பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 26, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 26-11-08

முனியும் நானும் ஜி-டாக்கில் சாட் செய்ததை முனியின் பெர்மிஷன் இல்லாமல் இங்கு பதிவாக இடுகிறேன். முனி மன்னிப்பாராக :-)


This chat is off the record Learn more Cancel
muni: :->
idly: முனி நலமா ?
muni: ஏன் பதிவுகளே இல்லை ? நிறைய மக்கள் பொழுது போகாம சும்மா இருக்காங்க. அவர்களுக்கு வேண்டியாவது நீ பதிவு போடுவதை நிறுத்தக்கூடாது
idly: economic slow down (அதனால ஆபீஸில வேலை அதிகம்) அதனால பதிவுகள் slow down...
muni: குமுதம் ரீப்போட்டரில் பா.ராகவன் எழுதுவதை நிறுத்துகிறாரா ? அதே போல் நீ நிறுத்தாமல் ஏதையாவது எழுதுக்கொண்டே இருக்க வேண்டும்.
idly: முனிக்கு எப்படி அந்த மெகா தொடர் படிக்க எல்லாம் டைம் இருக்கு ?
muni: :-) இப்ப தானே ஆரம்பித்திருக்கிறார். முப்பது வருஷ மேட்டரையும் எழுதி முடிக்கணும். தொடர் எழுதி முடிக்கும் போது அவர் சதாபிஷேகம் கொண்டாடினாலும் கொண்டாடுவார்.
idly: :-). சரி தொடர் எப்படி ?
muni: இப்ப தானே ஆரம்பித்தார். அதுக்குள்ள ரெண்டு தமிழீழ எக்ஸ்பர்ட்கள், பாரா தவறான தகவல்கள் தருகிறார் என்று அவரை கும்மி விட்டார்கள். அவருக்கு ஒரு சின்ன அட்வைஸ் - புலிகள் பற்றி ஏதாவது தாறுமாறாக எழுதிட போறார்(இந்த கும்மிக்குப் பிறகு அவர் எழுத மாட்டார் என்பது வேற விஷயம்). அப்படி எழுதினால் நம்ம காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரனுக்கு நடந்தது தான் நடக்கும்.
idly: என்ன நடந்தது ஞானசேகரனுக்கு ?
muni: விஷயம் தெரியாதா ? 18-ம் தேதி காலையில் `அதிகாலை' என்ற இணைய இதழில், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதிலிருந்தே மிகுந்த துயரத்தில் இருந்தார் ஞானசேகரன். ஒவ்வொரு நாளும் ராஜீவ் உருவப் படத்தின் முன்நின்று வணங்குவார். சிலநேரங்களில் `நான் உங்களை வந்தடைவேன்' என்று கண்ணீர்கூட விட்டிருக்கிறார். இந்த நிலையில் துக்கத்தால் திடீரென தீக்குளித்த ஞானசேகரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்' என்று செய்தி வெளியானது.
idly: அப்படியா ? அப்பறம் என்ன ஆச்சு ?
muni: அன்றைய தினம் மாலையே தவறான செய்தி வெளியிட்டதற்காக வருந்துவதுடன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாகவும் `அதிகாலை' இணைய இதழ் அறிவிப்பு போட்டுடாங்க
idly: ஆக பா.ரா புலிகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக எழுத வேண்டும் இல்லை அவரும் இணையத்தில் தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டும்.
Sent at 8:31 AM on Wednesday

