பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 10, 2008

5 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு

5 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவுசெய்துள்ளனர்

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுதூரை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 38). நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(32). இவர்களுக்கு காயத்திரி (9)என்ற மகளும், நவீன் குமார்(5) என்ற மகனும் உள்ளனர். நவீன் குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவனுக்கு மூளைவளர்ச்சி முற்றிலும் குன்றியிருப்பதையும், பிறந்த குழந்தைக்கு இருக்கும் மூளை அளவே நவீன் குமாருக்கு இருப்பதை கண்டு பிடித்தனர். அவனது நாட்களை நீட்டிப்பது கடினம் என்றும் கூறிவிட்டனர். டாக்டரின் பதிலை கேட்ட ராஜாராமும் அவரது மனைவியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பிறரின் உருவத்திலாவது தனது மகனை வாழ்நாள் முழுவதும் காணலாம் என்று தனது மகனின் உடல் உறு�புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இன்று ராஜாராமும் அவரது மனைவி கவிதாவும் சிறுவன் நவீன்குமாரை எடுத்துக்கொண்டு கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அதன்படி அவர்கள் கோவை கலெக்டர் பழனிக்குமாரை சந்தித்து மகனின் உடல் உறு�புகளை தானம் செய்வதாக எழுதிக்கொடுத்தனர்

சட்டவிதிப்படி நடவடிக்கை

இந்த மனு குறித்து கலெக்டர் பழனிக்குமார் கூறியதாவது:-

மூளை வளர்ச்சி மற்றும் மனநலம் குன்றிய 5 வயது சிறுவன் நவீன் குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்யப்போவதாக அவனது தாய்-தந்தை மனுவாக எழுதிக்கொடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுபோன்ற மனு இப்போதுதான் முதல் முறையாக வந்துள்ளது.

இந்த மனு கோவை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு அனுப்பி வைக்கப்படும். மருத்துவ சட்ட விதிகளின் படி இந்த மனுவை ஏற்கலாமா? என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் எந்த உயிரும் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் இருக்கும் என உத்தரவாதம் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி கூறியிருந்தால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மருத்துவ சட்ட விதிகளின்படி ஆலோசிக்கப்படும்

( செய்தி, படம் : தினத்தந்தி )

எல்லா தீவிரவாதிகளும் இந்த மாதிரி செய்திகளை படிக்க வேண்டும்

8 Comments:

Anonymous said...

மனதை கனக்க வைத்த செய்தி!!!
பெற்ற மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெரிய மனது வேண்டும்!!!
உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றி மக்களிடையே, இது போன்ற நிகழ்வுகள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்புகிறேன்!!!

Raghavan said...

இட்லி வடை ... தினமலர் செய்தி வேறாக உள்ளதே... கலெக்டர் இதை அனுமதிக்கவில்லை எனத்தெரிகின்றது. சற்று சரி பார்க்கவும். இராகவன், நைஜிரியா

ஆ.ஞானசேகரன் said...

Raghavan சொன்னது போல தினமலர் செய்தியில் கலெக்டர் இதை அனுமதிக்கவில்லை... சரிப்பார்க்கவும், இதை ஊக்கிவிப்பதும் நல்லதில்லை. நல்ல விழிப்புணர்வு தேவை..

IdlyVadai said...

க்லெக்டர் என்ன சொன்னார் என்று அப்டேட் செய்துள்ளேன். நன்றி

Anonymous said...

அறிவியல் பூர்வமான விழிப்புணர்ச்சி மக்களிடயே தேவை ..இந்த குழந்தையை வளர்க்க முடியாவிட்டால் எதாவது ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொடுக்கலாம் ...அப்படி இல்லாமல் உடல் உறுப்பு தானம் செய்ய நினைப்பது
கருணை கொலை செய்ய நினைப்பதாகும்..

வாழவந்தான் said...

மூளை செயல் இழந்த நிலைக்கும், சிறுவன் நவீங்குமாரின் மூளை வளர்ச்சி குன்றிய நிலைக்கும் வேறுபாடு நிறையவே உள்ளது. அவனது பெற்றோரால் நவீனை வளர்க்க முடியாத சூழலில் ஏதேனும் காப்பகத்தில் விட்டுவிடலாம். அதை தவிர்த்து உறுப்புகளை தானம் செய்வது 'கருணை கொலை' அல்ல 'கொலையே'. இதை சட்டம் அனுமதிக்கக் கூடாது

சந்திரன் said...

irappatharku mun perravarkal eduthaa nalla muyarsikku enathu valthukkal...

valka valamudan...

Anbe-Shivam said...

I don't think, parents went to donate the organs right away. They must have decided to donate the organs after his death and one needs to work on it earlier and not at the time of death. If they did not know that, then it is the responsibility of the learned people to teach them. Accusing them is meaningless.

We should welcome the awareness.