பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 17, 2008

80% என்பதே எங்கள் இலக்கு - பத்ரி

தமிழில் எப்படி தட்டச்சு செய்கிறீர்கள் என்று இட்லிவடை வாசகர்கள் (2007, Feb) சொன்னது கீழே...


விஜயகாந்த் போல் புதிதாக NHM Writer வந்த பிறகு இட்லிவடை வாசகர்கள் தங்கள் முடிவுகளை இப்படி அளித்துள்ளார்கள். ( 2008, Nov )பத்ரியுடன் ஒரு மினி பேட்டி

57% பற்றி ?
57% என்பது நல்லது. ஆனால் மேற்கொண்டு வளர வாய்ப்பு உள்ளது. 80% என்பதே எங்கள் இலக்கு. NHM Writer-ல் உள்ள பெரிய சௌகரியம், மிக எளிதாக பல எழுத்துக் குறியீடுகள், பல விசைப்பலகை உள்ளீட்டு முறைகள் ஆகியவற்றைக் கையாள்வதுதான். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மிக வேகமாக மாறும் இந்த வசதி, பிறவற்றில் எளிதாகக் கிடைப்பதில்லை.

மற்றொன்று, இந்த மென்பொருளின் வடிவமைப்பு, மிக அழகானது, எளிமையானது. கவனமாக உருவாக்கப்பட்டது. இதனை இன்று தமிழர்கள்தான் பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், பிற இந்தியர்கள் கவனிக்கும்போது, மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நான் எ-கலப்பை தான் பயன்படுத்துகிறேன். XML யூஸ் செய்வதால் NHM கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறதே ? !
XML கோப்புகளைப் பயன்படுத்துவதால் எ-கலப்பையை விட வேகம் சற்றே குறைவு என்றீர்கள். ஆனால் என் பயன்பாட்டில் இந்தக் குறையை நான் உணருவதில்லை. எந்தப் பயனரும் இந்தக் குறையை அறியமாட்டார் என்றே நினைக்கிறேன்.

( இந்த வேகத்துக்கே பாரா பெரிய பெரிய புத்தகங்களாக போட்டுத் தாக்குகிறார், இன்னும் வேகம் என்றால் ? ஐயோ பயமாக இருக்கிறது :-)

பிகு:
NHM பயன்படுத்துபவர்கள் பின்னூட்டதில் தங்கள் விமர்சனங்களை சொல்லலாம். 800 வார்த்தை என்ற கணக்கு எல்லாம் கிடையாது.
பின்னூட்டம் எழுதுபவர்களுக்கு இலவசமாக NHM Writer லிங்க் தரப்படும் :-)

14 Comments:

அருண் said...

NHM ரொம்ப நல்லா இருக்கு. ஒரு குறை, Firefox multi tab is not supported yet. NHM is enabled for all tabs.

முரளிகண்ணன் said...

very nice writer

யோசிப்பவர் said...

நான் அலுவலகத்தில் பொங்குதமிழ் உபயோகித்தாலும், வீட்டில் NHMதான் உபயோகிக்கிறேன். மிகவும் வசதியாகவே இருக்கிறது. வேகம் குறித்து ஸ்லோ மெஷின்களில்தான் செக் செய்ய முடியும். அதனால் எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை!!:-)

gopi said...

விஜயகாந்த் போல் புதிதாக NHM Writer வந்த பிறகு இட்லிவடை வாசகர்கள் தங்கள் முடிவுகளை இப்படி அளித்துள்ளார்கள். ( 2008, Nov )
----------------------------------

This is typical IDLYVADAI punch ....

Arun said...

எங்கும் எதிலும் NHM.

வெங்கட்ராமன் said...

NHM Writter நிறுவுவதற்கு மிக எளிதானது. Setup ஐ இயக்கினாலே போதும் தேவையான ரீஜினல் செட்டிங்களை தானாகவே செய்கிறது. என்னுடைய பல நண்பர்களுக்கு இதை பரிந்துரை செய்திருக்கிறேன்.

இது கூகுள் குரோம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றாலும், கூகுள் குரோம்ல பயண்படுத்த முடியவில்லை. அது ஒன்றுதான் இப்போது உள்ள ஒரே குறை.

S. Krishnamoorthy said...

நான் nhmக்கு மாறிவிட்டேன்.
மிக சுலபமாக இயங்குகிறது.
முரசு அஞ்சல் விலைகொடுத்துவாங்கினேன். பத்ரி சார் இலவசமாகவே வழங்கிவிட்டார்.
தமிழுக்குத் தொண்டு செய்வதில் ஒரு பரிமாணம்.

ILA said...

At Office-XP -workStation-e-Kalappai

At Home-Vista-NHM

Anonymous said...

நானும் இகலப்பையில் இருந்து என் எச் முக்கு மாறி விட்டேன். எளிதாகவும் வேகமாகவும் உள்ளது. அல்ட் 2 வில் இருந்து ஆல்ட் 1க்குப் போகும் பொழுது உடனடியாக மாறுவதில்லை ஒரு சில முறைகள் ஆல்ட் 1 ஐ அழுத்திய பின்பே மாறுகின்றன. கிழக்கு தந்த இந்த கொடைக்கு நன்றி. அதை வைத்துக் கொண்டுதான் பத்ரியை வேகமாக விமர்சிக்க முடிகிறது :)))

அன்புடன்
ச.திருமலை

சந்திரமௌளீஸ்வரன் said...

NHM ரொம்பவே யூஸ்புல்

என்னால் இ கலப்பையை இன்ஸ்டால் செய்யவே முடியவில்லை.
கூகிள் க்ரோம் வழி பிரவுஸ் செய்தால் வரும் என் ஹெச் எம் சின்னச் சின்ன மக்கர் பண்ணுவதனை கவனிக்கவும்

யோசிப்பவர் said...

//இது கூகுள் குரோம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றாலும், கூகுள் குரோம்ல பயண்படுத்த முடியவில்லை. அது ஒன்றுதான் இப்போது உள்ள ஒரே குறை.
//
இதற்கு தீர்வும் வழங்கப்பட்டுவிட்டது. புதிய NHMஐ அப்டேட் செய்து கொள்ளவும்.

Sethu Raman said...

I have not used NHM writer so far-- have used e-kalappai and anjal, found them quite useful and easy. may be when i try NHM I can comment on its performance.

வால்பையன் said...

NHM உபயோகித்து யாஹூ மெஸஞ்சரில் தமிழிலில் டைப் பண்ன முடியவில்லை. வேறு எதாவது வழி இருக்கா?

K.S.Nagarajan said...

//NHM உபயோகித்து யாஹூ மெஸஞ்சரில் தமிழிலில் டைப் பண்ன முடியவில்லை. வேறு எதாவது வழி இருக்கா?//

முந்தைய yahoo messenger வெளியீடுகளில் தமிழ் தட்டச்சிடுவதில் பிரச்சனை இருந்தது.

ஆனால், NHM Writer கொண்டு தற்போதைய வெளியீடான Yahoo! Messenger(Version 9.0)-ல் நீங்கள் தட்டச்சிடலாம்.

- K.S.Nagarajan
New Horizon Media