muni: ஒருவர் இறந்துவிட்டதாக பரபரப்பு செய்தி. அதே போல நீதிபதி தீர்ப்பை படிக்கும் முன்பே அது வெளிவந்து ஒரு பரபரப்பு பார்த்தியா ?
idly: இது என்ன புது கலாட்டா ?
muni: நீ என்ன நியூஸே படிப்பதில்லையா ? சன் டிவி குழுமத்திற்கும், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷனுக்கும் இடையே மோதலுக்கு பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஜெயபால் இந்த வழக்கில் மேலும் விவாதம் நடத்த வேண்டும் என வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், அதை அனுமதித்த நீதிபதி ஜெயபால், அந்தத் தீர்ப்பை படிக்காமல் நிறுத்தி வைத்தார்.ஆனால், அந்த வெளியிடப்படாத தீர்ப்பு, தற்போது தமிழ்நாடு சட்டக் குறிப்புகள் ஜர்னலில் வெளியாகியுள்ளது
idly: கலி முத்திவிட்டது. நீதிபதிக்கும், நீதியரசருக்கும் என்ன வித்தியாசம் ?
muni: இதற்கு நான் பதில் சொன்னால் என்னையும் ’பாப்பார நாய்’, இல்ல இல்ல 'பாப்பார அடிவருடி' என்று திட்ட 'கணக்கு வா(ந்)த்தி' கிளம்பிவந்துடும். எனக்கு எதற்கு வீண் வம்பு? எனக்கு அடியாள் கூட கிடையாது.
idly: 'அதுக்கு' போய் அடியாளா ? உங்க லெவலுக்கு அதெல்லாம் ஒரு பிள்ளைப்பூச்சி. ஃப்ரீயா விடுங்க. அப்படியே யாராவது அடியாள் இருந்தால் ஹரன் பிரசன்னாவிடம் அனுப்புங்க. புத்தகம் கொடுப்பார், அல்லது அட்லீஸ்ட் அடியாள் பற்றிய விமர்சனம் எழுதுவார்.
muni: பிரசன்னாவின் விமர்சனம் படித்தேன், . ரொம்ப டச்சிங்கா இருந்தது அவர் விமர்சனம்.
idly: ஒரே விமர்சனத்தில உயிர்மை, எனி இந்தியன், கிழக்கு எல்லாம் 'டச்' செய்ததை சொல்றீங்களா ?
muni: விமர்சனத்துக்கே விமர்சனமா :)
idly: போன சனிக்கிழமை சோ, ஜெ சந்திப்பு பற்றி முனிக்கு ஏதாவது தெரியுமா ?
muni: ஜெயலலிதாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பரதன், தா.பாண்டியன் உள் ளிட்டவர்கள் சந்தித்து பேசியது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரி சோவை அனுப்பி ஏதாவது குழப்பம் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். எது எப்படியோ தற்போதைய கூட்டணி equation - [திமுக, காங்கிரஸ், பா.ம.க] [ அதிமுக, கம்யூனிஸ்ட் ] [ விஜயகாந்த், பா.ஜ.க ]
idly: விஜயகாந்த் தான் கூட்டணி இல்லை என்கிறாரே ?
muni: விஜயகாந்த் தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு 'திடீர்' திருப்பத்தை ஏற்படுத்துவார் பாரேன்.
Sent at 8:45 AM on Wednesday

idly: அது சரி, பாமக எப்ப திமுக பக்கம் போனது ?
muni: என்ன உனக்கு விசயமே தெரியாதா ? இரு இன்றைய கலைஞர் பேட்டியிலிருந்து எடுத்து போடுகிறேன். பிளீஸ் வெயிட்...

கே: இந்த பிரச்சனை மூலம் பாமக உங்கள் அணிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா?
ப: எங்களுக்குள் எந்த தகராறும் இல்லையே.
கே: நீங்கள் அவர்களை வெளியே அனுப்பினீர்களே?
ப: நாங்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. இதுபோன்ற அவ மரியாதையான சொற்களை பயன்படுத்தும் அளவுக்கு நாங்கள் நாகரீகம் இல்லாதவர்கள் அல்ல. எங்கள் வருத்தத்தைத்தான் அவர்களிடம் தெரிவித்தோம்.

idly: சட்டக்கல்லூரி மாணவர்களை ஜெவும், வைகோவும் தான் தூண்டிவிட்டார்கள் என்று லூலூலாயிக்கு தான் சொன்னேன் என்று ஜோக் அடித்தாரே அதே போல இதுவும் லூலூலாயியாக இருக்க போவுது.
muni: காடுவெட்டி குரு ஒரு சிறந்த குடிமகன், பண்பான பேச்சாளர், திராவிட சிங்கம், போலீஸ் அவரை சிறையில் போட்டது அசிங்கம் என்று நாளை முரசொலியில் கடிதம் வந்தாலும் வரலாம்.
Sent at 8:50 AM on Wednesday

muni: சரி விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008’ல் சின்மயி நேற்றிலிருந்து காணோமே ஏதாவது பிரச்சனையா ?
idly: எலிமினேஷன் பங்குபெரறுபவர்களுக்கு மட்டும் இல்லை, அதை காம்பியர் செய்பவர்களுக்கும் என்று நினைக்கிறேன்.
muni: இருக்கலாம் ஆனா ஏதோ நடந்திருக்கு. ஏர்டெல் சூப்பர் சிங்கருக்கு அப்பறம் வரும் ‘நடந்தது என்ன?” என்ற பிரோகிராமில் அதை காமித்தால் நல்லா இருக்கும்
idly: முனி, உங்களுக்கு ரொம்ப தான் கொழுப்பு, அடியாள் வேற இல்லன்னு சொல்றீங்க, பார்த்து :)
Sent at 8:54 AM on Wednesday


