு
எல்லா எம்பியும் ராஜினாமான்னு சொல்லிட்டீங்க. சரி அது நிறைவேறிடற மாதிரி
உங்க் கட்சி எம்பி எல்லாரும் உங்க கிட்ட ராஜினாமா லெட்டர் கொடுத்துட்டு
பேசாம போய்ட்டாங்க. நீங்க அந்த லெட்டரை அத்தினி பத்திரமா
பார்த்துக்குவீங்கனு நம்பிக்கை
இலங்கை அதிபர் ராஜ பக்ஷே உங்களை அழைச்சிருக்கார்- அப்படினு செய்தி
பார்த்தேன். போய்ட்டு வந்திருங்க
நீங்க விமானம் ஏறி இலங்கை போய் வருவதற்கு வழியனுப்ப கட்சித் தொண்டர்கள்
லாரிகளிலும் பஸ்ஸிலும் சென்னையை நோக்கி அணி திரண்டு வர காத்திருக்காங்க
நீங்க திரும்பி வரும் போது பொறுத்தமா ஒரு விருது தயாராகிடும்.
கலைஞர், திராவிட இயக்கங்களின் எழுச்சி ஞாயிறு, காலத்தை புறம் கண்டவர்,
முன்னாலே நாலரை கோடி மக்களின் நாயக்ர், (நொடிக்கு நொடி ஜனத்தொகை
ஏறுவதால்) நிரந்தரமாக தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், இப்ப ஐந்தமிழ்
அறிஞர், வாழும் வள்ளுவர் இதெல்லாம் அலுத்து விட்டது
இலங்கை விவகாரம் குறித்து ஒரு விருதுதான் உங்களுக்கு சரி
அந்த விருது வழங்கிய உடன் " வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்" என்ற
பேனர்கள். இந்த வாசகத்திற்கு நீங்க காப்பி ரைட் வாங்கிருங்க. விற்கும்
போது நல்ல விலை கிடைக்கும். இந்த வசனம் இல்லாமல் தமிழ் நாட்டில்
அரசியல்வாதிகளுக்கு சரியாக வராது
கலைஞர் சார்
ஏமாற்றாதீர்கள் ஆமாம் சொல்லிட்டேன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, November 01, 2008
ஏமாற்றாதீர்கள் ஆமாம் சொல்லிட்டேன்
Posted by IdlyVadai at 11/01/2008 05:53:00 PM
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
காரம் கம்மியா இருக்கே!!
//நீங்க சட்டசபையிலே 50 வருசம் அனுபவம் கண்டவர்னு சொல்லிக்க சட்ட மன்ற சிறப்புக் கூட்டம் போட்டு எல்லாரும் பாராட்டுனாங்களே//
சிறப்புக் கூட்டமா, சிரிப்புக் கூட்டமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆட்டோவுக்கு பயந்துட்டீங்களா இட்லிவடை? எனக்கு வர கோவத்துக்கே இதை விட மோசமா (அசிங்கமாவும்) திட்ட தோணுது. நீங்க என்னடான்னா...
Hello Idlyvadai ..........
MK ungala pathi KAVIDHAI ezhudha maattarnu oru dhairiyam thaaney ungala ippadi pesa vaikkudhu ....
Edhu eppadiyo, Collection Kandasamyoda collection target achieve aayidichu..........
Well said. I think u should be a Aryan and not a dravidan.
i think this was posted by new member of idly vadai.. below the average
Post a Comment