muni: காற்றிலிருந்து தண்ணீர் வரவழைக்க முடியுமா ?
idly: உங்களால முடியும், அது மாதிரி இங்கே சில வலைப்பதிவர்களாலேயும் முடியும்.
muni is sharing a file (20.2 KB) with you mineral_water.jpg

muni: வம்பு வளர்க்காதே. நான் சொல்றது சில கனடிய விஞ்ஞானிகள் De-humidifier-ன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதை சாதித்துள்ளார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 லிட்டர் தண்ணீர் தயாரிக்கவல்ல இந்த நீராலை (water mill)3 அடி நீளம் கொண்டது. 3 பல்ப்களுக்கு ஆகும் கரண்ட் செலவு ஆகும், ஒரு லிட்டர் தண்ணீர் தயாரிக்க. அதாவது ஒரு லிட்டர் தண்ணீர் 18லிருந்து 20ரூ. தீவிர தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இது எதிர்காலத்தில் பயன்படலாம். இக்கருவியின் மெகா வெர்ஷனை சற்று வரண்ட பகுதிகளில் விவசாயத்திற்கு கூட பயன்படுத்தலாம் எங்கின்றனர்.
idly: cutting edge technology பத்தியெல்லாம் பேசறீங்க! எல்லா லேட்டஸ்ட் விசயங்களையும் தெரிஞ்சு வச்சுருக்கீங்க.
muni: அயல்நாட்டில என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க, ஆனா தமிழ்நாட்டுல கடல் நீரிலிருந்து குடி தண்ணீர் தயாரிக்கிறது எப்ப செயல்பாட்டுக்கு வரும்னு தெரியல. ஆனா அந்திரா பரவாயில்ல இந்த விசயத்தில
idly: என்ன சொல்றீங்க?
muni: திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட மினரல் குடிநீரை வினியோகம் செய்ய ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருமலைக்கு வருகின்றனர். வெயில், மழை காலங்களில், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இவர்கள் அவதிப்படும் நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது.பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் 30 இடங்களில் மினரல் வாட்டர் இயந்திரங்களை அமைக்கப்பட உள்ளன. அதன் மூலம் இலவசமாக குடிநீர் வினியோகம் செய்ய மேற்கு கோதாவரி மாவட்டம் கலவரம் ராஜு பவுண்டேஷன் நிறுவனத்தினர் முன் வந்துள்ளனர். தற்போது, அன்னமய்யா பவன், தேவஸ்தான ஊழியர்கள் கேன்டீனில் குடிநீர் யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில், அனைத்து இடங்களிலும் யூனிட்டுகள் அமைக்கும் பணி முடிவடையும். இரு, தகவலை நியூஸ் வாசிக்கிற மாதிரி கடகடன்னு சொன்னதுல கொஞ்சம் மூச்சு வாங்குது, ஆசுவாசப்படுத்திக்கறேன்!
Sent at 9:00 AM on Wednesday

idly: இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் மேட்ச்களை பாத்தீங்களா?
muni: அதுல பார்க்க என்ன இருக்கு ??? உதை வாங்கறதுக்குனே விசா எடுத்து பிளைட்ல வந்த இங்கிலாந்து வீரர்கள் பத்தி என்னத்த சொல்றது? தோனி பெரிய கேப்டனா வருவாருன்னு தோணுது.
idly: சரி தான். அவரைப் பத்தி பீட்டர் ரோபக் கூட கிரிக் இன்ஃபோல ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்காரு. லிங்க் வேணுமுன்னா, எ.அ.பாலா கிட்ட வாங்கிக்குங்க, டே-நைட் மேட்ச் மாதிரி நைட்-நைட் மேட்ச் வச்சாக் கூட ஒரு பந்து உடாம பாப்பாரு, Recorded மேட்சை கூட சுவாரசியமா நகத்தை கடித்துக்கொண்டு பார்ப்பார்.

muni: சோமாலிய கடல் கொள்ளைக்காரர்கள் ஒரு சவுதி எண்ணெய்க் கப்பலை கடத்தி,15 மில்லியன் டாலர் தந்தாத் தான் கப்பலையும், மாலுமிகளையும் ரிலீஸ் பண்ணுவோம்னு மிரட்டினதை பேப்பர்ல பார்த்திருப்ப. அதுல ஒரு திடீர் திருப்பம்
idly: முனி, நீங்க பார்ஸ் கார்னரிலிருந்து சோமாலியா வரைக்கும் சகஜமா பேசறீங்களே, எப்படி அது ?
muni: என்னையே ஓட்டறியா :) விசயத்தைக் கேளு. சோமாலியால அரசுக்கு எதிரான இசுலாமிய militia 'அதெப்படி ஒரு இசுலாமிய நாட்டின் கப்பலை கடத்தலாம்' என்று கப்பலையும் ஆட்களையும் விடுவிக்கும்படி கடல் கொள்ளையர்களை மிரட்ட அவர்களோ 'நாங்க பண்றது 'பிசினஸ்'. ஆனா நாங்க இசுலாமுக்கு எதிரானவங்க கிடையாது' அப்டின்னு 'தெளிவா' வடிவேலு கணக்கா ஸ்டேட்மெண்ட் விட்டுருக்காங்க.
idly: நல்ல கூத்து தான் போ.
Sent at 9:10 AM on Wednesday

muni: நீ நிறைய டிவி பார்ப்பாயா ?
idly: எனக்கு கட்&பேஸ்ட் பண்றதுக்கும், உங்களுக்கு லெட்டர் போடறதுக்குமே நேரம் கிடைக்கல. இதுல எங்க டிவி?
muni: எதுக்கு கேட்டேன்னா,மனமகிழ்ச்சி இல்லாத மக்கள் தான் நிறைய டிவி பார்க்கிறாங்கன்னு ஒரு செய்தி கண்ணுல பட்டுது
idly: நம்ம வலைப்பதிவர்கள் கூட நிறைய டிவி பார்க்கிறார்களோ? அதான் இப்படி ஆயிட்டாங்களோ?
muni: என்ன சொல்றன்னு ஒண்ணும் புரியல
idly: சந்தோஷமா இல்லாததுனால தானே ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி திட்டித் தீர்த்துக்கறாங்கன்னு சொல்ல வந்தேன்.
muni: யப்பா சாமி, என்னை எந்த வம்புலயும் மாட்டி விடாதே. நான் பாட்டுக்கு 'முனியே'ன்னு இருக்கேன்
idly: யாமிருக்க பயமேன் :)

muni: போன புதன் 'உலக கழிவறை தினம்'னு உனக்குத் தெரியமா ?
idly: அதெல்லாமா கொண்டாடறாங்க அடக்கடவுளே?
muni: எல்லாத்தையும் மேல்தட்டு மனப்பான்மையோடு பார்க்காதே. உலகத்துல 250 கோடி மக்கள் சரியான கழிப்பிடம் இல்லாம வாழறாங்கன்னு தெரியுமா ? ஆனா ஒரு அமெரிக்கர் ஒரு நாளைக்கு 70 லிட்டர் தண்ணியை flush பண்றதுக்கு செலவழிக்கிறாங்க, என்ன ஒரு முரண்பாடு பாரு.
idly: சந்தடி சாக்கில மேல்தட்டுன்னு என்னை ஒரு தட்டு தட்டிட்டீங்க! பரவாயில்ல நம்ம முனிஸ் தானே :)

muni: கோச்சுக்காதே. பக்தைகள் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க, கடைசியா ஒண்ணு சொல்லிட்டு நான் கிளம்பறேன். நேத்து(நவ.25) பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம். இந்தியன் எக்ஸ்பிரஸும் பிரக்ஞ்யா என்ற அமைப்பும் இந்த நோக்கம் நல்ல முறையில் பொதுமக்களை சென்றடைய நவ.25லிருந்து டிச.10 வரை தொடர்ந்து 16 நாட்கள் பல நிகழ்ச்சிகளையும் பயிலரங்குகளையும் கூட்டாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். டிச.10 மனித உரிமை தினம். பெண்ணியம் வாழ்க, மனித உரிமை வாழ்க. பை, Have a Good day.
idly: கட்சித் தொண்டன் மாதிரி 'வாழ்க வாழ்க'ங்கறீங்க. அப்டியே, IT கம்பெனில வேலை பண்ற ஆசாமி கணக்கா Have a good day ங்கறீங்க :) I am confused:) மீண்டும் சந்திப்போம். வணக்கம். அது சரி அதனால் அதான் பெண்கள் படமா இருக்கா ?
muni is offline. You can still send this person messages and he will receive them even if he is offline(or idle), as he is body'god'muni.

13 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

முனிக்கு பக்தைகள் அதிகமாகி விட்டார்களா? எப்போது கதை எழுத ஆரம்பிக்கப்போகிறார்? 108 ஆ 1008ஆ? முனி என்ற பெயரில் எழுதினால் “புனைவு” ஆகாது, எனவே திருப்பதி -பாலாஜி போன்ற பெயர்களை முயற்சிக்கலாம்.
அப்பால, அது என்ன ஐடில வேலை செய்யறவன் கட்சித்தொண்டனா இருக்க மாட்டான் - றாப்பல ஒரு பில்ட்-அப்? இதுதான் மேட்டுக்குடிச் சிந்தனை!

Sethu Raman said...

ulaga kazhivarai - do you know that the notorious Vattal Nagaraj,disappointed with the toilets situation in Bengalooru, has threatened a "Piss At You" program, which he will inaugurate by pissing in front of the Karnataka Raj Bhavan, on 1st Jan. 2009, if the Government does not rectify the situation in the meanwhile?

Nilofer Anbarasu said...

இவ்வளவு பெரிய பதிவ படுச்சவுடனதான் தெரியுது ஏன் மூணு நாளா பதிவு போடலனு :)

Nilofer Anbarasu said...

//
கட்சித் தொண்டன் மாதிரி 'வாழ்க வாழ்க'ங்கறீங்க. அப்டியே, IT கம்பெனில வேலை பண்ற ஆசாமி கணக்கா Have a good day ங்கறீங்க :) I am confused:)
//

Me too

Anonymous said...

சென்ற மாத இந்தியா டூடேயில் வந்த இலங்கை/புலிகள் பற்றிய கவர் ஸ்டோரிஐ எங்கிருந்தாவது எடுத்து போட முடியுமா?

இலவசக்கொத்தனார் said...

பாரா, ஹரன் பிரசன்னா, அன்புடன் பாலா.... ஒரு மாதிரிதான் இருக்கு,

இதுக்கு நடுவில முனியைப் பார்த்து ப்ரீயா விடு மாமேன்னு சொல்றது எல்லாம் ரெண்டாம் மாடி (அதாங்க டூ மச்சு!)

Anonymous said...

தனக்குத்தானே பேசிக்கொள்வதெல்லாம்
சாட் இல்லை.அதற்கு வேறு பெயர்.

‘பாரா, ஹரன் பிரசன்னா, அன்புடன் பாலா.... ஒரு மாதிரிதான் இருக்கு'.

:)

Anonymous said...

////தனக்குத்தானே பேசிக்கொள்வதெல்லாம்
சாட் இல்லை.அதற்கு வேறு பெயர்/////

ரீரீரீரீரீரீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடுடுடுடுடு

Anonymous said...

/// சென்ற மாத இந்தியா டூடேயில் வந்த இலங்கை/புலிகள் பற்றிய கவர் ஸ்டோரிஐ எங்கிருந்தாவது எடுத்து போட முடியுமா? ///

http://koluvithaluvi.blogspot.com/2008/11/or-60.html

சே.வேங்கடசுப்ரமணியன். said...

//'உலக கழிவறை தினம்'// இது போல "சர்வதேச கைகள் கழுவும் தினம்" கூட தமிழகத்தில் கடைபிடிக்கப் பட்டது

காண http://thogamalaiphc.blogspot.com/2008/10/15102008.html

Anonymous said...

///muni: பிரசன்னாவின் விமர்சனம் படித்தேன், . ரொம்ப டச்சிங்கா இருந்தது அவர் விமர்சனம்.
idly: ஒரே விமர்சனத்தில உயிர்மை, எனி இந்தியன், கிழக்கு எல்லாம் 'டச்' செய்ததை சொல்றீங்களா ?
muni: விமர்சனத்துக்கே விமர்சனமா :)///

அவனவன் புத்தகத்தை முழுவதும் படிக்காமல், மனசுக்கு தோணுனதையெல்லாம் போட்டு புருடா விமர்சனம் பண்ணிக் கொண்டிருக்கும் போது (லக்கிலுக்கின் இரும்பு குதிரைகள் ஒரு உதாரணம்)ஹரன் பிரசன்னாவின் விமர்சனம் நேர்மையானதாகவே உள்ளது. :)

Anonymous said...

enndaa kollrenngaaa

Anonymous said...

www.tamilwin.com padingaaa. nalla site